2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவின் 3 வது நாளில் வரலாறு காணாத கூட்டம்.
published on பிப்ரவரி 08, 2016 03:32 pm by sumit
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ(கண்காட்சி) மிகவும் பிரபலமடைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ ஷோவின் 3 வது நாளான பிப்ரவரி 7 ஆம் தேதி 1,30,975 பார்வையாளர்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர். இது ஒரு வரலாறு காணாத கூட்டமாகும். மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதாலும் தேவையான அளவு நேரத்தை செலவிட முடியும் என்பதாலும் ஏராளமான மக்கள் நேற்று கண்காட்சிக்கு படையெடுத்தனர் என்று அதிக பார்வையாளர்கள் வருகைக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் பிரபல ஹிந்தி நடிகர் அக்க்ஷய் குமார் நேற்று இந்த கண்காட்சிக்கு வருகை தந்ததால் பார்வையாளர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. இதைத் தவிர மோட்டார் பைக் வீரர்களின் பிரம்மிக்கதக்க சாகச நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மாருதி ப்ரீஸா மற்றும் டொயோடா இன்னோவா கிறிஸ்டா உட்பட ஏராளமான மாடல் கார்கள் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது ஹெக்ஸா மற்றும் கைட் 5 வாகனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இதில் ஹெக்ஸா இன்னோவா உடனும் , கைட் 5 கார்கள் ஸ்விப்ட் டிசையர் கார்களுடனும் போட்டியிடும். டாடாவிற்கு சொந்தமான ஜாகுவார் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தங்களது ஜாகுவார் XE கார்களை அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜாகுவார் கார்களிலேயே குறைந்த விலை இந்த XE கார்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாவற்றையும் விட பல்வேறு கார் தயாரிப்பாளர்கள் காட்சிக்கு வைத்துள்ள பலவித கான்செப்ட் கார்கள் தான் இந்த கண்காட்சியின் மிகப்பெரிய சிறப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் தங்களது முழுமையான தொழில்நுட்ப திறனை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் வெற்றிபெற்றுள்ளன.
பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கிய இந்த மாபெரும் வாகன திருவிழா வரும் 9 ஆம் தேதி வரை ,அதாவது ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்கள் ஊடகங்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. கார்தேகோ குழு அனைத்து நிகழ்வுகளையும் உங்களுக்கென உடனுக்குடன் தனது வலைதளத்தில் பதிவு செய்து வருகிறது. முதலில் கண்காட்சி களத்தில் இறங்கி செய்திகளை தெளிவாக சேகரித்த பெருமையும் கார்தேகோ குழுவையே சேருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஊடகங்களுக்காக ஒதுக்கப்பட்டது போல் அடுத்த 5 நாட்கள் பொது மக்கள் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கான டிக்கெட்களை புக்மைஷோ(bookmyshow ) மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.
0 out of 0 found this helpful