• English
  • Login / Register
சரியான சேவை மையத்துடன் உங்களை இணைக்க உதவுகிறது

கண்டுபிடிக்கவும் மஹிந்திரா சாங்யாங் உங்கள் நகரத்தில் சேவை நிலையம் CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது மஹிந்திரா சாங்யாங் இந்தியா முழுவதும் சேவை மையம் மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு மஹிந்திரா சாங்யாங் car service center in your city just choose the city and view all the necessary contact information about the மஹிந்திரா சாங்யாங் service masters in your preferred city. Locate over 211 மஹிந்திரா சாங்யாங் Service Stations in Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune and get details of மஹிந்திரா சாங்யாங் Car Service Masters across 181 cities in India.

மேலும் படிக்க

மஹிந்திரா சாங்யாங் செய்தி

  • இந்தியாவில் முதல் முறையாக சாங்யாங் டிவோலி வேவுப் பார்க்கப்பட்டது!
    இந்தியாவில் முதல் முறையாக சாங்யாங் டிவோலி வேவுப் பார்க்கப்பட்டது!

    நம் நாட்டில் கச்சிதமான கிராஸ்ஓவரான டிவோலியை, சாங்யாங் நிறுவனம் சோதனையில் ஈடுபடுத்தி வருகிறது. வரும் 2016 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில், அதன் இந்திய அரங்கேற்றம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்ட போது, பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு தேர்வுகளையும் கொண்டிருந்தது. இந்தியன் ஆட்டோமோட்டிவ் சந்தையின் கச்சிதமான SUV / கிராஸ்ஓவர் பிரிவிற்குள் சமீப காலத்தில் நுழைந்த ஹூண்டாய் க்ரேடா ஒரு வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அறிமுகமான இந்த கொரியன் SUV, இதுவரை 80,000 முன்பதிவுகளை நெருங்கியுள்ளது. ஒரு க்ரேடாவிற்காக ஏங்கி நிற்கும் வாடிக்கையாளர்களின் மனதை ஈர்க்கும் வகையில், டிவோலியிலும் ஏறக்குறைய அதே அளவிலான பேக்கேஜ் அளிக்கப்படுகிறது.

  • மஹிந்த்ராவின் Sசான் யோங்க் டிவோலி அடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்
    மஹிந்த்ராவின் Sசான் யோங்க் டிவோலி அடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்

    அடுத்து அறிமுகமாகவுள்ள மஹிந்த்ராவின் காம்பாக்ட் SUV மாடலான KUV 100 (S101) காரைப் பற்றிய விவரங்கள் காட்டுத் தீ போல பரவி, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் Sசான் யோங்க் டிவோலி என்ற மற்றொரு காரையும் மஹிந்த்ரா நிறுவனம் காட்சிப்படுத்தும் என்ற புதிய விவரம், ஏற்கனவே உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 2015 ஜனவரி மாதம் கொரிய வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காம்பாக்ட் SUV, நான்கு வருட கால விரிவான ஆராய்ச்சிக்குப் பின் தயாரிக்கப்பட்ட ஒரு உன்னத தயாரிப்பாகும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, அதிகபட்சமாக 126 PS சக்தியையும், 157 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யவல்ல பெட்ரோல் e- XGi 160 இஞ்ஜினை, சர்வதேச டிவோலி மாடலில், மஹிந்த்ரா நிறுவனம் பொறுத்தியுள்ளது. ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என்ற இரு ஆப்ஷங்களும் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் வெளிவரவுள்ள டிவோலி மாடலில், ஏற்கனவே TUV 300 காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் சற்றே மேம்படுத்தப்பட்டு, அதிக சக்தியையும், டார்க்கையும் உற்பத்தி செய்யும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டு பொருத்தப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, டிவோலி மாடலில் ஸ்மார்ட் ஸ்டியரிங் செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ஸ்டியரிங் தொழில்நுட்பத்தின் மூலம், நார்மல், கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ஸ்டியரிங் மோட்கள் பொருத்தப்பட்டுள்ளதால், உங்களுக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறத்தில், பிரமாண்டமான 423 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் பகுதியும் இந்த காரில் உண்டு. 

×
We need your சிட்டி to customize your experience