டாடா டியாகோ 2015-2019 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1047 சிசி - 1199 சிசி |
பவர் | 69 - 112.44 பிஹச்பி |
டார்சன் பீம் | 114 Nm - 150 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 23.84 க்கு 27.28 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் / டீசல் |
- digital odometer
- ஏர் கன்டிஷனர்
- central locking
- ப்ளூடூத் இணைப்பு
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- ஸ்டீயரிங் mounted controls
- touchscreen
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
கூல்டு க்ளோவ் பாக்ஸ்: மிகவும் சிறிய அம்சம் என்றாலும், பயணத்தின் போது நாம் குடிக்கும் பொருட்களை குளிமையாக வைத்திருக்க உதவும் ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.
ஹார்மேன் மியூஸிக் சிஸ்டம்: 8 ஸ்பீக்கர்களை கொண்ட ஹார்மேன் மியூஸிக் சிஸ்டம், இந்த பிரிவிலேயே சிறந்ததாக விளங்குகிறது.
பல வகை டிரைவிங் மோடு: இந்த டையகோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற பிரிவுகளின் கீழ், ஈகோ மற்றும் சிட்டி என்ற இரு வகை டிரைவிங் மோடுகள் அளிக்கப்படுகிறது.
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
- சிறப்பான வசதிகள்
டாடா டியாகோ 2015-2019 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.
- அனைத்தும்
- பெட்ரோல்
- டீசல்
- ஆட்டோமெட்டிக்
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்பி(Base Model)1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹3.40 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்பி(Base Model)1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹4.21 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹4.27 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இ விருப்பம்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹4.37 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 விஸ் 1.2 ரெவோட்ரான்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹4.52 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
டியாகோ 2015-2019 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹4.59 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்எம் விருப்பம்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹4.69 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹4.92 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்.டி விருப்பம்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹5.01 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இ1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹5.07 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இ விருப்பம்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹5.08 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டிஏ1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹5.28 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இசட் டபிள்யூ ஓ அலாய்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹5.28 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 விஸ் 1.05 ரெவோடோர்க்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹5.30 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹5.39 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.எம்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹5.43 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்எம் விருப்பம்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹5.50 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹5.71 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.டி1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹5.76 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹5.78 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இசட்ஏ1199 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹5.81 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.டி விருப்பம்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹5.82 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் டபிள்யூ ஓ அலாய்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹6.10 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹6.22 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 ஜே.டி.பி.(Top Model)1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல் | ₹6.39 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2015-2019 டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் பிளஸ்1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹6.49 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
டியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் பிளஸ் டூயல் டோன்(Top Model)1047 சிசி, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் | ₹6.56 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
டாடா டியாகோ 2015-2019 விமர்சனம்
Overview
டையகோ கார் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலை நிர்ணயத்தை பெற்று இருந்தாலும், ஒரு மலிவான கார் என்று கூற முடியாது ஏனெனில் இது நன்கு உறுதியான முறையில் கட்டமைக்கப்பட்டு, கேபின் உள்ளே தரமான பொருட்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு, பிரிமியம் உணர்வை அளிக்கிறது.
வெளி அமைப்பு
இதுவரை வெளியாகி உள்ள எந்த ஒரு டாடா தயாரிப்புடனும் டையகோ காரை, ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் உள்ளது என்ற ஒரு சிறந்த கருத்துடன் ஆரம்பிப்போம்.டாடா போல்ட் மற்றும் விஸ்டா ஆகியவை, இண்டிகா காரின் சாயலில் அமைந்து வெளியானதால், பெரிய அளவில் அவை பிரபலம் அடையவில்லை. பொதுவாக ஹேட்ச்பேக் கார்களில் டாடாவின் முந்தைய கார்களின் காட்சி அமைப்பு அழுத்தம் பின்பற்றப்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிஸ்ட் மற்றும் போல்ட் ஆகியவை கூறலாம். ஆனால் இந்த கார் புதுமையாக காட்சி அளிப்பதோடு, கச்சிதமாக மற்றும் நவீனமாக உள்ளது. இதன் பிரிவிலேயே 1647 மிமீ என்ற பரந்து விரிந்த காராக திகழ்ந்தாலும், கிராண்டு ஐ10-க்கு அடுத்த இடத்தை தான் பெற்றுள்ளது. சிலிரியோ காரின் வீல்பேஸ் அளவை விட, இது சற்று குறைவாக பெற்றுள்ளது. ஒரு முழுமையான 146 மிமீ நீளமானது எனலாம். அதே நேரத்தில் இந்த பிரிவிலேயே ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் எடை அதிகமான கார் என்று கூறலாம்.
