மாருதி செலரியோ

` 4.1 - 6.2 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


டிசம்பர் 01, 2015: மாருதி சுசுகி செலரியோ–வின் அடிப்படை பதிப்பையும் சேர்த்து, இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவற்றை, ஒரு தேர்வாக அளிக்கப்படுகின்றன. மாருதி சுசுகியின் தயாரிப்பில் 800cc டீசல் என்ஜினை பெற்ற முதல் காரான செலரியோ, அதன் பிரிவிலேயே பெட்ரோல், டீசல் மற்றும் CNG ஆகிய மூன்று எரிபொருள் தேர்வுகளை கொண்ட ஒரே கார் ஆகும். பெட்ரோல் செலரியோவை, ஒரு 1.0-லிட்டர் 3-சிலிண்டர் என்ஜின் இயக்கி, 6000 rpm-ல் 67hp ஆற்றலையும், 500 rpm-ல் 90 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. 800cc-யில் அமைந்த டீசல் என்ஜின் மூலம் 3500 rpm-ல் 47 hp ஆற்றலையும், 2000 rpm-ல் 125 Nm முடுக்குவிசையும் அளிக்கிறது. மேற்கண்ட மூன்று என்ஜின்களுக்கும், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு 4-ஸ்பீடு AMT தேர்வு பெட்ரோல் பதிப்பிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி செலரியோ விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்


பலரையும் பொறுத்த வரை மாருதியின் முதலீடுகளில் வெளிவரும் மற்றொரு ஹேட்ச்பேக்காகவே, செலரியோவும் கருதப்படலாம். ஆனால் இந்தோ-ஜப்பானிய கூட்டுறவில் அமைந்த வாகனத் தயாரிப்பாளர் நிறுவனத்தை பொறுத்த வரை, பல குறிப்பிடாத பகுதிகளில் சோதனை செய்வதற்கான ஒரு ஆற்றல்மிக்க கருவியாகவே இந்த ஹேட்ச்பேக்கை கருதுகிறது. மாருதியின் தயாரிப்புகளில் முதல் முதலாக செய்யப்பட்ட இரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை இந்த செலரியோ, தன்னகத்தே கொண்டுள்ளது. ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) மற்றும் மாருதியின் முதல் உள்நாட்டு கட்டமைப்பான DDiS 125 டீசல் என்ஜின் ஆகிய இவ்விரண்டும், அந்நிறுவனத்தின் மற்ற ஹேட்ச்பேக்குகளில் அறிமுகம் செய்யப்படும் முன், முதல் முறையாக செலரியோவில் தான் இடம் பெற்றது. இந்நிலையில் செலரியோ, நம்முன் என்ன தான் அப்படி கொண்டு வருகிறது என்று காண்போம்.

பிளஸ் பாயிண்ட்ஸ்1. வகைகளுக்கு இடையே தேர்விற்குரிய AMT. நெரிசலான நகரப் பகுதியிலும் ஓட்டுவதற்கு எளிதானது.
2. எல்லா வகைகளிலும் ABS (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) மற்றும் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள், தேர்விற்குரியதாக அளிக்கப்படுகிறது.
3. சுறுசுறுப்பான பெட்ரோல் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் அமைந்த டீசல் என்ஜின்கள்.
4. கச்சிதமான விகிதாச்சாரத்தில் இருந்தாலும், ஆரோக்கியமான இன்-கேபின் இடவசதி.

மையினஸ் பாயிண்ட்ஸ்1. ரீபைன்மெண்ட் மற்றும் NVH நிலைகள். குறிப்பாக 2-சிலிண்டர் டீசல் மோட்டார் மூலம் கரடுமுரடான ஒலிகள் மற்றும் கேபினுக்கு உள்ளே எண்ணற்ற சத்தங்களுக்கான வடிகட்டிகள் (நாய்ஸ் பில்ட்டர்ஸ்)
2. கட்டமைப்பு தரத்தை இன்னும் கூட சிறப்பாக அமைத்திருக்கலாம். டோர்களை அடைக்கும் போது கணகணவென்ற சத்தம் எழுந்து, ஆதாரமற்றது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
3. AMT-யில் ஷிஃப்டுகளில் குலுக்கம் ஏற்படுகிறது. ஒரு சுமூகமான ஆட்டோமேட்டிக் போல மென்மையாக இருப்பதில்லை.
4. இரு என்ஜின் தேர்வுகளும், நகர பகுதிக்கு மட்டுமே சிறப்பாக பொருந்துகிறது. நெடுஞ்சாலையில் இயங்க ஆற்றல் குறைந்தது போன்ற உணர்வை அளிக்கிறது.

தனித்தன்மையான அம்சங்கள்1. AMT கியர்பாக்ஸ். நம் நாட்டில் ஒரு காலத்தில் விலைக் குறைவான ஆட்டோமேட்டிக்காக விளங்கிய செலரியோ, EZடிரைவ் என்ற வார்த்தையின் பயன்பாட்டின் மூலம் தனக்கே ஒரு பெயரை உருவாக்கி கொண்டுள்ளது.
2. மாருதியின் விற்பனை பிறகு அளிக்கப்படும் பரந்து விரிந்த சேவைகள் மூலம் அதன் மனஅமைதியை எளிதில் குழைக்க முடியாத உறுதி.

மேற்பார்வை:


நகர் பகுதிக்கான ஹேட்ச்பேக்கை தயாரிப்பதில், மாருதி நிறுவனம் அனுபவம் மிகுந்ததாக மாறியுள்ளது. சிறிய விகிதாச்சாரங்களில், ஒரு எடைக்குறைந்த ஸ்டீரிங் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவை மூலம் விற்பனை வருவாய் பாதிக்கப்படாது என்பது உறுதிச் செய்யப்படுகிறது. செலரியோவை பொறுத்த வரை, இன்னும் ஒருபடி முன்னே சென்று AGS, அதாவது ஆட்டோ கியர் ஷிஃப்ட்டை அறிமுகம் செய்துள்ளது. MSIL வரிசையில் A-ஸ்டார் மற்றும் இஸ்டிலோ ஆகியவற்றிற்கு மாற்றாக இந்த செலரியோ விளங்கி, ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை அளிப்பதாக உள்ளது. ஒரு சுறுசுறுப்பான பெட்ரோல், ஒரு குறைந்த பட்ஜெட்டில் அமைந்த டீசல் மற்றும் ஒரு தேர்விற்குரிய CNG வகை ஆகியவற்றை கொண்டுள்ளது.

பின்னணி மற்றும் பரிணாமம்


கடந்த 2014 ஆம் ஆண்டு மாருதி செலரியோ கார், 6 வகைகள் மற்றும் ஒரு ஒற்றை பெட்ரோல் என்ஜினை கொண்டு, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறிய காமன் ரயில் டீசல் மோட்டாரான DDiS 125-யை, செலரியோவின் என்ஜினுக்கான இடத்தில் மாருதியினால் பொருத்தப்பட்டது. எதிர்கால பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், தற்போதைய செலரியோவின் துவக்க மாதிரியில் இருந்து ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புற அமைப்பியல்


மாருதியின் மூலம் ‘CICO’ (கர்வ் இன், கர்வ் அவுட்) என்று அழைக்கப்படும் ஒரு வடிவமைப்பு தீம் தான், செலரியோவின் கட்டமைப்பில் பின்பற்றப்பட்டுள்ளது. அனைத்து வடிவமைப்பு கூறுகளும் அடக்கமாகவும், நடுத்தரமாகவும், எந்த வகையிலும் முன்மாதிரியாக இல்லாத நிலையிலும் உள்ளன. இந்த மாருதி தயாரிப்பை விட கிராண்டு i10 40mm நீளமாக இருந்தாலும், செலரியோவின் வீல்பேஸ் அதை ஒத்துள்ளது. இந்த காரை எந்த வகையில் மாருதி உருவாக்கி இருக்கிறது என்பதை சிறப்பான முறையில் குறிப்பிட வேண்டியுள்ளது. வீல்களை முடிந்த வரை வெளியே தள்ளப்பட்டு, கேபினில் கூடுதல் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.

1

p1

இந்த ஹேட்ச்பேக்கில் உள்ள எண்ணற்ற வளைவுகள் மற்றும் வரிகள் ஆகியவை சேர்ந்து, இதன் கச்சிதமான விகிதாச்சாரத்தை சிறப்புடையதாக மாற்றுகின்றன. இந்த பெரிய கிரோம் கிரில், தாழ்வான ஹெட்லெம்ப்களின் ஊடே செல்கின்றன. இதனுடன் போனட்டில் உள்ள நுட்பமான வரிகள் மூலம் கொஞ்சம் கவர்ச்சிகரமான முகபாவனையை செலரியோ கார் பெறுகிறது.

p2

ஆல்டோ அல்லது K10-யில் நாம் காண்பது போல, காரின் நீளத்திற்கு ஏற்ற ஒரு ஆதிக்கம் செலுத்தும் கேரக்டர் லைன் கடந்து சென்று, டெயில்லெம்ப்களை மூடியுள்ள மூடியின் மீது பரவுவதாக அமைந்து, வழக்கமான மாருதியின் தயாரிப்பு நிழலை இதிலும் காண முடிகிறது. B-பில்லர்கள் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு, ORVM-ன் மீதான இன்டிகேட்டர்கள் மற்றும் 14 இன்ச் வீல்கள் என்று ஒவ்வொன்றும், தங்களின் பகிர்ந்தளிப்பை வழங்கி, இந்த ஹேட்ச்பேக்கின் பிரிமியம் தன்மையை கூட்டுகின்றன.

p3

பின்பக்கத்தில் உள்ள பம்பரின் கீழ் பகுதியோடு நேர்த்தியாக எக்சாஸ்ட் குழாயை சேர்த்து சொருகி வைத்து, காரின் பின்புறம் சுத்தமாகவும், எளிமையாகவும் காட்சியளிக்கிறது. முதல் பார்வையிலேயே இதன் டெயில்லெம்ப்கள், ஆல்டோ 800-யை நமக்கு நினைவுப்படுத்துவதாக உள்ளன. உயர் மாதிரி வகையில், ஒரு பின்புற டிஃபோக்கர் மற்றும் பின்புற வாஷ் வைப் ஆகியவற்றை பெற்றுள்ளன.

p4

இதன் பூட் ஸ்பேஸ் ஒரு ஆரோக்கியமான 235 லிட்டர் காணப்படும் நிலையில், கிராண்டு i10-னின் 256 லிட்டரை விட குறைவாக இருந்தாலும், செவ்ரோலேட் பீட்டின் 170 லிட்டர் சரக்கு இடவசதியை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக உள்ளது. பின்புற சீட்டை 60:40 என்ற விகிதத்தில் மடித்து, கூடுதல் சரக்குகளை ஏற்ற முடியும். எல்லாவற்றை மொத்தமாக மடித்து வைக்கும் போது, மொத்தம் 510 லிட்டர் இடவசதியை பெற முடிகிறது.

2

செலரியோவின் வடிவமைப்பு உண்மையிலேயே நடுநிலையானது ஆகும். இதில் எந்தவிதமான ஒரு சிறப்பான தன்மையோ அல்லது சலித்துக் கொள்ளும் தன்மையோ எதுவும் இல்லை. நகர் பகுதிகளுக்கு ஏற்றதான விகிதாச்சாரங்களை பெற்றுள்ளது. இதன் கட்டமைப்பு தரம் மட்டும் இன்னும் சற்று மேம்பட்டதாக இருந்திருக்கலாம் என்று பரிந்துரை செய்ய விரும்புகிறோம்.

உட்புற அமைப்பியல்


இந்த காருக்குள் நீங்கள் காலை எடுத்து வைத்தால், ஒரு வழக்கமான மாருதி தயாரிப்பின் லேஅவுட் உங்களை வரவேற்பதை காணலாம். இரட்டை டோன் வெளிர் பழுப்பு மற்றும் கருப்பு நிற கலவை இனிமையாக உள்ளது. சென்டர் கன்சோலில் ஏகமாக மங்கின சில்வர் மேலோட்டங்கள் அமையப் பெற்றிருப்பது நன்றாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது.

p5

மாருதியின் பழைய தயாரிப்புகளுடன் ஒப்பிட்டால், இந்த காரின் உட்புற அமைப்பியலின் கட்டமைப்பு தரம் நிச்சயம் பல படிகள் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதன் முக்கிய போட்டியாளர்களான ஸீகா அல்லது கிராண்டு i10 ஆகியவை உடன் ஒப்பீடும் போது, இதன் தரம் ஒரு படி குறைந்ததாக தெரிகிறது. செலரியோவின் பணிச்சூழலியல் பகுதியில் உள்ள அனைத்தும் கைக்கு எளிதாக எட்டும் நிலையில் உள்ளதோடு, சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால், செலரியோவின் பணிச்சூழலியல் உயர்ந்த மதிப்பெண்களை பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

உயர்-மாதிரி ZXi (O) வகையில் உள்ள டிரைவரின் சீட் எளிதில் எட்டி சேர்வதாகவும், உயரத்தை மாற்றியமைக்கும் நிலையிலும் அமைந்துள்ளது. இதனுடன் ஒரு நீண்ட மாற்றிமைக்க கூடிய ஸ்டீரிங்கை பெற்று, இதமான டிரைவிங் நிலை கிடைப்பதோடு, எளிமையாகவும் உள்ளது. தாழ்ந்த கீழ்பகுதி மற்றும் தொடைக்கு கீழே ஆகிய இடங்களில் கொஞ்சம் அதிக ஆதரவை பெற நாம் விரும்பினாலும், இது வெறும் ஆதரவை மட்டுமே அளிக்கிறது. குறிப்பாக நீங்கள் ஒரு உயரமான நபராக இருக்கும் பட்சத்தில், ஒருங்கிணைந்துள்ள ஹெட்ரெஸ்ட்களால் கழுத்திற்கு ஆதரவு கிடைப்பதில்லை. செலரியோவில் ஒருவர் உயரமாக அமர்வதால், டிரைவர் சீட்டின் பார்வை சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில், A-பில்லர் சற்று தடிமன் அதிகமானதாக உள்ளதால், சாலை முனைகளில் திரும்பும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

p6

இதன் ஸ்டீரிங் வீல் ஸ்விஃப்ட் காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில் ஆடியோ மற்றும் அழைப்புகளுக்கான கன்ட்ரோல்களை கொண்டு, இந்த பட்டன்கள் தொட்டு உணரும் வகையில் உள்ளன. கிராண்டு i10-ல் உள்ளது போன்ற செயற்கையான லெதர் மூலம் சூழ்ந்ததாக இல்லாமல், இதன் வீல்லில் ஒரு சிறு மணல் போன்ற தன்மையை கொண்டுள்ளது.

p7

ஒரு டச்சோமீட்டர், ஒரு ஸ்பீடோமீட்டர் மற்றும் ஒரு MID என்ற மூன்று பாட் யூனிட் கொண்ட கிளெஸ்டர் மூலம் சராசரி எரிபொருள் சிக்கனம், டிஸ்டென்ஸ் டூ எம்ட்டி மற்றும் உடனடி சராசரி ஆகிய தகவல்களை நீங்கள் பெறுவதற்கு உதவுகிறது.

p8

உயர் தர வகையில் உள்ள சென்ட்ரல் கன்சோலில், ஒரு ஒருங்கிணைந்த மியூஸிக் சிஸ்டத்தை (USB, AUX மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை ஆதரிக்கும்) பெற்று, மேனுவல் ஏர்கான் கன்ட்ரோல்களில் இயங்குகிறது. குறைந்த வகையில் உள்ள ஒரு சந்தை கடந்த மியூஸிக் சிஸ்டத்திற்கு ஒரு 2DIN ஸ்லாட்டை கொண்டுள்ளது. இந்த ஏர்-கண்டீஷன் வழக்கமான மாருதி தயாரிப்பு என்பதால், அங்கு காணப்படும் சிறந்த யூனிட்களில் ஒன்று என்பதை அறியலாம். கேபின் மிக விரைவில் குளுமை அடைவதால், முன்பக்கத்தை பொறுத்த வரை எந்தொரு குறையும் கூறுவதற்கு இல்லை.

p9

முன்பக்க சீட்களை விட, பின்பக்கத்து இருக்கை சற்று உயரம் கொண்டதாக அமைந்து, குறிப்பிட்ட கோணத்தில் பின்புறத்தை நோக்கி சாய்ந்து காணப்படுகிறது. ஆதரவு மற்றும் குஷன் தன்மையை சிறந்த நடுநிலையாக அளிக்கும் வகையில், சீட்கள் மெல்லியதாக உள்ளன. இந்த இருக்கையில் இரு பயணிகள் ஏற்புடைய நிலையில் இதமாக அமர முடியும். ஆனால் பின்புறத்தில் மூன்றாவது பயணியை ஏற்றுக் கொள்வது நெரிசல் மிகுந்ததாக அமையும். கிராண்டு i10-யைப் போல இல்லாமல், இந்த செலரியோவில் பின்புற AC திறப்பிகளை இழந்துள்ளது. ஆனால் இது எந்த வகையிலும் ஒரு பாதிக்கப்பட்ட பேரமாக அமையாது.

p10

இந்த காரின் உட்புறத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான இடவசதியை அளிக்கும் வகையில், மாருதியின் மூலம் அதற்கு ஏற்ற கச்சிதமான பரிமாணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் உட்புறத்தை பொறுத்த வரை, முன்மாதிரியான அல்லது மாருதியின் தரமான தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அமைவது என்று எதுவும் இல்லை. அதே நேரத்தில், இது ஒரு நடைமுறைக்குரிய நகர்புற ஹேட்ச்பேக்கிற்கான சரியான தகுதிகளை பெற்றுள்ளது.

செயல்திறன்


செலரியோ டீசல்


p11

இந்தாண்டின் துவக்கத்தில் உலகின் மிகச்சிறிய டீசல் மோட்டார், செலரியோவின் என்ஜினுக்கான பகுதியில் இடம்பெற்றது. DDiS125-யை நகலாக பெற்ற 793cc மோட்டாரில், வெறும் 2 சிலிண்டர்களை மட்டுமே பெற்றுள்ளது. ஒட்டுமொத்த ஆற்றல் வெளியீட்டை வைத்து ஒப்பிட்டு பார்த்தால், அதன் நெருங்கிய போட்டியாளர்களின் முன்னால் தாழ்ந்ததாக காட்சி அளிக்கிறது. இந்த 2 சிலிண்டர் மோட்டார் ஒரு மென்மையான நிலையை எட்டுவதற்கு முன் லேசான அசைவு, கலக்கம், நடுக்கம் ஆகியவற்றை கடக்கிறது. அந்த அசைவின் போது, அது கரடுமுரடான ஒலியை எழுப்பினாலும், குறைந்த வேகத்தில் வரும் ஒலிகளை கேபினுக்குள் செல்லாத வகையில் என்ஜின் வடிகட்டி விடுகிறது. இந்த ரெவ்4-களின் ஏற்றத்தின் போது ஏற்படும் கடகடவென்ற சத்தம், அதிக தொல்லை கொடுப்பதாக உள்ளது. மேலும் நெடுஞ்சாலையில் முந்தி செல்ல தேவைப்படும் தடையில்லாத ஓட்டத்தை இதில் காண முடியவில்லை. நகரப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் ஓட்டுவதற்கு இது ஒரு சிறந்த என்ஜின் ஆகும். மேற்கூறிய எல்லாவற்றையும் கடந்து, லிட்டருக்கு 27.62 கி.மீ மைலேஜ் அளிப்பதாக கூறப்படுவதால், செலரியோவை தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவை எடுக்க வைக்கிறது.

இதன் போட்டியாளர்களுடன் செலரியோவின் டீசல் என்ஜினை ஒப்பிட்டால், இதில் மிகக் குறைந்த அளவிலான ஆற்றல் மற்றும் முடுக்குவிசையை மட்டுமே கிடைக்கிறது. அதே நேரத்தில் இதன் குறைந்த கிரிப் வெயிட் தன்மையின் மூலம், மாருதிக்கு சிறிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

3

p12

செலரியோ பெட்ரோல்


செலரியோவின் பெட்ரோல் தேர்வில், K10B மோட்டாரில் லேசான மாற்றங்களை செய்து, வாகனாரின் உள்ளீட்டிற்கு கீழே பணியாற்றுகிறது. இந்த 3 சிலிண்டர் 998cc என்ஜின், ஒரு 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஒரு ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைந்து செயலாற்றுகிறது. மெல்லிய கிளெச் மற்றும் ரெவ்-ஹேப்பி மோட்டார் ஆகியவை இணைந்த கூட்டமைப்பு, நகர் வலம் செய்ய சிறப்பாக உள்ளது. ஆற்றல் வெளியீடு நேரடியானது மற்றும் போதுமான அளவிலான குறைந்த ஒலியை உண்டாக்குகிறது. அதேபோல, உயர் வேகங்களில் இந்த என்ஜின் குரலை எழுப்புவதோடு, மிக விரைவில் ஆற்றல் வெளியீடு குறைந்து விடுகிறது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலையில், இந்த என்ஜின் லிட்டருக்கு 23.1 கி.மீ. மைலேஜ்ஜை அளிப்பதாக கூறப்படுகிறது. இதே என்ஜின் தான் CNG வகைகளுக்கும் ஆற்றலை அளிக்கிறது. ஆனால் ஆற்றல் வெளியீட்டின் அளவு 6000rpm-ல் 58.2bhp ஆக சரிந்து விடுகிறது. அதேபோல முடுக்குவிசையிலும் 3500rpm-ல் 78Nm ஆக சரிவை சந்திக்கிறது. இதன்மூலம் லிட்டருக்கு 31.79 கி.மீ. மைலேஜ்ஜை பெற முடிகிறது.

0 4

குறிப்பு: ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(AMT)


p13

இந்த செலரியோ, ஒரு ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது. இதில் 2 பெடல்களை மட்டுமே கொண்டு, ஒரு வழக்கமான ஆட்டோமேட்டிக் வாகனத்தின் செயல்பாட்டையே ஒத்துள்ளது. கியர் லிவரை டிரைவ்-வை நோக்கி நகர்த்தி, பிரேக்கை விட்டால் கார் முன்நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பிக்கும். இந்த கிளெச்சின் இயக்கத்தை ஒரு ஹைட்ராலிக் ஆக்டேட்டர் கட்டுப்படுத்தி, உங்கள் இடது காலிற்கு ஓய்வை அளிக்கிறது. இந்த குட்டி மாருதி தயாரிப்பில் உள்ள AMT, ஒரு சிறந்த கச்சிதமான யூனிட்கள் அல்ல. இந்த கார் அப்ஷிஃப்ட்கள் அல்லது டவுன்ஷிஃப்ட்கள் ஆகும் போது, லேசான அதிர்வை காண முடிகிறது. ஆனால் தினமும் பயன்படுத்தும் போது, அதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்து கொள்ளலாம். நீங்கள் அதை மேனுவல் மோடிற்கு மாற்றுவதன் மூலம், கியர்களின் மாற்றங்களை நீங்களே பொறுப்பேற்று கொள்ள வேண்டியதாகும்.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


பெரும்பாலான மாருதி தயாரிப்புகளை போலவே, செலரியோவின் சஸ்பென்ஸனும் மென்மையான பக்கத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள மேடு பள்ளங்களினால் ஏற்படும் அதிர்வுகள் நீக்கப்பட்டு, எளிதாக சாலையை கடக்க முடிகிறது. அதே நேரத்தில், பெரிய மற்றும் மோசமான பள்ளங்களின் வழியாக ஓட்டும் போது, கேபினுக்குள் அதை உணர வைக்கிறது. ஸ்டீரிங் வீல் லேசாகவும், சிறப்பாகவும் உள்ளதோடு, வேகத்தில் செல்லும் போது எடைக் கூடியதாக மாறுகிறது.

p14

செலரியோவின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த தேவையில்லை. ஆனால் நீங்கள் அப்படி செய்யும் பட்சத்தில், அது சிறப்பாக செயல்படும். இதன் உயரத்தின் விளைவாக, தவிர்க்க முடியாத பாடி ரோலை குறித்த ஒரு குறிப்பு அளிக்கிறது என்றாலும், அதைவிட அது ஒருமித்து வரும் போது சிறப்பாக அமைகிறது. இந்த கார், மணிக்கு 120 கி.மீ. வரை அதிவேக நிலைப்புத் தன்மையில் (ஹை ஸ்பீடு ஸ்டேபிலிட்டி) நம்பிக்கையை அளிப்பதோடு, அதற்கு மேல் தனது பணியில் இருந்து விலகி கொள்கிறது. முன்புறத்தில் ஒரு ஜோடி வென்டிலேட்டேட் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்குகள் ஆகியவை மூலம் காரை நிறுத்த முடிகிறது. பிரேக்கிங்கை பொறுத்த வரை தரமானது, ஒரு நேர் கோட்டில் இந்த காரை தெளிவாக நிறுத்த முடிகிறது.

பாதுகாப்பு


p15

மாருதி நிறுவனத்தின் மூலம் இதன் எல்லா வகைகளிலும் தேர்விற்குரிய ABS மற்றும் ஏர்பேக்குகள், சமீபத்தில் அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இந்த பிரிவில் அளிக்கப்படும் அம்சங்களுடன் சமநிலை பெறுகிறது. யூரோ NCAP நடத்தும் சோதனையில், செலரியோவின் உயர் தர வகைக்கு 5-ல் 3 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது.

5

வகைகள்


6

அடிப்படை வகையான L-யை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் ஆடியோ சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி மற்றும் பவர் விண்டோக்கள் போன்ற முக்கியமான அம்சங்கள் காணப்படுவதில்லை. அதே நேரத்தில் இந்த வகையில் பவர் அசிஸ்டேட் ஸ்டீரிங் உடன் கூடிய மேனுவல் ஏர் கண்டீஷனர் மற்றும் ஹீட்டர் போன்ற சில அடிப்படை அம்சங்கள் உள்ளன. நீங்கள் ஒரு தகுதியான பட்ஜெட்டில் இருந்தால், ABS மற்றும் ஏர்பேக்குகளை கொண்டு பிரிமியம் என்பதற்கு உறுதியாக மதிப்பு கொண்ட L(O) வகையை தேர்வு செய்யலாம். இடைப்பட்ட மாதிரியான V வகையில், பவர் விண்டோக்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை 5 டோர்களுக்கும் பெற்றுள்ளது. இதன் பின்புற சீட் 60:40 என்ற அளவில் மடிக்கும் வசதி, பின்புற லக்கேஜ் ஷெல்ஃப், இன்சைடு ரேர் வியூ மிரர் மற்றும் பயணி பக்க சன் விஸர் ஆகியவற்றை கொண்டுள்ளது. உயர் வகையான Z-ல் ஒரு ஒருங்கிணைந்த மியூஸிக் சிஸ்டத்தை பெற்று, ரேடியோ, CD பிளேயர், ஆக்ஸ்-இன், ப்ளூடூத் மற்றும் USB இணைப்பு ஆகியவற்றை இது ஆதரிக்கிறது. மேலும் இதில் ஒரு டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டீரிங் உடன் அதில் ஏறிச்செல்லும் கன்ட்ரோல்கள், ஒரு பின்புற வாஷ் வைப் மற்றும் டிஃபோக்கர் ஆகியவற்றை பெற்றுள்ளது. இவற்றில் Z மற்றும் Z(O) ஆகிய இரு வகைகளை மட்டுமே ஒரு முழுமையான பேக்கேஜை கொண்டவை என்று கூற முடியும்.

தீர்ப்பு


இந்த செலரியோ என்பது உங்களை வெறுக்க வைக்கவோ அல்லது கவர்ந்திழுக்கவோ செய்யாமல், ஒரு நடுநிலையான காராக உள்ளது. அது தன் பணியை செய்து, அமைதியான மனநிலையை உறுதி செய்கிறது. இதனுடன் மாருதியின் சிறப்பான சர்வீஸ் ஆதரவு பிணைப்பும் (சர்வீஸ் சப்போர்ட் நெட்வார்க்) இணைந்து, உங்களுக்கு ஒரு சிறப்பான உரிமையாளர் அனுபவத்தை அளிக்கிறது. இதில் ஒவ்வாத தரம், மந்தமான டீசல் என்ஜின் போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும், இதில் உள்ள அனைத்து அம்சங்களையும், இதன் சில போட்டியாளர்களிடம் காண கிடைப்பதில்லை. நகர்புற பயணங்களில் இந்த செலரியோ, குறிப்பாக அதன் பெட்ரோல் வகைகள் ஏமாற்றத்தை அளிக்காது.