பஜாஜ் செய்தி & விமர்சனங்கள்
இருசக்கர வாகனங்களின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனம், முதல் முறையாக பஜாஜ் க்யூட் RE 60 என்னும் க்வாட்ரிசைக்கிளைத் (சிறிய ரக 4 சக்கர வாகனம்) தயாரித்து வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த வாகனம், மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. புதிய RE60 நான்கு சக்கர வாகனம், இந்த முறை ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில், சோதனை ஓட்டத்தின் போது தென்பட்டதால், இதன் அறிமுக தேதி மிக அருகில் வந்து விட்டது என்று தெரிகிறது. கடந்த செப்டெம்பர் மாதம் உலக சந்தையில் இந்த வாகனத்தை பஜாஜ் நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், இந்தியாவில் இதுவரை அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை. க்யூட் RE60 வாகனத்தின் தயாரிப்பு முழுமையடைந்துள்ளதை, வலைத்தளங்களில் வெளியாகியுள்ள பிரத்தியேக புகைபடங்கள் தெளிவாக காண்பிக்கின்றன. தற்போது ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களில் உள்ளதைப் போல, இந்த குட்டி கார் பலவித கலர் ஆப்ஷங்களில் வரும். சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் நாம் இந்த வாகனத்தின் நீலம் மற்றும் சிகப்பு நிறங்களை மட்டுமே பார்க்க முடிந்தாலும், இந்த இரண்டு நிறங்களுடன் நிறுத்தி விடாமல், பலவித கலர் ஆப்ஷங்களுடன் இந்த கார் வெளியிடப்படுவது உறுதி. ஏனெனில், இதற்கு முன்பு வேவு பார்க்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தில், அழகிய மஞ்சள் வண்ணத்தில் க்யூட் RE60 வெளியானதை நாம் மறக்க முடியாது.
By saadஜனவரி 21, 2016ஜெய்ப்பூர்: நாட்டின் முதல் குவாட்ரிசைக்கிளான RE60-யை பஜாஜ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இந்த வாகனத்தில் 216 cc சிங்கிள்-சிலிண்டர் DTS-i பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு, 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. 20 bhp ஆற்றலை வெளியிடும் இந்த வாகனம், லிட்டருக்கு சராசரியாக 35 கி.மீ மைலேஜ் வரை அளிக்கிறது. இந்த வாகனத்தை வாங்குவோர் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதன் சராசரி மைலேஜ் அமைந்துள்ளதால், இதை வாடகை வாகனமாகவும் (டெக்ஸி) பயன்படுத்தலாம்.
By konarkசெப் 25, 2015அறிமுகத்திற்கு தயாராக உள்ள RE60 குவாட்ரிசைக்கிள், புனே நகரில் உள்ள அந்நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலைக்கு வெளியே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட போது, உளவுப்படத்தில் சிக்கியது. RE60 குவாட்ரிசைக்கிள் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை பெற்றதன் மூலம், இந்திய வாகன தயாரிப்பாளரான பஜாஜ் நிறுவனம் சந்தித்த சட்டம் தொடர்பான தடைகள் நீங்கி, இந்தியாவில் இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாகனம் வரும் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்தியாவில் முதல் முதலாக அறிமுகம் செய்யப்படும் குவாட்ரிசைக்கிளான RE60, 216 cc சிங்கிள்-சிலிண்டர் DTS-i பெட்ரோல் என்ஜினை கொண்டு செயல்படும். இந்த என்ஜின் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குவாட்ரிசைக்கிள் மூலம் சுமார் 20bhp ஆற்றல் அளிக்க முடியும். இது ஒரு பல்சர் NS மற்றும் RS மோட்டார்சைக்கிள் அளிக்கும் ஆற்றலுக்கு அநேகமாக நிகரானதாக இருக்கும். இதில் ஆற்றல் மற்றும் எடைக்கு இடையிலான விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், எரிபொருள் சிக்கனம் கூட குறைவாக, லிட்டருக்கு சுமார் 35 கி.மீ மைலேஜ் மட்டுமே அளிக்கிறது.
By manishசெப் 23, 2015
Other brand சர்வீஸ் சென்டர்கள்
- மாருதி
- டாடா
- க்யா
- டொயோட்டா
- ஹூண்டாய்
- மஹிந்திரா
- ஹோண்டா
- எம்ஜி
- ஸ்கோடா
- ஜீப்
- ரெனால்ட்
- நிசான்
- வோல்க்ஸ்வேகன்
- சிட்ரோய்ன்
- மெர்சிடீஸ்
- பிஎன்டபில்யூ
- ஆடி
- இசுசு
- ஜாகுவார்
- வோல்வோ
- லேக்சஸ்
- லேண்டு ரோவர்
- போர்ஸ்சி
- பெரரி
- ரோல்ஸ் ராய்ஸ்
- பேன்ட்லே
- புகாட்டி
- ஃபோர்ஸ்
- மிட்சுபிஷி
- லாம்போர்கினி
- மினி
- ஆஸ்டன் மார்டின்
- மாசிராட்டி
- டெஸ்லா
- பிஒய்டி
- ஃபிஸ்கர்
- ஓலா எலக்ட்ரிக்
- மஹிந்திரா பிஇ
- போர்டு
- மெக்லாரென்
- பிஎம்வி
- ப்ராவெய்க்