ஃபோர்ட் நிறுவனம், தனது புதிய எண்டேவரை இந்தியாவில் களமிறக்கியதைத் தொடர்ந்து, மிட்சுபீஷி இந்தியா நிறுவனம் பஜேரோ ஸ்போர்ட் SUV காரின் லிமிடெட் எடிஷன் வெர்ஷனை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, SUV பிரிவில் அனல் பறக்கும் போட்டி நடக்கவிருப்பது உறுதி. குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கவுள்ள இந்த லிமிடெட் எடிஷன் காரின் ஆட்டோமேடிக் வேரியண்ட்டில், மெக்கானிக்கல் மேம்பாடுகள் மட்டுமின்றி, இதன் தோற்றத்தை மேலும் வசீகரப்படுத்துவதற்காக ஏராளமான மேம்பாடுகளை மிட்சுபீஷி நிறுவனம் செய்துள்ளது. பஜேரோ காரை கவர்ச்சிகரமாக்க, ஏற்கனவே உள்ள கலர்களைத் தவிர, கோல்டன் பீஜ் மற்றும் க்லோவ் ப்ரௌன் என்ற இரண்டு புதிய வண்ணங்களை, ஆப்ஷனில் இணைத்துள்ளது. எனினும், இந்த காரின் உட்புற அமைப்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.