Zigwheels.com இணையதளத்தை CarDekho.com கையகப்படுத்துகிறது: டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனம் கிர்னார் சாஃப்ட்வேரில் முதலீடு செய்கிறது
modified on அக்டோபர் 26, 2015 05:07 pm by cardekho
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
CarDekho.com மற்றும் Gaadi.com ஆகிய கார் இணையதளங்களின் உரிமையாளரான கிர்னார் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட், மற்றும் டைம்ஸ் இன்டெர்நெட் லிமிடெட் ஆகிய நிறுவனமும் இணைந்து, இன்று Zigwheels.com இணையதளத்தை கையகப்படுத்திய செய்தியை வெளியிட்டன. இந்தியாவின் முன்னணி கார் இணையதளங்களுள் ஒன்றான ZigWheels.com தளத்தின் மீதான அதிகாரப்படியான உரிமையை டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனத்திடம் இருந்து, தற்போது கிர்னார் சாஃப்ட் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், தற்போது உள்ள கிர்னார் சாஃப்ட்வேரின் முதலீட்டாளர்களான செக்குவா கேபிட்டல், ஹில்ஹவுஸ், டைபோர்ன், ரத்தன் டாடா மற்றும் HDFC பாங்க் ஆகியோருடன் டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனமும் இணைகிறது என்பது கூடுதல் செய்தி.
கிர்னார் சாஃப்ட்வேர் குழுமத்தின் வாகன இணையதளங்களான CarDekho.com, Gaadi.com, Zigwheels.com, BikeDekho.com மற்றும் TyreDekho.com ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெப் ட்ராஃபிக்கானது (web traffic), கிட்டத்தட்ட 30 மில்லியனை ஒரு மாதத்தில் எட்டிப்பிடித்து விடும். எனவே, இந்த பரிவர்த்தனை மூலம், இந்தியாவின் தலைசிறந்த முன்னணி நிறுவனமாக கிர்னார் சாஃப்ட்வேர் திகழும் வாய்ப்பு உள்ளது. வாகன உலகின் நுகர்வோர்கள், டீலர்கள், OEM –கள் மற்றும் ஏனைய தொழில் பங்குதாரர்கள் ஆகிய அனைவரின் இலக்கும், கிர்னார் சாஃப்ட்வேர் என்றாகிவிடும்.
Zigwheels.com கிர்னார் சாஃப்ட்வேரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், சுதந்திரமாகவே செயல்படும். எனினும், கிர்னார் குழுமத்தின் சக்தி வாய்ந்த க்ராஸ்-சினேர்ஜி அமைப்புகள், பிற தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளும்.
கிர்னார் சாஃப்ட்வேரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமித் ஜெய்ன், “இந்தியாவின் தலைசிறந்த மற்றும் மரியாதைக்குரிய மீடியா குழுமத்தின் பகுதியாக இருந்ததானால், Zigwheels.com இணையதளம் மிகவும் வலிமையான உட்பொருளைக் (கன்டென்ட்) கொண்டுள்ளது. இத்தகைய முன்னணி இணையதளத்தின் உரிமையை அதிகாரப்படி பெற்றதன் பின், எங்களது உள்ளடக்கத்தை (கன்டென்ட்) மேலும் வளப்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகப்படுகிறது, இதன் மூலம், வாடிக்கையாளர்களுடனான எங்களது ஈடுபாட்டை மேலும் அதிகப்படுத்த முடியும். டிஜிட்டல் வாகன சந்தையில் தலைமை வகித்துக் கொண்டிருக்கும் எங்கள் தற்போதைய நிலையை, இந்த கையகப்படுத்தும் வணிக பரிவர்த்தனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. அடுத்த நிலை என்பது, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், டீலர் பேஸ் மற்றும் வருவாயும் அடங்கும்,” என்று கருத்து தெரிவித்தார்.
“எங்களது நிறுவனத்தின் புதிய முதலீட்டாளரான டைம்ஸ் நிறுவனத்தை வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எங்களது பயணத்தை இனிதே தொடரவும், ஆன்லைன் கார் இணையதளங்களின் ஒருகிணைந்த செயல்பாட்டிற்கும், அவர்களது பேராதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று திரு. ஜெய்ன் மேலும் கூறினார்.
டைம்ஸ் இன்டெர்நெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யன் கஜ்வானி, “தற்போது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆன்லைன் வாகன தொழிலில் மாபெரும் வளர்ச்சி மற்றும் மதிப்பான வாய்ப்புகளும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இணையத்தில் சிறந்த வகையில் செயலாற்றி, தலைமை வகித்து வரும் கிர்னார் சாஃப்ட் நிறுவனம் இத்தகைய வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளது. இத்தகைய மாபெரும் மதிப்பைப் பெற்றுள்ள, தனித்தன்மை வாய்ந்த நிர்வாக குழுவுடன் கூட்டணியமைத்து வேலை செய்யப் போவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும், வரும் ஆண்டுகளிலும் இந்த உறவு நிலைத்து நின்று தொடரும் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.
இந்த பரிவர்த்தனை, கிர்னார் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய கையகப்படுத்தும் செயலாகும். ஏனெனில், கடந்த செப்டெம்பர் மாதம், நாஸ்பர் குழுமத்திற்கு சொந்தமான Gaadi.com என்ற இணையதளத்தைக் கையகப்படுத்தியது. டிஜிட்டல் துறையில் பயன்படுத்திய கார்களின் பிரிவைத் தலைமை வகிக்கவும், மானேஜ்மென்ட் குழுவை வலுப்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் புதிய டிஜிட்டல் வாகன தொழில் பிரிவில், சீராக Cardekho.com என்றென்றும் முன்னணியில் இருந்து வருகிறது.
கிர்னார் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் முக்கிய வணிக மாதிரியில், புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்காக மேற்கொள்ளப்படும் லீட் ஜெனரேஷன்; இணையதளங்களில் மேற்கொள்ளப்படும் மீடியா சேல்ஸ்; மற்றும் கார் உரிமையாளரின் ஆயுட்காலம் முழுவதும் அவருக்கு சேவை செய்யும் carBuddy பயன்பாடு (app) மூலம் இந்நிறுவனம் தனது வருவாயை ஈட்டிக்கொள்கிறது. இந்தியா முழுவதிலும், சுமார் 5,000 புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் டீலர்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருப்பதில், இந்திநிறுவனம் பெருமை கொள்கிறது, ஏனெனில், இந்தியாவில் உள்ள டிஜிட்டல் வாகன இணையதளங்களில் இதுவே மிகப் பெரிய நெட்வொர்க் ஆகும்.
தனது வலுவான ப்ராடக்ட்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி ஆட்டோ நிறுவனமாக உருவெடுத்த அனுபவத்தையும் சேர்த்து, தற்போது கிர்னார் சாஃப்ட்வேர் நிறுவனம், தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில், மேலும் தன்னை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், தற்போதுள்ள சந்தைகள் தவிர மேலும் வளர்ந்து, மிகப்பெரிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவிருக்கிறது.
இந்த நடவடிக்கைக்கு, கிர்னார் சாஃப்ட்வேர் நிறுவனத்திற்கு பிரத்தியேக நிதி ஆலோசகராக, தி ரெயின்மேக்கர் குழுமம் (TRMG) செயல்பட்டது.
0 out of 0 found this helpful