சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

EV -களுக்கான FAME மானியம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்: FICCI கோரிக்கை

rohit ஆல் டிசம்பர் 06, 2023 08:01 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

இந்தியாவில் 30 சதவீத EV பரவல் இலக்கை அடைய இந்தத் திட்டம் உதவும் என்று வர்த்தக சங்கம் கூறுகிறது.

  • FAME-II திட்டம் ஏப்ரல் 2019 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மார்ச் 2024 வரை நடைமுறையில் இருக்கும்.

  • புதிய FAME-III திட்டத்தில் தனியார் EV வாடிக்கையாளர்களையும் சேர்க்க FICCI பரிந்துரைக்கிறது.

  • இந்திய சந்தையில் EV -களின் பரவல் தற்போது ஐந்து சதவீதமாக உள்ளது.

  • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஹைபிரிட் வாகனங்களை பரிசீலிக்கவும் FICCI பரிந்துரைத்துள்ளது.

மின்சார வாகனங்கள் (EVகள்) இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வருகின்றன, விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வையும் பார்க்க முடிகிறது. நிறைய பிராண்டுகள் பல்வேறு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த விற்பனை உயர்வுக்கு முன், ஒன்றிய அரசு, ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் வேகமான விற்பனைக்காகவும், உற்பத்திக்காகவும் (FAME) எனப்படும் பான்-இந்தியா ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, FAME-II, 2019 -ல் வெளியிடப்பட்டது, இது EV -களின் பெருமளவிலான விற்பனை வேகத்தைத் தக்கவைக்கும் இலக்குடன் உள்ளது. இருப்பினும், FAME-II திட்டம் மார்ச் 2024 -ல் முடிவடைவதால், தற்போது இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) இந்திய அரசாங்கம் FAME திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.

FICCI என்ன பரிந்துரைத்துள்ளது?

ஊக்கத்தொகைகளை திடீரென திரும்பப் பெறுவது அல்லது நிறுத்துவதால் EV -களின் விலை 25 சதவீதம் வரை உயரும், சாத்தியமான வாடிக்கையாளர்களை தடுக்கும் மற்றும் இந்தத் துறையில் முதலீட்டையும் பாதிக்கும் என்று FICCI கூறுகிறது. இந்திய சந்தையில் EV விற்பனை என்பது தற்போது ஐந்து சதவீதமாக உள்ளதாக FICCI அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஊக்கத் திட்டங்கள் தொடர்ந்தால், ஏறக்குறைய 30.5 மில்லியன் மின்சார வாகனங்கள் பிரிவுகளில் விற்பனை செய்யப்படலாம், இதன் மூலம் இந்தியாவின் 30 சதவீத போக்குவரத்தை இலக்காகக் கொண்டு மின்மயமாக்க உதவுகிறது. EV -கள் மற்றும் கம்பஸ்டன் இன்ஜின் இடையேயான விலை இடைவெளி மிகக் குறைவாக இருந்தால், மானியங்கள் குறைக்கப்படலாம் மற்றும் இறுதியில் நிறுத்தப்படலாம் என்று FICCI கூறியது. அடுத்த 3-5 ஆண்டுகளில் பேட்டரி செலவுகள் தொடர்ந்து குறைந்து, EV உதிரிபாகங்களின் விலை குறைவதால் இது எட்டப்படும்.

FICCI -யின் பிற பரிந்துரைகள்

மேலே உள்ள பரிந்துரைகளைத் தவிர, FICCI மேலும் சில உள்ளீடுகளையும் பகிர்ந்துள்ளது:

  1. FAME-III திட்டத்தின் கீழ் அனைத்து வகையான ஹைபிரிட் வாகனங்களும் (ஸ்ட்ராங் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் உட்பட) மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

  2. மின்சார காரைத் தேர்ந்தெடுக்கும் தனியார் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை விரிவுபடுத்துவதில் FAME-III திட்டம் கவனம் செலுத்த வேண்டும்.

  3. FAME-II திட்டத்தில் தற்போது குறிப்பிட்டுள்ளபடி, மானியத்தின் கணக்கீடு பேட்டரி அளவை (ஒரு kWhக்கு) அடிப்படையாக வைத்து தொடர வேண்டும் என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது.

FICCI EV கமிட்டியின் தலைவர் சுலஜ்ஜா ஃபிரோடியா மோத்வானி, “சாதகமான கொள்கைகள் மற்றும் குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் FAME-II திட்டம் EVகளின் முன்கூட்டிய விலையை குறைக்க உதவுவதன் மூலம் தேவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது ஒரு நேர்மறையான வேகத்தை உருவாக்க உதவியது மற்றும் நாட்டில் EV விற்பனையை ஊக்குவிக்கிறது. எவ்வாறாயினும், இது நன்றாகத் தொடங்கிவிட்டாலும், பாதியில் திட்டம் முடிவதற்கு நாங்கள் விரும்பவில்லை. எந்த மானியமும் இல்லாமல் EV -கள் தொடர்பாக ICE -யின் தற்போதைய விலை பிரீமியம் இன்னும் கணிசமானதாக உள்ளது, பல்வேறு பிரிவுகளுக்கு 40 சதவீதம் முதல் 130 சதவீதம் வரை அதிகமாக உள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விலை இடைவெளியைக் குறைக்க, தேவை ஊக்கத்தொகை அல்லது மானியத்தைத் தொடர்வது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. EV -களில் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து ஆர்வத்தைத் தூண்டவும், அடுத்த சில ஆண்டுகளில் ஊடுருவலை அதிகரிக்கவும் Fame-III தேவையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்

FAME-II திட்டத்தின் மறுபரிசீலனை

FAME-II திட்டம் ஏப்ரல் 2019 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஆரம்பத்தில் மார்ச் 2022 -ல் முடிவடையும் என்று கருதப்பட்டது, ஆனால் இந்திய அரசாங்கம் காலக்கெடுவை இரண்டு ஆண்டுகளுக்கு (COVID-19 காரணமாக) மார்ச் 31, 2024 வரை தள்ளி வைத்தது. இது ஹைபிரிட் மற்றும் மின்சார வாகனங்களை உள்ளடக்கியது, ஆனால் பெரும்பாலும் மின்சார வாகனங்களுக்கே சாதகமாக அமைந்தது.

மின்சார வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்க 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் லித்தியம்-அயான் பேட்டரிகள் கொண்ட 55,000 மின்சார 4-சக்கர வாகனங்கள், 10 லட்சம் மின்சார 2-சக்கர வாகனங்கள், 5 லட்சம் 3-சக்கர வாகனங்கள் மற்றும் 7,000 பேருந்துகள் ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளன. 4-சக்கர வாகனங்களை பொறுத்தவரை, வணிக வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு முக்கியமாக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவை FICCI வழங்கிய சில பரிந்துரைகள் மட்டுமே என்றாலும், FAME-III திட்டத்தை உருவாக்கும் போது இவற்றில் எது இந்திய அரசாங்கத்தால் கவனத்தில் கொள்ளப்படும் என்பதைப் பார்க்க வேண்டும். இவற்றில் எது இறுதியாக ஊக்கத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் பதில்களை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
தொடங்கப்பட்டது on : Feb 17, 2025
Rs.48.90 - 54.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை