சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ : சிறந்த கார்கள் வெளியிடப்பட்டுள்ளன ; விரைவில் விற்பனைக்கு வரும்

published on பிப்ரவரி 08, 2016 02:14 pm by bala subramaniam

2016 ஆட்டோ எக்ஸ்போவின் மிகப்பெரிய வெளியீடுகளைப் பார்ப்போம். இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பெரும்பாலான கார்கள் இந்த வருடமே அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி விடாரா ப்ரீஸா

ஈகோஸ்போர்ட் கார்களின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போகும் கார் என்று அனைவராலும் கருதப்படும் விடாரா ப்ரீஸா கார்கள் மாருதி நிறுவனத்தின் மற்றுமொரு வெற்றி தயாரிப்பாக இருக்கப் போவது உறுதி என்றே தோன்றுகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் மட்டுமல்லாமல் ஆன்லைனிலும் அற்புதமான வரவேற்பை பெற்று வரும் இந்த விடாரா ப்ரீஸா , சப் - 4 மீட்டர் SUV பிரிவில் உள்ள வாகனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கப்போகிறது என்பது உறுதி .

மாருதி சுசுகி இக்னைஸ்

மாருதியின் மற்றுமொரு மாடல் காரான இந்த இக்னைஸ் கார்களும் ஏராளமான வாடிக்கையாளர்களை மாருதி அரங்கத்திற்கு கவர்ந்திழுத்து வருகிறது. உற்பத்திக்கு தயாராக உள்ள இந்த கார்களை மிக குறைந்த விலையுடன் மாருதி அறிமுகம் செய்யும் என்று சொல்லப்படுகிறது.

ஹோண்டா BR – V

ஹோண்டா நிறுவனம் க்ரேடாவிற்கு போட்டியாக களம் இறக்க உள்ள இந்த ஹோண்டா BR – V SUV வாகனங்கள் நிறைய ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்களை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளது. மொபீலியோ வாகனத்தை முன் மாதிரியாகக் கொண்டு இந்த BR - V வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் மொபீலியோ வாகனங்களை விட கட்டுமஸ்தான தோற்றம் மற்றும் அசத்தலான இன்டீரியர்ஸ் இந்த புதிய BR – V யில் உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

செவர்லே எஸன்ஷியா

செவர்லே நிறுவனம் இது வரை இந்திய சந்தையில் பெரிய அளவிலான வெற்றிகளை பெறவில்லை . இந்த ஆட்டோ எக்ஸ்போவில் இவர்கள் அறிமுகப்படுத்தி உள்ள பீட் கார்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நேர்த்தியாக வடிவமைப்புடன் கூடிய காம்பேக்ட் செடான் ரக காரான எஸன்ஷியா , அதிர்ஷ்ட காற்றை இவர்கள் பக்கம் திருப்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செவர்லே ஸ்பின்

ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே அரங்கத்தை அலங்கரிக்கும் மற்றுமொரு வாகனம் இந்த ஸ்பின் MPV வாகனங்களாகும். இந்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த கார்கள் தற்போது டேக்ஸி வாகனமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் செவர்லே என்ஜாய் வாகனங்களை விட சிறப்பான அம்சங்களுடன் வெளியாகும் என்று தெரிய வருகிறது.

டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஏராளமான புதிய தயாரிப்புக்களை தங்களது அரங்கத்தில் காட்சிக்கு வைத்துள்ளது. அவைகளில் மிக முக்கியமானதாக டாடா நெக்ஸான் SUV வாகனங்களை சொல்லலாம். முன்னதாக இந்நிறுவனம் வெளியிட்டிருந்த கான்செப்டில் இருந்து பெரிய அளவிலான மாறுபாடுகள் ஏதும் இன்றி இந்த நெக்ஸான் வாகனங்கள் தோற்றமளிக்கிறது. உற்பத்திக்கு தயாராக உள்ளதாகவே தோன்றுகிறது.

டாடா கைட் 5

டாடா நிறுவனத்தின் மற்றுமொரு புதிய மாடல் கார்கள் இந்த டாடா கைட் 5 கார்களாகும். அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் காம்பேக்ட் செடான் வகை காரான இந்த கைட் 5 கார்கள் , டாடாவின் ஸிகா ஹேட்ச்பேக் கார்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

டாடா ஹெக்ஸா

டாடா மோட்டார்ஸ், ஆரியா என்று முன்பு அறிமுகம் செய்த வாகனத்தின் மறு பதிப்பாகவே இந்த ஹெக்ஸா MPV வாகனங்கள் கருதப்படுகிறது. பார்க்க நல்ல எடுப்பான தோற்றத்துடனும் ,விசாலமான இடவசதியுடனும் காட்சி அளிக்கும் இந்த வாகனம் ,டொயோடா நிறுவனத்தின் இன்னோவா வாகனத்திற்கு சரியான போட்டியாக தெரிகிறது. இந்த வாகனங்கள் சந்தையில் வலுவான இடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜீப் நிறுவன தயாரிப்புக்கள்

ஏற்கனவே இரண்டு வருடங்கள் தாமதமாக இந்தியாவிற்கு வந்துள்ள ஜீப் நிறுவனம் 2016 மத்தியில் தங்கள் தயாரிப்புக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த பிரபலமான UV ப்ரேன்ட் , தங்களது க்ரேண்ட் செரோகி க்ரேண்ட் செரோகி SRT மற்றும் ரேன்க்ளர் வாகனங்களை காட்சிக்கு வைத்துள்ளன.


டொயோடா இன்னோவா கிறிஸ்டா

டொயோடா நிறுவனத்தின் மாபெரும் வெற்றி படைப்பான இன்னோவா வாகனங்கள் மேம்படுத்தப்பட்டு புது பொலிவுடன் இன்னோவா கிறிஸ்டா என்ற பெயரில் டோயோடா அரங்கில் ராஜா கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இந்த புதிய இன்னோவா கிறிஸ்டா ஏராளமான புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போதய இன்னோவாவை விட சற்று கூடுதலான விலையுடன் இந்த கிறிஸ்டா விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸ்ஸான் GT – R

இந்த தனித்துவமிக்க நிசான் தயாரிப்பை இந்நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது மூலம் இந்திய சாலைகளில் இந்த கார்கள் ஓடும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்தியாவில் இந்த கார்கள் விற்பனைக்கு வருமா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்new variant
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்new variant
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
new variant
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை