சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டிராஃபிக்கில் மாட்டிக் கொள்ளும் போது உங்கள் காரை பாதுகாப்பதற்கான 7 வழிகள்

rohit ஆல் டிசம்பர் 28, 2023 02:44 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஒரு விரைவுச் சாலை ஒன்றில் பல கார்கள் உடைந்து கிடப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை கவனித்துக் கொள்வதற்கான அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு நீண்ட வார இறுதி பொதுவாக விடுமுறைகளை திட்டமிடுவதற்கு மிகவும் ஏற்ற நேரம் இது, குறிப்பாக சாலை பயணங்கள். இது பொதுவாக வழக்கமான தினசரி சூழல்களில் இருந்து விடுபடுவதற்கான நேரமாகக் கருதப்பட்டாலும், வார இறுதியில் நீங்கள் மட்டும் ஒரு பயணத்தைத் திட்டமிடாமல் இருக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான நேரங்களில், இத்தகைய சூழ்நிலைகளில் மெட்ரோ நகரங்களுக்கு வெளியே எக்ஸ்பிரஸ் சாலைகளில் அதிக போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனைக்கு மும்பை-புனே விரைவுச்சாலை வீடியோ ஒரு சாட்சி. கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும் மூன்று நாள் விடுமுறை என்பதாலும் 2023 வார இறுதியில், கார்கள் 12 கிலோமீட்டர் நீளமான போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் பழுதாகி பக்கவாட்டில் நின்ற கார்களை பற்றிய செய்திகள் வெளியாகின.

A post shared by Punekar News (@punekarnews)

இத்தகைய போக்குவரத்து நெரிசலால் காரின் பாகங்களில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படலாம். மேலும் இந்த மலைப்பாதைகள் நீண்ட சாய்ந்த இடங்களாக இருப்பதால், இது அதிக வெப்பம் மற்றும் கிளட்ச் சேதம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். இதேபோன்ற சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, உங்கள் கார் பழுதடைவதைத் தடுக்க இங்கே சில குறிப்புகளை கொடுத்துள்ளோம்:

இன்ஜின் வெப்பநிலை

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் வகை எதுவாக இருந்தாலும், இன்ஜின் வெப்பநிலையைக் குறிக்கும் அளவீட்டை நீங்கள் பார்க்கலாம் (சி மற்றும் ஹெச் எழுத்துக்களைப் பார்க்கவும்). சில கார்களில் MID அல்லது டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவில் வெப்பநிலை புள்ளிவிவரங்கள் காட்டப்படலாம். கேஜ் உண்மையில் 'H' க்கு அருகில் இருந்தால் அல்லது 100 டிகிரி செல்சியஸ் குறிக்கு மேல் சென்றாலோ, நீங்கள் இன்ஜின் வெப்பநிலை எச்சரிக்கை விளக்கைக் கண்டாலோ, உடனடியாக உங்கள் காரை பக்கவாட்டில் நிறுத்தி, கடுமையான சேதத்தைத் தடுக்க இன்ஜினை அணைக்க வேண்டும். இன்ஜின் அதிகமாக வெப்பமடைவதற்கான காரணம் செயலிழந்த ரேடியேட்டர், குளிரூட்டும் பம்ப் அல்லது தெர்மோஸ்டாட் ஆக இருக்கலாம்.

இன்ஜினை ஆஃப் செய்யவும்

அதிக ட்ராஃபிக் சூழ்நிலைகளில் இன்ஜினை நீண்ட நேரம் இயக்குவதும் இன்ஜின் செயலிழப்பை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் நீண்ட நேரம் நெரிசலில் சிக்கிக் கொள்ளவதற்கான சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் இன்ஜினை அணைப்பது நல்லது. இங்குதான் ஐடில் ஸ்டாப்/ஸ்டார்ட் அம்சமும் உதவிக்கு வருகிறது, இதன் மூலமாக கார் போக்குவரத்தில் நிறுத்தப்படும்போது இன்ஜின் செயல்பாட்டில் இருக்கும் கால அளவைக் கட்டுப்படுத்த முடியும். இன்ஜின் செயலிழப்பு மற்றும் எரிபொருள் அமைப்பு தோல்விகள் போன்ற பல்வேறு சிக்கல்களைக் குறிக்கும் இன்ஜின் வார்னிங் லைட்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

கார் ஜன்னல்களை கீழே இறக்கி வைக்கவும்

இத்தகைய நேரங்களில் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், காரின் ஏசியை அணைத்துவிட்டு ஜன்னல்களை கீழே இறக்க வேண்டும். மேல்நோக்கிச் செல்லும்போதும் அல்லது அடர்த்தியான வாகன போக்குவரத்தின் நடுவே செல்லும் போது ஏசியை பயன்படுத்தும் போது அது அமைப்புக்கு அதிக அழுத்தத்தைச் சேர்க்கிறது. இது சாதாரண சூழ்நிலையில் ஒரு பிரச்சினையாக இருக்காது, ஆனால் நீடித்த போக்குவரத்து நெரிசல்களில் சிக்கல்களை ஏற்படுத்தும். இன்ஜின் அதிக வெப்பமடைவதற்கு இது ஒரு காரனமாக இருக்கலாம். வெப்பமான காலநிலையில், டிராஃபிக்கில் சிக்கிக்கொண்டிருக்கும்போது நீண்ட நேரம் ஏசியை ஆன் செய்து வைத்திருப்பதற்குப் பதிலாக அதன் பயன்பாட்டை குறைக்கலாம். அதிவேக நெடுஞ்சாலைகளில் உங்கள் காரின் மைலேஜை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

A post shared by CarDekho India (@cardekhoindia)

கியர்களை தேவைப்படும் சமயத்தில் மாற்றவும்

பம்பர்-டு-பம்பர் டிராஃபிக்கில் அல்லது செங்குத்தான சாலைகளில் நகரும்போது கிளட்ச் பயன்பாடு அதிகமாக இருப்பதும் கார்கள் பழுதடைவதற்கு அல்லது அவற்றின் இன்ஜின் அதிகமாக வெப்பமடைவதற்கு ஒரு முக்கிய காரணம். கிளட்ச் பிளேட்டின் தொடர்ச்சியான செயல்பாடு, கிளட்ச் பிளேட்கள் வெப்பமடைவதற்கு காரணமாக இருக்கலாம் .

உங்களிடம் எந்த டிரான்ஸ்மிஷன் கார் இருந்தாலும், மேனுவலாகவோ அல்லது ஆட்டோமெட்டிக் ஆகவோ இருந்தாலும், மேற்கூறிய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, உங்கள் கார் நிலையாக இருக்கும்போதெல்லாம் நியூட்ரலுக்கு மாற்றவும், ஹேண்ட்பிரேக்கை பயன்படுத்தவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மெதுவாக செல்லுங்கள், காருக்கு இடையே தூரத்தை கடைபிடியுங்கள்

நீண்ட போக்குவரத்து நெரிசல்களில் உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பின்பற்றுவது நல்லது. எதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது, ​​சாய்வுகளில் பின்னோக்கி நகரவும் , பிரேக்கை பயன்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும். முன்னால் ஒரு கனரக வாகனம் இருந்தால் உங்கள் பார்வையைத் தடுக்கும் பட்சத்தில் இந்த அடிப்படை விதியைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்க: 2023 -ஆண்டில் ADAS வசதியை பெற்ற 30 லட்சத்திற்கும் குறைவான 7 கார்கள்

காருக்கு விரைவான ப்ரீ செக்

உங்கள் பயணத்தில் நீண்ட போக்குவரத்து நெரிசலை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் காரை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம். பயணத்தை தொடங்கும் முன், உங்கள் காரை ஒரு முறை சரிபார்ப்பது அல்லது அனைத்து பாகங்களும் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்யவதற்காக அதை சர்வீஸ் செய்வது நல்லது. இதில் இன்ஜின் ஆயில் இதர ஃபுளூயிட்கள், பேட்டரியின் நிலை, டயர் அழுத்தம் மற்றும் பிரேக்குகள் போன்ற பாகங்கள் அடங்கும்.

பொறுமை மிகவும் முக்கியம்

இதுபோன்ற சமயங்களில், பொறுமையாக இருப்பதும், அமைதியாக இருப்பதும்தான் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். மெதுவாக நகரும் போக்குவரத்தின் இடையில் நீங்கள் அடிக்கடி லேனை மாற்ற முயற்சி செய்ய வேண்டியதில்லை. முன்னால் உள்ள காரிலிருந்து உங்கள் தூரத்தை பராமரிக்காமல் உங்கள் காரை நகர்த்த வேண்டாம். திறம்பட வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி, ஏதேனும் தேவையற்ற சூழ்நிலை ஏற்பட்டால் மிகவும் பொருத்தமான முறையில் சமாளிக்கவும் இது உதவும். முடிவில், நீங்கள் மட்டுமல்ல, உங்கள் காரும் எந்த அழுத்தமான சூழ்நிலையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நீண்ட சாலைப் பயணத்தை மேற்கொள்ளும்போது, ​​இந்த அடிப்படை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு எங்கள் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். இவை உங்களுக்கு சிறந்த நினைவுகள் மற்றும் மகிழ்ச்சியான பயணங்களை தரும் என்பதை நாங்கள் நம்புகிறோம் .

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.81 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை