சரியான சேவை மையத்துடன் உங்களை இணைக்க உதவுகிறது

கண்டுபிடிக்கவும் ஃபியட் உங்கள் நகரத்தில் சேவை நிலையம் CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது ஃபியட் இந்தியா முழுவதும் சேவை மையம் மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு ஃபியட் car service center in your city just choose the city and view all the necessary contact information about the ஃபியட் service masters in your preferred city. Locate over 379 ஃபியட் Service Stations in Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune and get details of ஃபியட் Car Service Masters across 169 cities in India.

மேலும் படிக்க

ஃபியட் செய்தி & விமர்சனங்கள்

  • சமீபத்தில் செய்திகள்
  • ஆட்டோ எக்ஸ்போ 2016: அவென்ச்சுரா அர்பன் கிராஸை, ஃபியட் வெளியிடுகிறது
    ஆட்டோ எக்ஸ்போ 2016: அவென்ச்சுரா அர்பன் கிராஸை, ஃபியட் வெளியிடுகிறது

    ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் புதிய அவென்ச்சுரா அர்பன் கிராஸை வெளியிட்டுள்ள இத்தாலி நாட்டு வாகனத் தயாரிப்பாளரான ஃபியட் நிறுவனம், இந்த கண்காட்சியில் தனது அறிமுக தேரோட்டத்தை தொடர்கிறது. ஒரு ஹேட்ச்பேக் மற்றும் ஒரு கிராஸ்ஓவர் ஆகியவற்றின் சிறப்பான கலவையாக இருப்பதால், இது முற்றிலும் அற்புதமான தோற்றத்தை கொண்டுள்ளது. ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸின் சக்திவாய்ந்த இயல்பை மேலும் அதிகரிக்கும் வகையில் DRL மற்றும் LED-கள் சேர்க்கப்பட்டு, அவ்வாகனத்தின் முன்பக்க அழகியலில் ஒரு மகிழ்விக்கும் தோற்றத்தை பெறுகிறது. இந்த காரை சுற்றிலும் உள்ள சில்வர் வரிகள் மூலம் வாகனத்தின் நேர்த்தி அதிகரிக்கிறது. மேலும் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றின் சேர்ப்பு, மற்ற வியக்க வைக்கும் மாற்றங்களாக இருந்து, இந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் இருந்து ஒரு அற்புதமான தீம்மை அளிக்கிறது.

  • ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே  பியட் தனது மூன்று - கதவு கொண்ட புண்டோவின்  டீஸரை வெளியிட்டுள்ளது.
    ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே பியட் தனது மூன்று - கதவு கொண்ட புண்டோவின் டீஸரை வெளியிட்டுள்ளது.

    “ ஆட்டோ எக்ஸ்போ 2016 ல், எங்கள் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள புத்தம் புதிய தயாரிப்புக்களை கண்டு களியுங்கள் " இவ்வாறு தான் பியட் இந்தியாவின் முகநூல் போஸ்ட் நமக்கு செய்தி சொல்லி இதயத்தில் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் பதிவு செய்து உள்ளதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் விடை தேடி குழம்ப வேண்டிய தேவையே இல்லை.படத்தில் நீங்கள் பார்க்கும் பியட் நிறுவனத்தின் பிரபலமான புன்டோ கார்களின் மூன்று கதவுகளைக் கொண்ட மாடலைப் பற்றி தான் இந்நிறுவனம் இவ்வாறு சூசகமாக சொல்லுகிறது . இந்த புதிய புன்டோ முந்தைய ஐந்து கதவு ஹேட்ச்பேக் போன்ற வடிவமைப்பையே கொண்டிருந்தாலும் முந்தைய மாடலைக் காட்டிலும் நல்ல ஸ்போர்டியான தோற்றத்தை இந்த புதிய மூன்று கதவு புன்டோ கொண்டுள்ளது. இந்த காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் எடுப்பாக்கி காட்டும் விதத்தில் , மல்டிஸ்போக் அல்லாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 14 ஸ்போக் அல்லாய்கள் அசத்தலாக காட்சியளிக்கிறது. மேலும் , காரின் பூட் பகுதி அமைப்பும் சற்று மாற்றப்பட்டுள்ளது. புன்டோ என்ற பெயர், நடுவில் பியட் சின்னத்திற்கு சற்று கீழே பொறிக்கப்பட்டுள்ளது. 

  • இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பியட் டிபோ காட்சிக்கு வைக்கப்படுகிறது.
    இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பியட் டிபோ காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    லீனியாவிற்கு மாற்றாக பியட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள டிபோ ( சில சந்தைகளில் ஏஜியா என்று அழைக்கப்படுகிறது) கடந்த வருட இஸ்தான்புல் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இத்தாலி நாட்டு கார் தயாரிப்பாளர்கள் இந்த டிபோ கார்களை காட்சிக்கு வைக்க உள்ளனர். 1988 ஆம் ஆண்டு பியட் நிறுவனம், "டிபோ" என்ற பெயரில் சிறிய ஹேட்ச்பேக் கார்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் அமோக வெற்றி பெற்று 1989 ஆம் வருடம் " யூரோபியன் கார் ஆப் தி இயர் " விருதினை வென்றது. அந்த வெற்றி மாடலின் நினைவாக தான் பியட் இந்த புதிய அறிமுகமாக உள்ள கார்களுக்கு டிபோ என்று பெயரிட்டுள்ளது.

  • பியட் இந்தியா அபர்த் லீனியா கார்களை உருவாக்கி வருகிறது.
    பியட் இந்தியா அபர்த் லீனியா கார்களை உருவாக்கி வருகிறது.

    பியட் லீனியா - பவர்ட் பை அபர்த் ( அபர்த் மூலம் சக்தியூட்டப்படுகிறது ) முதல் முறையாக வேவு பார்க்கப்பட்டது. இந்த இத்தாலிய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பெர்பார்மன்ஸ் ப்ரேன்டான அபர்த் ப்ரேண்டை கடந்த வருடம் 595 காம்பிடிசியோன் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அபர்த் புன்டோ மற்றும் அவெஞ்சுரா- பவர்ட் பை அபர்த் கார்களை அறிமுகம் செய்தனர். இப்போது இந்தியாவில் உள்ள இந்த அபர்த் வரிசையில் நான்காவதாக லினியா - பவர்ட் பை அபர்த் கார்கள் இணைய உள்ளன. இந்த கார்கள் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படும் என்ற வதந்திகள் உலவியது. 2016 பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தப்பட உள்ள இந்த கார்கள் சுமார் ரூ. 10 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • ஃபியட் கார்களின் விற்பனை ஏன் மந்தமாக உள்ளது? – இந்திய நுகர்வோர்களின் பார்வை
    ஃபியட் கார்களின் விற்பனை ஏன் மந்தமாக உள்ளது? – இந்திய நுகர்வோர்களின் பார்வை

    இத்தாலியர்கள் ஒரு பேப்பர் பென்சில் மட்டுமே கொண்டு கலை நயம் மிக்க வடிவங்களை உருவாக்குவதில் வல்லவர்கள் என்று ஏற்கனவே நாம் சொன்னதை மீண்டும் உண்மையாக்கியுள்ளது இத்தாலிய ஃபியட் நிறுவனம். ஃபியட் கார்கள் அனைத்தும் மிகச் சிறந்த கலை நயம் மிக்க வாகன வடிவமைப்பிற்கு பேர் போனவை (நிச்சயமாக மல்டிப்லா மாடல் இதற்கு விதிவிலக்கு). இந்த இத்தாலிய வாகன தயாரிப்பு நிறுவனம், தனது கார்களுக்கான அதிநவீன தோற்ற மேம்பாடுகளை உலகில் வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (புண்ட்டோ மாடலின் ஃபேஸ்லிஃப்ட் தற்போது இந்தியாவில் கிடைக்கிறது, ஆனால் இங்கிலாந்து சந்தைகளில் இன்று வரை ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முந்தைய வெர்ஷன்களே கிடைக்கின்றன என்பது கூடுதல் செய்தி).

×
We need your சிட்டி to customize your experience