சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

கோ NXT லிமிடட் எடிசனை ரூ.4.09 லட்சத்தில் அறிமுகப்படுத்தியது டாட்சன்

published on ஆகஸ்ட் 17, 2015 11:56 am by manish

ஜெய்ப்பூர்: கோ NXT லிமிடட் எடிசனை எக்ஸ்-டெல்லி விலையான ரூ.4.09 லட்சத்தில் அறிமுகப்படுத்தியது டாட்சன் நிறுவனம். இந்த லிமிடட் எடிசன் தயாரிப்பு, 1000 யூனிட்களுக்கு உட்பட்டு, இந்தியாவில் உள்ள 196 டாட்சன் விற்பனையகங்களில் இந்தாண்டின் டிசம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும். ரூ.20,000 மதிப்பிலான கோ NXT -யின் சிறப்பம்சங்கள் கொண்ட உபரி பாகங்கள் கிடைக்கும் நிலையில், இதற்கு முன்பு வந்த கோ (T) யின் விலையை விட இது ரூ.5,000 அதிகமாகும். ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், சைடு மோல்டிங்ஸ், கிரோம் எக்ஸ்சாஸ்ட் ஃபினிஷர் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸர் ஆகிய சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. நியூ மைக்ராவில் உள்ளது போல, உட்புறத்தில் பின்புற பார்சல் ட்ரே மறுவடிவமைப்பு கியர் லெவல் சுற்றுபுறம் மற்றும் டேஸ்போர்டில் பியனோ பிளாக் ஃபினிஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இயந்திரவியலை பொறுத்த வரை இந்த காரில் எந்த மாற்றமும் இல்லை. 1.2 லிட்டர் 3-சிலிண்டர் என்ஜின் அளிக்கும் 68PS/104Nm மற்றும் எரிப்பொருள் பயன்பாடு லிட்டருக்கு 20.63 கி.மீ ஆகிய சிறப்பம்சங்கள் தொடர்கிறது. இது ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட என்ஜின் ஆகும்.

டாட்சன் கோ NXT லிமிடேட் பண்டிகை கால எடிசனின் அறிமுகத்தை குறித்து நிஸ்ஸான் மோட்டர் இந்தியா பிரைவேட் லிமிடேட் நிர்வாக இயக்குநர் அருண் மல்ஹோத்ரா கூறுகையில், “இந்தியாவில் இருக்கும் நாம், பெரும்பாலான பொருட்களை வாங்கும் திட்டங்களை பண்டிகை காலத்திற்கு சேர்த்து வைத்துக் கொள்கிறோம். இக்காலத்தில் வரும் முகூர்த்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நமது கனவுப் பொருட்களை வாங்க விரும்புகிறோம். இந்த வழக்கத்தை (பரம்பரா) தொடரும் வகையிலும், புதுமையை கொண்டு புகுத்தவும், உங்கள் மகிழ்ச்சியை கூட்டும் வகையில் டாட்சன் கோ லிமிடேட் பண்டிகை கால எடிசனை அளிக்கிறோம்” என்றார்.

இந்த பண்டிகை கால கார் பதிப்புடன், டாட்சன் தரப்பில் 3 நாள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொண்ட பயணத்தை (கார்னிவல்) தென்னிந்திய டீலர்ஷிப்கள் இடையே நடத்தப்பட உள்ளது. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கொண்ட பயணத்தின் போது, பண்டிகை களையை கொண்டு வரும் வகையில், டீலர்ஷிப்கள் நடுஇரவு வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது கார்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.3,500 மதிப்புள்ள உபரி பாகங்கள் முதல் ரூ.12,000 மதிப்புள்ள தங்கம் வரையுள்ள ஏதாவது ஒரு பரிசு உறுதியாக கிடைக்கும்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.8.95 - 10.52 சிஆர்*
புதிய வகைகள்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புதிய வகைகள்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வகைகள்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை