சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

திரு.மன்மோகன் சிங் -ன் எப்படி இந்திய ஆட்டோமொபைல் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை கொண்டு வந்தார்?

ajit ஆல் டிசம்பர் 30, 2024 03:38 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

திரு.மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டும் காப்பாற்றவில்லை. நடுத்தர வர்க்கம் என்பதற்கான கொள்கைகளை மறுவரையறை செய்து பல லட்சக்கணக்கானவர்களின் கார் கனவை நிஜமாக்க உதவியது.

இந்தியாவின் புகழ்பெற்ற பிரதமர்களில் ஒருவரான டாக்டர். திரு.மன்மோகன் சிங் அவர்களின் இழப்பிற்காக இந்தியாவே துக்கம் அனுசரிக்கின்றது. ​​டாக்டர் மன்மோகன் சிங் -ன் பொருளாதார சீர்திருத்தங்கள் - ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்த கார்களை சாமானியர்களுக்கான விஷயமாக மாற்றிய சீர்திருத்தங்கள், அவரது கொள்கைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை இன்றைய இளைய தலைமுறையிலிருந்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று இந்திய சாலைகளில் பல நவீன கார்களை நாம் பார்க்க முடிகிறது என்றால் அவரது தொலைநோக்கு மற்றும் அமைதியான புரட்சிக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். ​​டாக்டர் மன்மோகன் சிங் என்ன செய்தார் மற்றும் இந்த விஷயத்தில் அவரது பார்வை ஒரு தேசத்தின் பயணத்தை எவ்வாறு கட்டமை உதவியாக இருந்தது என்பதை இங்கே பார்ப்போம்?

பொருளாதார சீர்திருத்தங்களுக்கான களத்தை அமைத்தல்

சரியாக 1991 -ஆம் ஆண்டு, இந்தியா ஒரு பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. நாட்டின் அந்நிய கையிருப்பு மிக மோசமான அளவுக்கு குறைந்திருந்தது. சில வார இறக்குமதிக்கான போதுமான நிதி கையிருப்பில் இல்லை. அப்படிப்பட்ட இக்கட்டான காலங்களில் தாராளமயமாக்கலை நோக்கிய துணிச்சலான நடவடிக்கையை நோக்கி இந்தியா நகர்ந்தது. இந்தியாவில் தாராளமயமாக்கலை அனுமதிக்கும் ஒரு யூனியன் பட்ஜெட்டை வழங்குவதற்கு, பிரதமர் நரசிம்மராவ் அரசாங்கத்தில் அப்போதைய நிதியமைச்சராக இருந்த டாக்டர் சிங் பொறுப்பெற்றிருந்தார். அவரது சீர்திருத்தங்கள் இந்திய வாகனத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தின.

வாகன துறையை மறுசீரமைத்தல்

1991 -ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் கார் வாங்குவது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது. ஹிந்துஸ்தான் அம்பாசிடர் மற்றும் பிரீமியர் பத்மினி உள்பட ஒரு சில மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருந்தன. சில மாடல்களே சந்தையில் இருந்தாலும் கூட அவை மிகப் பழைய வடிவமைப்பை கொண்டதாகவும் விலை உயர்ந்தவையாகவும் இருந்தன. அவை தவிர மாருதி 800 -க்கான நீண்ட காத்திருப்பு காலங்கள் கொண்டிருந்தன. இது போன்ற விஷயங்கள் மிகவும் ஆர்வமுள்ள கார் ஆர்வலர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் இருந்தன. இவற்றையெல்லாம் தீர்க்கும் வகையிலேயே மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் வந்தன.

" ஒரு யோசனைக்கு சரியான நேரம் வரும் போது பூமியில் உள்ள எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது" என்று மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தையும் வெளியிட்டார். ஆட்டோமொபைல் துறைக்கு அது ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. இறக்குமதி, கலால் வரிகளை குறைத்து, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை (FDI) வரவேற்றதன் மூலம் ஹூண்டாய், ஹோண்டா மற்றும் ஃபோர்டு போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்காக இந்தியாவின் கதவுகளை மன்மோகன் சிங் திறந்தார். அன்றிலிருந்து பத்தாண்டுகளுக்குள்ளாக இந்திய நகரங்களின் தெருக்களில் ஹூண்டாய் சான்ட்ரோ, ஹோண்டா சிட்டி மற்றும் டேவூ மேட்டிஸ் ஆகிய கார்கள் வலம் வரத் தொடங்கியிருந்தன. மேலும் இது ஒரு வகையில் இந்திய கார் தயாரிப்பாளர்களை டாடா இண்டிகா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற கார்களை வடிவமைக்க கட்டாயப்படுத்தியது. சான்ட்ரோ 1998 ஆண்டில் அறிமுகமாகி பின்னர் இரண்டே ஆண்டுகளில் 1 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையானது, பல்வேறுப் வீடுகளில் செல்லப்பிள்ளையாக மாறியது. இந்தியா -வில் 1980 -களின் பிற்பகுதியில் வெறும் 3 லட்சமாக இருந்த கார்களின் உற்பத்தியானது 2005 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 12 லட்சத்திற்கும் அதிகமான உயர்ந்தது. மன்மோகன் சிங்கின் சீர்திருத்தங்களால் ஏற்பட்ட யாராலும் கற்பனை செய்ய முடியாத சாதனை இது.

மன்மோகன் சிங்கின் ஆட்சியின் கீழ் 2002 மற்றும் 2012 க்கு இடையில் இந்திய ஆட்டோமொபைல் துறை 10.5% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்தது. ஏற்றுமதியும் பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. இந்தியா சிறிய கார் உற்பத்திக்கான மையமாக மாறியது. 2010 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா ஒரு உலகளாவிய வாகன உற்பத்தி மையங்களில் ஒன்று என்ற நிலையை அடைந்து ஆண்டுதோறும் சுமார் 4.50 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தது.

நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை நிஜமாக்குதல்

மன்மோகன் சிங்கின் கொள்கைகள் வாகன உற்பத்தியாளர்களுக்கு மட்டும் பயனளிக்கவில்லை. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. அவரது கொள்கைகளுக்கு பின்னர் நடுத்தர வர்க்கத்தினருக்கு கார் வாங்குவது என்பது கனவாக மட்டுமே இருக்கவில்லை. கார் உற்பத்தியில் 2000 ஆம் ஆண்டில் 15 -வது இடத்தில் இருந்த இந்தியா 2010 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய கார் சந்தையாக மாறியது. கார் விற்பனை சுமார் 19 லட்சம் யூனிட்டுகளாக உயர்ந்தது. அதே நேரத்தில் இரு சக்கர வாகன விற்பனை முதல் முறையாக 1 கோடி யூனிட்களை தாண்டியது. ஒரு காலத்தில் மூன்று அல்லது நான்கு பேருடன் ஆபத்தான நிலையில் ஸ்கூட்டர்களில் பயணித்த குடும்பங்கள், இப்போது மாருதி ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் i20 போன்ற கார்களை வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் அதிக வாங்கும் திறன் கொண்டவர்கள் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு கார்களை வாங்குகிறார்கள்.

கொள்கையில் சில முரன்பாடுகள்

மன்மோகன் சிங்கின் கொள்கைகளால் சில எதிர்மறை விஷயங்களும் நடந்தன. உதாரணமாக டீசல் மானியத்தை எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் டிரான்ஸ்போர்ட் செய்பவர்களுக்கு எரிபொருள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் அந்த கொள்கை இருந்தது. இது டீசல் கார்களை நகர்ப்புற நுகர்வோர் மத்தியில் ஒரு பிரபலமான தேர்வாக மாற்றியது. இருப்பினும் அதற்காக ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசுபாட்டின் அதிகரிப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர் தனது பதவிக் காலத்தில் டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முயற்சித்தார் பின்னர் அந்த நடவடிக்கைக்காகவும் விமர்சனத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

எதிர்காலத்திற்கான சாலைகளை உருவாக்குதல்

சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு சிங்கின் மற்றொரு கவனம் செலுத்திய பகுதியாகும். ஒரு முறை அமைச்சரவைக் கூட்டத்தின் போது "நெடுஞ்சாலைகள் பொருளாதாரத்தின் தமனிகள்" என்று கூறியிருந்தார். தங்க நாற்கர சாலை மற்றும் பிற நவீன நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடர்பாக முந்தைய வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பணிகளை அவரது அரசாங்கம் முன்னெடுத்து சென்றது. 2014 வாக்கில் இந்தியாவின் நெடுஞ்சாலை நெட்வொர்க் கணிசமாக வளர்ந்திருந்தது, அவற்றால் இணைப்புகள் மேம்பட்டன மற்றும் சராசரி இந்திய குடும்பத்திற்கு சாலைப் பயணங்களை சாத்தியமான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றியது.

நம்மோடு பயணிக்கு அவரது கனவு

அவரது சாதனைகள் மலையளவு இருந்தபோதிலும் ஏன் பிரதமராக இருந்தபோதும் கூட டாக்டர். மன்மோகன் சிங் ஒரு குறிப்பிடத்தக்க அடக்கமான நபராக இருந்தார். அவரது தனிப்பட்ட கார் ஒரு சாதாரண மாருதி 800 ஆக இருந்தது. அவரது அதிகாரப்பூர்வ காராக கவசம் பொருத்தப்பட்ட BMW 7 சீரிஸ் இருந்தது அதுவும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயன்படுத்திய அதே காராக இருந்தது.

கடந்த அக்டோபரில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து டாக்டர். சிங் அவர்களின் நெருங்கிய தொழில்முறை உறவைப் பற்றி கூறுகையில், "அவருக்கு அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களிடம் உண்மையைப் பேசும் தைரியம் இருந்தது" என்று தெரிவித்திருந்தார்.

October 10, 2024

இந்திய வாகனத் துறை எலக்ட்ரிக் மற்றும் அட்டானமஸ் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் போது டாக்டர் மன்மோகன் சிங்கின் சீர்திருத்தங்களால் அமைக்கப்பட்ட சாலைகளிலேயே அது பயணிக்கும். அவரை நினைவு கூறும் வகையில் விடாமுயற்சி, சீர்திருத்தம் மற்றும் அமைதியான புரட்சி ஆகிய விஷயங்களை நாம் கொண்டாடுகிறோம். அமைதியாக ஓய்வெடுங்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே. முன்னேற்றத்தின் இன்ஜினை பற்றவைத்து அதை இயங்க வைத்ததற்காக உங்களுக்கு நன்றி.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
எலக்ட்ரிக்
புதிய வேரியன்ட்
Rs.44.90 - 55.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை