• English
  • Login / Register

அற்புதமான சலுகைகளுடன் இந்த வருட தீபாவளியை கொண்டாடுங்கள் !

published on நவ 16, 2015 10:19 am by nabeel

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

கார்தேகோ தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தீபாவளி திருநாள் நமது நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று. நாடு முழுதும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் மேலும் கூட்டும் விதத்தில் இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார் மாடல்களின் மேல் ஏராளமான கவர்ச்சிகரமான சலுகைகளையும் , பரிசுகளையும் அறிவித்துள்ளது. நீங்கள் உங்கள் தேவைக்கோ அல்லது உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுக்கோ கார் வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிகவும் சரியான நேரம் இது தான்.  அதுவும் இந்த அசத்தலான சலுகைகளையும் , விலை தள்ளுபடியையும் பார்க்கையில் கார் என்ற  இந்த நவநாகரீக அழகு ரதத்தை சொந்தமாக்கிக் கொள்ள இது மிக மிக சரியான தருணம்.

பியட்
 
தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் பியட் நிறுவனம் ரூ. 1,20.000 வரை மதிப்பிலான சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் பராமரிப்பு திட்டங்களையும் வழங்குகிறது.

புதிய லீனியா : சலுகைகள் ரூ.  1,10,000 வரை
லீனியா க்ளேசிக்: சலுகைகள் ரூ. 40,000 வரை
புன்டோ ஈவோ: சலுகைகள் ரூ. 70,000 வரை
அவ்வெஞ்சுரா : சலுகைகள் ரூ. 80,000 வரை

செவர்லே

வியக்க  வைக்கும் சலுகைகளுடன் 3 கிராம் தங்க நாணமும்  தருகிறது செவர்லே.

பீட் : 3 கிராம் தங்க நாணயம் , முதல் வருட காப்பீடு, 3 வருடத்திற்கான பராமரிப்பு திட்டம் மற்றும்  3+2 வருட உத்தரவாதம்.
செயில்: 3 கிராம் தங்க நாணயம் , 3 வருடத்திற்கான பராமரிப்பு திட்டம் மற்றும்  3+2 வருட உத்தரவாதம்.
என்ஜாய்: 3 கிராம் தங்க நாணயம் மற்றும் 3+2 வருட உத்தரவாதம்.
க்ரூஸ்: 3 கிராம் தங்க நாணயம் , முதல் வருட காப்பீடு, 3 வருடத்திற்கான பராமரிப்பு திட்டம், 9.9% நிதி உதவி திட்டம்  மற்றும்  3+2 வருட உத்தரவாதம்.

ரெனால்ட்

குறைந்த வட்டி,  ரொக்கத்தில் சலுகைகள் மற்றும் ஏராளமான தள்ளுபடிகள் என்று இவை அனைத்தையும்  உள்ளடக்கிய பல்வேறு  சிறப்பு சலுகைகளை தனது மாடல்கள் மீது வழங்குகிறது ரெனால்ட்.

டஸ்டர் : குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்  4.99%  சிறப்பு வட்டி விகிதம், சலுகைகள் ரூ.  45,000 வரை  மற்றும் ரூ.. 25,000 வரை  கூடுதல் சலுகை குறிப்பிட்ட ஸ்டாக் மீது மட்டும்.
லாட்ஜி : குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் 4.99%  சிறப்பு வட்டி விகிதம் , தள்ளுபடி ரூ.  70,000, நீட்டிக்கப்பட்ட இலவச 2 வருட உத்தரவாதம் /30,000 கி.மீட்டர்கள் மற்றும் கூடுதல் கார்பரேட் போனஸ்.
பல்ஸ்: குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்  6.99%  சிறப்பு வட்டி விகிதம், சலுகைகள் ரூ.  55,000 வரை
ப்லூயன்ஸ்: சலுகைகள் ரூ. 4,50,000 வரை
கொலியோஸ்:  சலுகைகள் ரூ. 6,00,000 வரை
ஸ்கேலா : குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் கவர்சிகரமான 6.99%  சிறப்பு வட்டி விகிதம், சலுகைகள் ரூ.  35,000 வரை

ஹயுண்டாய்

ஒவ்வொரு ஒரு லட்சத்திற்கும் ஒரு தங்க நாணயம் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளை வழங்குகிறது ஹயுண்டாய்.

இயான் : சேமிப்பு ரூ.  40,000  மற்றும் ஸீரோ டவுன் பேமென்ட் போன்ற சலுகைகள் க்ரேண்ட் i10: சேமிப்பு  ரூ. 70,000  வரை
எக்ஸ்சென்ட்: சேமிப்பு ரூ.  70,000 வரை
ஐ10: சேமிப்பு ரூ. 50,000 வரை
வெர்னா : சேமிப்பு ரூ. 83,000 வரை
எலன்ட்ரா: சேமிப்பு ரூ . 40,000 வரை
சாண்டாபி: சேமிப்பு ரூ.  50,000 வரை

நிஸ்ஸான்

நிஸ்ஸான் நிறுவனமும் தனது மாடல்கள் மீது ரூ.  95,000 வரையிலான ரொக்க சலுகைகளை வழங்குகிறது.

டெரானோ: சலுகைகள் ரூ. 95,000 வரை
சன்னி : சலுகைகள் ரூ. 75,000 வரை
மைக்ரா : சலுகைகள் ரூ . 45,000 வரை

இதையும் படியுங்கள் :

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience