சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா ? உங்களிடம் உள்ள பழைய காரை ஸ்கிராப் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா ?

published on பிப்ரவரி 15, 2024 06:35 pm by shreyash

உங்கள் பழைய காரை ஸ்கிராப்பிங் செய்யும் போது அதற்கான சான்றிதழ் கிடைக்கும். புதிய காரை வாங்கும் போது இதன் மூலமாக சில பலன்களையும் பெறலாம்.

பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக வாகன ஸ்கிராப்புக் கொள்கைக்கான வரைவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. புதிய காரை வாங்கும் முன் பழைய காரை ஸ்கிராப் செய்யும் போது இதனால் பல்வேறு நன்மைகளும், சேமிப்பும் கிடைக்கும். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 -க்கு சமீபத்தில் சென்றிருந்தபோது, ​​ஒரு முழுவதுமாக ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனம் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம், ஒரு பெரிய அளவிலான கார் இறுதியில் எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் இங்கே பார்க்கலாம்:

CarDekho India (@cardekhoindia) ஷேர் செய்யப்பட்ட ஒரு பதிவு

பாலிசியின்படி, வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையில் தோராயமாக 4 முதல் 6 சதவீதத்தை உடனடியாக ஸ்கிராப்பேஜ் சென்டர் உங்களுகளிடம் வழங்கும். தனியார் வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் பலன்களின், அவர்களின் புதிய காருக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரையிலான தள்ளுபடியும் அடங்கும். மேலும், ஸ்கிராப்பேஜ் மையம் உங்கள் பழைய காரை ஸ்கிராப்பிங் செய்ததற்கான சான்றிதழை வழங்கும். அதைப் பயன்படுத்தி புதிய காரின் பதிவுக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். இந்தச் சான்றிதழை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளலாம், இதனால் அவர்களும் புதிய கார் வாங்கும்போது பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஸ்கிராப்பேஜ் கொள்கையின்படி, உங்கள் பழைய காரின் ஸ்கிராப்பேஜ் சான்றிதழைக் காண்பித்தால், புதிய வாகனத்தின் விலையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குமாறு வாகன உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு: வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையின் கீழ் மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள்/தள்ளுபடிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, இந்த ஊக்கத்தொகைகளின் பொருந்தக்கூடிய தன்மை பிராண்டுகள் மற்றும் மாடல்களுக்கு ஏற்ப மாறுபடலாம். மேலும் தகவலுக்கு, உங்கள் அருகிலுள்ள கார் டீலரை தொடர்பு கொள்ளவும்.

மேலும் பார்க்க: ஜனவரி 2024 மாதத்தில் Mahindra Scorpio வாடிக்கையாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் டீசல் பவர்டிரெய்னை தேர்ந்தெடுத்துள்ளனர்

ஸ்கிராப்பேஜ் கொள்கை ஏன் முக்கியமானது?

வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையானது, பொருத்தமற்ற அல்லது மாசு எமிஷன் ஸ்டாண்டர்களை பூர்த்தி செய்யத் தவறிய பழைய வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக பழுதடைந்த பழைய வாகனங்களால் ஏற்படும் இடையூறுகள் குறைவது மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக வாகனத்தால் ஏற்படும் காற்று மாசுபாடு குறைகிறது. கூடுதலாக, இது கார் தயாரிப்புக்கு தேவைப்படும் இரும்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வையும் குறைக்கும்.

பல வாடிக்கையாளர்களுக்கு, ஒப்பீட்டளவில் பராமரிப்பு என்று வரும்போது புதிய காரை விட பழைய காருக்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது புதிய கார்கள் சிறப்பான செயல்திறன் மற்றும் சிறப்பான மைலேஜ் போன்றவற்றை வழங்குகின்றன, மேலும் அவை கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இணங்குவதால், அவை குறைவான மாசுபாட்டையே ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த கொள்கை வாடிக்கையாளர்கள் பழைய கார்களை ஸ்கிராப் செய்து விட்டு விரைவில் புதிய கார்களை வாங்க ஊக்குவிக்கும்.

இருப்பினும், ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கான வரைவின்படி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கார்கள், வாகனத் தகுதித் சோதனையின் போது மதிப்பிடப்படும். தேவையான ஸ்டாண்டர்ட்களை பூர்த்தி செய்தால், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் பழைய காரைத் தொடர்ந்து பயன்படுத்த, மறுபடியும் ரிஜிஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பு: பழைய காரை ரீ-ரிஜிஸ்டர் செய்யும் இந்தக் கொள்கை டெல்லி NCR -ல் பொருந்தாது, அங்கு வேறு விதமான இணக்க விதிமுறைகள் உள்ளன.

வெஹிகிள் ஸ்கிராப்பேஜ் கொள்கையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?. நீங்கள் புதிய காரை வாங்கும்போது கூடுதலாக சில பலன்களை பெற உங்கள் பழைய காரை ஸ்கிராப் செய்ய விரும்புவீர்களா? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

s
வெளியிட்டவர்

shreyash

  • 16 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.43.81 - 54.65 லட்சம்*
Rs.9.98 - 17.90 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.40 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை