Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

Published On ஏப்ரல் 15, 2024 By ansh for மாருதி fronx

இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

Maruti Fronx

மாருதி இந்த ஆண்டு நிறைய புதிய கார்களை வெளியிடுகின்றது. அவற்றில் மிகவும் தனித்துவமானது, விவாதிக்கக்கூடிய ஒன்று ஃபிரான்க்ஸ். இது ஒரு கிராஸ்ஓவர் கார் ஆகும். இது சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் இருந்தாலும் கூட பாரம்பரியமற்ற எஸ்யூவி வடிவமைப்பில் உங்கள் கவனத்தை ஈர்க்கும்.

கார்தேக்கோ கேரேஜுக்கு ஃபிரான்க்ஸ் கார் வந்ததில் இருந்து  ஃபிரான்க்ஸில் இருந்து நம் கைகளை எடுப்பது கடினமாக இருந்தது. எங்களுக்கு கிடைத்த சோதனை கார் டாப்-ஸ்பெக் ஆல்பா டர்போ மேனுவல் (ரூ. 11.47 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) வேரியன்ட் ஆகும். 1100 கி.மீட்டருக்கு மேல் ஓட்டிய பிறகு எங்களின் முதல் பதிவுகள் இதோ.

வித்தியாசமானதா? ஆம். அது நன்றாக உள்ளதா ?...

Maruti Fronx Front

நீங்கள் ஃபிரான்க்ஸ் காரை முதலில் பார்க்கும்போது ​​அதை உடனடியாக ஒரு எஸ்யூவி உடன் சேர்த்து பார்க்க மாட்டீர்கள். இது வித்தியாசமாகத் தெரிகிறது அதுதான் கூட்டத்திலிருந்து இதை தனித்து காட்டுகின்றது. அதன் கூபே போன்ற ஸ்டைலிங் ஈர்க்கக் கூடியது. இது பலேனோ ஹேட்ச்பேக் அடிப்படையிலானது என்பதை பக்கவாட்டில் இருந்து பார்த்துத்தான் சொல்ல முடியும். முன்பக்கத்தில் இருந்து பார்த்தால் அதன் பாரிய கிரில் காரணமாக இது கிராண்ட் விட்டாரா போலவே தெரிகிறது.

Maruti Fronx Rear

இது அதன் ட்ரை-LED DRL -கள் மற்றும் இணைக்கப்பட்ட டெயில் லைட்ஸ் மற்றும் பெரிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், ஹையர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கிளாடிங் ஆகியவற்றுடன் மஸ்குலர் நவீனமாக தோற்றமளிக்கின்றது

வழக்கமான கேபின் & வழக்கமான வசதிகள்

Maruti Fronx Cabin

வெளிப்புறத்தில் இது ஒரு புதிய டாஷிங் கூபே எஸ்யூவியாக இருந்தாலும் உட்புறத்தில், பலேனோவுடன் ஒப்பிடும்போது குறைவான மாற்றங்களே உள்ளன. டாஷ்போர்டில் ரோஸ் கோல்டு கலர் லேயர், டோர் ஹேண்டில்களை சுற்றி ரோஸ் கோல்ட் எலமென்ட் மற்றும் வித்தியாசமான கலர் ஸ்கீம், இவை மட்டுமே உங்களுக்கு தெரியும் மாற்றங்கள்.

இந்த கேபின் நன்றாக இல்லை என்பது போல் இல்லை. இந்த விலைக்கு நீங்கள் எதிர்பார்க்கும் பிரீமியம் கவர்ச்சியை இது கொண்டுள்ளது. ஆனால் புதிய காராக இருப்பதால், கேபின் பலேனோவில் இருந்து மாற்றப்பட்டிருக்க வேண்டும். பெரிய அளவு வித்தியாசமாக இல்லாவிட்டால், குறைந்தபட்சம், வடிவமைப்பில் இன்னும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்திருக்க வேண்டும்.

ஃபிரான்க்ஸ் ஃபுல்லி லோடட் ஆக உள்ளது. இருப்பினும் நாங்கள் விரும்புவது பலேனோவில் இருந்து இன்னும் கொஞ்சம் வித்தியாசம் இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். பலேனோவில் உள்ள ஒரே வசதி வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகும். 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆர்கேம்ஸ் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை பலேனோவுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

Maruti Fronx Touchscreen Infotainment System

இந்த வசதிகள் அனைத்தும் திட்டமிட்டபடி செயல்படுகின்றன மேலும் உங்கள் தினசரி பயணங்களுக்கு வேறு எதுவும் தேவைப்படாது. டச் ஸ்கிரீன் சாஃப்ட் ஆக உள்ளது, பயன்படுத்த எளிதானது மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே போன்ற வயர்லெஸ் இணைப்பும் கூட சிறப்பாக செயல்படுகின்றன. இருப்பினும்  பலேனோவை விட இது ரூ.2.14 லட்சம் கூடுதல் விலை இருப்பதை நியாயப்படுத்துவது கடினம். சன்ரூஃப் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் போன்ற வசதிகளை மாருதி சேர்த்திருந்தால் விலையை நியாயப்படுத்தி இருக்கலாம்.

இது நிச்சயம் வேகமானது !

