தனித்துவ பார்வை: மைல்ஸ் தொடக்க நிலையிலிருந்து 1100% வளர்ச்சி கண்டுள்ளது
published on ஆகஸ்ட் 24, 2015 02:43 pm by akshit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஓட்டுனர்களுடன் கூடிய பழமை வாய்ந்த வாடகை கார் சேவை (ஷைப்ஃபர்-ட்ரைவன் சர்வீஸ்) நிறுவனங்கள் மத்தியில், சுய இயக்கி சேவை (செல்ஃப் ட்ரைவ் சர்வீஸ்) என்ற புத்தம் புதிய சுலப போக்குவரத்து முறையானது கடந்த சில வருடங்களாக பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. கார்ஜோன்ரெண்ட் நிறுவனத்தின் மைல்ஸ் கார்கள் சென்ற வருடத்தில்‘1100 சதவிகிதம்’ முன்னேற்றம் கண்டு, தொடர்ந்து இப்பிரிவில் முதன்மையான நிறுவனமாக தனது பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மைல்ஸ், இப்பொழுது 21 நகரங்களில் 1000-க்கும் அதிகமான கார்களை இயக்கி வருகிறது. அவற்றில் டாடா நானோ முதல் மெர்சிடிஸ் – பென்ஸ் மற்றும் BMW கார்கள் வரை அனைத்து விதமான கார்களையும் வாடகைக்கு கொடுக்கிறது.
மைல்ஸின் தலைமை நிர்வாகி சாக்ஷி விஜ் இந்த புதிய வழியில் அதீத வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, வரும் சில ஆண்டுகளுக்குள் இந்த சந்தை இரட்டிப்பாகவும் பல்மடங்காகவும் அதிகரிக்கும் என்பதை ஊகிக்கிறார். 2016ஆம் ஆண்டு மத்தியில் 50 நகரங்களுக்கும் மேலாக, மைல்ஸின் சேவை விஸ்தரிக்கபடும் என்றும், அதே நேரத்தில் இந்நிறுவனம் 5000 எண்ணிக்கையிலான கார்களை அடைந்துவிடும் என்றும் மைல்ஸ்ஸின் எதிர்கால திட்டத்தை உறுதிபட கூறினார்.
சாக்ஷியுடனான விவாதத்தின் போது, அவருடைய ‘உரிமை கொண்டாடுவதற்கான மாற்று முறை’ என்ற புதிய கருத்தே மைல்ஸின் வெற்றிக்கு காரணம் என்ற சுவாரசியமான ஒரு உண்மை வெளிவந்தது, அதாவது. சுய இயக்கி சேவையானது பழமையான வாடகை கார் சேவையுடன் போட்டி போடாது என்றும், மாறாக சொந்த காரின் அனுபவத்தை தரும் மாற்று வழியாக இருக்கும் என்று சாக்ஷி தன் கருத்தை வலியுறித்தினார். பொதுவாக, மக்கள் ஒரு வருடத்தில் தங்களது சொந்த காரை 150 முதல் 200 நாட்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் வருடத்தின் மீதமுள்ள நாட்களுக்கும் சேர்த்து செலவிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த செலவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 40 சதவிகிதம் குறைவான செலவில், சொந்த கார் ஓட்டும் அனுபவத்தை மைல்ஸ் வழங்கும் என்று தெளிவாக தெரிவித்தார்.
மைல்ஸ் கார்கள், கார்ஜோன்ரெண்டின் மொத்த வியாபாரத்தில் இப்பொழுது வெறும் 10 சதவிகித பங்கை மட்டுமே அடைந்துள்ளது. ஆனால், சுய இயக்கி சேவையின் முன்னேற்றதை சமீப காலமாக ஆராய்ந்து பார்த்தால், இதன் பங்கு எதிர்காலத்தில் பல மடங்காக பெருகும் என எதிர்பார்க்கபடுகிறது. இன்றிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்குள், மைல்ஸ் தனது 50000 கார்களுடன், 100 நகரங்களில், 5 மில்லியன் மக்களுக்காக விரிவடைந்து செயல்படவேண்டும் என்று சாக்ஷி திட்டமிட்டுள்ளார்.
0 out of 0 found this helpful