ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016 - நிச்சயமாக மிகப் பெரியதாகவும், மிகச் சிறந்ததாகவும், அதிக உற்சாகத்துடனும் நடைபெறும்
published on டிசம்பர் 11, 2015 04:11 pm by cardekho
- 13 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016 என்ற இந்த மாபெரும் கண்காட்சியை, இந்திய வாகன உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகிய இரு அமைப்புகளுடன் இணைந்து, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (SIAM) நடத்த உள்ளது. 2016 –ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 5 -ஆம் தேதி முதல் 9 –ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.
‘பிக்கர், பெட்டர் அண்ட் மோர் எக்ஸைடிங்’ என்ற டேக்லைனுடன் வரும் இந்த ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016, நிச்சயமாக மிகப் பெரியதாகவும், மிகச் சிறந்ததாகவும், அதிக உற்சாகத்துடனும் நடைபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்காட்சிக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் முனைப்புடன் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. ஆர்வமிக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் கூடுதல் முயற்சியால், இதற்கு முந்தைய நிகழ்ச்சிகளை விட இம்முறை மிகச் சிறப்பாக நடைபெறும் என்று உறுதிபடக் கூறலாம்.
SIAM அமைப்பின் டெபுட்டி டைரக்டர் ஜெனரலான, திரு. சுகட்டோ சென், “2016 ஆட்டோ எக்ஸ்போ - தி மோட்டார் ஷோ, இதற்கு முந்தைய நிகழ்ச்சிகளை விட மிகச் சிறப்பாக நடைபெறும். ஸ்டேக் ஹோல்டர்கள், அமைப்பாளர்கள், காட்சிப்படுத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் போன்ற அனைத்து பிரிவினருக்கும் இந்த எக்ஸ்போ மிகவும் பெரிதாகவும், சிறந்ததாகவும், அதிக உற்சாகம் தருவதாகவும் இருக்க வேண்டும் என்று, நாங்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூடுதல் முனைப்புடனும், பெருமுயற்சியுடன் செய்துள்ளோம். வருகிறோம். இந்த கண்காட்சி சிறந்த வெற்றி பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளில், பல்வேறு தரப்பினரின் கடின உழைப்பு இடம் பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைத்து மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த கண்காட்சி நடைபெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை,” என்று கூறினார்.
ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016 நடைபெறும் இடமான இந்தியா எக்ஸ்போ மார்ட் லிமிடெட் (IEML) மையம், மாபெரும் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை கண்காட்சியின் உட்புறத்தில் இருந்த மொத்த பகுதி, 62,000 sqms என்ற அளவில் இருந்தது. ஆனால், இந்த பரப்பளவு அடுத்து நடைபெறவுள்ள 2016 கண்காட்சிக்கு போதுமானதாக இருக்காது என்று, 68,000 sqms என்ற அளவில் இதன் பரப்பளவை அதிகப்படுத்தி உள்ளனர்.
ஆறு பெரிய அரங்குகளுடன், கூடுதலாக 37,240 sqms என்ற அளவிலான கார்பெட் ஏரியாவில், முழுமையான குளிர் சாதன வசதி மற்றும் தேவையான மின்சார கேபிள்கள் போன்றவை பொருத்தப்பட்டு, மகத்தான கட்டுமானப் பணி இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன்பு, இந்த இடத்தில் 27648 sqms என்ற அளவில் 8 நிரந்தர அரங்குகள் மட்டுமே இருந்தன. கடந்த 2014 ஆட்டோ எக்ஸ்போ நடந்த போது இந்த வசதிகள் போதாததால், 32400 sqms பரப்பளவில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஐந்து நாட்கள் நடக்கவுள்ள இந்த ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016 கண்காட்சிக்கு, ஏறத்தாழ 6 லட்சம் பார்வையாளார்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறையை விட, இது 20 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவாகும். 2014 கண்காட்சியில் 55 நிறுவனங்கள் தங்கள் வாகனங்களைக் கட்சிப்படுத்த வந்தனர். ஆனால், இந்த முறை ஏற்கனவே இந்த எண்ணிக்கை அறுபத்து ஐந்தைத் தாண்டிவிட்டது. ஆட்டோ எக்ஸ்போ –தி மோட்டார் ஷோ 2016 கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த அசோக் லேலண்ட், ஆடி இந்தியா, BMW இந்தியா, டாட்சன், ஃபியட் இந்தியா, ஃபோர்ட் இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ் இந்தியா, ஹுண்டாய் மோட்டார் இந்தியா, இசுசூ மோட்டார்ஸ் இந்தியா, ஜகுவார் லாண்ட் ரோவர், மஹிந்த்ரா & மஹிந்த்ரா, மாருதி சுசுகி இந்தியா, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா, நிஸ்ஸான் மோட்டார் இந்தியா, ரினால்ட் இந்தியா, ஸ்கேனியா கமர்ஷியல் வேகிக்கில்ஸ், இந்தியா, SML இசுசூ, டாடா மோட்டார்ஸ், டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார், VE கமர்ஷியல் வெஹிகில்ஸ், வோக்ஸ்வேகன் இந்தியா மற்றும் பல நான்கு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இரண்டு சக்கர பிரிவில், ஹீரோ மோட்டோ கார்ப், இந்தியா யமாகா, மஹிந்த்ரா 2 வீலர்ஸ், பியாஜியோ வெஹிகில்ஸ், சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, ட்ரையம்ஃப் மோட்டார்சைக்கிள்எஸ்எஸ் இந்தியா, TVS மோட்டார் கம்பெனி மற்றும் பல நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பார்வைக்கு வைக்க உள்ளனர்.
