Cardekho.com அறிமுகப்படுத்துகிறது trucksdekho.com
published on ஆகஸ்ட் 13, 2015 10:15 am by cardekho
- 15 Views
- ஒரு க ருத்தை எழுதுக
வர்த்தக வாகனங்களுக்கான தகவல் மற்றும் தேடலுக்கு ஏற்ற புதிய போர்ட்டல்
ஜெய்ப்பூர்: இந்தியாவின் நம்பர் 1 ஆட்டோ போர்ட்டலான cardekho.com தனது வர்த்தக வாகனங்களுக்கான புதிய தளமான trucksdekho.com-வின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது. Cardekho-வில் எல்லா வகையான கார்களை குறித்த தகவல்களையும் அளிப்பது போல, மேற்கண்ட இணையதளம் மூலம் வர்த்தக வாகனங்களை காட்சிக்கு கொண்டு வந்து, புதிய டிரக்குகள் மற்றும் வர்த்தக வாகனங்களை குறித்த தகவல்களை அளித்து, நுகர்வோருக்கு சிறந்த வாகனத்தை தேர்ந்தெடுக்கவும், சொந்தமாக்கவும் உதவும். TrucksDekho.com-ன் அறிமுகத்தில் 13 முன்னணி டிரக்குகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் பிராண்டுகளை குறித்த விரிவான தகவல்களை உட்கொண்டு, 800க்கும் மேற்பட்ட வாகனங்களின் தன்மைகள், சிறப்பு அம்சங்கள், ஒப்பீடுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும் இந்தியாவில் உள்ள வாகனங்களின் 2000க்கும் மேற்பட்ட டீலர்களின் விபரம், தொடர்பு தகவல்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட டிரக் பாடி தயாரிப்பாளர்களின் தகவல்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த இணையதளத்தை விருது பெறும் வகையில் வடிவமைத்துள்ள CarDekho, தேடலுக்கான பிரிவுகள், ஒப்பீடுகள், எல்லா வகையான தகவல்களையும் திரட்டுதல், பிரசுரங்கள், விமர்சனங்கள் என எல்லாவற்றை அளித்து, நுகர்வோருக்கு வர்த்தக வாகனத்தை குறித்து ஆராய உதவும் ஒரே இடமாக விளங்கும்.
இந்த அறிமுகத்தை குறித்து CarDekho.com நிறுவுனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமித் ஜெயின் கூறுகையில், இது ஒரு முழு தொழில்துறையை குறித்த விரிவான காட்சியமைப்பை ஒரு யோசனைக்குள் சமர்ப்பிக்கிறது. அந்த யோசனையான TrucksDekho, சரியான நேரத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. வர்த்தக வாகனங்களின் தொழில்துறை கடந்த 10 ஆண்டுகளில் எழுச்சி அடைந்துள்ள நிலையில், அந்த சந்தையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 16% அளவிற்கு இன்னும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்துறை வளர்ச்சியில் எங்கள் உழைப்பும் பங்கேற்கும் வகையில், டிரக்குகள் மற்றும் வர்த்தக வாகனங்களை வாங்குவோர் ஆராய்ந்து அறிந்து, எதை வாங்குவது என்ற சரியான முடிவை எடுக்க நாங்கள் உதவுகிறோம்” என்றார்.
இந்த தொழில்துறையில் முன்னணி தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ் (47% சந்தை பங்குகள்), இதை தொடர்ந்து மஹிந்திரா அண்டு மஹிந்திரா (25% சந்தை பங்குகள்) மற்றும் அசோக் லேலண்ட் (15% சந்தை பங்குகள்) ஆகியோரை கொண்டு, வரும் 2016-17-ல் 1.6 மில்லியன் யூனிட்களை வர்த்தக வாகனங்களின் சந்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சி மற்றும் வியூகம் – துணை தலைவர் ரபிந்தர் கவுபா கூறுகையில், “வரும் 2016 நிதியாண்டில் இருந்து டிரக்குகளின் தேவை கணிசமான அளவில் உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே இந்த தொழில்துறையில் தகுதியான வாய்ப்புகள் அதிகரித்து, இயற்கையான போட்டிகளும் தீவிரமடையும் நிலையில் நுகர்வோருக்கு உதவும் வகையிலான மின்னணு தளத்தை நட்பு அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே TrucksDekho போன்ற போர்ட்டல் எப்போதும் இல்லாத அளவில் அதிக உணர்வுபூர்வமாக செயல்படும். நாங்கள் ஆராய்ந்து பார்த்த போது, போக்குவரத்து பயன்பாடு மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் கட்டணம், குறிப்பிட்ட கால அளவில் நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த தாக்கம் பொருட்களை கொண்டு செல்பவர்களின் மீதான சுமையை குறைத்துள்ளது” என்றார்.
இந்த இணையதளம் விலை நிலவரம், EMI கணக்கிடுதல், நிகழ்வுகளை குறித்த செய்திகளை சேகரித்தல், பைனான்ஸ் மற்றும் டீலர் சலுகைகள் ஆகிய சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் நுகர்வோருக்கான பலதரப்பட்ட சலுகைகள் மற்றும் பயன்பாடுகளின் வகைகள் குறித்த தெளிவான வழிகாட்டல்கள் அளிக்கப்படும்.