விற்பனை பின்னடைவுக்கு பின் , ஏற்றுமதியும் குறைந்துள்ளது
published on பிப்ரவரி 15, 2016 12:14 pm by nabeel
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் வாகன தொழிற்துறை தொடர்ந்து 14 மாதங்களாக வளர்ச்சியை பதிவு செய்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை குறைந்தது. உள்நாட்டு விற்பனை மட்டுமல்ல , ஏற்றுமதியும் ஜனவரியில் குறைந்தே காணப்பட்டது. இது வாகன தயாரிப்பாளர்களை கவலை கொள்ள செய்துள்ளது. கடந்த 2015 ஜனவரியில் 41,787 வாகனங்கள் பல்வேறு தயாரிப்பாளர்களால் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து, கடந்த 2016 ஜனவரியில் 33,909 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2015 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 19% சதவிகிதம் குறைவாகும் . சர்வதேச வாகன சந்தைகளில் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப சட்ட திருத்தங்கள் தான் இந்த ஏற்றுமதி குறைவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஜனவரியில் , ஏற்றுமதி வாகனங்கள் , பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் கார்களின் ஏற்றுமதி 7% குறைந்து உள்ளது. ஜனவரி 2015 ல் 45,114 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் ஜனவரி 2016ல் 42,084 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் நிலை ஏற்றுமதியாளரான ஹயுண்டாய் நிறுவனமும் கடந்த மாதத்தில் குறைவான வாகனங்களையே ஏற்றுமதி செய்துள்ளன. கடந்த 2015 ஜனவரியில் 10,003 வாகனங்களை ஹயுண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2016 ஜனவரியில் 56.66% சதவிகிதம் குறைந்து 4,335 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 2014 – 15 ஆம் ஆண்டுகளில் அல்ஜீரிய வாகன சந்தைக்கு இந்தியாவில் இருந்து $293 மில்லியன் டாலர் மதிப்புள்ள பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இலங்கை மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கு முறையே $158 மற்றும் $335 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மாருதி மற்றும் டொயோடா நிறுவனங்களும் முறையே 36.25% மற்றும் 56.69% ஏற்றுமதி வீழ்ச்சியை கடந்த ஜனவரியில் பதிவு செய்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அல்ஜீரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இலங்கையில் ஏற்றுமதிக்கு அதிகமான வரி விதிக்கப் படுவதினாலும் , ஐரோப்பாவில் மொத்தத்தில் வர்த்தகம் மந்த நிலையில் உள்ளதாலும் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. . SIAM அமைப்பின் இணை பொது இயக்குனர் இந்த சூழல் குறித்து கருத்து தெரிவிக்கையில் , “ அல்ஜீரியா நாட்டில் பல புதிய தொழில்நுட்ப விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு நாங்கள் அல்ஜீரியா நாட்டிற்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இந்த பிரச்சனை எங்களுக்கு சவாலாக தான் உள்ளது" என்று கூறினார் . இது சம்மந்தமாக வாகன தொழிற்துறை ஏதாவது முடிவு எடுத்துள்ளதா என்று கேட்டதற்கு , “ அவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருப்பதால் நாம் தான் அவர்களுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும் " என்றும் அவர் கூறினார்.
மேலும் வாசிக்க