இசுசூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு சில உயர்மட்ட நிர்வாகிகளை மாற்றியுள்ளது. உயர்மட்ட நிர்வாகிகளின் பிரிவில், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டர் மற்றும் புதிய டிவிஷன் COO ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை இந்நிறுவனம் நேற்று அறிவித்தது. 2016 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 –ஆம் தேதி முதல், இந்த மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. தற்போது இசுசூ வர்த்தகப் பிரிவில் உள்ள, இசுசூ ஏசியா டிவிஷனில் ஜெனரல் மேனேஜராகப் பணிபுரியும் திரு. ஹிட்டோஷி கோனோ அவர்கள், புதிய டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பதவி ஏற்பார். அதே நேரம், தற்போது டெபுட்டி மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. ஷிகேரு வாகாபயாஷி அவர்கள், இனி ஜப்பானிய மிட்சுபீஷி கார்ப்பரேஷனின் இசுசூ வர்த்தக பிரிவின் டிவிஷன் COO –வாகப் பொறுப்பேர்ப்பர்.
டெல்லியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இசுசூ நிறுவனம் தனது டி-மேக்ஸ் பிக்அப் டிரக்கைக் காட்சிப்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிக்அப் டிரக், அதிகமான சுமைகளை ஏற்றிக்கொண்டு, எப்படிப்பட்ட மோசமான பாதையையும் எளிதாகக் கடந்து பயணம் செய்ய உதவுவதால் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில், இசுசூ முதலில் தனது Mu-7 என்ற SUV பிரிவு வாகனத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து டி-மேக்ஸ் என்னும் பிக்அப் டிரக்கை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கிள் கேப், ஸ்பேஸ் கேப் பிளாட் டெக் மற்றும் ஸ்பேஸ் கேப் ஆர்ச்ட் டெக் ஆகிய மூன்று விதமான மாடல்களில் டி-மேக்ஸ் வருகின்றது. டாடா ஜெனான் மற்றும் சமீபத்தில் அறிமுகமான மஹிந்த்ராவின் இம்பீரியோ ஆகிய வாகனங்களுடன் இது போட்டியிடுகிறது.