• English
  • Login / Register

ப்ரிட்ஜ் ஸ்டோன் நிறுவனம் ஈகோபியா என்ற பெயரில் பல விதமான டயர்களை வெளியிட்டது

published on அக்டோபர் 08, 2015 02:03 pm by konark

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ப்ரிட்ஜ் ஸ்டோன் இந்தியா நிறுவனம் ஈகோபியா என்ற பெயரில் பல விதமான புதிய டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டயர்கள், பயணியர் வாகனங்கள் மற்றும் SUV கார்களுக்கு என்று, இரு விதமான பிரிவுகளில் வருகின்றன. பயணியர் வாகனங்களில் பொறுத்த ஈகோபியா EP 150 டயர்கள் என்றும், SUV  மற்றும் CUV கார்களில் பொறுத்த ஈகோபியா EP 850 டயர்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக உள்ள டயர்களைப் போல இல்லாமல், ப்ரிட்ஜ் ஸ்டோனின் ஈகோபியா டயர்கள் 7 – 10 சதவிகிதம் வரை அதிகமான எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கார்பன் டை ஆக்ஸைட் வேளியேற்றமும் மிகக் குறைவாகவே இருக்கும் என்று இந்த நிறுவனம் உறுதிபட கூறுகிறது.

ப்ரிட்ஜ் ஸ்டோன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், திரு. கசுஹிகோ மிமுரா, புதிய டயர்களை வெளியிடும் போது ஊடகத்திடம், “ப்ரிட்ஜ் ஸ்டோன் நிறுவனத்தின் சுற்றுசூழல் கொள்கையான – ‘தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு ஆரோக்கியமான சுற்றுசூழலை உருவாக்க உதவும் திட்டமே’, ஈகோபியா டயர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும். சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் ஈகோபியா டயர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் CO2 வெளியேற்றத்தால் உருவாகும் மாசுபாட்டைக் குறைக்கவும்; இந்திய வாகன உரிமையாளர்களின் எரிபொருள் செலவுகளை சுருக்கவும், ப்ரிட்ஜ் ஸ்டோன் நிறுவனம் பொறுப்பேற்கிறது. சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்று சூழலுக்கு சாதகமான பயன்பாடுகள் தவிர, ஈகோபியா EP  150 மற்றும் EP  850 டயர்கள் உறுதியான தன்மையுடனும், திடமாகவும், அனைத்து விதமான சாலைகளிலும் எளிதாக பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

ஈகோபியா டயர்களின் பெயர் காரணத்தை பார்க்கும் போது, ஈகோபியா என்ற வார்த்தை இகாலஜி (சுற்றுசூழலியல்) மற்றும் உடோபியா (சொர்கம்) என்ற வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது. இந்த அருமையான பெயர் காரணம் மூலம், ப்ரிட்ஜ் ஸ்டோன் நிறுவனத்திற்கு சுற்றுசூழல் பாதுகாப்பின் மீது உள்ள ஈடுபாட்டை அறியலாம். இந்நிறுவனத்தின் நீண்டகால தொலைநோக்கு பார்வை என்னவென்றால், 2050 வருடத்திற்குள் CO2 மாசுபாட்டை 50 சதவிகிதம் குறைத்து சுற்றுசூழலை பேணுவதே ஆகும்.


13 அங்குலத்தில் இருந்து 18 அங்குல விளிம்பு வட்டம் வரை உள்ள 26 விதமான ஈகோபியா டயர்கள், முதலில் சந்தைக்கு வரும். இந்த அளவு டயர்கள், பெரும்பாலான கச்சிதமான வாகனங்களில் சரியாக பொருந்தும். கடந்த 2015 ஏப்ரல் மாதம் வரை, ப்ரிட்ஜ் ஸ்டோன் நிறுவனம் 10 மில்லியன் ஈகோபியா டயர்களை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience