கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்ட ீஜ் என 4 வேரியன்ட்களில் கிடைக்கும். காரின் விலை ரூ.7.89 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக, எக்ஸ்-ஷோரூம்).
கைலாக் -காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 2, 2024 அன்று திறக்கப்படும். அதே நேரத்தில் வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் கார் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27, 2025 முதல் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் இன்ஜின் முதல் சன்ரூஃப் வரை ஃபிர ான்க்ஸ் மற்றும் டெய்சர் கார்களை விட கைலாக் காரில் கொடுக்கப்படவுள்ள 7 வசதிகளின் விவரங்கள் இங்கே
பெரும்பாலான சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கின்றன. ஆனால் கைலாக் -ல் ஒரே ஒரு ஆப்ஷன ் மட்டுமே கிடைக்கும்: அது குஷாக்கிலிருந்து பெறப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகும்
கைலாக்கின் பேஸ் வேரியன்ட்டில் 16 இன்ச் ஸ்டீல் வீல் இருந்தது. மேலும் பின்புற வைப்பர், பின்புற டிஃபோகர் மற ்றும் டச் ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றை இந்த வேரியன்ட்டில் பார்க்க முடியவில்லை.