தனித்து சுயமாக பறக்கும் வாகனம் - எஹாங் 184
nabeel ஆல் ஜனவரி 12, 2016 04:10 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மனித குலம் மாற்றங்களை கண்டு எப்போது பயப்படுகிறது. கடந்த 1807 ஆம் ஆண்டு, ஒரு வாகனத்தில் முதல் முறையாக இன்டர்னல் கம்பஷன் என்ஜின் பொருத்தப்பட்ட போது, இதை ஒரு வெடிகுண்டாக நினைத்த மக்கள், அது வெடித்து சிதறலாம் என்று யூகித்தனர். கடந்த 1903 டிசம்பர் 17 ஆம் தேதி ரைட் பிரதர்ஸ் மூலம் முதல் விமானம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட போது, அதை பில்லிசூனியம் மற்றும் பிசாசின் வேலை என்று சிலர் அழைத்தனர். ஆனால் இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள். கார்கள் ஒரு அடிப்படை தேவையாகவும், பயண முறைகளிலேயே மிகவும் பாதுகாப்பானதாக விமான பயணமும் கருதப்படுகிறது. விரைவில் சுயமான ஓட்டும் கார்களும் சாதாரணமாகி, வாகனங்களின் வரலாற்று பக்கங்களில், இது வெறும் ஒரு அடிக்குறிப்பு செய்தியாக மாறிவிடும். இப்படி வாகனங்களின் மேம்பாட்டு எல்லைகள் நம்பமுடியாத வேகத்தில் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. எனவே அடுத்தது என்ன?
இதோ வழங்குகிறோம், எஹாங் 184 ஆட்டோனோமஸ் ஏரியல் வெஹிக்கிள் (AAV). இதன் பொருள் என்னவென்றால், இது ஒரு தனிப்பட்ட, ஒற்றை சீட் கொண்ட பறக்க கூடிய ஆளில்லாத விமானம்; சுயமாக மட்டுமே ஓட்டும் தன்மை கொண்டது. இது வான்வழி பயணத்திற்கான ஒரு சுயமாக ஓட்டும் வாகனம் எனலாம். லாஸ் வேகஸில் நடைபெற்ற 2016 நுகர்வோர் எலக்ட்ரோனிக்ஸ் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த ஆளில்லாத விமானம், உலகம் முழுவதும் உள்ள ஊடக மக்களை கவர்ந்திழுத்து, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதில் ஒரு அலுமினியம் அலாய் பிரேம் அமைப்பை கொண்டு, ஒரு நபர் அமரும் சீட் உள்ளது. இந்த பிரேம் உடன் 8 ப்ரோபெல்லர்களை கொண்ட 4 கால்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரோடாருக்கும் தனிப்பட்ட ஆற்றல் வழங்கப்பட்டு, இயக்க செங்குத்தாக குவிந்த நிலையில் காணப்படும் மோட்டார் உள்ளது. இதன்மூலம் ஒரு ரோடார் பழுதடைந்தால் கூட, இந்த ஆளில்லாத விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடியும் என்பது இதில் உள்ள ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அம்சமாகும். இந்த 8 மோட்டார்கள் (ஒரு காலில் 2 வீதம்) மூலம் காற்றில் உயர்த்தும் வகையிலான 142 hp ஆற்றலை வெளியிடும் திறனை கொண்டது. 200 கிலோ எடைக் கொண்ட எஹாங் 184 AAV, 120 கிலோ வரையிலான எடையை தூக்க திறன் கொண்டது. இதுமட்டுமின்றி பின்பக்கத்தில் ஒரு சிறிய இடைவெளி போன்ற இடம் காணப்படுகிறது. ஒரு பூட் போன்ற தோற்றத்தை கொண்ட இதில், சிறிய அளவிலான சுமைகள், அதாவது ஒரு பேக் போன்றவற்றை வைக்க முடியும்.
இந்த எஹாங் 184 என்ற பெயர், இந்த ஆளில்லாத விமானம் மற்றும் அதன் கூறுகள் ஆகியவற்றை முன்னிட்டே வைக்கப்பட்டுள்ளது. 184 என்பதன் மூலம் 1 நபர், 8 ப்ரோபெல்லர்கள் மற்றும் 4 கால்கள் ஆகியவை குறிக்கப் பெறுகிறது. இதில் உள்ள சுயமாக செயல்படும் தன்மையே, இந்த ஆளில்லாத விமானத் தொழிற்நுட்பத்தின் கூடுதல் சிறப்பாகும். ஒரு டச்ஸ்கிரீன் நேவிகேஷன் ஸ்கிரீன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்குள் நுழையவும், விமானத்தை ஸ்டார்ட் செய்யவும் மட்டுமே ஒரு பைலட் தேவைப்படுகிறார். மற்ற எல்லா காரியங்களையும், இந்த ஆளில்லாத விமானமே பொறுப்பேற்று கொள்கிறது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், இந்த ஆளில்லாத விமானத்தை பைலட்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இதன் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் ஆக ஏறக்குறைய 4 மணிநேரங்கள் எடுத்து கொள்ளும் நிலையில், இதை வேகமாக சார்ஜ் செய்யும் இயந்திரநுட்பமும் உள்ளது. இதன்மூலம் சார்ஜ் செய்யும் நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைகிறது.
இந்த ஆளில்லாத விமானத்தில் அதிசயத்தக்க வகையில், மணிக்கு 100 கி.மீ என்ற அதிகபட்ச வேகத்தையும், 3,499m உயர்த்தும் தன்மையும் கொண்டு, மொத்தம் பறக்கும் நேரமாக ஏறக்குறைய 23 நிமிடங்களை கொண்டுள்ளது. அதேபோல, இந்த ஆளில்லாத விமானத்தில் ஏர் கண்டிஷனிங், குல்விங் டோர்கள், வைப்பு இடம் மற்றும் 4G இணைப்பு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் இறுதியில் இது கிடைக்க பெறும். இந்த தனிப்பட்ட ஆளில்லாத விமானத்தின் விலை ஏறக்குறைய ரூ.2 கோடியை ஒட்டியே அமையும். இது ஒரு BMW i8-க்காக செலவிடும் பணம் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் பறக்க ஆசைப்பட்டால், அதற்கு இந்த பணத்தை செலவிட்டு தான் ஆக வேண்டும்.