Exterior Comparison
Volkswagen Ameo | |
Length (mm) | 3995mm |
Width (mm) | 1682mm |
Height (mm) | 1483mm |
Ground Clearance (mm) | 165mm |
Wheel Base (mm) | 2470mm |
Kerb Weight (kg) | 1153kg |
குறிப்பாக, இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் செல்லும் கூர்மையான கேரக்டர் வரிசை, டெயில் லெம்ப் சுற்றிலும் வந்து முடிவடைவதைநாங்கள் விரும்புகிறோம். இந்த பிரிவில் விதிமுறைப்படி, டையகோ காரின் பி- பில்லர்கள் கருப்பு நிறத்தில் அமைந்து, விங் மிரரில் உள்ள இன்டிகேட்டர் கூட கருப்பாக உள்ளன.
பக்கவாட்டு பகுதியில் 14 இன்ச் அலாயை கொண்ட வீல், காரை மிகவும் தாழ்மையான நிலையில் காரை அழகாக மாற்றியுள்ளது. மேலும் அலாய் வீல்களின் வடிவமைப்பு கூட, சற்று குறைவாகவே உள்ளன. கிராண்டு ஐ10 இல் உள்ள டைமண்டு கட் வீல்கள் உடன் இதை ஒப்பிட்டால், உண்மையில் எதிர்பார்ப்பிற்கு மிஞ்சியதாகவே தெரிகிறது.
பின்பக்க வடிவமைப்பை பொறுத்த வரை, தெளிவாகவும் சுருக்கமாகவும் உள்ளது. ஆல்மேன்டு வடிவிலான டெயில் லெம்ப்கள் மற்றும் மங்கலாமன கேரக்டர் லைன்கள் இரு முனைகளை இணைப்பது ஆகியவை உண்மையில் பார்ப்பது அருமையாக உள்ளது. இதில் ஸ்டாப் லெம்ப் மீது ஏறிச்செல்லும் வகையில் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாயிலர் கூட அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இன்டிகேட்டர் ஸ்பாயிலரின் ஒரு முனையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் தன்மை கொண்ட கருப்பு ஸ்பாயிலர், நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு காரியமாக உள்ளது. இது குறித்து டாடா கூறுகையில், இது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதோடு, ஏரோடைனாமிக்ஸ் தன்மையையும் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. காரின் நம்பர் பிளேட் பகுதியை சுற்றிலும் அடர்ந்த கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டு இருப்பது, பின்பக்க நிற அமைப்பிற்கு ஒரு தனித்தன்மையை அளிக்க உதவுகிறது. குறிப்பாக, புகைப்போக்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, கண்களுக்கு தெரியாமல் மறைவாக அமைக்கப்பட்டுள்ளது.
பூட் இடவசதியை பொறுத்த வரை, சிலிரியோ காரைப் போல 240 லிட்டர் அளவை கொண்டு, எல்லா மாற்று பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இது கிராண்டு ஐ10 காரின் அளவை விட சற்று குறைவாக உள்ளது. %bootComparision%
இதுவரை டாடா நிறுவனம் வடிவமைத்த கார்களிலேயே ஒரு சிறந்த கார் என்றால் அது டையகோ தான் என்று நாங்கள் கண்களை மூடிக் கொண்டு சொல்ல முடியும். இந்த காரின் அளவீடுகள், கூர்மையான கோடுகள் மற்றும் விவரங்களை வைத்து கவர்ந்து இழுக்கும் தன்மை என்று அனைத்தும் பாராட்ட தகுந்த முறையில் உள்ளது.
உள்ளமைப்பு
இந்த காரின் உள்ளமைப்பை பொறுத்த வரை, இதன் முன்னோடி கார்களான சிஸ்ட் மற்றும் போல்ட் ஆகியவற்றை தழுவியதாக அமைந்துள்ளது. கேபின் இடவசதியை மேம்படுத்துவதிலும் தரத்தை உயர்த்துவதிலும், டாடா நிறுவனம் அதிக நேரத்தை செலவிட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக காண முடிகிறது.
இந்த காரின் கேபின் உள்ளே நீங்கள் நுழைந்தவுடன் முதலில் உங்கள் கண்களில் தென்படுவது, டேஸ் அமைந்துள்ள கருப்பு-வெளிர் நிறத்திலான தீம் தான். இது குறித்து டாடா நிறுவனம் கூறும் போது, தங்களின் வழக்கமான பழுப்பு நிறத்தை நீக்கி உள்ளதாக தெரிவித்தது. எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிற ஒருங்கிணைப்பு பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, அதை சுத்தம் செய்வதும் எளிதாக உள்ளது.
இந்த காரின் உள்ளமைப்பிற்கு பயன்படுத்தி உள்ள பிளாஸ்டிக் மிகவும் தரமானது ஆகும். குறிப்பாக, டேஸ் மேற்பகுதி மிகவும் நன்றாக உள்ளது. சென்டர் கன்சோல் மற்றும் மற்ற பகுதிகளில் பக்கவாட்டில் உள்ள ஏசி திறப்பிகளை சுற்றிலும், பியானோ பிளாக் நிறத்திலான ஒரு டாப் உள்ளது. இது குறித்து டாடா நிறுவனம் கூறுகையில், இந்த பக்கவாட்டு ஏசி திறப்பிகளை வெளிப்புறத்தில் உள்ள நிறத்தை ஒத்தாற்போல அமைக்க விரும்பியது, ஒரு சிறப்பான முயற்சியாக நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்தது.
டாடா கார்களின் வழக்கமான ஸ்டீயரிங், உங்களை ஓட்டுநர் இருக்கைக்கு வரவேற்கிறது. இந்த அமைப்பு சிறப்பாக, பிடிப்பதற்கு நன்றாகவும் ஆடியோ மற்றும் போன் பயன்பாடுகளுக்கான கன்ரோல்களை கொண்டதாகவும் உள்ளது. இந்த வீல் 9 மணி திசை மற்றும் 3 மணி திசையில் சற்று கடினமாக உணர முடிகிறது. இதனால் ஒரு உறுதியான பிடிப்பு கிடைக்கிறது. டில்ட் தேவைக்கு ஏற்ப, ஸ்டீயரிங்கை கட்டுப்படுத்தி கொள்ள முடியும்.
இரண்டு வட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், போல்ட் காரில் இருந்து எடுக்கப்பட்டது போல தெரிகிறது. இதன் நடுப்பகுதியில் ஒரு பன்முக தகவல் திரை (எம்ஐடி) உள்ளது. இதனுடன் வட்டங்களில் டாசோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவை முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த எம்ஐடி மூலம் நேரம், கடந்த தொலைவு, எரிபொருள் பயன்பாட்டிற்கான வழிகள், எரிபொருள் பயன்பாட்டின் சராசரி மற்றும் எரிபொருள் காலியாகும் தூரம் உள்ளிட்ட தகவல்களைப் பெறலாம். இந்த டாசோமீட்டரில் ஒரு இதமான தன்மையை காண முடிகிறது. அதாவது வெண்மையாக உள்ள முள்ளானது, நீங்கள் சிவப்பு கோட்டை தொட்ட உடன், சிவப்பாக மாறிவிடும்.
இந்த காரில் உள்ள ஹெக்ஸாகோனல் தீம், உள்ளே உள்ள சென்டர் கன்சோலிலும் காண முடிகிறது. இதில் ஒரு ஜோடி ஏசி திறப்பிகள் மற்றும் ஹார்மேன் மேம்படுத்திய மியூஸிக் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த மியூஸிக் சிஸ்டத்தில் 8 ஸ்பீக்கர்களை கொண்டு, அட்டகாசமான ஒலி வெளியீட்டை அளிக்கிறது எனலாம். ஒரு பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக் காரில் நாம் கேட்க முடியும் ஒருசிறப்பான ஒலி அமைப்பு என்று எளிதாக கூறலாம். இந்த அமைப்பு, ஒரு ஸ்மார்ட்போன் உடன் இணைக்கப்படும் போது, இதன் நேவிகேஷன் செயல்பாடு இரட்டைப்பான தன்மையோடு செயல்படுகிறது. “டேன் பை டேன் நேவிகேஷன்” அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திய போது, ஓட்டும் திசைகளை எல்இடி திரையில் தெளிவாக காட்டுகிறது. மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஜூக் கார் அப்ளிகேஷனை பயன்படுத்தி,ஒரு வைஃபை ஹாட்ஸ்பாட் இணைப்பில் 10 போன்கள் வரை தொடர்ந்து இணைக்க முடிகிறது. இதை பயன்படுத்தி மியூஸிக் ஒலிக்க செய்யலாம். இந்த கார் பிரிவில் மேற்கண்ட இரு அப்ளிகேஷன்களும் இதுவரை கேள்விபடாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரில் சென்டர் கன்சோலுக்கு கீழே ஏர் கண்டீஷனரின் கன்ட்ரோல்கள் உள்ளன. தானியங்கி கிளைமேட் கன்ட்ரோல் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உண்மையை சொன்னால், இந்த காரின் போட்டியாளர்களில் கூட இந்த தன்மையை காண முடிவதில்லை. கிராண்டு ஐ10 போல, பின்பக்கத்தில் ஏசி திறப்பிகள் எதுவும் இல்லை. இதனால், இந்த காரின் ஏசி செயல்பாடு ஏற்று கொள்ளக் கூடியது தான்.
இந்த காரின் முன்பக்க சீட்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு, ஒரு சுமார் அளவிலான ஆதரவை அளிக்கிறது. சிலிரியோ அல்லது கிராண்டு ஐ10 கார்களில் உள்ளது போல, ஹெட்ரெஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்டதாக இல்லாதது நல்லதாக தோன்றுகிறது. அதிக உடல்வாகு கொண்டவர்கள் உட்காரும் போது, தொடைக்கு ஆதரவு கிடைக்க சற்று சிரமப்படலாம். மேலும் புட்வெல் சற்று நெருக்கடியாக உணரலாம். இது தவிர, முன்பக்க இருக்கையில் மிகவும் சிறப்பாக அமர்ந்து செல்ல முடிகிறது. ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இது மேலே-கீழே மாற்றி அமைத்து கொள்ளும் ஸ்டீயரிங் வீல் உடன் கிடைக்க, ஒரு கச்சிதமான ஓட்டுநர் நிலையை பெறுவது எளிதாகிறது.
பின்பக்க சீட்டை பொறுத்த வரை, இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கூட உட்படுத்தலாம் என்றாலும், அது பரிந்துரைக்கப்படவில்லை. இரண்டு பேர் பயணிக்கும் வகையிலான தோள்பட்டை இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் செல்ல இட நெருக்கடி ஏற்படுகிறது. கால் இடவசதியை பொறுத்த வரை, வழக்கமான சிறிய கார்களின் தரத்தை ஒத்து இருப்பதோடு, கிராண்டு ஐ10 காருக்கு அடுத்தப்படியாக டையகோ அமைந்துள்ளது. முன்பக்க சீட்களின் பின்பகுதியை உயர்த்தி கொள்ள, பின்பக்க சீட்களில் பயணிப்போரின் முட்டிகளுக்கு அதிக இடவசதியை ஏற்படுத்தி கொள்ள முடியும்.
இந்த காரின் கேபினை சுற்றிலும் மொத்தம் 22 க்யூபிஹோல்கள் இருப்பதை நீங்கள் காணலாம். கியர் லிவரை சுற்றிலும் பல்வேறு பொருட்கள் வைப்பு இடங்கள் காணப்படுவதோடு, நான்கு கதவுகளிலும் தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கான பாக்கெட்கள் அமைந்துள்ளன. கிளோவ்பாக்ஸ் ஆழமாக அமைந்து, கிராண்டு ஐ10 காரில் இருப்பது போன்ற ஒரு குளிர்ந்த செயல்பாட்டை கொண்டுள்ளது. டேஸ்போர்டின் கீழ் பகுதியில் ஒரு சிறிய ஹூக் அமைக்கப்பட்டு, இதில் 2 கிலோ வரை எடையுள்ள பொருட்களை போட முடியும். இது ஒரு புத்திசாலித்தனமான யோசனையாக தெரிகிறது.
இந்தப் பிரிவிலேயே ஒரு சிறந்த உள்ளமைப்புகளைக் கொண்ட காராக டையகோ அமைந்துள்ளது. கச்சிதமான, முழுமையான மற்றும் தரமான கட்டமைப்பை பெற்று, கிராண்டு ஐ10 கார் உடன் போட்டியிடும் காராக உள்ளது. இந்த பிரிவிலேயே முதன் முறையாக 8 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மேன் சவுண்டு சிஸ்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அப்ளிகேஷன்கள் பேக்கேஜ் ஆகியவை சேர்ந்து அதன் தரத்தை உயர்த்துகிறது. இதை எல்லாம் வைத்து ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சிறப்பாக அமைக்கப்பட்ட உள்ளமைப்பை கொண்டு, தேவையான அளவிலான அம்சங்கள் ஆகியவற்றை கொண்டு, இந்த விலையில் ஒருவர் எதிர்பார்க்கும் சிறந்த காராக இருக்கிறது.
பாதுகாப்பு
இந்த டையகோ கார் விபத்தில் சிக்கும் போது ஏற்படும் அழுத்தங்களை ஏற்கும் வகையில், ஆற்றலை ஊறிஞ்சும் வடிவமைப்பை பெற்றுள்ளதால், கேபினிற்குள் அதிக பாதிப்பு ஏற்படுவது இல்லை. இது தவிர, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆகியவற்றை பெற்றுள்ளது. துவக்க வகையில் இருந்து, எல்லா வகைகளிலும் தேவைக்கு ஏற்ப ஏர்பேக்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஏபிஎஸ் அமைப்பு, உயர் தர டையகோ வகைக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது.
செயல்பாடு
இந்த டையகோ காரில் இரண்டு என்ஜின்களை பெற்று, கச்சிதமான சேடனாக செயல்படுவதற்கான ஆற்றலை பெறுகிறது.ஆனால் இதில் பெட்ரோல் என்ஜின் முற்றிலும் புதுமையானதாகும். டீசல் என்ஜினை பொறுத்த வரை, தற்போது இண்டிகா காரை இயக்கி வரும் சிஆர்4 என்ஜினை தழுவியதாக அமைந்துள்ளது.
டையகோ டீசல் (ரிவோடார்க்– 1.05 லிட்டர்)
தனது பிரிவில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஹேட்ச் கார்களில் டையகோ டீசல் காரும் ஒன்று ஆகும். கிராண்டு ஐ10 காருக்கு அடுத்தப்படியாக இது அமைந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தனது எல்லா போட்டியாளர்களை விட, அதிக எடைக் கொண்டதாக டையகோ கார் அமைந்துள்ளது. இந்த கூடுதல் எடையுடன் இருப்பதால், ஹூண்டாய் காரை போல, சிறந்த ஆக்ஸிலரேஷனை கொண்டிருப்பது கடினமாகிறது. அதே நேரத்தில், மாருதி சிலிரியோ மற்றும் செவ்ரோலேட் பீட் ஆகிய கார்களை விட, இது சிறப்பாக அமைந்துள்ளது என்பதை உறுதியாக கூறலாம். 1800 ஆர்பிஎம் என்ற குறைந்த அளவில் கூட உயர் முடுக்கத்தை மென்மையாக முறையில் அளிக்கிறது. ஆக்ஸிலரேஷன் சிறப்பாகவும் உள்ளது. நெடுஞ்சாலை பயணங்களில் இந்த என்ஜின் மிகவும் திணறலை கொடுப்பதாக உணர முடியவில்லை. அதே நேரத்தில், நகர்புறத்தில் சிறப்பான செயல்பாட்டை அளிக்கிறது. அதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்பது இந்த டீசல்என்ஜினில் உள்ள மறுசீரமைப்பு தான். இது உயர் ரிவ்கள் அளவில் அதிக சத்தத்தை வெளியிடுவதால், ஓட்டும் அனுபவத்தில் அலுப்பை ஏற்படுத்துகிறது.
