• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: மாஸ்டா மற்றும் டொயோட்டா ஆகியவை, தங்களின் ஸ்போர்ட்ஸ் தொழில்நுட்பங்களை ( கான்சப்ட்) காட்சிக்கு வைத்தன

    nabeel ஆல் அக்டோபர் 30, 2015 01:41 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    15 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஜெய்ப்பூர்:

    Mazda RX-VISION

    மாஸ்டா RX-விஷன்

    ‘மாஸ்டா நிறுவனத்தின் எதிர்கால கனவை குறித்த நம்பிக்கையை, ஒருநாள் நினைவு ஆக்கியது’. டோக்கியோவில், அதன் RX-விஷனை திறந்து வைக்கும் போது, அதை குறித்து மாஸ்டா இப்படி தான் கூற வேண்டும். கைவிடப்பட்டதாக இருந்த ரோட்டரி என்ஜின்களுக்கு உயிரூட்டி, இந்த ஸ்போர்ட்ஸ் தொழில்நுட்பத்தில், ஒரு முக்கோண ரோடரை கொண்டு சுழல் இயக்கம் (ரோட்டேஷ்னல் மோஷன்) மூலம் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த என்ஜினின் தயாரிப்பு நீண்டகாலத்திற்கு முன்பே நிறுத்தப்பட்ட நிலையில், அதை மறுத்துள்ள மாஸ்டா, தங்களை பொறுத்த வரை R&D-யின் தயாரிப்பை நிறுத்தவே இல்லை என்று கூறுகிறது. இதிலிருந்து நவீன தலைமுறையை சேர்ந்த ரோட்டரி மில்ஸ் ஆன ஸ்கைஆக்டிவ்- R என்று அழைக்கப்படும், இதன் மூலம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தோன்றுகிறது. மேலும் மாஸ்டாவின் எதிர்கால ஸ்போர்ட்ஸ் கார்களில் இதை பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. RX-7 மற்றும் RX-8 ஆகியவற்றை தொடர்ந்து, RX-விஷனில் ரோட்டரி என்ஜின் பரம்பரை சொத்தாக தொடருகிறது. முன்பக்க என்ஜினை கொண்ட இந்த கார், பின்பக்க வீல் டிரைவ் அமைப்பு மற்றும் ஸ்கைஆக்டிவ்-R மோட்டாரை பெற்றிருக்கும்.

    Mazda RX-VISION

    இதையும் படியுங்கள்: 2 நாட்களில் 4600 மாருதி சுசுகி பெலினோ முன்பதிவானது!

    டொயோட்டா SF-R

    Toyota SF-R

    டொயோட்டா நிறுவனம், தனது பாரம்பரியமான பின்புற வீல் டிரைவ் ஸ்போர்ட்ஸ் கார்களை தொடரும் வகையில், டோக்கியோவில் SF-R தொழில்நுட்பத்தை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த கார் ஒரு துவக்க நிலை ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த காரை குறித்த தகவல்களை கார் தயாரிப்பு நிறுவனம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. ஆனால் இந்த 2-டோர் வாகனத்தை குறித்து அதிகம் கூறப்படுவது என்னவென்றால், இதன் பெரிய முன்பக்க கிரில் உடன் தொடர்புக் கொண்டு DRL-களை கொண்ட ஹேட்லெம்ப்களை பெற்றிருக்கும். இந்த காரின் பரிணாமங்கள் குறுகலாக அமைக்கப்பட்டிருப்பதால், ஓட்டுநருக்கு நிச்சயம் இது ஒரு சொர்க்கமாக இருக்கும். இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினைப் பெற்று, அதன் மூலம் ஏறக்குறைய 130 bhp உற்பத்தி செய்து, ஒரு மேனுவல் உடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது.

    Toyota SF-R

    டோக்கியோவில் இருந்து இன்னும்:

    was this article helpful ?

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience