2015 வோல்க்ஸ்வாகன் பீட்டல் கார்கள் இந்த வருட இறுதியில் அறிமுகமாகிறது
published on ஆகஸ்ட் 04, 2015 11:22 am by konark
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை: வோல்க்ஸ்வாகன் பீட்டல் கார்கள் முதலில் டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது வாடிக்கையாளரின் போதுமான கவனத்தை கவர தவறிவிட்டது. முந்தைய நிலை எதுவாக இருப்பினும் உந்த ஜேர்மன் கார் தயாரிப்பாளர்கள் மீண்டும் 2015 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். 2011 ஆம் ஆண்டே இந்த கார்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுமைக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்க பட்டது. இந்த புதிய பீட்டல் கார்கள் தனது முந்தைய மாடலின் அட்ப்படையை பின்பற்றி தயாரிக்கப்பட்டு இருந்தாலும் நிறைய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதய மாடல் சற்று பெரியதாகவும் உயரம் குறைந்தும் காணப்படுகிறது. மேலும் கியுடான சிறிய கார் என்ற இமேஜையும் தாண்டி சற்று அழுத்தமான வடிவமைப்பிப் பெற்றுள்ளது. மாற்றம் செய்யப்பட்டுள்ள பம்பர்கள், இணைக்கப்பட்டுள்ள ஸ்பாய்ளர்கள், நேர்த்தியான மேல் கூரைப்பகுதி (ரூப்லைன்) மற்றும் சற்று பெரியதான சக்கரங்கள் என்று தன்னுடைய முந்தைய வடிவில் இருந்து ஏராளமான மாற்றங்களைப் பெற்று வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் காட்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் நிறைய வாடிக்கையாளர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. சற்று நீளமாகவும் விரிவான மாற்றங்களையும் கொண்டுள்ளது மட்டுமன்றி ஓட்டுனரின் வசதியும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டு சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. உலகமெங்கும் இந்த புதிய பீட்டல் கார்களில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் அறிமுகம் ஆகப்போகும் பீட்டல் கார்களில் எந்த விதமான பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்ற உறுதியான தவல்கள் நம்மிடம் இல்லை.
இந்த பீட்டல் கார்கள் ஏற்கனவே இந்திய சாலைகளில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திடம் இருந்து இந்த பேர்போன பீட்டல் கார்களின் இந்திய சந்தை அறிமுகத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதற்க்கு முந்தைய பீட்டல் கார்களைப் போலவே இந்த கார்களும் முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு (சிபியூ) இறக்குமதி செய்யப்படும் என்று அறியப்படுகிறது. ஆகவே விலையும் சற்றேறக்குறைய 30 – 35 லட்சம் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 out of 0 found this helpful