ஒற்றை-இரட்டை விதிமுறைக்கான இரண்டாம் கட்ட தேதிகள் - நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது
published on பிப்ரவரி 11, 2016 02:46 pm by sumit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒற்றை-இரட்டை விதிமுறையின் (ஆடு-இவென் ஃபார்மூலா) சோதனை கட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டத்தை குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு டெல்லி அரசு முன்வந்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு ஒரு சாதகமான கருத்துகள் கிடைத்துள்ளதால், இது தொடர்பான துறையினருடனான ஒரு மதிப்பாய்வுக் கூட்டத்தை, AAP அரசு ஏற்பாடு செய்ய உள்ளது. எனவே இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்தும் தேதிகள், நாளை அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “ஜனவரி 26 ஆம் தேதியில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள பெரும்திரளான மக்களின் பதில்களை குறித்து மதிப்பீடு மற்றும் ஆலோசனை நடத்தும் வகையில், இது தொடர்பான துறை அதிகாரிகள் மற்றும் அவரது அமைச்சர்களை கொண்ட ஒரு மதிப்பாய்வுக் கூட்டத்தை நாளை கூட்டமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” என்றார்.
இ-மெயில்கள், மிஸ்டு கால்கள், ஆன்லைன் படிவங்கள் மற்றும் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் ஆகிய முறைகளில், பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை, அரசு பெற்றுக் கொண்டது. இதுவரை ஏறக்குறைய 9 லட்சம் கருத்துக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், “ஆன்லைன் படிவங்களின் மூலம் ஏறக்குறைய 28,300 பரிந்துரைகள் வந்துள்ளன. மற்றபடி இ-மெயில்கள் மற்றும் மிஸ்டு கால்கள் மூலம் முறையே 9,000 மற்றும் 1,82,808 என வந்துள்ளன. இது தவிர, மக்களின் கருத்துக்களை திரட்டும் வகையில், அரசு சார்பாக 9,00,000-க்கும் அதிகமான அழைப்புகளை செய்துள்ளது” என்றார்.
தொழிற்நுட்ப ரீதியாக மேம்பாடு கொண்ட மிஷின்களாக எண்ணப்பட்ட வாகனத் தயாரிப்புகளின் மீது இந்த விதிமுறை இலக்கு நிர்ணயித்ததால் கடும் சர்ச்சையை கிளப்பியது. எனினும் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டிற்கு நான்கு-சக்கர வாகனங்கள் மட்டுமே முழுப் பொறுப்பாக அமையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விதிமுறை அறிவிக்கப்பட்ட பிறகு, அதற்கு எதிராக குரல் கொடுத்ததில் மாருதி சுசுகி நிறுவனம் முதலாவதாக முந்திக் கொண்டது. அடுத்தப்படியாக ஜாகுவார், தனது கருத்தை வெளியிட்டாலும், அது ஒரு வலுவான பதிலாக அமைந்தது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO ரால்ஃப் ஸ்பித், கார்களுக்கும், மாசுப்படுதலுக்கும் இடையிலான ஒட்டுமொத்த தொடர்பை குறித்து விளக்கினார். நாட்டின் தலைநகரத்தில் டீசல் கார்களுக்கான (2,000cc மேல்) சமீபகால தடையின் மீது அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். மேலும் அவர், யூரோ VI விதிமுறைகளின்படி (BS-VI விதிமுறைகளுடன் ஒப்பிடத்தக்கது), டெல்லி நகரில் கார்களால் எடுத்துக் கொள்ளப்படும் காற்று, அவைகளால் வெளியிடப்படும் புகையை விட, அதிக மாசு கொண்டதாக உள்ளது, என்றார்.
இதையும் படிக்கவும்