Maruti Fronx

இங்குதான் விஷயங்கள் சுவாரஸ்யமான ஆகின்றன. கார்தேகோவில் நாங்கள் மாருதியிலிருந்து கிடைத்த பல கார்களை ஓட்டியுள்ளோம். உண்மையில் நான் கடந்த ஒரு மாதத்தில் தான் நான்கு ஓட்டினேன். பெரும்பாலான மாருதி மாடல்களை போலவே, இது ஒரு ரீஃபைன்மென்ட் மற்றும் ரெஸ்பான்ஸிவ் இன்ஜினை கொண்டுள்ளது, இது உங்களுக்கு ஓட்டுநர் அனுபவத்தை மிக எளிதாக்கும்.

Maruti Fronx Engine

1-லிட்டர் பூஸ்டர்ஜெட் இன்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் ரெஸ்பான்ஸிவ் ஆக மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் போது விரைவாகவும் உற்சாகமாகவும் இருக்கும். ஃபிரான்க்ஸ் உங்களை ஆர்வத்துடன் ஓட்ட வைக்கும். கடினமாக ஓட்டுவதற்கு உங்களைத் தூண்டுகிறது. இது விரைவாக வேகத்தை எடுக்கும் ஆகவே சாலையில் முந்துவது என்பது நீங்கள் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாத ஒன்று. 

கம்ஃபோர்ட்க்கு இங்கே முன்னுரிமை

Maruti Fronx

ஃபிரான்க்ஸ் காரை இதுவரை 1100 கி.மீ வரை ஓட்டியுள்ளோம். ஆனால் எங்களுக்கு புகார் சொல்ல எதுவுமில்லை. நகரப் பயணங்களோ அல்லது நீண்ட நெடுஞ்சாலை டிரைவிங்கோ, வேகத்தடைகள் மற்றும் பள்ளங்களுக்கு மேல் செல்வது அல்லது நெடுஞ்சாலை வேகத்தில் லேன்களை மாற்றுவது என எதுவாக இருந்தாலும் சவாரி வசதியாக இருக்கும்.

ஃபிரான்க்ஸ் ஆனது ஒரு சீரான சஸ்பென்ஷனை கொண்டுள்ளது இது மிகவும் மென்மையானது அல்ல அதே சமயம் மிகவும் கடினமானதும் அல்ல. இது எஸ்யூவி வடிவத்துடன் வரும் நீண்ட சஸ்பென்ஷன் கொண்டதாகும். உங்கள் தினசரி பயணங்களுக்கு வசதியாக இருக்கும், மேலும் கேபினுக்குள் மேடுகள் அல்லது குழிகளில் சென்றாலும் அதை நீங்கள் உணர மாட்டீர்கள். நெடுஞ்சாலைகளில், அதிக வேகத்தில், ஃபிரான்க்ஸ் நிலையானது மற்றும் பாடி ரோல் எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக, இரண்டு நிலைகளிலும் சவாரியின் தரம் என்பது திருப்திகரமாக உள்ளது.

Maruti Fronx Front Seats

உட்புறத்தில் கூட இருக்கைகளில் மென்மையான குஷனிங் உள்ளது. அவை உங்களை இடத்தில் வைத்திருக்கின்றன மற்றும் முன் பயணிகளுக்கு போதுமான அளவு இடவசதி உள்ளது. ஆனால் பின் இருக்கைகளுக்கு இதையே கூற முடியாது. லெக்ரூம், முழங்கால் அறை மற்றும் தொடையின் கீழ் ஆதரவு நன்றாக இருந்தாலும், சாய்வான கூரை மற்றும் இருக்கைகளின் சாய்வு காரணமாக பின்பக்க பயணிகளுக்கு கொஞ்சம் குறைவான ஹெட்ரூம் கிடைக்கிறது. இருப்பினும், கேபினில் உள்ள ஒட்டுமொத்த இடம் ஐந்து பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

Maruti Fronx

சுருக்கமாக சொல்லப்போனால் ஃபிரான்க்ஸ் ஒரு நல்ல முதல் தோற்றத்தை அளித்துள்ளது. இது நன்றாக இருக்கிறது, ஓட்டும் அனுபவம் உற்சாகமானது மற்றும் சவாரி வசதியாக உள்ளது. இதில் சில வசதிகள் கொடுக்கப்படவில்லை என்பது ஒரு சிறிய குறைதான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீண்ட காலத்திற்கு அவற்றை நாம் மிஸ் செய்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். ஃபிரான்க்ஸ் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எங்களுடன் இருக்கும். ஆகவே சரியான நேரத்தில் இன்னும் விரிவான விமர்சனத்துக்காக காத்திருங்கள்.

  • நேர்மறை விஷயங்கள்: கூபே ஸ்டைலிங், சக்திவாய்ந்த இன்ஜின், சவாரி தரம்.
     
  • எதிர்மறை விஷயங்கள்: கேபின் புதிதாக இல்லை, சில வசதிகள் இல்லை.
     
  • காரை பெற்ற தேதி: 27 ஜூலை 2023
     
  • எங்களுக்கு கிடைக்கும் போது ஓடியிருந்த கிலோமீட்டர்கள்: 614கிமீ
     
  • இன்று வரையிலான கிலோமீட்டர்கள்: 1,759 கி.மீ

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience