டெல்லியில் புதிய டீசல் கார்களுக்கான தடையின் விளைவாக, பயன்படுத்தப்பட்ட SUV-களின் தேவை அதிகரிப்பு: கார்தேக்கோவின் அறிக்கை

published on டிசம்பர் 24, 2015 01:16 pm by cardekho

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஸ்கார்பியோ, XUV500, எண்டோவர் மற்றும் ஃபார்ச்யூனர் போன்ற முக்கிய SUV மாடல்களை சேர்ந்த புதிய கார்களுக்கான விசாரணையில் பெரும் பாதிப்பு

புதுடெல்லி: 2000cc-க்கு அதிகமான என்ஜின்களை கொண்ட டீசல் கார்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஆன்-லைன் ஆட்டோமொபைல் சந்தையான கார்தேக்கோ, இந்த தீர்ப்பின் விளைவாக டெல்லி- NCR நுகர்வோர் வாகனங்களை வாங்கும் முறைகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த தடை துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு (டிசம்பர் 9 – டிசம்பர் 15) முதல் தடை அமல்படுத்தப்பட்ட பிறகு ஒரு வாரம் வரையுள்ள காலகட்டத்தில் பிளாட்பாம்களின் புள்ளி விபரங்களை தொகுத்து இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் மூலம் அதிக தேவைகள் கொண்ட உயர்தர வாகன தயாரிப்புகள், பெரும் பாதிப்பிற்குள்ளான பிரிவிற்குள் தள்ளப்பட்டுள்ளதை இவ்வறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

வாடிக்கையாளர்களின் தேடலில் உள்ள தங்களுக்கு விருப்பமான டீசல் மாடல்களின் புதிய வாகனங்களை இப்போது முன்பதிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றை பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் கிடைக்குமா என்று தேடுவது ஒரு குறிப்பிடத்தக்க வழக்கமாகி உள்ளது. இந்த தடை நீண்டகாலத்திற்கு தொடரும் பட்சத்தில், இப்பிரிவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதை எங்களால் அறிய முடிகிறது.

தடைக்கு பிறகு தேவைப்படுபவை

புதிய கார்

பயன்படுத்தப்பட்ட கார்

ஆடி Q7

-36%

167%

BMW 7 சீரிஸ்

-32%

150%

செவ்ரோலேட் கேப்டீவா

-33%

13%

செவ்ரோலேட் ட்ரையல்பிளேஸர்

-10%

33%

ஃபோர்டு எண்டோவர்

-55%

88%

ஜாகுவார் XF

-42%

7%

ரேஞ்ச் ரோவர் இவோக்

-23%

50%

மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டன்

-23%

13%

மஹிந்திரா ஸ்கார்பியோ

-10%

32%

மஹிந்திரா XUV500

-23%

17%

மெர்சிடிஸ் A கிளாஸ்

-61%

75%

மெர்சிடிஸ் E கிளாஸ்

-9%

68%

மெர்சிடிஸ் GL கிளாஸ்

-24%

67%

போர்ஸ் கெய்ன்

-51%

13%

டொயோட்டா ஃபார்ச்யூனர்

-66%

56%

இந்த ஆய்வின் அடிப்படையில், ஒரு சில நாட்களிலேயே டீசல் SUV பிரிவை சார்ந்த புதிய கார்களுக்கு 27 சதவீத சரிவு அடைந்துள்ள நிலையில், அதே மாடல்களை சேர்ந்த பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தேவை 17 சதவீத உயர்வை பெற்றுள்ளது. பெரும்பாலும் இந்த பிரிவில் உள்ள எல்லா பிராண்டுகளின் புதிய கார்களும் ஒரு குறிப்பிட்ட அளவு சரிவை சந்தித்துள்ளன. அதில் முக்கிய தயாரிப்பாளர்களான ஆடி, மஹிந்திரா, ஃபோர்டு, BMW, ஹூண்டாய், டாடா மற்றும் டொயோட்டா உள்ளிட்டோர் அதிக வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இதில் முக்கியமாக டொயோட்டா ஃபார்ச்யூனர், மெர்சிடிஸ் A கிளாஸ், ஃபோர்டு எண்டோவர் மற்றும் போர்ஸ் கெய்ன் உள்ளிட்ட தயாரிப்புகள் அதிகளவில் பாதிக்கப்பட்டவை ஆகும். அதே நேரத்தில், மேற்கண்ட பிரிவை சேர்ந்த பெரும்பாலான மாடல்களில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான பேஜ் வ்யூ மற்றும் தலைமுறையை வழிநடத்தல் (லீட் ஜெனரேஷன்) ஆகிய இரண்டிலும் வாடிக்கையாளர்களின் அதிக உற்சாகத்தை காண முடிகிறது.

மேலும் வாசிக்க

பயன்பாட்டு வாகனங்கள் பெரிய அளவிலான விலை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience