• English
  • Login / Register

டீசல் தடை மூலம் பாதிக்கப்பட உள்ள கார்கள்!

published on டிசம்பர் 17, 2015 04:34 pm by konark

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி: கடந்த (டிசம்பர்) 11 ஆம் தேதியில் இருந்து வரும் 2016 ஜனவரி 6 ஆம் தேதி வரை டீசல் என்ஜின்களை கொண்ட வாகனங்களை பதிவு செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம் (நேஷ்னல் கிரீன் ட்ரிப்னல் - NGT) தடை விதித்துள்ளது. இந்த தடையை மேலும் நீட்டிக்கும் வகையில், 2-லிட்டர் அல்லது NCR அதிகம் கொண்ட டீசல் என்ஜின்களை கொண்ட கார்களின் விற்பனையை வரும் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து  அடுத்த 3 மாதங்களுக்கு தடை விதிக்க, இந்திய உச்சநீதிமன்றம் மூலம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் விற்பனை செய்யப்படும் கார்களில் ஏறக்குறைய 36 சதவீதம் டீசலில் இயக்கப்படுபவை. அதேபோல 90 சதவீதம் SUV-கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்கள் கூட டீசலில் தான் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடையின் மூலம் விற்பனை பாதிக்கப்பட உள்ள சில கார்களின் பட்டியல் இதோ:

டொயோட்டா ஃபார்ச்யூனர்

கடந்த நவம்பர் மாதம், டொயோட்டா நிறுவனத்தின் மூலம் 1058 ஃபார்ச்யூனர்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம், பிரிமியம் SUV பிரிவில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாகனமாக மாறியுள்ளது. ஒரு 3000 cc டீசல் என்ஜின் மூலம் ஆற்றலை பெற்று இயங்கும் இந்த வாகனம், உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள 2000cc + நெறிமுறைகளை மீறியுள்ளதால், இப்போது தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மஹிந்திரா XUV 500

இந்த XUV 500-ல் ஒரு 2.2-லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுவதால், இதுவும் 2000cc நிர்ணய அளவை கடக்கிறது. கடந்த நவம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் மூலம் 2794 யூனிட் XUV 500-கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதற்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில், இந்த இந்திய கார் தயாரிப்பாளர் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளார்.

ஆடி Q7

ஜெர்மன் கார் தயாரிப்பாளர் மூலம் பிரிமியம் SUV பிரிவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த புதிய தயாரிப்பிற்கு, ரூ.72 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இது ஒரு 3-லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் யூனிட் மூலம் ஆற்றலை பெற்று இயங்குவதோடு, 2000 cc நிர்ணய அளவையும் கடப்பதால், இதுவும் தடையை பெறும் என்று தெரிகிறது.

டொயோட்டா இனோவா

இனோவா-வை ஒரு 2.5-லிட்டர் டீசல் என்ஜின் இயக்கி வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 3944 இனோவா கார்களை, டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ள நிலையில், இதற்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் இந்த ஜப்பான் கார் தயாரிப்பாளருக்கு பெரும் பின்னடைவு உண்டாகும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ

கடந்த நவம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம், 4118 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஒரு 2.2-லிட்டர் (அடிப்படை வகையில் 2.6-லிட்டர்) டீசல் என்ஜினை கொண்டு இயங்குவதால், இந்த தடை விதிப்பு உத்தரவில் இதுவும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்

டெல்லி கார் தடையை நிறுத்தி வைக்க, வாகன தொழில்துறை விருப்பம்

சென்னையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட மஹிந்திரா S101 உளவுப்படத்தில் சிக்கியது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience