சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

காரின் பழைய தோற்றத்தை மாற்ற - 3M கார் கேரின் ‘ரூஃப் தேரா மஸ்தானா’ கார் ராப்களை உபயோகியுங்கள்

bala subramaniam ஆல் நவ 27, 2015 11:53 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
15 Views

உங்கள் கார் பழையது போல தோற்றமளித்தாலோ அல்லது அதன் வண்ணத்தைப் பார்த்துப் பார்த்து நீங்கள் சலிப்படைந்திருந்தாலோ, உடனே 3M கார் கேருக்குச் செல்லுங்கள். அவர்களின் ‘ரூஃப் தேரா மஸ்தானா' என்ற திட்டத்தில் உள்ள புது விதமான கார் ராப்கள், உங்கள் காருக்குப் புது பொலிவு தரும் என்று உறுதி அளிக்கின்றனர். தற்போது, 25 விதமான கார் ராப்கள் இவர்களிடம் உள்ளது. அவை, காரின் மேற்கூரை, பானேட் மற்றும் காரின் பின்பகுதியை புதிதாக மாற்றுகின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, உங்கள் காருக்கான டிசைனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கோடுகள், இரண்டு வித வண்ணங்கள் மற்றும் 84 விதமான பிரிண்ட்கள் ரெடிமேடாக உங்களுக்குக் கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, மேட், கிளாஸ், சாட்டின், பிரஷ்ட் மற்றும் கார்பன் போன்ற பல வித்தியாசமான ஃபினிஷ்களில் இருந்து, உங்களுக்கு உகந்ததை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு கார் ராப்புக்கான அடக்க விலை ரூ. 4500–ரில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள 3M கார் கேர் சென்டர்களில் இந்த ‘ரூஃப் தேரா மஸ்தானா' சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். காரின் தோற்றத்தை மாற்றும் வேலை முழுமையாக முடிவடைந்து உங்கள் கார் புதுப் பொலிவு பெற, மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை ஆகும்.

சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்புக்காக, உயர்தர இரட்டை அடுக்குகள் கொண்ட கேஸ்ட் ரிமூவபிள் ஃபிலிம் பொருத்தப்பட்டு வருகிறது. அழுத்தம் செலுத்துவதன் மூலம் ஒட்டிக் கொள்ளும் பிசினைக் கொண்டு இந்த ஃபில்மை கார் மீது ஒட்டுகின்றனர். இதற்காக உபயோகிக்கப்படும் பிரஷர் ஆக்டிவடெட் அட்ஹெசிவ், கடினமான அழுத்தம் தரும் வரை நன்றாக ஒட்டாது. எனவே, ஃபிலிம்மை எளிதாக வளைத்து, சரியாக இல்லையென்றால், மீண்டும் சரியான நிலையில் பொருத்தி வைத்து, அதன் பின் பிரஷர் கொடுக்கும் போது கச்சிதமாக ஒட்டிக் கொண்டு, இறுதியில் எந்த வித குறைபாடும் இல்லாமல் உங்கள் கார் மெருகேற்றப்பட்டிருக்கும். கார்களின் வெளிப்புறத் தோற்றத்தை மாற்றும் இந்த ஃபிலிம் தனித்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், ஒரு வாகனத்தின் வளைவுகள், மேடுகள் மற்றும் பள்ளங்களில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத காற்றை விடுவிக்கும் வழிகள் இந்த ஃபிலிமில் உள்ளதால், வேகமாகவும், எளிதாகவும் மற்றும் எந்த இடத்திலும் காற்றுக் குமிழிகள் இல்லாமலும் இதை இன்ஸ்டால் செய்ய முடிகிறது.

கார்களைப் பொலிவூட்ட உதவும் இந்த ஃபிலிம்களில், புற ஊதா (UV) பிரோடெக்டிவே லேயர் கொண்ட டிஜிட்டல் பிரிண்ட் செயாப்படுவதால், உள்ளிருக்கும் அசல் OEM பெயிண்ட்டுக்கு எந்த வித சேதமும் இல்லாமல், முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. மேலும், இரண்டு வண்ண லேயர்களில் தயாராவதால், டைமன்ஷனல் ஸ்திரத்தன்மை வலுவாகவும், எளிதில் பாதிப்படையாமலும், நிலைத்து நிற்கக் கூடிய விதத்தில் வருகிறது. இந்த ஃபிலிம்மை 3 வருடங்கள் வரை, நாம் எளிதாக நீக்கி விட முடியும்.

மேலும் வாசிக்க

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.92.90 - 97.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை