போர்க்வார்ட் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
published on செப் 29, 2015 07:10 pm by cardekho
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
சுமார் 50 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்க்வார்ட் நிறுவனம் தனது கார் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சீன - ஜெர்மானிய கூட்டு நிறுவனம் சீனாவில் தயாரான தன்னுடைய புதிய கார் ஒன்றை ஜெர்மனியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவிலும் 2016 ஆம் ஆண்டு இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என்று வலுவான யூகங்கள் உலவத் தொடங்கியுள்ளது இந்திய வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சி படுத்தும் செய்தியாக உள்ளது.
விலை குறைவாக நிர்ணயிக்கபட வேண்டும் என்பதற்காக இந்த கார்கள் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசம்ப்ளிங் செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் தொடக்கத்தில் CBU முறையில் ( முழுதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இங்கே ஓடுவதற்கு தயார் நிலையில் இறக்குமதி செய்யும் முறை ) இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த கார் தன்னுடைய இதே பிரிவு மற்ற தயாரிப்பாளர்களின் வாகனங்கள் மூலம் கடினமான சவாலை சந்திக்கும் என்பது உறுதி. இந்த SUV BX7 222 BHP சக்தியை வெளியிடக்கூடிய 2.0லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஏற்கனவே இந்திய கார் சந்தையில் இதே பிரிவில் பல கார்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்நிறுவனம் டீசல் வேரியன்ட் ஒன்றையும் அறிமுகப்படுத்தினால் தான் இங்கு நிலவும் கடும் போட்டியில் நிலைத்திருக்க முடியும்.
இத்தகைய சவால்களுக்கு நடுவே இந்த நிறுவனம் தனது புதிய காரை அறிமுகப்படுத்துவதில் மிகவும் முனைப்புடனும் ஆர்வத்துடனும் பணியாற்றி வருகிறது. இந்த கார் 'அக்ஸ்சசபல் பிரிமியம்' ( அதாவது எளிதில் வாங்க கூடிய பிரிமியம் வசதிகள் நிறைந்த வாகனம் ) என்றும் அழைக்கப்படுவதுடன் அந்த பேரை ஓரளவு நியாயப்படுத்தும் விதத்தில் இந்த வாகனம் உள்ளது என்றே சொல்ல தோன்றுகிறது. ஆடி Q5 கார்களைப் போன்ற அளவில் சுமார் ரூ. 25 – 27 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய அனைத்து போட்டியாளர்களையும் களத்தில் சந்திக்க ஏதுவாக வெகு விரைவில் அனைத்து பிரிவிலும் பல தரப்பட்ட மாடல்களுடன் களம் காண போகிறது இந்நிறுவனம். மேலும் " வருடத்திற்கு இரண்டு புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படும் " என்பது மேற்பார்வை குழுவின் சேர்மன் உடைய கூற்றாகும்.
காரின் உட்புற அழகு நிச்சயமாக காரின் விற்பனையை கூட்டுவதற்கு பெரிது உதவும் என்றே தோன்றுகிறது. இந்த கார் ஆடி மற்றும் பென்ஸ் நிறுவன தயாரிப்புக்களுக்கு இடைப்பட்ட ஒரு இடத்தில இருப்பதாக தோன்றுகிறது. பெரிய கிரில் அமைப்பு, அம்சமான வடிவமைப்பு மற்றும் போர்ஷ் கேயன் கார்களைப் போன்ற பின்புறம் என்று இந்த BX7 கார்கள் நிச்சயம் நம்மை திரும்பி பார்க்க செய்துவிடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
உட்புற அம்சங்களை பற்றி பேசுகையில் , மிக நேர்த்தியான வண்ணங்களில் ஆன சீலைகளால் டேஷ்போர்ட் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பெரிய தொடுதிரையையும் காண முடிகிறது. இந்த SUV வாகனத்தில் மூன்று வரிசைகள், அதிலும் குறிப்பாக இரண்டாவது வரிசையில் நிறைய இடவசதி இருக்கும் வகையில் வடிவமைப்பு இருக்கிறது. ஒயர்லெஸ் இணைப்பு மற்றும் ஆப்பின் (செயலி) உதவியுடன் ஓட்டுனர் காரின் பாகங்களை சரிபார்க்க கூடிய அம்சம் ( ஆன்போர்ட் டைக்நாஸ்டிக் சிஸ்டம்) தான் இந்த காரிலேயே மிகவும் பிரமிப்பூட்டும் சிறப்பம்சம் என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது.
சீனாவில் இந்த கார் தயாரிக்கப்பட இருந்தாலும், இந்த நிறுவனத்தின் வேர் ஜெர்மனி நாட்டில் தான் என்பதால் அதனுடைய பயனை இந்த நிறுவனத்தினர் முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஜெர்மன் நாட்டு தேர்ந்த கார் வல்லுனர்கள் தங்களது ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கியுள்ள ஏராளமான உதிரி பாகங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த BX7 SUV தயாரிப்பில் பயன்படுத்தியுள்ளனர். இந்த காரில் தனது சொந்த தயாரிப்பான சேஸிஸ் மற்றும் அதிக டார்க் உடன் கூடிய AWD சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போர்க்வார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்டி ப்ரேகிங் அசிஸ்டன்ட், ஆக்டிவ் லேன் கீபிங், பிராக்ஸிமிடி க்ரூஸ் கண்ட்ரோல் , ட்ராபிக் சைன் ரெகக்நிஷன் மற்றும் டிரைவர் பேடிக் வார்னிங் உட்பட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த வாகனத்தில் குவிக்கப்பட்டுள்ளது.
0 out of 0 found this helpful