இந்திய கார் தயாரிப்பாளர்களை கவலைப்பட வைக்கும் விஷயம்: கூடுதல் உற்பத்தி திறன் மற்றும் குறைவான தேவைகள் (குறைவான டிமான்ட்).
published on ஆகஸ்ட் 03, 2015 05:24 pm by nabeel
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய கார் சந்தையில் ஏராளமான கார்கள் பலதரப்பட்ட கார் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடக்கிறது. இந்த நிலை கார் தயாரிப்பாளர்களை பெரிதும் கவலைக்கொள்ள செய்திருக்கிறது. 2014 – 15 ஆண்டுகளில் மொத்தம் தயாரான 4 .96 மில்லியன் கார்களில் 3.22 மில்லியன் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. அதாவது மொத்த கார் உற்பத்தியில் 65% மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. இந்த தகவலை இந்திய ஆட்டோமொபில் சம்மேளனத்தின் தலைவர் திரு. விக்ரம் கிர்லோஸ்கர் பலமுறை உறுதி படுத்தினார். விற்பனை குறைவாக இருந்த போதிலும் பலப் புதிய கார் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களது உற்பத்தி திறனை அதிகப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி உள்ளார். நெடு நாட்களாக நிலவி வரும் பொருளாதார தேக்க நிலை கண்டிப்பாக மாறும் என்ற நம்பிக்கையுடன் கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய உற்பத்தி திறனையும் கட்டமைப்பையும்மேம்படுத்தய வண்ணம் உள்ளனர். டொயோடா கிர்லோஸ்கர் மோட்டர் பிரைவேட் லிமிடட் டின் சேர்மனாகவும் பணியாற்றி வரும் திரு, கிர்லோஸ்கர் கடந்த ஜூலை 10அம் தேதி பின்வருமாறு கூறினார்.” தேவைக்கு அதிகமான அளவு உற்பத்தி திறன் பரவலாக காணப்படுகிறது. விற்பனையோ குறைவாக உள்ளது. 2012 – 13 ஆம் ஆண்டுகளில் உச்சத்தில் இருந்த விற்பனையை இப்போது ஒப்பிடும் போது நாங்கள் இப்போது அதன் அருகில் கூட செல்லவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய ஒரு சூழலில் எந்த குறிபிடத்தக்க பெரிய அளவிலான முதலீடும் அந்த முதலீட்டுக்கான லாபத்தைத் தர மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்" என்று கூறினார்.
இதை நிரூபிக்கும் வகையில் ஜூலை 29ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியை சொல்லலாம். ஜெனரல் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது இரண்டில் ஒரு தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்து உள்ளது. இதைப் இது ஒரு ஒருங்கிணைப்பு நடவடிக்கையாகவே தோன்றுகிறது. ஜிஎம் நிறுவனத்தின் மொத்த நஷ்டம் 6,552 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஏறக்குறைய ஒரு புதிய தொழிற்சாலையை நிர்மானிக்க ஆகும் செலவை விட அதிகம் என்பது தான் இங்கு கவனிக்க பட வேண்டிய விஷயம். மாருதி சுசுகி,ஹோண்டா மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்கள் மட்டும் தான் தமது உற்பத்தி திறனில் எண்பது சதவிகிததிற்கு மேல் கார்களை தயாரித்து வெற்றிகரமாக விற்பனை செய்கிறது.பயணிகள் வாகனப் பிரிவில் மாருதி, மஹிந்திரா மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்கள் மட்டும் தான் லாபத்தில் இயங்குகின்றன. அதிகமான டிமான்ட் (தேவை) இல்லாத போதும் மாருதி, ஹோண்டா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் தங்களது உற்பத்தி திறனை கூடும் செயலில் மும்முரமாக ஈடுப்பட்டு உள்ளனர். அதன் பிறகு 2014 -15 ஆண்டு முடிவிற்குள் தற்போது 4 .96 மில்லன் என்ற அளவில் உள்ள எண்ணிக்கை 6.9 மில்லியன் என்ற அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.