இந்தியாவில் கோடியாக் ஆனது ஸ்கோடா -வின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2025 மே மாதத்துக்குள்ளாக புதிய ஜெனரேஷன் கார் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது.
புதிய கோடியாக் வெளிப்புறத்தில் ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. ஆனால் உட்புறத்தில் ஏராளமான டெக்னாலஜியுடன் புத்தம் புதிய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது .
புதிய ஆக்டேவியா vRS காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 265 PS பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. இது இந்த செடானின் மிக சக்திவாய்ந்த வெர்ஷன் ஆகும்.
புதிய தலைமுறை சூப்பர்ப் காருக்கு உள்ளேயும் வெளியேயும் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கேபினுக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.