FADA உடன் கார்தேக்கோ.காம் கைக்கோர்ப்பு: ஆட்டோமொபைல் டீலர்களுக்கு ஒரு புதுபலம்
published on நவ 04, 2015 11:26 am by cardekho
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
‘டிஜிட்டல் டீலர்’ என்ற தீம்மை வைத்து, FADA உடன் இணைந்து ஆட்டோ சம்மிட் 2016-யை நடத்துகிறது
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆட்டோமொபைல் சந்தை பகுதியான கார்தேக்கோ.காம், ஆட்டோமொபைல் டீலர்களின் தேசிய கூட்டமைப்பின் தலைமையான ஃபெடரேஷன் ஆப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அஸோசியேஷன் (FADA) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் FADA மற்றும் கார்தேக்கோ.காம் ஆகியோர் இணைந்து செயலாற்றி, இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் இடையே டிஜிட்டல் பிளாட்பாமின் நன்மைகளை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இந்த ஒப்பந்தத்தின்படி, FADA உடன் கார்தேக்கோ.காம் இணைந்து செயல்பட்டு, ஆட்டோ டீலர்களுக்கான FADA-வின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநாடான ஆட்டோ சம்மிட் 2016-யை, ‘டிஜிட்டல் டீலர்’ என்ற தீம்மின் அடிப்படையில் நடத்த உள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி புதுடில்லியில் வைத்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், நாடெங்கிலும் இருந்து சுமார் 800 முதல் 1,000 டீலர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பில் பேசிய கார்தேக்கோ.காம், CEO மற்றும் இணை நிறுவனரான திரு.அமித் ஜெயின் கூறுகையில், “தற்போதுள்ள டிஜிட்டல் மீடியா மற்றும் சாதனங்கள் ஆகியவை சேர்ந்து, சந்தையை ஒரு உச்ச நிலைக்கு கொண்டு செல்ல தேவையான உந்துதலை அளித்து வருவதால், இந்த சக்தி வாய்ந்த ஊடகத்தின் பயன்களை முடிந்த வரை, ஆட்டோமொபைல் தொழில்துறையினரும், கார் டீலர்களும் பயன்படுத்தி கொள்வது அவசியமாகி வருகிறது. FADA உடனான இந்த கூட்டணியின் மூலம், கார் டீலர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் அளவைகளை அதிகரிக்க உந்துதல் அளித்து, அவர்களின் தொழில்களை வளர்ச்சியை எட்ட, நாங்கள் உதவி செய்ய விரும்புகிறோம்” என்றார்.
FADA-யின் சர்வதேச விவகாரம் மற்றும் உலகளாவிய தொடர்புகள் துறையின் இயக்குனர் திரு.நிகுஞ் சாங்கி கூறுகையில், “இன்று வாகனங்களின் ஆரம்பக் கட்ட விசாரணைகள் பெரும்பாலும் இன்டர்நெட்டில் தான் நடைபெறுகிறது என்று FADA-யாகிய நாங்கள் கருதுகிறோம். எனவே ஆட்டோமொபைல் துறையின் சில்லறை வியாபாரிகள் தொடர்பில் இருக்கவும், வளர்ச்சியை எட்டவும், ஒரு சக்தி வாய்ந்த டிஜிட்டல் தன்மையை ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியமாக உள்ளது. இதற்காக தான் நாங்கள் கார்தேக்கோ.காம் உடனான கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனெனில், அவர்கள் புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார் சில்லறை வியாபார பிரிவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, விற்பனையாளர் / நுகர்வோர் இடையே நடுநிலை தன்மையோடு செயல்பட்டு வருகின்றனர். இந்த கூட்டணியின் மூலம், டீலர்ஷிப்களுக்கு ஒரு டிஜிட்டல் நுகர்வோர் அடித்தளத்தை அமைத்து கொடுத்து, ஒரு நிலையான வர்த்தக வளர்ச்சியின் போக்கை, நாங்கள் வரவேற்போம் என்று நம்புகிறோம்” என்றார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆன்லைன் சேனல்களை பொறுப்பேற்று இயக்கி, இந்திய ஆட்டோமொபைல் தொழில்களுக்கு ஒரு பெரிய வளர்ச்சியை அளிக்க, கார்தேக்கோ.காம் விரும்புகிறது. இதற்காக ஆன்லைன் ஆட்டோமொபைல் பட்டியலிடும் முறைகள் குறித்து டீலர்களுக்கு கற்றுக் கொடுத்து, சாதாரண நிலவியல்களை கடந்து தங்களின் தொழில்களை எப்படி உகந்த வளர்ச்சிக்கு கொண்டு செல்வது என்பதை குறித்து கார்தேக்கோ.காம் கற்று தர உள்ளது.
மற்ற மூலோபாய டை-அப்களை குறித்த செய்திகளை படிக்க:
ஸிக்வீல்ஸ்.காமை, கார்தேக்கோ.காம் கையகப்படுத்துகிறது – கிர்னார் சாப்ட்வேரில், டைம்ஸ் இன்டர்நெட் முதலீடு செய்துள்ளது
கார்தேக்கோ மற்றும் கவர்ஃபாக்ஸ் ஆகியவை இணைந்து, பயனீட்டாளர்களுக்கு 5 நிமிடங்களில் கார் இன்ஸ்சூரன்ஸ் பெற உதவுகிறது
0 out of 0 found this helpful