மாருதி சியாஸ்

` 7.7 - 11.5 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 
  

முக்கிய அம்சங்கள்


பிப்ரவரி 23, 2016:  இந்திய சந்தைக்குள் தனது சியஸ் காரின் 13வது மறுசீரமைப்பை வெளியிட மாருதி நிறுவனம் தயாராகி வருவதாக தெரிகிறது. ஒரு தகவலின் அடிப்படையில், சியஸின் ZXI+ என்ற ஒரு ஆட்டோமேட்டிக் வகை மிக விரைவில் மாருதி ஷோரூம்களை ரூ.10,35,206 (எக்ஸ்-ஷோரூம், கோவா) மற்றும் ரூ.11.94,142 (ஆன்-ரோடு, கோவா) என்ற விலை நிர்ணயத்தில் வெளிவர உள்ளது.

ZXi AT வகையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஒன்றை பகிர்ந்து கொள்ள கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், பெரும்பாலும் அதே 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் யூனிட்டாகவே இருக்கலாம். ஏனெனில் மேற்கண்ட இரு வகைகளும், ஒரே மாதிரியாக லிட்டருக்கு 19.12 கி.மீ. மைலேஜை கொண்டுள்ளதாக, எரிப்பொருள் சிக்கனம் குறித்து ARAI சான்றிதழ் அளித்துள்ளது.

மாருதி சியஸ் விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்


கடந்த 15 ஆண்டுகளாக மாருதி நிறுவனம் விலைக் குறைந்த மற்றும் குதூகலமான ஹேட்ச்பேக்களின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. ரூ.10 லட்சம் என்ற அளவை தாண்டி செல்லும் ஒவ்வொரு முயற்சியும், மக்களிடையே உடனடியாக தோல்வியை சந்திக்கிறது. இந்நிலையில், இந்த எல்லைக்கோட்டை சியஸ் காரின் மூலம் மாருதி கடந்துள்ளது. இப்பிரிவில் முன்னணி வகிக்கும் ஹோண்டா சிட்டியை, தனக்கே உரிய கூறுகளுடன் சியஸ் வீழ்த்த விரும்புகிறது. அது வெற்றிப் பெறுமா? என்று படித்து பாருங்கள்.

பிளஸ் பாயிண்ட்ஸ்1. தாராளமான கேபின் இடவசதி. இப்பிரிவில் லெக்ரூம் மற்றும் ஷோல்டர்-ரூம் ஆகியவை சிறப்பாக உள்ளவற்றில் இதுவும் ஒன்று.
2. விலைக்கு ஏற்ப நன்கு ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், 7 இன்ச் டச்ஸ்கிரீன், லெதர் சீட்கள் - இன்னும் பல!
3. எரிப்பொருள் சிக்கனம். இதன் டீசல் ஹைபிரிடு வகை, லிட்டருக்கு 28.09 கி.மீ. மைலேஜ்ஜை அளித்து, இந்தியாவிலேயே மிகச்சிறந்த எரிப்பொருள் சிக்கனம் கொண்ட காராக விளங்குகிறது.


4. விசாலமான 510 லிட்டர் பூட் பெற்று, ஹோண்டா சிட்டிக்கு நிகராக நிற்கிறது.
5. அளிக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்புக் கொண்டது. இதன் மூத்த போட்டியாளர்கள் இடையே குறிப்பிடத்தக்க வகையில் விலைக் குறைவானது.

மைனஸ் பாயிண்ட்ஸ்1. ஸ்விஃப்ட்/செலரியோ ஆகியவற்றில் இருந்து சில ஸ்விட்ச்சுகள் மற்றும் கினாப்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும், ஒரு பிரிமியம் உணர்வை அளிப்பதில்லை.
2. இதன் இரு என்ஜின்களும் பயணிகளுக்கு சிறந்ததாக உள்ளது. மற்றபடி வென்டோ TSi/TDi அல்லது சிட்டி i-VTEC ஆகியவற்றின் தலைசிறந்த செயல்பாட்டிற்கு முன்னால் நிலைநிற்க கூடியது அல்ல.
3. இதன் வரிசையில் இருந்து டீசல் ஆட்டோமேட்டிக் விடுபட்டுள்ளது.

தனித்தன்மை கொண்ட அம்சங்கள்1. SHVS (ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் பை சுசுகி) – இந்த பிரிவிலேயே ஒரு மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இதுவே முதல் முறை ஆகும். குறிப்பிடப்படும் மைலேஜ் புள்ளிவிபரத்தை சுமூகமாக எட்டி சேர்கிறது.
2. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில், ஸ்மார்ட்போன் போன்ற இன்டர்பேஸ் காணப்படுகிறது. மிக எளிமையாகவும், பயன்பாட்டிற்கு உள்ளுணர்வு சார்ந்தும் காணப்படுகிறது.

மேற்பார்வை


இந்த காரின் ஆரம்பக்கட்டத்தில் நியாயமான முறையில் சிறந்த ஒரு மாற்றாக (SX4-க்கு) வந்தாலும், ஹூண்டாய் வெர்னாவின் (அதன்பிறகு வந்தது) முன் தனது விற்பனையை இது இழந்தது. தனது போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, SX4-க்கு மோசமான தேதி குறிக்கப்பட்டதாக தோன்றுகிறது. ஆனால் சியஸை பொறுத்த வரை, இதன் துவக்கம் பசுமையாக இருக்க வேண்டும் என்று மாருதி நிறுவனம் விரும்புகிறது. கடும்போட்டி கொண்ட C-பிரிவை குறித்து வைத்து, ஒரு ரூ.10 லட்சம் விலைக் கொண்ட காரில் ஒருவர் எதிர்பார்க்கும் எல்லா காரியங்களையும் சியஸ் பெற்றுள்ளது. மேலும், அதன் பிரிவில் சிறந்த எரிப்பொருள் சிக்கனம் கொண்ட கார்களில் இதுவும் ஒன்று. எனவே ஹோண்டா சிட்டியின் வெற்றிக் கனியை ஒரு கடிக்க, சியஸ் போதுமானதாக உள்ளது என்று மாருதி நம்புகிறது.

பின்னணி மற்றும் பரிணாமம்


மாருதியின் முதலீட்டில் SX4-க்கு மாற்றாக, சியஸ் அமைகிறது. அதே நேரத்தில், இந்த வெளியேறும் சேடனிடம் இருந்து டீசல் என்ஜினை தவிர, வேறெந்த பண்புகளையும் அது பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சியஸ், மாருதியினால் புதியதாக கட்டியெழுப்பட்ட ஒரு புத்தம் புதிய தயாரிப்பு ஆகும். கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபலமடைந்த சுசுகியின் SHVS தொழிற்நுட்பத்தை சியஸ் டீசல் பெற்றுள்ளது. மேலும், இதை இன்னும் இனிமையானதாக மாற்றும் வகையில், தற்போது இந்த சேடன் உடன் ஒரு ஸ்போர்ட்டி ‘RS’ பாடிகிட்டையும், மாருதி நிறுவனம் வழங்குகிறது.

வெளிப்புற அமைப்பியல்


கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட சுசுகியின் ‘அத்தன்டிக்ஸ்’ தொழில்நுட்பத்தையே, சியஸ் கார் அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப அடிப்படை அமைப்பு கூறு அமைந்துள்ளது. அதனுடன் விரிந்த போனட், பூட்டில் உள்ள நுட்பமான ஒருங்கிணைந்த லிப் மற்றும் அதன் பணித்தீர்ப்பு தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கிரோமின் டோல்ப்கள் போன்ற பண்புகளை தாங்கி வருகிறது.

இந்த பிரிவில் உள்ள மிகப்பெரிய கார்களில் இந்த மாருதி தயாரிப்பும் ஒன்றாக உள்ளது. இதன் நீளம் மற்றும் அகலம் ஆகியவை பிரிவில் முன்னணி வகிக்கின்றன. இப்பிரிவிலேயே சிறப்பான நீண்ட 2650mm வீல்பேஸையும் கொண்டுள்ளது. வெளிப்புறத்தின் தாராளமான விகிதாச்சாரங்களின் பிரதிபலிப்பை கேபினின் இடவசதியிலும் காண முடிகிறது.

1

p1

இந்த காரின் உள்நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள பிராஜக்டர் ஹெட்லெம்ப்கள், முதல் பார்வையிலேயே உங்கள் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. இதன் முகப்பு பகுதிக்கு, தன்னால் இயன்ற வழியில் இது கொஞ்சம் கவர்ச்சியை அளிக்கிறது.

4 வரிகளினால் ஆன கிரோம் கிரில் நடுப்பகுதியில் அமைந்து, பெரியளவிலான போனட்டின் உள்ளே செல்வதாக உள்ளது. பம்பரின் தாழ்ந்த அரை பகுதியில் மற்றொரு சுவாரஸ்சியமான வடிவமைப்பு தன்மையை காண முடிகிறது. ஃபேக் லெம்ப் அமைந்துள்ள விதம் மற்றும் ஏர்டாம் ஒரு ஒற்றை யூனிட்டாக தோற்றம் அளிப்பது ஆகியவை புத்திசாலித்தனமான வடிவமைப்பை எடுத்துக் காட்டுகிறது.

p2

பக்கவாட்டு பகுதிக்கு செல்லும் போது, காரின் முன்பக்க கால்பங்கு பேனலில் இருந்து ஒரு கூர்மையான லைன் புறப்பட்டு சென்று, டெயில்லெம்ப்பின் நீட்டிக் கொண்டிருக்கும் முனையில் முடிவடைகிறது. இந்த கோடு கம்பீரமாக காட்சி அளிப்பதோடு, பக்கவாட்டு பகுதிக்கு அழகை கூட்டுவதாகவும் அமைந்துள்ளது. எங்களுக்கு பிடித்தமான பகுதி என்னமோ, இதன் வீல்கள் தான்.

இதன் பெரும்பாலான போட்டியாளர்கள் 15 இன்ச் வீல்களை கொண்டிருக்கும் நிலையில், சியஸ் ஒரு படி மேலே சென்று 16 இன்ச்சை பெற்றுள்ளது. மேலும், இதன் உயர்-மாதிரி வகையில், இதை ஒரு அட்டகாசமான அடர் சாம்பல் நிற மேலோட்டத்தோடு கூடிய தன்மையில் அளிக்கப்பட்டு, மற்ற வகைகள் இடையே அற்புதமானதாக காட்சி அளிக்கிறது எனலாம்.

p3

பின்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெரிய டெயில்-லெம்ப், பூட்லிட்டிற்குள் கடந்து செல்கிறது. இந்த வடிவமைப்பையும், இரு டெயில்லெம்ப்களையும் இணைக்கும் தடித்த கிரோம் வரியும் பார்த்தால், ஹோண்டா சிட்டியோடு ஒத்துப் போவது பளிச்சென்று தெரிகிறது. பூட் லிட்டில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வளைந்த லிப் காணப்பட்டு, பின்புறத்திற்கு மிகவும் வளைந்த தோற்றத்தை அளிக்கிறது. இதன் பம்பர் பெரியதாகவும், 4 பார்க்கிங் சென்ஸர்களையும் கொண்டுள்ளது. இதன் பம்பரில் காணப்படும் ஒரு கூட்டம் கருப்பு பேனல்கள், ஒரு ஜோடி ரிஃப்ளெக்டர்களை உட்கொண்டுள்ளன. ஹோண்டா சிட்டியில் உள்ள உயர்ந்த பூட் ஸ்பேஸை, இதுவும் பகிர்ந்து கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா சிட்டியுடன் ஒப்பிடும் போது, இதன் பூட் வாய்ப்பகுதி தரையில் இருந்து உயர்ந்ததாக உள்ளது.

2

சியஸ், ஒரு நடுநிலையான வடிவமைப்பை கொண்டுள்ளது என்று கூறுவது சாலச்சிறந்தது. வெர்னாவை பார்க்கும் உங்கள் முகத்தில் ஏற்படும் பூரிப்பை இது அளிப்பதில்லை. அதேபோல வென்டோவை போன்ற அடிபணியும் மற்றும் குறைந்த தன்மை கொண்டதும் அல்ல. மேற்கண்ட இரு தன்மைகளை கலவையாக பெற்று, ஒரு பெரிய கூட்டம் வாடிக்கையாளர்களை எதிர்நோக்கி உள்ளது.

உட்புற அமைப்பியல்


p4

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மாருதி தயாரிப்புகளை போல இல்லாமல், உண்மையிலேயே ஒரு விஸ்தாரமான கேபினை பெற்றுள்ளது. இதில் வெறும் வெளிப்புற அமைப்பியல் அளவீடுகளை மட்டும் கொண்டதாக இல்லாமல், வெளிர் பழுப்பு நிறத்திலான அப்ஹோல்டரி மற்றும் பெரிய விண்டோக்கள் ஆகியவற்றை பெற்று, ஒரு விஸ்தாரமான உணர்வை அளிக்கிறது. கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு (RS வகையில் முழுவதும் கருப்பு) கலந்த ஒரு கலவையில் இதன் டேஸ் அமைந்து, அதனுடன் நுட்பமான ஃபாக்ஸ் மரம், வெளிர்-சில்வர் மற்றும் பணித்தீர்ப்பு விபரத்தில் முக்கியத்துவம் பெறும் கிரோம் அசென்ட்கள் அமைந்துள்ளது.

இதன் முன்னோடியை வைத்து பார்க்கும் போது, தரம், தகுதி மற்றும் பணித்தீர்ப்பு ஆகியவற்றில் இது ஒரு பெரிய தயாரிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ஜெர்மானியர்களின் தனித்துவத்தை இதனால் இன்னும் எட்ட முடியவில்லை என்றாலும், வெர்னா உடன் நிகராக இருக்கிறது என்பது உறுதி. மேலும் சிட்டியை விட சற்று சிறந்ததாக உள்ளது. p5

டேஸ்போர்டின் லேஅவுட் சுமூகமாக உள்ளது என்றாலும், சுத்தமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. சென்டர் கன்சோலின் அதிக இடத்தை ஒரு 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அடைத்துக் கொள்கிறது. டேஸில் உள்ள பட்டன்களின் கிளூட்டரை குறைக்க, இந்த யூனிட் நீளமாக உள்ளது. ஹோண்டா சிட்டியில் உள்ளது போல ஒவ்வொரு செயலுக்கும் தனிப்பட்ட பட்டன்கள் இல்லாமல், அனைத்தும் தொடுதலின் மூலமே இயக்கப்படுகிறது. ரேடியோ, USB, ஆக்ஸ்-இன் போன்ற ஒரு கூட்டம் ஆதாரங்களை கொண்டு இந்த சிஸ்டம், மீடியாவை இயக்குகிறது. மேலும் மீடியா ஸ்டீரிம்மிங் மற்றும் போன் அழைப்புகளை ப்ளூடூத் இணைப்பு மூலம் இயக்கும் வசதியும் உள்ளது. மேலும் இதில் நோக்கியா மேப்ஸ் மூலம் இயக்கப்படும் இன்-பில்ட் நேவிகேஷனை பெற்றுள்ளது.

p6

இதன் சென்டர் கன்சோல், ஒரு அருமையான நீர்வீழ்ச்சியின் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதன் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மூலம் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோலின் இயக்கங்களுக்கு எளிதாக செல்கிறது. இந்த லேஅவுட் எளிமையாகவும், சமச்சீராகவும் அமைந்துள்ளது. இதன் ஸ்விச்சுகள் அல்லது கினாப்களை சுற்றிலும் மங்கின சில்வர் நிறத்திலான எல்லைக்கோடு போன்ற சிறப்பான அமைப்பை, நாங்கள் மிகவும் விரும்புகிறோம். கேபினுக்கு ஒரு பிரிமியம் தோற்றத்தை அளிக்க, இந்த அமைப்பும் ஒரு கூடுதல் காரணமாக அமைகிறது. ஏர் கண்டீஷனின் திறனை குறித்து எந்த குறையும் கூறுவதற்கு இல்லை. அது தனது பணியை சிறப்பாக செய்கிறது. உங்களுக்கு பின்புறத்திலும் AC திறப்பிகள் (சிட்டி/ வென்டோ ஆகியவற்றில் உள்ளது போல) இருப்பதால், கேபினின் தட்பவெப்ப நிலையை வேகமாக குறைப்பதில் பெரும் உதவியாக இருக்கின்றன. சரக்கு இடவசதி (ஸ்டோரேஜ் ஸ்பேஸ்) நன்கு சிந்தித்து வைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் உள்ள கியர் லிவர், டோர்கள் ஆகியவற்றில் 1 லிட்டர் பாட்டில்களை வைக்கும் அளவிற்கான ஏராளமான இடவசதி காணப்படுகின்றன.

மேலும் சென்ட்ரல் ஆம்ரெஸ்ட்டில் கூட சில இடவசதிகள் உள்ளது. பயணி சீட்டின் பக்கவாட்டில் ஒரு சிறிய செல்போன் பாக்கெட் போன்ற சன்கிளாஸ் ஹோல்டர் மற்றும் பயணிகள் பக்கவாட்டில் சன் விஸரில் சிறிய டிக்கெட் ஹோல்டர் ஆகிய சிறிய இடவசதிகள் காணப்படுகின்றன.

p7

டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றியமைக்க கூடிய ஒரு சிறப்பான வசதி காணப்படுகிறது. எந்த மாதிரியான உடல்வாகு கொண்டவர்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் உள்ளதோடு, இதன் குஷனிங் கொஞ்சம் மென்மையாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. சீட்டின் பக்கவாட்டில் அடர்த்தியாகவும், நீங்கள் சீட்டில் உட்காரும் போது சீட் உங்களை சூழ்ந்ததாகவும் அமைகிறது.

குறிப்பாக உயரம் குறைவான டிரைவர்களுக்கு ஏற்ப, சீட் பெல்ட்களின் உயரத்தை மாற்றியமைக்கும் வசதி உள்ளது. இந்த மாற்றியமைக்க கூடிய சீட் உடன் மாற்றியமைக்க கூடிய ஸ்டீரிங் வீல்லும் சேர, ஒரு கச்சிதமான டிரைவிங் தன்மையை பெறுவது எளிதாகிறது.

p8

டில்ட்டிற்கு ஏற்ப ஸ்டீரிங் மாற்றியமைக்க கூடியதாக இருக்க, அதை எட்டும் வகையிலும் மாற்றியமைக்க முடியும் (வோல்க்ஸ்வேகன் வென்டோ போல) என்று நாங்கள் நினைக்கிறோம். ஸ்விஃப்ட் காரில் நாம் காண்பது போல, இதன் ஸ்டீரிங் வீலும் ஒரு வளர்ந்த பதிப்பாக காட்சி அளிக்கிறது. இதில் ஆடியோ சிஸ்டம் (ஒலி அளவு, மியூட், டிராக் மாற்றம் மற்றும் மோடு) மற்றும் அழைப்புகளின் கன்ட்ரோல்களை கொண்டுள்ளது. மேற்கூறிய எல்லா கன்ட்ரோல்களை வெறும் இடதுபக்கத்தில் மட்டுமே கொடுத்து விட்டு, வலதுபக்கத்தை வெறுமனே விட்டிருப்பது விந்தையாக உள்ளது. ஸ்டீரிங்கில் கிரோமின் மெல்லிய தாக்கம் காணப்பட்டு, சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது.

p9

இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் சிறியதாக அமையப்பெற்று, அதில் டச்சோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவற்றின் 2 பெரிய டயல்களை கொண்டுள்ளது. இவற்றின் இருபுறமும் கீழ்முனைகளில், ஒரு தட்பவெப்பநிலை ரீட்அவுட் மற்றும் எரிப்பொருள் அளவு ஆகியவற்றை காட்டும் இரு சிறிய டயல்கள் காணப்படுகின்றன.

இவற்றின் நடுப்பகுதியில் MID அமைந்து, 2 ட்ரிப் மீட்டர்கள், வெளிப்புற தட்பவெப்ப நிலை, சராசரி மற்றும் ரியல்-டைம் எரிப்பொருள் சிக்கனம் மற்றும் டிஸ்டன்ஸ் டூ எம்ட்டி உள்ளிட்ட ஒரு கூட்டம் தகவல்களை அளிக்கிறது. கன்சோலில் உள்ள வெள்ளை நிறத்திலான பேக்லைட்டிங் சிறப்பானது, குறிப்பாக இரவில் சிறப்பாக காட்சி அளிக்கிறது.

p10

பின்புற சீட் ஒரு பின்நோக்கி சாய்ந்த கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களில் கூட அசவுகரியமான நிலையை ஏற்படுத்துவதில்லை. லெக்ரூம் விஷயத்தில், இது அதிக மதிப்பெண்களை பெறுகிறது. பின்புற இருக்கையில் 6 கால்களை எளிதாக வைக்கக் கூடிய தாராள இடவசதியையும், முன்புறம் 6 கால்களுக்கான இடவசதியையும் கொண்டுள்ளது. நடுவே உள்ள ஹம்ப் அதிக இடத்தை எடுத்துக் கொள்வதில்லை என்பதால், 3 பேர் அமர்வதில் பெரியளவில் நெரிசல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த பின்புற சீட்டை ஒரு நீண்ட பேஸ் கொண்டதாக அமைத்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதில் தொடைக்கு கீழ் அளிக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை. இப்படி பின்புற இருக்கை வசதி, ஹோண்டா சிட்டியை ஒத்துள்ளது. சியஸில் காணப்படும் ஹேட்ரெஸ்ட்கள் மென்மையாகவும், அசைவற்றதாகவும் உள்ளது. இதனால் உயரமான பயணிகள் அமரும் போது, தலைக்கு ஆதரவு அளிப்பதை விட, கழுத்தின் அடித்தளத்தை தொடுவதாக அமைகிறது. ஹூண்டாய் வெர்னாவில் உள்ளது போன்ற மாற்றியமைக்க கூடிய ஹெட்ரெஸ்ட்கள் இல்லாதது மற்றொரு பின்னடைவு எனலாம். சென்ட்ரல் ஆம்ரெஸ்ட் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்பதோடு, அதன் உயரம் கூட சரியாக உள்ளது. குறிப்பாக பின்புறத்தில் உள்ள சன்ஷேடுகளை எங்களை கவர்ந்தது. இதன்மூலம் பெரும்பாலான சூரிய ஒளி தாக்கங்கள் தடுக்கப்படுகின்றன. சியஸின் உள்புற அமைப்பியல் இருப்பதற்கு சிறந்ததாக உள்ளது. இந்த பிரிவை சேர்ந்த ஒரு காருக்கு கட்டாயம் தேவைப்படும் எல்லா அம்சங்களை கொண்டு, அட்டகாசமாக காட்சி அளிக்கிறது. இதன் தயாரிப்பில் மாருதி நிறுவனம் ஒரு படி மேலே போய், இதை விட தரம் குறைந்த கார்களில் இருந்து எந்த பகுதிகளையும் எடுத்துக் கொள்ளாமல், சன்ரூஃப்பை கூட ஹோண்டா சிட்டியில் உள்ளது போலவே அமைத்துள்ளது. அதேபோல, இவற்றை எந்த வகையிலும் பேரத்திற்கு ஒவ்வாதவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது, இப்பிரிவிலேயே சிறந்து விளங்கும் வகையிலான கேபினை சியஸ் பெற்றுள்ளதோடு, ஹோண்டா சிட்டிக்கு மிகவும் நெருங்கியதான இரண்டாம் இடத்தை பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

செயல்திறன்


சியஸில் ஒரு 1.4 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் சோதிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட 1.3 லிட்டர் டீசல் ஆகிய இரு என்ஜின் தேர்வுகள் அளிக்கப்படுகின்றன. மேற்கண்ட இரு என்ஜின்களும், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெட்ரோல் மோட்டாருக்கு கூடுதலாக ஒரு 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வு கூட அளிக்கப்பட்டுள்ளது.

p11

சியஸ் டீசல்


p12

சியஸில் உள்ள டீசல் என்ஜின், அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஃபியட்டிடம் இருந்து பெறப்பட்ட 1.3 லிட்டர் யூனிட் ஆகும். அதே நேரத்தில் ஸ்விஃப்ட் அல்லது டிசையர் போல இல்லாமல், ஒரு வித்தியாசமான டர்போசார்ஜர் மூலம் இதன் ஆற்றல் 88.5bhp என்ற அளவிலும், முடுக்குவிசை 200Nm என்ற அளவிலும் பெறப்படுகிறது.

எங்களை பொறுத்த வரை, சியஸில் இன்னும் கூட ஒரு பெரிய மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த என்ஜினை அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எங்களின் தேர்வாக, S-கிராஸில் உள்ள 1.6 லிட்டர் மோட்டாரை அளித்திருந்தால், இப்பிரிவிலேயே சியஸிற்கு நிகராக எதுவும் இருந்திருக்காது. இப்போது என்ஜின் இயங்குவதற்கு சற்று மந்தமாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.

இதில் டர்போவின் பின்னடைவு (லேக்) அதிகபட்ச அளவு 1800 rpm ஆகும். அதற்கு பிறகு ஆற்றல் வெளியீடு நேர் கோட்டில் தான் இருக்கும். இந்த என்ஜின், தனது அதிகபட்ச முடுக்குவிசையை மிக குறைவான 1750 rpm-யிலேயே அடைகிறது. எனவே நகர் பகுதியில் ஒரு கியர் அதிகமாக வைத்து கொண்டு ஓட்டினால் கூட, அதில் பிரச்சனை எதுவும் ஏற்படாது என்பதை அறியலாம்.

இந்த டீசல் என்ஜினின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தன்மை என்னவென்றால், இதன் SHVS தொழிற்நுட்பம் ஆகும். இதன்மூலம் லிட்டருக்கு 28.09 கி.மீ. மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பு: SHVS


p13

ஸ்மார்ட் ஹைபிரிடு வெஹிக்கிள் பை சுசுகி என்பதன் சுருக்கமே SHVS ஆகும். இந்த சிஸ்டம், ஒரு ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டரை (ISG) பயன்படுத்துகிறது. ஒரு தரமான ஆல்டர்நேட்டருக்கு மாற்றாக உள்ள இந்த ISG, என்ஜினின் ஆற்றலுக்கு பிற்சேர்க்கையாக செயல்படுகிறது. SHVS-ன் கீழ் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் மற்றும் பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் ஆகிய இரு அடிப்படை தொழில்நுட்பங்கள் செயல்படுகின்றன. நீங்கள் காரை முழுமையாக நிறுத்தின பிறகு, இந்த ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் என்ஜினின் செயல்பாட்டை நிறுத்திவிடுகிறது. நீங்கள் கியரை மாற்றுவதற்கு கிளெச்சை மிதிக்கும் போது, இது திரும்பவும் காரின் இயக்கத்தை துவக்குகிறது.

கார் திரும்ப எதிர் முடுக்கம் (டிசிலிரேஷன்) அடையும் போது எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் பெறப்படும் ஆற்றலை பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ஆற்றலானது ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்திற்கு ஆற்றலை அளிக்க பயன்படுகிறது.

3

சியஸ் பெட்ரோல்


p14

இந்த 1.4 லிட்டர் K – சீரிஸ் என்ஜின், எர்டிகா MPV-வில் பெறப்பட்டது ஆகும். இந்த பெட்ரோல் என்ஜினின் தாழ்ந்த உறுமல் சத்தம், எங்களை வெகுவாக கவர்ந்தது. இந்த என்ஜின் மென்மையான உணர்வை அளிப்பதோடு, வேகத்தை சீராக கூட்டுவதில் எந்த சத்தத்தையும் ஏற்படுவதில்லை. நகர் பகுதியில் ஓட்டுவதற்கு இது மிகச் சிறந்தது.

குறைந்த கியர்களிலும் இழுவை ஆற்றல் (புல்லிங் பவர்) போதுமான அளவு காணப்படுகிறது. நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சியஸ், சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் செயல்படும் உணர்வை அளிக்கிறது. அதே நேரத்தில், சியஸை நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்லும் போது, நாம் விரும்பும் பல நிலைகளில் இருந்து விலகி கொள்கிறது. சிட்டி i-VTEC அல்லது வென்டோ TSi ஆகியவற்றில் உள்ள சீரான இடைப்பட்ட-நிலையான ஆற்றல் வெளியீடை (மிட்-ரேன்ஞ் பன்ஞ்) இதில் காண முடிவதில்லை. நெடுஞ்சாலையில் சியஸை ஓட்டி செல்லும் போது, ஓவர்டேக் எடுப்பதை முன்னதாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டியது அவசியம்.

4

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


p15

சியஸின் ஸ்டீரிங் சிறப்பாகவும், எடைக்குறைந்ததாகவும் உள்ளது. அதே நேரத்தில் வேகம் அதிகரிக்கும் போது, அதன் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இதை குறித்து கொஞ்சம் அதிக விமர்சனத்தை அளிக்க விரும்புகிறோம். எடுத்துக்காட்டாக வென்டோ அளிப்பது போல, ஒரு மூன்று இலக்க வேகத்தை எட்டும் நம்பிக்கையை இது ஊக்குவிப்பது இல்லை.

அதிலிருந்து ஹூண்டாய் வெர்னாவை போல தெளிவற்ற மற்றும் பதட்டமான தன்மையை, இது கொண்டிருக்கவில்லை என்பதை அறியலாம். இதன் சஸ்பென்ஷன், மென்மையான பகுதியில் அமைந்து, இதமான பயணத்தை உறுதி செய்கிறது. கேபினை கலக்கத்திற்கு உட்படுத்தாத வகையில், அமர்ந்திருப்பவர்களை சீட்டில் மூழ்கிய நிலைக்கு உட்படுத்தி சிறப்பாக பணியாற்றுகிறது.

வேகமாக செல்லும் போது, முழுமையாக சிறிய அளவில் குலுங்குகிறது. ஆனால் இதில் வென்டோ/ரேபிட் உள்ளது போன்ற சமதளமான பயணத்தை அளிப்பதில்லை. ஸ்டீரிங்கை திடீரான கடின பயன்பாட்டிற்கு உட்படுத்தினால், சியஸ் எளிதில் பாதிக்கப்படுகிறது. உங்களுக்கு இருக்கும் ஆர்வலரை திருப்திப்படுத்த கூடிய காராக இருக்க வேண்டுமானால், நீங்கள் வென்டோ TSi அல்லது ஹோண்டா சிட்டி iVTEC ஆகியவற்றை அணுகலாம். இந்த சியஸ், ஒரு நிதானமான டிரைவிங் பழக்கத்திற்கே ஏற்றதாக உள்ளது.

பாதுகாப்பு


p16

சுசுகியின் டோட்டல் எஃப்பெக்டீவ் கன்ட்ரோல் டெக்னாலஜி (TECT) கட்டமைப்பை பெற்றுள்ள சியஸில், பாடியின் முக்கியமான பகுதிகளில் உயர் விரைப்புத் தன்மை கொண்ட உறுதியான ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்தின் மூலம் ஏற்படும் அதிர்வு, பயணிகள் பகுதிக்குள் செல்லாத வகையில், முடிந்த வரை தடுக்கப்படுகிறது. இதன் எல்லா வகைகளிலும் ABS உடன் கூடிய EBD மற்றும் இரட்டை ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.

5

வகைகள்


6

எங்களின் தேர்வாக, வாங்குவதற்கு Z வகை சிறந்ததாக இருக்கும். உங்களுக்கு தேவைப்படும் கச்சிதமான அளவிலான அம்சங்களை மட்டுமே இது பெற்றுள்ளது. அதே நேரத்தில், சில சிறப்புத் தன்மைகளான லெதர் சீட்கள் மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றை நீங்கள் இழக்க வேண்டியதாகும்.

தீர்ப்பு


C-பிரிவிற்குள் SX4-க்கு அடுத்தப்படியாக, மாருதி சுசுகி நிறுவனத்தினால் வெளிப்படும் இரண்டாவது தயாரிப்பு சியஸ் ஆகும். இந்த மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனம், வடிவமைப்புத் தன்மைகள், என்ஜின் தேர்ந்தெடுப்பு அல்லது அளிக்கப்படும் அம்சங்கள் ஆகியவற்றை கச்சிதமான முறையில் கையாண்டுள்ளது.

இதன் கவர்ந்திழுக்கும் விலை, மதிப்பை இன்னும் கூட்டுவதாக உள்ளது. உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் சியஸை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இது ஒரு வசதியான, அளிக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பை கொண்ட ஒரு சேடன் ஆகும்.