ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் மோட்டார்மைண்டு ஹைபெரியன்1 காட்சிக்கு வைக்கப்பட்டது
சர்வதேச அளவில் அனைவரையும் ஏங்க வைக்கும் ஏரியல் நிறுவனத்தின் ஆட்டம்(atom) ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு , இந்தியாவின் பதில் என்று ஏதாவது இருக்குமேயானால் அது மோட்டார்மைண்டு நிறுவனத்தின் இந்த முதல் தாரிப்பான ஹைபர்ஐயான்1 கார்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது நடைபெற்று வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், பெங்களூரை அடிப்படையாக கொண்ட வடிவமைப்பு நிறுவனம் மூலம் ஹைபெரியன்1 என்ற ரோடிஸ்டர் தொழில்நுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஹைப்பர் கார் உருவாக்கத்தில், ஒரு இந்திய வாகனத் தயாரிப்பாளர் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகச்சிறப்பான முயற்சியாக இது போற்றப்படும்.. இதன் அட்டகாசமான படத்தொகுப்பை கண்டு களியுங்கள்