சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில் கார்தேக்கோ குழுமம் Revv நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது

anonymous ஆல் டிசம்பர் 05, 2023 03:12 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

Revv இணைப்பின் மூலம், கார்தேக்கோ அனைத்து வாகனத் தேவைகளுக்கும் ஒரே ஒரு தீர்வை உருவாக்கி, தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும்.

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பிரபலமான ஆட்டோ-டெக் தீர்வு வழங்குநரான கார்தேக்கோ குழுமம், ஷேர்டு மொபிலிட்டி தளமான ரெவ் நிறுவனத்தை தன்னுடன் இணைக்கும் அறிவிப்பின் மூலம் ஒரு விரிவான வாகன அனுபவத்தை உருவாக்குவதற்கான பயணத்தில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைத்துள்ளது.

கார்தேக்கோ குழுமம் பைக்தேக்கோ, Gaadi.com, ஜிக்வீல்ஸ், பவர்டிரிஃப்ட், இன்சூரன்ஸ்தேக்கோ மற்றும் ரூபி உள்ளிட்டற்றின் மூலமாக பல்வேறு வகையான விரிவான சேவைகளை வழங்கி வருகிறது. இப்போது இந்த இணைப்பின் மூலமாக கார்த்தேக்கோ ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸின் ஒரு பகுதியாக ரெவ் நிறுவனமும் ஷேர்டு மொபிலிட்டி சேவைகளை வழங்கவுள்ளது. இந்த இணைப்பு, இகோ சிஸ்டத்திற்குள் சேவைகளை தடையின்றி ஒருங்கிணைத்து, நுகர்வோரின் பல்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கார்தேக்கோ குழுவின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இணைப்பின் மூலம், ரெவ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக கார்தேக்கோ இருக்கும்.

ரெவ் , ஷேர்டு மொபிலிட்டி எனப்படும் தனிப்பட்ட வாடகை கார்கள் சேவை துறையில் நன்கு அறியப்பட்ட ஒரு நிறுவனமாக இருக்கிறது, சேவையில் பல்வேறு வகையான வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பரவியுள்ள நெகிழ்வுத்தன்மை, குறைவான விலையில் மக்களுக்கு சேவை மற்றும் பரந்த நெட்வொர்க் ஆகியவை ஷேர்டு மொபிலிட்டி -யின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. மேலும் அதன் நோக்கமும் கார்தேகோ குழுமத்தின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. முழு வாகனப் பயணத்திலும் தொழில்நுட்ப தீர்வுகளின் ஒருங்கிணைப்பு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது, தொந்தரவில்லாத மற்றும் சிறப்பான செல்ஃப்-டிரைவிங் அனுபவத்தை உறுதி செய்கிறது.

கார்தேகோ குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அமித் ஜெயின் "நாங்கள் சிறப்பான தீர்வுகள் கொண்ட வலுவான இகோ சிஸ்டத்தை உருவாக்கும்போது, ​​புதிய தலைமுறையின் டிரைவிங் தேவையை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள நகரங்கள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவதில் எங்கள் கவனம் உள்ளது. தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, நாங்கள் எங்கள் சேவைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மேலும் தடையற்ற செயல்பாடுகளுக்கும் உறுதியளிக்கும். ரெவ் நிறுவனத்தின் உடனான இணைப்பு, Gen-Z வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஷேர்டு மொபிலிட்டி சேவைகளை வழங்க அனுமதிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

ரெவ் நிறுவனத்தின் இணைப்பானது கார்தேக்கோ குழுமத்தின் முக்கிய குறிக்கோளான தொழில்நுட்பத்தை அதன் செயல்பாட்டின் மையத்தில் வைக்கும் உத்தியுடன் ஒத்துப்போகிறது. தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்திற்காக முழுமையான ஆட்டோமொபைல் இகோ சிஸ்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

“ரெவ் நிறுவனத்தை நாங்கள் கார்தேக்கோ குழுமத்துடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டணியானது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மொபிலிட்டி அனுபவத்தை உயர்த்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் தேவையான உற்சாகமான வாய்ப்புகளை எங்களுக்குக் கொடுக்கும். ஷேர்டு மொபிலிட்டி மற்றும் கார்தேக்கோ -வின் தொழில்நுட்பத் திறன் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்களைப் பற்றிய எங்கள் நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம், நெகிழ்வான, சிறப்பான மற்றும் டெக்னாலஜி-எனேபில்டு மொபிலிட்டி தீர்வுகளில் புதிய உயரங்களை தொடுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று ரெவ் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.81 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை