மாருதி ஸ்விஃப்ட்-டிசையர்

` 5.4 - 9.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


பிப்ரவரி 25, 2016: தனது எல்லா டீசல் கார்களின் மீதும் கவர்ச்சிகரமான தள்ளுபடியை மாருதி நிறுவனம் அறிவித்து உள்ளது. இதன்படி மாருதி நிறுவனத்தின் இரண்டாவது அதிக பிரபல தயாரிப்பான டிசையர் D என்ற கச்சிதமான சேடனை ஒருவர் வாங்கும் போது, சுமார் ரூ.65000 வரை தள்ளுபடி விலையில் அதை சொந்தமாக்கி கொள்ள முடியும். இந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் காலம் அறிந்து, சோதிக்கப்பட்ட ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 1.3 –லிட்டர் DDiS டீசல் என்ஜின், மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஸ்விஃப்ட் டிசையர் D என்ற கச்சிதமான சேடன் ஆகியவற்றை ஒருமித்து இயக்கி வருகிறது. மேற்கண்ட இந்த என்ஜின் மூலம் 74 bhp ஆற்றல் வெளியீட்டையும், 190 Nm என்ற அளவிலான அதிகபட்ச முடுக்குவிசையையும் பெற முடிகிறது. செலிரியோ காரில் உள்ளதை போல, மேற்கண்ட இந்த இரண்டு கார்களிலும் ABS அளிக்கப்படுகிறது. இந்த காரின் எல்லா வகைகளுக்கும் ஏர்பேக்குகள் தேர்விற்குரிய ஒரு கூடுதல் பாதுகாப்பு அம்சமாக அளிக்கப்படும் நிலையில், VDi மற்றும் ZDi ஆகிய இரண்டு வகைகளில் மட்டும் இது பொதுவான அம்சமாக அளிக்கப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட் டிசையர் விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்:


ஒரு சுமூகமான சேடன் என்ற எண்ணம் கொண்ட பார்வையை மாற்றி அமைத்த மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார், வாகனங்களின் பிரிவுகளின் இடையே, தனக்கே உரிய ஒரு புதிய இடத்தை வெற்றிகரமான உருவாக்கி உள்ளது. இன்டிகோ CS தான் தயாரிக்கப்பட்ட முதல் கச்சிதமான சேடன் என்றாலும், 4 மீட்டருக்கு குறைவான அளவில் அமைந்த கார்களின் பிரிவில் அபரிமிதமான வெற்றியை ருசிப் பார்த்த ஒரு கார் என்றால், அது ஸ்விஃப்ட் டிசையர் தான் என்று குறிப்பிட முடியும். மேற்கண்ட இந்த பெரிய அளவிலான வெற்றியின் மூலம் இந்திய வாகனச் சந்தையில் கச்சிதமான சேடன்களை உருவாக்கி வெளியிட, மற்ற பல வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஊக்கத்தையும், உந்துதலையும் அளிப்பதாக அமைந்தது. தற்போது இந்த பிரிவில் கடினமான போட்டி நிலவி வந்தாலும், சிறந்த விற்பனையை பெறும் காராக இப்போதும் இந்த கார் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவத் தன்மை வாய்ந்த மைலேஜ், அம்சங்கள் அடங்கிய சிறந்த பேக்கேஜ் மற்றும் விரிவான சர்வீஸ் இணைப்பு போன்ற சில காரணிகளின் பின்னணி, டிசையரின் மேற்கண்ட அபரிமிதமான வெற்றிக்கு வித்திடுவதாக அமைந்து உள்ளது. எனவே இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கார்களில் இதுவும் ஒன்றாக திகழ்வதன் பின்னணியை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இந்த காரை குறித்து ஆழ்ந்து சென்று ஆராய்வோம்.

சாதகங்கள்:1. ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான சிறந்த மைலேஜ் புள்ளி விபரங்கள் உடன் கூடிய சிறப்பான ஆற்றலை வெளியிடும் டீசல் என்ஜின்.
2. இதன் போட்டியாக உள்ள மற்ற கார்களுக்கு நிகராக, இந்த காரின் இதம் அளிக்கும் அம்சங்கள் அமைந்து உள்ளன.

பாதகங்கள்:1. மிகச் சிறிய பூட் கொள்ளளவு. பின்பக்க இருக்கையின் சீட்டை மடித்துக் கொள்ளும் வசதி எதுவும் அளிக்கப்படவில்லை.
2. டீசல் வகைகளுக்கான காத்திருப்பு காலம் மிக நீண்ட ஒன்றாக உள்ளது.

தனித் தன்மையான அம்சங்கள்:1. இப்போது இந்த காரின் டீசல் பதிப்பு உடன் ஒரு AGS (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) கியர் பாக்ஸ் தேர்வு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் எரிப்பொருள் சிக்கனத்தில் எந்த சமரசத்தையும் எதிர்பார்க்காத வகையிலான ஒரு கிளெச் பயன்படுத்த தேவையில்லாத ஓட்டும் நிலையை (கிளெச் –ஃப்ரீ டிரைவிங் எக்ஸ்பிரியன்ஸ்) பெற முடிகிறது.
2. நாடெங்கும் பரவலாக காணப்படும் இந்த நிறுவனத்தின் சர்வீஸ் இணைப்புகள் மூலம் இந்த காருக்கு ஒரு சிறந்த விற்பனை பிறகு அளிக்கப்படும் சர்வீஸ் வசதியை மாருதி நிறுவனம் அளிக்கிறது.

பின்னணி மற்றும் பரிணாமம்:


ஒரு கச்சிதமான சேடனாக திகழும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரின் வடிவமைப்பு அம்சங்கள், அதன் உறவு முறையில் அமைந்த ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் அமைந்த ஒன்றாக உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதன் முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், காலம் கடந்த தயாரிப்பான மாருதி எஸ்டீம் காருக்கான ஒரு மாற்று தயாரிப்பாக வெளி வந்தது ஆகும். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த கார், சில நுட்பமான மாற்றங்களுக்கு உட்பட்டது என்றாலும், அதன் தலைமுறையை பொறுத்த வரை எந்த மேம்பாடும் அடையவில்லை. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த காரின் ஸ்டைல் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி ஒரு பெரிய அளவிலான மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. சமீபத்தில், இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் டிசையரின் AGS பதிப்பு களமிறக்கப்பட்டு, சந்தையில் இந்த காருக்கு இருந்த போட்டியை மேலும் வலுவானதாக மாற்றிக் கொண்டது.

மேற்பார்வை


இந்த ஸ்விஃப்ட் டிசையரின் புதிய தலைமுறையைச் சேர்ந்த பதிப்பு, தற்போது இந்தியாவில் கிடைக்கப் பெறும் சிறந்த கச்சிதமான சேடன் என்பதில் எந்த சந்தேமும் இல்லை. நம் நாட்டில் உள்ள ஒரு சராசரி வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை கடந்து நிற்கும் ஒரு காராக இது திகழ்கிறது. இதில் 1.3 –லிட்டர் DDiS டீசல் மற்றும் 1.2 –லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் மில் என்ற இரு என்ஜின் நிலைகளில் அமைந்த தேர்வுகளில் கிடைக்கப் பெறுகிறது. 4 மீட்டருக்கு குறைவான அளவில் அமைந்த கச்சிதமான சேடன்கள் அடங்கிய பிரிவில், முதல் முறையாக ஒரு AGS தொழிற்நுட்பத்துடன் கூடிய காராக ஸ்விஃப்ட் டிசையர் களமிறக்கப்பட்டு உள்ளது. இந்த கியர் பாக்ஸ் தொழிற்நுட்பம் மூலம் மைலேஜ்ஜில் எந்த விதமான சமரசத்திற்கும் உட்பட தேவை இல்லை என்பதோடு, வாகனத்தை ஓட்டுவதற்கும் அதிக இதமான அனுபவத்தை அளிக்கிறது. இந்த வாகனத்தை L, V மற்றும் Z உள்ளிட்ட எண்ணற்ற நிலைகளில், இந்த கார் தயாரிப்பு நிறுவனம் அளிக்கிறது. இந்த வாகனத்தின் துவக்க நிலையில் இருந்தே, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், ABS உடன் கூடிய EBD போன்ற அம்சங்கள், தேர்விற்கு உரியவைகளாக அளிக்கப்படுகின்றன. மேலும், AC யூனிட், ஒரு மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக் விண்டோக்கள் மற்றும் பல்வேறு மற்ற அம்சங்களின் ஒரு டன் குவியலை இந்த கார் தாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புற அமைப்பியல்:


இந்த காரின் பாடி கட்டமைப்பின் சில்லரை வேலைகளில் இருந்து, அதை வாங்க வரும் வாடிக்கையாளர்களை, தன்னை பார்க்கும் முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுக்கும் தன்மையை கொண்டதாக இந்த ஸ்விஃப்ட் டிசையர் கார் உள்ளது. இது நவீன கால வழக்கத்திற்கு ஏற்றதாகவும், நேர்த்தியாகவும் தோற்றம் அளிக்கிறது. இதனால் இளம் வாடிக்கையாளர்களை இது நிச்சயம் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் முன்னோடியாக உள்ள காரில் இருந்து, இந்த 2015 டிசையர் தோற்றத்தில் கவனிக்கத்தக்க மாற்றத்தை பெற்று உள்ளது. அதன் முன்பகுதியின் முகப்பு பகுதியிலாவது அந்த மாற்றத்தை காண முடிகிறது. இதன் வடிவமைப்பு மற்றும் சித்திரம் போன்ற செதுக்கிய தன்மை ஆகியவை, இதன் முன்னோடியான காரிடம் இருந்து அப்படியே பெறப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காரின் கட்டமைப்பு தரம், ஒரு புதிய நிலைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு உள்ளது.


இந்த காரில் உள்ள கிரிலின் வடிவமைப்பு, நவீன கால வழக்கத்திற்கு ஏற்ப அமைந்து உள்ளதோடு, ஒரு சிறகு வடிவிலான கிரோம் ஸ்டீரிப் பொருத்தப்பட்டு, ஒரு புதிய பிராண்டு தோற்றத்தை பெற்று உள்ளது. இந்த கிரிலின் நடுவே, கார் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ அமையப் பெற்று, இதன் ஒட்டு மொத்த அளவில் ஒரு புதுமையான தோற்றத்தோடு காட்சி அளிக்கிறது.


இந்த காரின் ஹெட்லைட் கிளெஸ்டரை பொறுத்த வரை, அந்த பழைய வடிவமைப்பையே கொண்டு உள்ளது. ஆனால் அதன் உட்புறத்தில் ஒரு கருப்பு நிறத்தாலான பணித் தீர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவமைப்பின் மூலம் காரின் முன்பக்கத்திற்கு ஒரு அதிக கவர்ச்சி மிகுந்த தோற்றம் கிடைத்து உள்ளது. இதன் உடன் சுமூகமான ஹாலஜன் பல்புகள் மற்றும் டேன் இன்டிகேட்டர்கள் மற்றும் LED இல்லாத DRL –கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இந்த காரின் முன் பகுதியில் செய்யப்பட்டு உள்ள மற்றொரு மேம்பாடாக, முன்பக்க பம்பர் மறுசீரமைப்பு பெற்ற உருவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு மிகப் பெரிய காற்று உள்ளிழுப்பு (ஏர் இன்டேக்) பிரிவை பெற்று உள்ளது. மேலும், ஃபோக் லெம்ப்கள் கன்சோல் இப்போது ஒரு கிரோம் ஸ்ட்ரிப் மூலம் அலங்கரிக்கப்பட்டு உள்ள தன்மையின் மூலம் இந்த காரின் முகப்பு பகுதிக்கு ஒரு அட்டகாசமான காட்சி அமைப்பை அளிக்கிறது.


டிசையர் காரின் பக்கவாட்டு சுயவிவரத்தை பொறுத்த வரை, பெரும்பாலும் அதன் முன்னோடியை ஒத்தாற் போலவே அமைந்து உள்ளது. இந்த காரின் அடையாள வடிவமைப்புக் (சிக்னேச்சர் டிசைன்) கூறுகளில் உட்படும் கருப்பு நிறத்தில் அமைந்த A மற்றும் B ஆகிய பில்லர்கள், அப்படியே விடப்பட்டு உள்ளது.


இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் உங்களுக்கு காணக் கிடைக்கும் புதிய வடிவமைப்பில் அமைந்த அலாய் வீல்கள் மட்டுமே, ஒரு மாற்றமாக தெரிகிறது. இதை மோஷன் தீம்மில் அமைந்த ரிம்கள் என்று கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் கூறப்படுகிறது. 15 இன்ச் அளவில் அமைந்த இந்த ரிம்கள், உயர் தர வகைகளில் பொதுவான ஒன்றாக அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் துவக்க மற்றும் இடைப்பட்ட நிலைகளில் அமைந்த வகைகளில், சுமூகமான ஸ்டீல் ரிம்களை பெற்று உள்ளது.


இந்த 2015 ஆம் ஆண்டின் பதிப்பில் ஒரு மறுசீரமைக்கப்பட்ட பின்பக்க சுயவிவரம் அளிக்கப்படலாம் என்று எங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நாம் எதிர்பாராத வகையில் பழைய பூட் கட்டமைப்பு உடன் கூடிய அதே பழைய வடிவமைப்பே மீண்டும் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரியமாகவே உள்ளது. ஏனெனில் அது எந்த வகையிலும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைவது இல்லை.
இந்த 2015 ஆம் ஆண்டின் பதிப்பில் செய்யப்பட்டு உள்ள ஒரே ஒரு மாற்றமாக, ஒரு மறுவடிவமைப்பைப் பெற்ற அதிக தடித்த மற்றும் ஒரு தாழ்ந்த பாதுகாப்பு கவசம் கொண்ட பம்பரை மட்டுமே பெற்று உள்ளது. இதன் மூலம் காரின் முகப்பு பகுதிக்கு ஒரு முழுமையான தோற்றம் கிடைத்து உள்ளது.
இந்த காரில் உள்ள டெயில்கேட் கிளெஸ்டரை பொறுத்த வரை, சரியான அளவில் அமைந்து, காரின் ஒட்டு மொத்த வடிவமைப்பிற்கு ஒத்துப் போகும் வகையில் உள்ளது. இது சுமூகமான வகையில் உள்ள ஹாலஜன் லெம்ப்கள் மற்றும் பிரேக் லைட்கள் ஆகியவை உடன் ஒருங்கிணைந்த வண்ணம் அமைந்து உள்ளது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, 2015 ஆம் ஆண்டின் ஸ்விஃப்ட் டிசையர் காரின் பதிப்பின் வெளிப்புற அமைப்பியல் எளிய மாற்றங்களை மட்டும் தாங்கி வருவதாக உள்ளது. ஆனாலும் இதன் தோற்றத்தில் ஒரு நவீன காலத்திற்கு ஏற்ற வழக்கம் காணப்படுகிறது. இதன் பின்னணியில் மேன்மையான கட்டமைப்பு தரம் மற்றும் பணித் தீர்ப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த கச்சிதமான சேடனின் நீளம் வெறும் 3995 mm மட்டுமே இருந்தாலும், அகலம் 1695 mm அளவில் அமைந்து உள்ளது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த உயரம் என்ற பார்த்தால் 1555 mm காணப்படுகிறது. இந்த காரின் குறைந்தபட்ச கிரவுண்டு கிளியரன்ஸ் அளவு விரிவாக 170 mm –மும், வீல் பேஸின் அளவு 2430 mm ஆகவும் உள்ளது.

table-1 table-2

உட்புற அமைப்பியல்:


இந்த 2015 ஆம் ஆண்டின் ஸ்விஃப்ட் டிசையரின் உட்புற அமைப்பியலை பொறுத்த வரை, அதன் முன்னோடியை ஒத்தாற் போல உள்ளது. ஆனால் அதில் ஒரு சில புதிய சாதனங்கள் மற்றும் வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளதால், காரின் உட்புற அமைப்பின் இதமான தன்மையின் அளவு அதிகரித்து உள்ளது. இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ஒரு புஸ் பட்டன் ஸ்டார்ட் உடன் கூடிய மின்னோட்ட முறையில் மடிக்கக் கூடிய (எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள்) விங் மிரர்கள் மற்றும் ஒரு திறமை வாய்ந்த ஸ்மார்ட் கீ செயல்பாடு உள்ளிட்ட அம்சங்கள் அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், மேலும் இதில் பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள் மற்றும் ஆறு ஸ்பீக்கர்களை கொண்ட ஒரு சவுண்டு சிஸ்டம் உடன் கூடிய ப்ளூடூத் இணைப்பு ஆகியவையும் காணப்படுகிறது.


இந்த 2016 ஆம் ஆண்டில் முற்றும் முதலாக இந்த காரில் காணக் கிடைக்கும் மேம்பாடு என்னவென்றால், புஸ் பட்டன் என்ஜின் ஸ்டார்ட் அமைப்பு ஆகும். இதை புத்திசாலித்தனமாக காரில் உள்ள டேஸ்போர்டின் வலது முனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த காரின் உட்புற அமைப்பியலில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு காரியமாக நாங்கள் கண்டது எதுவென்றால், இதில் உள்ள டேஸ்போர்டு மர உள்ளீடுகளை பெற்றதாக காணப்படும் தன்மை ஆகும். இதன் மூலம் இந்த காரின் உட்புற அமைப்பியலுக்கு, வாகன சந்தையில் ஒரு மேன்மையான நிலையை எட்ட உதவுவதாக உணர முடிகிறது. இவற்றை தவிர, கேபினில் உள்ள மற்ற எல்லா காரியங்களும், முந்தைய பதிப்பில் இருந்து அப்படியே பெறப்பட்டு உள்ளன.


இந்த காரில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில் ஒரு சுமூகமான இரண்டு –பாட் வடிவமைப்பு உடன் நான்கு ஒத்த அளவில் அமைந்த கவுஜஸ்கள் காணப்படுகின்றன. இதில் என்ஜின் தட்பவெப்ப நிலை (டெம்பரேச்சர்), rpm நிலைகள், வாகனத்தின் வேக அளவு, எரிப்பொருள் நிலைகள் மற்றும் மற்ற எச்சரிக்கை லெம்ப்கள் (வார்னிங் லெம்ப்ஸ்) உள்ளிட்ட பல்வேறு புள்ளி விபரங்களை பெற முடிகிறது. மேலும் இதில் உள்ள ஒரு டிஜிட்டல் டிஸ்ப்ளேயில், ஒரு ட்ரிப் கம்ப்யூட்டர் மற்றும் ஒரு டிஜிட்டல் கடிகாரம் ஆகியவை காணப்படுகின்றன.


மற்ற பல மாருதி மாடல்களில் நீங்காமல் இடம் பெற்றதாக நமக்கு காணக் கிடைக்கும், ஒரு அடையாளமான மூன்று –ஸ்போக் வடிவமைப்பு (சிக்னேச்சர் த்ரி-ஸ்போக் டிசைன்), இந்த காரின் ஸ்டீரிங் வீல்லிலும் காணப்படுகிறது. இதில் ஒளிரும் தன்மைக் கொண்ட பன்முக –பயன்பாட்டை கொண்ட சுவிட்ச்சுகள் (இலிம்னேட்டேடு மல்டி –ஃபங்க்ஷனல் சுவிச்சஸ்) ஏறிச் செல்லும் முறையில் காணப்படுகிறது.


இதில் உள்ள சென்ட்ரல் கன்சோலில், ஒரு CD மற்றும் ஒரு ரேடியோ பிளேயரை கொண்ட ஒரு தரமான ஆடியோ சிஸ்டத்தை கொண்டதாக உள்ளது. மேலும் இதில் தங்குத் தடையின்றி ஒலிக்கும் ஆடியோ செயல்பாட்டிற்கு, ப்ளூடூத் மற்றும் USB இணைப்பை ஒருங்கே பெற்றதாக அமைந்து உள்ளது.
இந்த காரில் அதிகபட்சமாக ஐந்து பயணிகள் வரை தாராளமாக பயணிக்க கூடிய இடவசதி உள்ள கேபின் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பின்பக்கத்தில் உள்ள சீட்களை விட, முன் பக்கத்தில் உள்ள சீட்கள் அதிக வசதி கொண்டதாக உள்ளது. இவை எர்கோனிக்கல் முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சீட்களில் நம் பக்கவாட்டை சூழ்ந்து நிற்கும் தன்மை இருப்பதால், நமது உடலுக்கு சிறந்த ஆதரவை அளிப்பதாக உள்ளது.
இந்த காரின் முன்பக்கத்தில் உள்ள தனிப்பட்ட சீட்களில் கிடைக்கும் இதமான தன்மையை, பின்பக்கத்து பெஞ்சு சீட்களில் கிடைப்பது இல்லை. ஆனால் பின்பக்கத்து சீட்களுக்கு ஹெட் ரெஸ்ட்ரெயின்கள் மற்றும் ஒரு சென்டர் ஆம்ரெஸ்ட் ஆகியவற்றை பெற்று, உட்புறத்தில் உள்ள சுமூகமான தன்மையை கூட்டுவதாக அமைகிறது.
இந்த காரின் கேபின் உள்ளே மடிக்க கூடிய தன்மை கொண்ட கப் ஹோல்டர்கள், சன் விஸர்கள், ஒரு மிகப் பெரிய கிளோவ் பாக்ஸ் மற்றும் பல உள்ளிட்ட ஒரு கூட்டம் பயன்பாட்டு அம்சங்களால் நிறைந்து உள்ளது.

செயல்திறன்:


தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார், இரு என்ஜின் தேர்வுகளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

டீசல்:


ஸ்விஃப்ட் டிசையர் காரின் டீசல் பதிப்புகளில், தீவிரமான வரவேற்பை பெற்ற ஒரு 1.3 –லிட்டர் DDiS ஆயில் –பர்னரை பெற்று உள்ளது. ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட மேற்கண்ட என்ஜின், இன்றைய காலக் கட்டத்தில் நம் நாட்டில் உள்ள மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்ஜின்களில் ஒன்றாக விளங்குகிறது. எனினும் இந்த என்ஜினில், அதற்கே உரிய சில குறைபாடுகள் இருக்க தான் செய்கின்றன. இந்த என்ஜின் வெளியிடும் ஆற்றல் வெளியீடு, ஏறக்குறைய நேரடியான தன்மையை கொண்டதாக உள்ளது. இந்த என்ஜின் மூலம் 4000 rpm –ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் அளவான 74 bhp –யை வெளியிடுகிறது. மேலும் 2000 rpm –ல் ஒரு உன்னத முடுக்குவிசையான 190 Nm –யை அளிக்கிறது. இந்த டீசல் பதிப்பில் தற்போது செய்யப்பட்டு உள்ள சிறிய அளவிலான ஒரு சில மாற்றங்களின் மூலம் ஒரு உன்னத அளவிலான மைலேஜ்ஜாக லிட்டருக்கு 26.59 கி.மீ. அளிக்கும் திறனை பெற்று உள்ளது. இது ஒரு சிறந்த காரியம் ஆகும். இந்த என்ஜினுக்கு சிறந்த ஆக்ஸிலரேஷன் திறன் இருப்பதால், மணிக்கு 165 கி.மீ. என்ற ஒரு அதிகபட்ச வேகம் வரை இதனால் எட்ட முடிகிறது. இந்நிலையில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தை கடக்கும் வரை, இந்த என்ஜின் மென்மையாகவும், சாந்தமாகவும் செயல்படுகிறது. அதே நேரத்தில் மணிக்கு 100 கி.மீ. வேக என்ற அளவை இது 14.85 வினாடிகளில் எட்டி சேர்கிறது. இந்த என்ஜினுக்கான டிரான்ஸ்மிஷன் பணியை, ஒரு ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இன்னொரு வகையும், இந்த காரின் தயாரிப்பு வரிசையில் சேர்க்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு AGS டிரான்ஸ்மிஷனை பெற்று உள்ளது.

table-3

பெட்ரோல்:


மற்றொருபுறம் இந்த வாகனத்தின் பெட்ரோல் பதிப்புகள், ஒரு 1.2 –லிட்டர் K சீரிஸ் மூலம் ஆற்றலை பெற்று இயக்கப்படுகின்றன. அதன் வெளியீட்டு திறன் என்று பார்த்தால் 1197 cc உள்ளது. ஹூட்டிற்கு கீழே உள்ள இந்த என்ஜினை குறித்து பார்க்கும் போது, மணிக்கு 100 கி.மீ. என்ற வேக அளவை, ஸ்விஃப்ட் டிசையர் கார் எட்டிச் சேர 12.6 வினாடி மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இந்த மோட்டாரின் செயல்திறன், போட்டியில் உள்ள மற்றவைகளுக்கு நிகரான ஒன்றாக உள்ளது. ஒரு குறைந்த rpm –களில், அதிக முடுக்குவிசை வெளியிட்டை அளிப்பது என்பது ஒரு என்ஜினின் விலையேறப்பட்ட பண்பாக அமைவதோடு, நகர பகுதிகளில் காரை இயக்குவதற்கு வெகு சுலபமாக உள்ளது. மேற்கண்ட இந்த என்ஜின், 6000 rpm –யில் 83.14 bhp ஆற்றலையும், வெறும் 4000 rpm –யில் 115 Nm என்ற ஒரு அதிகபட்ச முடுக்குவிசையையும் தயாரித்து வெளியிடும் திறனை பெற்றதாக காண முடிகிறது. இந்த காரின் டீசல் என்ஜினை போலவே, இந்த ஆற்றலகம் கூட ஒரு சில எளிய மாற்றங்களை பெற்று, இதன் எரிப்பொருள் சிக்கன அளவை லிட்டருக்கு 20.85 கி.மீ. என்ற மைலேஜ் என்று உயர்த்தி உள்ளது. ஸ்விஃப்ட் டிசையர் காரின் பெட்ரோல் பதிப்புகளில், ஒரு ஐந்து ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகியவை உடன் கிடைக்கப் பெறுகிறது.

table-4

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்:இந்த கச்சிதமான சேடனின் முன்பக்கத்தில் மெக்பியர்சன் ஸ்ட்ரூட் லேஅவுட்டையும், பின்பக்கத்தில் ஒரு டார்சன் பீம் சிஸ்டத்தையும் கொண்ட ஒரு இதமான தன்மைக்கு தொடர்புடைய சஸ்பென்ஸன் செட் அப்பை பெற்று உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் போது மென்மையாக மற்றும் இதமான உணர்வை அளிக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் சந்தர்ப்பங்கள் வருவது அரிதாகவே ஏற்படுகிறது. இதன் ஒட்டு மொத்த செயல்பாடு எதிர்பார்த்த அளவில் அமைந்ததாக இருந்தாலும், பின்பக்க சஸ்பென்ஸன் மிகவும் மென்மையான தன்மையைக் கொண்டதாக உள்ளது. இந்த சேடனில் உள்ள பிரேக்கிங் பகுதியை பொறுத்த வரை, முன்பக்க வீல்களுக்கு வென்டிலேட்டேடு டிஸ்க்குகளும், பின்பக்க வீல்களுக்கு ட்ரம் பிரேக்குகளும் பெற்று உள்ளது. தற்போது இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் துவக்க வகைகளில் இருந்து ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிபியூஸன் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் ஒரு தேர்வுக்குரிய அம்சமாக அளிக்கப்படுகிறது. மற்றொருபுறம் பார்க்கும் போது, எலக்ட்ரானிக் பவர் அசிஸ்டேடு ஸ்டீரிங், ஒரு சுமூகமான ரேக் மற்றும் பிடிப்புக் கொண்ட மெக்கானிஷம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாக உள்ளது. குறைந்த வேகத்தில் வாகனத்தை செலுத்தும் போது, இதன் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.

பாதுகாப்பு:உயர் தர சக்தி வாய்ந்த ஸ்டீல் பொருட்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ரோபஸ்ட் பாடி கட்டமைப்பை இந்த கச்சிதமான சேடன் பெற்று உள்ளதால், இதில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 3 –பாயிண்டு சீட் பெல்ட்கள், பின்பக்க டோர் குழந்தை பூட்டுகள் (ரேர் டோர் சைல்டு லாக்ஸ்), பாதுகாப்பு எச்சரிப்பு ஒலி எழுப்பி அமைப்பு (செக்யூரிட்டி அலாரம் சிஸ்டம்) மற்றும் என்ஜின் இம்மொபைலைஸர் போன்ற அம்சங்கள், இந்த காரின் எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டு உள்ளது. இதை தவிர ஒரு வேகத்தை கண்டறிந்து செயல்படும் தானியங்கி டோர் பூட்டும் வசதியும் (ஸ்பீடு சென்ஸிட்டீவ் ஆட்டோமேட்டிக் டோர் லாக்) பொதுவான ஒரு அம்சமாக அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு, இந்த காரின் வகைகளின் வரிசை அமைப்பில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வரும் வகையில், ABS உடன் கூடிய EBD மற்றும் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்களை துவக்க மற்றும் இடைப்பட்ட நிலையில் உள்ள வகைகளுக்கு தேர்விற்குரியதாக அளித்து உள்ளது. இதன் மூலம் இந்த காரின் ஒட்டு மொத்த பாதுகாப்பு தன்மைகளின் அளவு அதிகரித்து உள்ளது.

table-5

வகைகள்:இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேற்கண்ட ஸ்விஃப்ட் டிசையர் காரை L, V மற்றும் Z என்ற மூன்று நிலையிலான வகைகளில் வெளியிடப்படுகிறது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் அனைத்தும் துவக்க வகையிலேயே கிடைப்பதால், அதன் உடன் ABS மற்றும் EBD ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தேர்வையும் செய்யும் பட்சத்தில், துவக்க நிலை பதிப்பை தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான செயலாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் ஒரு இசைப் பிரியராக இருக்கும் பட்சத்தில், CD பிளேயர் மற்றும் ஒரு ரேடியோ யூனிட் ஆகியவற்றை கொண்ட V நிலையில் அமைந்த வகையை தேர்வு செய்ய வேண்டும். இந்த காரின் துவக்க வகைகளில், எலக்ட்ரிக் பவர் அசிஸ்ட்டேடு ஸ்டீரிங் உடன் கூடிய டில்ட் செயல்பாடு, முன்பக்க சீட் ஹெட் ரெஸ்ட்ரெயின்ட்கள், மேனுவல் ஏர் கண்டீஷனிங் சிஸ்டம், உள் இருந்தே மாற்றி அமைக்க கூடிய வெளிப்புற மிரர்கள், பின்பக்க டோரை திறப்பதற்கான ரிமோட் வசதி மற்றும் லக்கேஜ் லெம்ப்கள் ஆகிய அம்சங்களை பெற முடிகிறது.
இந்த காரின் இடைப்பட்ட நிலையில் உள்ள வகைகளில், மேற்கண்ட அம்சங்களை தவிர, மின்னோட்ட முறையில் இயக்கப்படும் (எலக்ட்ரிக்கலி ஆப்ரேட்டேடு) முன்பக்க விண்டோக்கள் உடன் கூடிய டிரைவரின் பக்கவாட்டு பகுதி தானாக கீழே இறங்கும் செயல்பாடு, சென்ட்ரல் டோர் லாக்கிங் செயல்பாடு மற்றும் ரிமோட் கீலெஸ் என்ட்ரி உடன் கூடிய பின்பக்க டோர் திறக்கும் செயல்பாடு போன்றவை கூடுதல் அம்சங்களாக அளிக்கப்படுகின்றன. இவற்றை தவிர, இந்த வகையில் பயணியின் பக்கவாட்டு பகுதியில் உள்ள வெனிட்டி மிரர், மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்க கூடிய மற்றும் மடிக்க கூடிய வெளிப்புற மிரர்கள் (எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் அண்டு ஃபோல்டபிள் அவுட்சைடு மிரர்ஸ்), பகல் / இரவு உட்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் (டே /நைட் இன்சைடு ரேர் வியூ மிரர்), பின்பக்க சீட்டில் உள்ள சென்டர் ஆம்ரெஸ்ட், பின்பக்க டோர் பவர் விண்டோ, ஆட்டோமேட்டிக் ஏர் கன்டீஷனிங் சிஸ்டம் மற்றும் முன்பக்க சீட்டின் பின்புறத்தில் உள்ள பாக்கெட்கள் ஆகிய அம்சங்களும் அளிக்கப்பட்டு உள்ளன.
மற்றொருபுறம், இந்த காரின் உயர் மாதிரி வகைகளில், புஸ் பட்டன் என்ஜின் ஸ்டார்ட் செயல்பாடு, பன்முக செயல்பாட்டை கொண்ட டிஸ்ப்ளே (மல்டி –ஃபங்க்ஷனல் டிஸ்ப்ளே) உடன் கூடிய வெளிப்புற தட்பவெப்ப நிலை, எலக்ட்ரோ மேக்னிட்டிக் பேக் டோர் செயல்பாடு மற்றும் பின்பக்க பவர் சாக்கெட்கள் போன்ற மேம்பட்ட பல அம்சங்களை பெற்று உள்ளன. இவற்றை தவிர, இதனுடன் ஸ்டீரிங் வீல்லில் ஏறிச் செல்லும் ஆடியோ கன்ட்ரோல்கள், டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைத்து கொள்ளும் வசதி மற்றும் ஒரு பின்பக்க விண்டோ டிஃபோக்கர் போன்ற தகவமைப்பு கூறுகளும் இணைந்து கொள்ள, காரின் உள்ளே உள்ள இதமான தன்மையின் நிலை அதிகரிக்கிறது.

table-6

தீர்ப்பு:


ஒவ்வொரு ஆண்டு கடக்கும் தோறும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர், தனது போட்டியாளர்கள் இடையே முன்னிலை வகிக்கும் இடத்தை தொடர்ந்து பெற்று, அதிக வெற்றி அடைந்த ஒரு கச்சிதமான சேடனாக விளங்கி வருகிறது. இதன் நிலையான செயல்திறன், நிலைப்புத் தன்மை மற்றும் எங்கும் கிடைக்கும் சர்வீஸ் நெட்வர்க் ஆகியவை ஒன்று சேர்ந்து இதன் மிகப் பெரிய வெற்றிக்கு வித்திடும் காரணிகளாக அமைகின்றன. கச்சிதமான சேடனின் பிரிவில் கிடைக்கும் ஒரு சிறந்த தயாரிப்பாக, இந்த 4 மீட்டருக்கு குறைவான அளவில் அமைந்த இந்த சேடனை சுட்டிக் காட்டுவதற்கு, நம் மனதில் எந்த விதமான மறுயோசனையும் செய்ய வேண்டிய தேவையே இல்லை. ஒரு சில சிறந்த அம்சங்கள் உடன் கூடியதாக அமைந்த ஒரு நேர்த்தியான மாடலை விரும்பும் ஒரு நபருக்கு, ஸ்விஃப்ட டிசையர் கார் சிறந்ததாக அமையும். ஆனால் அதையும் தாண்டிய தேவைகளை கொண்ட ஒரு நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், அடுத்த வரவுள்ள புதுப்பிக்கப்பட்ட அமேஸ் அல்லது வோல்க்ஸ்வேகன் அமீனோ ஆகியவற்றின் வருகைக்காக காத்திருப்பதே நல்லது. ஏனெனில் மேற்கண்ட இந்த இரண்டு கார்களும், கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.