%performanceComparision-Diesel%
டையகோ பெட்ரோல் (ரெவோட்ரோன் 1.2 லிட்டர்)
இந்த காரின் பெட்ரோல் என்ஜின், முடுக்குவிசையை வெளியிட விரும்புகிறது. இந்த விலை நிர்ணயத்திற்குள் அமைந்த பெரும்பாலான ஹேட்ச்பேக் கார்களைப் போல இந்த குட்டி டாடா தயாரிப்பில் கூட, சிறந்த செயல்பாட்டை பெற கால்களை அதிகமாக அழுத்தி வாகனத்தை ஓட்ட வேண்டியுள்ளது. இது இடம் பெற்றுள்ள பிரிவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஹேட்ச்பேக் காராக உள்ளது என்பது கணக்கு அளவில் மட்டுமே. டீசல் என்ஜினை போல, டையகோ காரின் எடையின் மூலம் டில்ட் சமநிலை பாதிக்கப்படுகிறது. டையகோ காரை விட, கிராண்டு ஐ10 காரின் எடை 77 கிலோ குறைவாகவும், சிலிரியோ கார் சுமார் 200 கிலோ குறைவாகவும் காணப்படுகிறது. இந்தக் கார் மிகவும் எடை அதிகமாக இருந்தாலும் கூட, தனது பணியை சிறப்பாக செய்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டம் பயணிகளை சுமந்து கொண்டு ஏற்றம் மிகுந்த பாதையில் செல்வதிலும், போர்டில் சில கேமரா சாதனங்களைக் கொண்டிருப்பதிலும் எந்த பிரச்சனையும் ஏற்படுவது இல்லை.
%performanceComparision-Petrol%
இந்த டையகோ காரில் சிட்டி மற்றும் இகோ என்ற பன்முக மோடுகளை கொண்டுள்ளது. இந்த காரின் முன்னோடி தயாரிப்பான போல்ட் காரில் இருப்பது போன்ற ஸ்போர்ட் மோடு, இதில் இல்லை. பொதுவாக, சிட்டி மோடு அமைப்பில் ஆரம்பிக்கும் ஒரு காரில், டேஸ்போர்டில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் இகோ மோடிற்கு மாற்ற முடியும். அதே பட்டனை திரும்ப ஒரு முறை அழுத்துவதன் மூலம் பழைய வழக்கமான நிலைக்கு கொண்டு வரலாம். இந்த இரு மோடுகளின் மாற்றத்திற்கு ஏற்ப என்ஜின் சுழற்சி உள்ளீடுகளை அளிக்கிறது. இது தவிர, இந்த விளைவின் மூலம் ஆற்றல் மற்றும் எரிபொருள் சேமிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஒரு கட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க முடிகிறது.
பயணம் மற்றும் கையாளுதல்
இந்த காரில் உள்ள ஸ்டீயரிங் மிகவும் லேசாக இருப்பதால், நகர்புற வேகத்திற்கு ஏற்றதாக உள்ளது. பூட்டை திறப்பதையும் மூடுவதையும் மட்டுமே மொத்த வேலையாக இல்லாமல், நகரத்தை வலம் வர உதவும் ஒரு குட்டி ஹேட்ச் காராக டையகோ இருக்கிறது. ஒரு குறுக்கலான இடத்தில் பார்க்கிங் செய்யவோ அல்லது ஒரு விரைவான யூ-டேர்ன் எடுக்கவோ, எளிதாக அமையும் வகையில் லேசான ஸ்டீயரிங் வீல்லை கொண்டுள்ளது. நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் போது, தேவைக்கு ஏற்ப சற்று கடினமானதாக ஸ்டீயரிங் வீல் மாறுகிறது. திருப்பங்களில் செல்லும் போது, அது தெளிவற்ற நிலையை அடையவது இல்லை. மேலும் கிராண்டு ஐ10 காரை போல, எளிதாக அல்லது திரும்பும் வகையில் இருப்பது இல்லை.
இந்த காரில் உள்ள சஸ்பென்ஸனை பொறுத்த வரை, பயணம் மற்றும் கையாளுதலில் ஒரு சரியான சமநிலையை அளிக்கிறது. இது பாதுகாப்பான பக்கத்தில் இருப்பதால், குண்டும் குழியுமான சாலைகளில் திணறலை சந்திப்பது இல்லை.டீசல் டையகோ காரை விட, பெட்ரோல் டையகோ காரில் சஸ்பென்ஸன் அமைப்பு சிறப்பாக இருப்பதாக தெரிகிறது. டீசல் என்ஜினில் 20 கிலோ அதிகமாக இருப்பதால், அதற்கு ஏற்ப உறுதியான முன்பக்க ஸ்பிரிங்குகள் மற்றும் டம்பர்களை, டாடா நிறுவனம் பயன்படுத்தி உள்ளது.பெரும்பாலானபகுதிகளிலும் நெடுஞ்சாலை வேகத்திலும் செல்ல பயண தரம் ஏற்று கொள்ள வகையில் உள்ளது. இதன் பயணங்கள் ஏறக்குறைய சமமாக தான் உள்ளது. ஹூண்டாய் காரை போல முழுமையாக குலுங்கும் தன்மை, இதில் ஏற்படுவது இல்லை. இந்த காரில் கூடுதல் எடை இருப்பதால், நெடுஞ்சாலையில் செல்லும் வேகமான பயணத்திலும் சாலையில் சீரான பயணத்தை பெற முடிகிறது.
