ஆட்டோ எக்ஸ்போ 2016 வெற்றிகரமாக நிறைவடைந்தது. மொத்தம் 6 லட்சம் பேர் கண்டு களித்தனர்.
published on பிப்ரவரி 10, 2016 12:30 pm by sumit
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
கடந்த ஒரு வார காலமாக மிக பிரமாண்டமாக நடைபெற்று வந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 நேற்றுடன் முடிவடைந்தது. வோல்வோ மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் நீங்கலாக , BMW, ஆடி , மெர்சிடீஸ் ,ஜாகுவார் போன்ற மற்ற அனைத்து பிரபல கார் தயாரிப்பாளர்களும் தங்களது பல மாடல் கார்களை காட்சிக்கு வைத்திருந்தனர். சச்சின் டெண்டுல்கர் ,விராட் கோலி, கத்ரீனா கைப் மற்றும் ஜான் ஆப்ரஹாம் போன்ற பிரபலங்களும் இந்த கண்காட்சிக்கு வந்திருந்து சிறப்பித்தனர்.
SIAM அமைப்பின் இயக்குனர் திரு. விஷ்ணு மாத்தூர் ,இந்த கண்காட்சி சிறப்பாக நடைபெற உதவிய பல்வேறு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்து பேசுகையில் , “ இந்த ஆட்டோ எக்ஸ்போ ஒரு சாதாரண வாகன கண்காட்சி என்ற எல்லைகளை தாண்டி, இந்திய வாகன தொழில் துறையின் உற்பத்தி திறனையும் ,தொழில்நுட்ப ஆற்றலையும் உலகுக்கு பறைசாற்றும் விதத்தில் அமைந்திருந்தது. மொத்தம் 6,01,914 பார்வையாளர்கள் வந்திருந்து பல்வேறு நிறுவனங்களின் பிரமிப்பூட்டும் தயாரிப்புக்களை கண்டு களித்தனர். இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் 108
புதிய தயாரிப்புக்கள் அறிமுகப்படுதபட்டன. . இந்த கண்காட்சி , இந்திய வாகன தொழில் துறையின் மீது உலக கார் தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தி இருக்கும் என்று நம்புகிறோம் . இந்த கண்காட்சியில் பங்கெடுத்துக் கொண்ட பன்னாட்டு கார் தயாரிப்பாளர்கள் , எங்களது பார்ட்னர்கள் மற்றும் ஊடகங்கள் என்று அனைவருக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இவர்கள் தான் இந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளதற்கு முக்கிய காரணமாகும் " என்று கூறியுள்ளார்.
இந்த கண்காட்சியில் மொத்தம் 65 வாகன தயாரிப்பாளர்கள் தங்களுடைய புதிய மற்றும் ஏற்கனவே விற்பனையில் உள்ள பல்வேறு வாகனங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த ஒரு வார காலத்தில் மொத்தம் 108 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. . வார நாட்களில் மக்கள் கூட்டம் குறைந்து விடாமல் இருக்க ஏராளமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் , பலவிதமான உணவு அரங்கங்களையும் இந்த கண்காட்சி அமைப்பாளர்கள் அமைத்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னதாக , மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி மற்றும் கனரக தொழில் துறை மற்றும் பப்ளிக் என்டர்பிரைசஸ் அமைச்சர் திரு. ஆனந்த் கீதே ஆகியோர் இணைந்து கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இந்த கண்காட்சியை துவக்கி வைத்தனர். முதல் இரண்டு நாட்கள் ஊடகங்களுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்கள் பொதுமக்கள் கண்டு களிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
நாள் |
பார்வையாளர் எண்ணிக்கை |
3 , 4 பிப்ரவரி |
75,000 |
5 -பிப்ரவரி |
79,000 |
6 - பிப்ரவரி |
1,12,400 |
7 -பிப்ரவரி |
1,30,975 |
8 - பிப்ரவரி |
1,09,539 |
9 - பிப்ரவரி |
95,000 |
மொத்தம் |
6,01,914 |
மேலும் வாசிக்க 2016 ஆட்டோ எக்ஸ்போவின் நான்காவது நாளில் 1.09 லட்சம் மக்கள் திரண்டனர்