CarDekho –வின் அற்புதமான ‘ஃபீல் தி கார்’ அமைப்பை விளக்கும் நகைச்சுவை மிகுந்த புதிய TVC
கார் வாங்குவதற்கு உதவும் சிறந்த கருவியாக ஏன் CarDekho ஆப் இருக்கிறது என்பதை, CarDekho அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நகைச்சுவை மிகுந்த ஒரு வீடியோ அருமையாக விளக்குகிறது.
நீங்கள் உங்கள் காரின் மேல் உணர்ச்சி பூர்வமாக பற்று கொண்ட சென்டிமெண்டல் கார் பிரியரா? கார் வாங்குவதற்கு முன், இன்ஸ்ற்றுமெண்டலாக ஒரு வாகனத்தின் சத்தம் முதற்கொண்டு, அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிப்பது மிகவும் முக்கியம் என்று நினைப்பவரா நீங்கள்? மேற்சொன்ன இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்ற பதிலை நீங்கள் சொல்லியிருந்தால், உடனடியாக சமீபத்தில் வெளியான நகைச்சுவையான CarDekho -வின் புதிய TVC விளம்பரத்தைப் பாருங்கள். CarDekho பயன்பாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபீல் தி கார்' என்னும் அம்சத்தைப் பற்றி நகைச்சுவை ததும்ப இந்த TVC எடுத்துக் காட்டுகிறது. இந்நிறுவனத்தின் தனித்தன்மை வாய்ந்த அணுகுமுறையில் உருவான, ‘ஃபீல் தி கார்' என்னும் ஆப் அம்ஸத்தின் மூலம், எப்படி ஒரு காரை உண்மையாக உங்கள் முன் நிறுத்துகிறது என்பதை இந்த TVC சுட்டிக் காட்டுகிறது. மேலும், இந்த தொழில்நுட்பம் வழியாக ஒரு அருமையான ‘விர்ச்சுவல் கார் எக்ஸ்பீரியன்ஸ்' அதிவேகமாக நமக்கு கிடைக்க, இந்நிறுவனம் மாபெரும் முயற்சி எடுத்துள்ளது என்றே கூறவேண்டும்.
உண்மையில், மேற்சொன்ன விஷயம் மட்டும் இந்த விளம்பரப் படத்தை வசீகரமாக்கவில்லை, அதையும் தாண்டி, இந்த வீடியோ சாதாரணமான தொலைக்காட்சி விளம்பரம் போல இல்லாமல் புதுமையாக இருக்கிறது. ஏனெனில், இந்நிறுவனத்தில் வேலை செய்யும் தொழில் வல்லுனர்கள் மற்றும் உண்மையான ஊழியர்களைக் கொண்டு, இந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு, படத்தொகுப்பு, கேஸ்டிங்க் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் ஆகிய அனைத்து வேலைகளும் CarDekho –வின் அலுவலகத்தின் உள்ளேயே நடைபெற்றுள்ளது என்பது புதுமையிலும் புதுமை. புதிய TVC –யின் பின்னனியில், நாம் ஜெய்பூரில் உள்ள புதிய CarDekho அலுவலகத்தைக் காணலாம். மேலும், இந்த விளம்பரப் படத்தில் வரும் சுறுசுறுப்பான பரபரப்பான நபர்கள் TVC மாடல்கள் அல்ல, அவர்கள் இந்நிறுவனத்தின் உண்மையான ஊழியர்கள். வேடிக்கையாக தோற்றமளிக்கும் இந்த ஊழியர்களே, இந்நிறுவனத்தின் பின்னனியில் பம்பரமாக இயங்கி, அனுதினமும் இந்த வலைத்தளம் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான சரியான தீர்வுகளை வழங்குவதற்கும், இந்நிறுவனம் மென்மேலும் வளர்வதற்கும் உதவும் முக்கிய தூண்கள் என்று கூறினால் அது மிகை ஆகாது.
CarDekho –வில் CMO பதவி வகிக்கும் திரு. LK குப்தா இந்த TVC பற்றி குறிப்பிடும் போது, “இந்திய வாடிக்கையாளர்கள் தங்களின் கார்களுடன் எப்படி உணர்வு பூர்வமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும், ‘விர்சுவல் கார் எக்ஸ்பீரியன்சை' எங்களது புதிய ஆப் மூலம் கொண்டு வருவதற்காக எங்களது ஊழியர்கள் எப்படி கடினமாக உழைத்தார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே, இந்த புதிய அமைப்பை பற்றிய விளக்கங்களையும், செயல்முறை விளக்கங்களையும் இதனை உருவாக்கிய உண்மையான நிபுணர்களைக் கொண்டு, இந்த புதிய TVC –யில் விவரித்துள்ளோம். அது மட்டுமல்ல, எங்களது செய்தியை மிகச் சரியாக ஒருங்கிணைத்து தெளிவாக மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக, இந்த விளம்பரப் படத்தின் அனைத்து தயாரிப்பு நிலைகளையும் எங்களது அலுவலகத்தில் உள்ள குழுவே மெனக்கெட்டு செய்துள்ளது. எங்களது புதிய தொழில்நுட்ப அமைப்பு, நிச்சயமாக ‘யூசர் எக்ஸ்பீரியன்சை' அதிகப்படுத்தி, எங்களது வாடிக்கையாளர்கள் கார் வாங்குவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் எங்களது வலைதளத்திலேயே சேகரித்து, ஒரு சிறந்த முடிவை எடுக்க உதவும் என்பதை நாங்கள் தைரியமாகக் கூற முடியும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை உள்ளடக்கிய முழுமையான ஒரு 360 டிகிரி காட்சி; கார் பிரியர்களின் மனதை துள்ள வைக்கும் சத்தங்களான ஒரு காரின் ஹாரன், இக்னிஷன் சத்தம் மற்றும் ரெவ்விங்க்; காரின் பலதரப்பட்ட அம்சங்களைப் பற்றி விவரிக்கும் எம்பெட்டெட் வீடியோ மற்றும் பாப் அப் ஆகும் டெக்ஸ்ட் ஆகியவை இணைந்து CarDekho –வின் ‘ஃபீல் தி கார்' என்னும் இந்த புதிய அமைப்பு நிச்சயமாக ஒரு ஹை-ஃபங்ஷனாலிட்டி டெவலப்மெண்ட் என்பதை எடுத்துரைக்கிறது. வாடிக்கையாளர்கள் சிறப்பாக உபயோகிக்கும் முறையில், நாற்பத்திற்கும் மேற்பட்ட பிரபலமான கார் மாடல்களுக்கு ஏற்றவாறு, வீடியோ, டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ ஸ்டிமுலஸ் ஆகியவற்றை சிறந்த முறையில் இணைத்து CarDekho நிறுவனம் இந்த அமைப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்