வகைகள்
துவக்க வகையான'XB' இல் சாதனங்களின் அமைப்பில் எதுமாற்றத்தை போல தெரிவது மட்டுமின்றி, பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களும் குறைவாகவே உள்ளன. நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் இருக்கும் பட்சத்தில், சிந்தித்து தேர்வு செய்யக் கூடிய வகையாக'XE (O)' இருக்கும். அதே நேரத்தில் எங்களைப் பொறுத்த வரை, நடுத்தர நிலையில் உள்ள'XM' மற்றும் 'XT' ஆகியவை அளிக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பு மிகுந்தவை ஆக தெரிகின்றன. பெரும்பாலான துவக்க நிலை கார்களில் பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பார்க்கிங் சென்ஸர்கள் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உயர் தர வகையான'XZ' இல் மேற்கூறிய எல்லா அம்சங்கள் அமைய பெற்றிருப்பதோடு, அதனுடன் ஸ்டீயரிங்கில் ஏறிச் செல்லும் ஆடியோ கன்ட்ரோல்கள், ஏபிஎஸ், இபிடி, கார்னர் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் ஃபேக் லெம்ப்கள் ஆகியவற்றை பெற்றுள்ளன. எங்களைப் பொறுத்த வரை,'XT' வகையில் ஏபிஎஸ் வசதி கூட அளிக்கப்பட்டிருந்தால், அது ஒரு சிறந்த பேக்கேஜ் ஆக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது.
வெர்டிக்ட்
டாடா டையகோ காரின் விலை ரூ.3.26 லட்சம் (எக்ஸ்- ஷோரூம் டெல்லி) என்று ஆரம்பித்து, துவக்க நிலை ஹேட்ச்பேக்குகளை வாங்குவோர் மத்தியில் ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக மாறி உள்ளது. இந்த ஏற்றுக் கொள்ளக்கூடிய விலை நிர்ணயத்திற்காக, டையகோ கார் ஒரு மலிவாக கார் என்று கூற முடியாது. ஏனெனில், மிகவும் உறுதியான கட்டமைப்பை கொண்டுள்ளதோடு, கேபின் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் தரமானதாக அமைந்து, பிரிமியம் உணர்வை அளிக்கிறது.
ஆனாலும் செயல்பாட்டு திறன் துறையில் இந்த கார் உங்களை கவலைப்பட வைப்பது இல்லை. இருப்பினும், டாடா நிறுவனம் இதை ஒரு குறைந்த கால தயாரிப்பாக மட்டுமே வெளியிட்டுள்ளது. ஏனெனில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் செயல்பாட்டு திறன் அடிப்படையிலான டையகோ ஜெடிபி காரை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது,தற்போதைய காலத்திற்கு ஏற்ற ஒரு ஹேட்ச்பேக்கை நீங்கள் எதிர்பார்த்தாக இருந்தால், அதிக அளவிலான அம்சங்கள் மற்றும் விசாலமான இடவசதி ஆகியவற்றை கொண்டு (சிறப்பான242 லிட்டர் பூட் வசதி உடன்) டையகோ கார், நீங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்றதாக விளங்குகிறது.
“இதன் விலை நிர்ணயம் ஏற்றக் கொள்ளக்கூடியதாக இருப்பதால், டையகோ கார் ஒரு மலிவான கார்களின் பட்டியலில் இடம் பெறுவதில்லை. ஏனெனில் இது மிகவும் உறுதியாக கட்டமைக்கப்பட்டு, கேபின் உள்ள பிரிமியம் உணர்வை பெறும் வகையில் தரமான பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது”
டாடா டியாகோ 2015-2019 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- மிகவும் சக்தி வாய்ந்த ஒரு காராக இது விளங்கினாலும், தனது பிரிவில் இது மிகவும் பணச் சேமிப்பை அளிக்கக் கூடிய காரும் கூட.
- தனது பிரிவில் 85 பிஎஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 70 பிஎஸ் டீசல் என்ஜின் ஆகியவற்றை பெற்று, டையகோ கார் சக்தி வாய்ந்த காராக விளங்குகிறது.
- தனது பிரிவில் உள்ள கார்களிலேயே ஒரு டீசல் என்ஜினை வழங்கும் ஒரே கார் டையகோ மட்டுமே.
- தனது பிரிவிலேயே முதல் முறையாக மின்னோட்ட முறையில் ஒஆர்விஎம்-களை கட்டுப்படுத்தக் கூடிய ஒரே கார் இதுதான். டையகோ காரில் நாங்கள் விரும்பாதவை
- டையகோ காரின் சில போட்டி கார்களில் இருப்பது போல, இந்த பிரிவில் பொதுவாக காணப்படும் ஓட்டுநபர் பக்க ஏர்பேக், இந்த காரில் இல்லை.
- இந்த பிரிவிலேயே டையகோ காரின் என்ஜின்கள் தான் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், ஓட்டும் போது சற்று திணறலை உணர முடிகிறது.
- 3 சிலிண்டர் கொண்ட தயாராக இருந்ததாலும், இரு வகையான என்ஜின்களிலும் இருந்து அதிக சத்தமும் அதிர்வும் ஏற்பட்டு, அதை கேபின் உள்ளே உணர முடிகிறது.
- சிஎன்ஜி இணைப்பிற்கான தேர்வு கிட், இந்த டையகோ காரில் காண முடிவதில்லை.
டாடா டியாகோ 2015-2019 car news
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
டீஸர்கள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில் டாடா கர்வ்வ் டார்க் எடிஷனின் பிரத்யேகப் படங்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக எங்களுக்கு கிடைத்துள்ளன. இதன் மூலம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய விரிவ
டாட்டாவின் சிறந்த விற்பனையான ஹேட்ச் ஏபிஎஸ் மற்றும் ஈபிடிடுடன் மூலதன ஸ்திரத்தன்மை கட்டுப்பாட்டை இப்போது நிலையானதாக பெற்றுள்ளது!
ஏப்ரல் 2020 முதல் தொடங்கி, இந்த இரண்டு டாடா கார்கள் BSVI பெட்ரோல் என்ஜின்களுடன் மட்டுமே கிடைக்கும்
இரண்டு நுழைவு நிலை ஹாட்ச்பேக்குகளில் சிறந்தது எது? நாம் கண்டுபிடிக்கலாம்
டாட்டா டியொகோ மாறுபாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன - நீங்கள் வாங்க வேண்டியது எது?
JPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற...
டாடா டியாகோ 2015-2019 பயனர் மதிப்புரைகள்
- All (932)
- Looks (215)
- Comfort (238)
- Mileage (328)
- Engine (229)
- Interior (175)
- Space (136)
- Price (199)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Verified
- Critical
- I Have Rarely கோ To The Service Centre. Not Ba.
Not much powerful car and also has noisy irritating engine.not good in comfort.but with good build quality. I think tata is reliable and had practical cars. I love it. Iமேலும் படிக்க
- Tata Cars Are Good
Good mileage with 25kmpl & low maintenance ,travel on long distance of 1000kms in a day without any heating issue & easy service & now new version come with 4 Airbagsமேலும் படிக்க
- 7 Years Of Tiago- Satisfied
Wonderful experience with my Tiago, for 7 years, good handling and performance if you are a calm driver. FE of 15-17KMPL, Didnt ever feel the need to upgrade untill the family got bigger.மேலும் படிக்க
- Very low maintenance car
So far it had covered 1.45 lakh km. Very low maintenance car with excellent mileage. Suspension is best in class also best in safety . Excellent music system as wellமேலும் படிக்க
- சிட்டி இல் driving க்கு Nice compact vehicle
Nice compact vehicle for driving in city. Not very good for long drive. I recommend to purchase this vehicle for value of money in all aspectமேலும் படிக்க
டாடா டியாகோ 2015-2019 படங்கள்
டாடா டியாகோ 2015-2019 -ல் 43 படங்கள் உள்ளன, ஹேட்ச்பேக் காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய டியாகோ 2015-2019 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
டாடா டியாகோ 2015-2019 உள்ளமைப்பு
48 hours இல் Ask anythin g & get answer