இணையத்தில் வெளியான தகவல்களின்படி கோல்ஃப் GTI கார் முழு இறக்கு மதியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறைவான எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.
ஃபோக்ஸ்வேகன் டெரா, MQB A0 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டைகுன் போன்ற 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் -ல் உள்ள நிறைய விஷயங்கள் இதிலும் இடம் பெறவுள்ளது.