மேற்கூறிய பிராண்ட்கள் தவிர, மேலும் பல புதிய தயாரிப்பாளர்கள் இந்த முறை முதல் முதலாக பங்கேற்கின்றனர். அபார்த், BMW மோட்டார்ராட், ஜீப், DSK பெநெல்லி, இந்தியன் மோட்டார்சைக்கிள் மற்றும் பலர் முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளனர். ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் 2016 கண்காட்சியில் வாகன தயாரிப்பாளர்கள் தவிர, உயர்தர பைசைக்கிள்கள், டயர் மற்றும் ட்யூப்கள், ஆயில் கம்பனிகள், வாகன வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வாகன தயாரிப்பாளர்களுக்கான இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வாகன இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மற்றும் ஊடகம் & வாகன இணையதளங்கள்/பப்ளிகேஷங்கள் போன்றவையும் இடம்பெறும். கடந்த முறையைப் போலவே, விண்டெஜ் கார்கள் மற்றும் ஃபோகஸ்ட் ஆக்டிவிட்டி ஏரியா போன்ற சிறப்பு பகுதிகளும் உண்டு. சேஃப்டி ரைடிங், டிரைவிங் சிமுலேட்டர்கள் போன்ற பல நிகழ்ச்சிகள் இந்த சிறப்பு பகுதியில் நடைபெறும். நிச்சயமாக, வாகன பிரியர்களுக்கு இந்த கண்காட்சி சரியான தீனி போடும். புதிய மற்றும் புதுமையான வாகனங்களுடன் இந்நிகழ்ச்சி முடிந்து விடாமல், இறுதியில் உங்களின் நாவில் உள்ள சுவை மொட்டுக்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில், ஏராளமான உணவு பிராண்ட்கள் தங்களது உணவுகளைப் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட மக்களும் இந்த கண்காட்சியைக் காண ஆர்வம் காட்டி வருவதால், கண்காட்சி நடக்கும் இடத்திற்கு எளிதாக வந்து செல்லக் கூடிய அளவில், இந்த இடத்திற்கு மிக அருகே உள்ள போட்டானிக்கல் கார்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, இலவசமாக அடிக்கடி பேருந்துகள் வந்து போக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014 கண்காட்சியில், முக்கியமான அங்கம் வகித்து அந்த கண்காட்சியை மாபெரும் வெற்றி பெறச் செய்த DTC பேருந்துகள் இப்போதும் பங்கு பெறுகின்றன. பங்கேற்பாளர்களின் பல்வேறு விதமான சுவை உணர்வுகளைப் பூர்த்தி செய்ய, புகழ்பெற்ற உணவு தயார்ப்பாளர்களான தாஜ் மற்றும் ராடிசன் ஹோட்டல்கள் போன்றவர்களின் உணவகங்கள் உள்ளே செயல்படும். அது மட்டுமல்ல, துரித உணவுகளை உடனுக்குடன் பரிமாற சர்வதேச பிரபலங்களான KFC முதல் உள்ளூரில் சிறந்தவர்களான BTW (பிட்டூ டிக்கீ வாலா) போன்றவர்கள் பங்கேற்று, பல்வேறு சுவைகளை பங்கேற்பாளர்களுக்குப் படைக்க உள்ளனர். உணவகங்கள் மட்டும் 1000 sqmt பரப்பளவில் செயல்பட உள்ளன. வார நாட்களில் (காலை 10 மணி – பிற்பகல் 1 மணி) அலுவல் நேரங்களில் கண்காட்சியைக் காண, ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 650; வார நாட்களில் பொது மக்களுக்கான நேரத்தில் செல்ல (பிற்பகல் 1 மணி – மாலை 6 மணி) ஒரு டிக்கெட் விலை ரூ. 300; மற்றும் வார இறுதிகளில் (காலை 1 மணி – மாலை 7 மணி) ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2015 டிசம்பர் 31 –ஆம் தேதிக்குள் மூன்றிலிருந்து பத்து டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களுக்கு, வீடு தேடி வந்து, அவர்களது டிக்கெட்கள் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும். அதன் பிறகு, 2016 ஜனவரி 25 –ஆம் தேதி வரை ஆன்லினில் பதிவு செய்து, ஹோம் டெலிவரி ஆப்ஷனைத் தேர்வு செய்பவர்களுக்கு, ஒவ்வொரு புக்கிங்கிற்கும் ரூ. 75 வசூலிக்கப்படும். ஹோம் டெலிவரி வேண்டாம் என்பவர்கள், கிரேட்டர் நொய்டாவில் உள்ள, இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தின் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில், தங்களுக்கான டிக்கெட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்
ஆட்டோ எக்ஸ்போ 2016 – மிகப்பெரியதாகவும், மிகச்சிறப்பானதாகவும், மிகப்பிரம்மாண்டதாகவும் இருக்கும்
0 out of 0 found this helpful