மஹிந்திரா பொலேரோ

` 6.4 - 8.8 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


நவம்பர் 26, 2015: இந்திய வாகன சந்தையில் சிறந்த விற்பனையை பெறும் SUV என்ற பிரபலத் தன்மையை, மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு உள்ள பெலிரோ வாகனம் மீண்டும் நிலைநாட்டி உள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதத்தில் சிறந்த விற்பனையை பெற்ற பயன்பாட்டு வாகனம் (யூட்டிலிட்டி வெஹிக்கிள்) என்ற சிறப்பையும் பெற்று உள்ளது. ஏற்கனவே இந்த நிலையில் உயர்ந்து இருந்த பெலிரோ வாகனத்தை, தனது சிறப்பான தோற்றம் மற்றும் உயர் தொழிற்நுட்ப அம்சங்களின் மூலம் க்ரேடா, இந்த பட்டியலில் பின்னுக்கு தள்ளியது. ஆனால் தற்போது மீண்டும் தனது பழைய உன்னத நிலைக்கே பெலிரோ திரும்பி உள்ளது. இந்தியாவின் SUV சந்தையில் இந்த உள்ளூர் நிறுவனம் மிகவும் பிரபலமாக திகழும் நிலையில், தற்போது சிறப்பாக விற்பனை ஆகி வரும் முதல் பத்து SUV –களின் பட்டியலில் இந்த நிறுவனத்தின் 4 தயாரிப்புகள் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வர உள்ள பண்டிகை காலத்தை இந்த நிறுவனம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள தயாராக உள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாத விற்பனை உடன் ஒப்பிட்டு பார்த்தால், கடந்த அக்டோபர் மாத விற்பனை 29 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.

மஹிந்திரா பெலிரோ விமர்சனம்


மேற்பார்வைபயன்பாட்டு வாகனங்கள் பிரிவின் (யூட்டிலிட்டி வெஹிக்கிள்) தற்போதைய நிலவரப்படி, சிறப்பான விற்பனையை பெரும் மாடல்களில் மஹிந்திரா பெலிரோ வாகனமும் ஒன்றாக உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் முதலாக இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டாலும், அப்போது இருந்தே வாகனத் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு சிறந்த பலனை அளித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த வாகனம் பல்வேறு வகைகளின் கீழ் அமைந்த நிலைகளில் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஹூட்டிற்கு கீழே ஒரு நிலையான 2.5 –லிட்டர் டீசல் என்ஜினையே பெற்று உள்ளது. மேற்கண்ட இந்த என்ஜின் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றல் அளவான 65 bhp –யையும், அதன் உடன் 195 Nm என்ற அளவில் அமைந்த ஒரு கவர்ச்சிகரமான முடுக்குவிசையையும் வெளியிடும் திறனை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த வாகனத்தின் DI மற்றும் பிளஸ் ஆகிய வகைகளில், மேற்கண்ட அளவை விட 2 bhp ஆற்றலையும், 15 Nm முடுக்குவிசையையும் குறைவாக வெளியிடும் வகையில், குறைந்த அளவில் ட்யூன் செய்யப்பட்ட என்ஜின்களை பெற்று உள்ளது.
மற்றொருபுறம் பார்த்தால், மேற்கண்ட இந்த என்ஜின்களும் BSIII மற்றும் BSIV என்ற இரு வெவ்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்டு, நுகர்வோருக்கு தேர்ந்தெடுப்பதற்கு எதுவான முறையில் அளிக்கப்படுகிறது. இந்த வாகனம் வெளியிடப்பட்டு, சுமார் பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது இந்த வாகனத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் பணியில் இதன் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, பெரும்பாலும் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில், இந்த வாகனத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு குறித்தோ, இந்தியாவில் அதன் அதிகாரபூர்வமாக அறிமுகம் நடைபெற இருப்பதை குறித்தோ, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இப்போதைக்கு இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேற்கண்ட இந்த SUV, வியாபார ரீதியாக மற்றும் பயணிகள் பயன்பாட்டிற்கு என்ற இரு வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தின் ஒட்டு மொத்த நீளம் 4170 மீட்டர் மட்டுமே காணப்பட்டாலும், அதற்கு 2794 mm அளவிலான நீண்ட வீல் பேஸ் இருப்பதால், இதில் குறைந்தபட்சம் ஏழு பயணிகள் வரை விஸ்தாரமான முறையில் பயணிக்கும் வசதியை பெற்று உள்ளது. இந்த வாகனத்தின் கேபினில், ஹெட்ரெஸ்ட்கள் உடன் ஒருங்கிணைந்த முறையில் சிறப்பான வடிவமைப்பை பெற்ற சீட்கள் முக்கிய அம்சமாக திகழ்கிறது. இதன் மூலம் எந்த களைப்பும் இல்லாமல் இதமாக வாகனத்தை ஓட்டும் அனுபவத்தை பெறுவதற்கு எதுவாக அமைகிறது. இந்த வாகனத்தின் உயர் தர மற்றும் ZLX வகைகளில், ஏர் கண்டீஷனிங் சிஸ்டம், ஒரு மேம்பட்ட டிஜிட்டல் தகவல் அமைப்பு (இன்பர்மேஷன் சிஸ்டம்) மற்றும் பவர் விண்டோக்கள் போன்ற எண்ணற்ற முக்கியமான இதம் அளிக்கும் அம்சங்களை காண முடிகிறது.
இந்த SUV –யின் ஒரு நவீன தன்மை கொண்ட பாடி அமைப்பில் எண்ணற்ற கவர்ந்து இழுக்கும் அழகியல் கூறுகளை பெற்று இருப்பதால், ஒரு மிரள வைக்கும் தோற்றத்தை பெறுகிறது. இந்த வாகனத்தில் தடித்த பம்பர்கள், தேனீக்கூடு வலை (ஹனிகோப் மேஷ்) உடன் கூடிய பெயர் பலகை (சிக்னேச்சர்) கொண்ட ரேடியேட்டர் கிரில், ஸ்டைலான பாடி டிக்கேல்கள் மற்றும் கழுகு போன்ற கூர்மையான பார்வை (ஹாக் –ஐ) வடிவிலான ஹெட்லெம்ப்கள் ஆகியவற்றை பெற்று உள்ளது. இது வெளியே இருந்து இழுத்து வைத்தது போல சமமற்ற நிலையில் தோற்றம் அளித்தாலும், உட்புறத்தில் இருந்து நேர்த்தியாக தெரிகிறது. ஏனெனில் இது நவீன கால வழக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு அம்சமாக இருக்கிறது. இதில் உள்ள கன்ட்ரோல்கள் மற்றும் பொருட்களை வைப்பதற்கான இடவசதிகள் ஆகியவற்றை இயக்கும் ஒரு ஸ்டைலான சென்ட்ரல் பெஸில் உடன் விஸ்தாரமான உட்புற கேபின் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த காரின் உயர் தர வகையில், ஒரு மரத்திலான பணித் தீர்ப்பை பெற்ற சென்ட்ரல் கன்சோல் காணப்படுகிறது. இது இந்த காரின் உட்புற அமைப்பியலின் கவர்ச்சியை மேலும் அதிகரிப்பதாக அமைந்து விடுகிறது. இது மட்டுமின்றி இந்த SUV –யில் பின்பக்க வைப்பர் மற்றும் வாஷர், குழந்தை பாதுகாப்பு பூட்டுகள் (சைல்டு சேஃப்டி லாக்ஸ்). என்ஜின் இம்மொபைலைஸர் மற்றும் ஹெட் ரெஸ்ட்ரெயின்கள் போன்ற சில முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு தொடர்பான அம்சங்களும் அடங்கி உள்ளன. தற்போதைக்கு பயன்பாட்டு வாகனங்களின் பிரிவில் (யூட்டிலிட்டி வெஹிக்கிள் செக்மண்டு) உள்ள டாடா சுமோ கோல்டு, டாடா மோவ்ஸ், ICML ரினோ மற்றும் போர்ஸ் ட்ராக்ஸ் ஆகிய வாகனங்கள் உடன் மேற்கண்ட இந்த வாகனம் போட்டியிட்டு வருகிறது. மற்றொருபுறம் பார்த்தால், இந்த வாகனத்திற்கான 1 வருட முடிவில்லாத (அன்லிமிட்டேட்) கிலோ மீட்டர் உத்திரவாதம் என்ற ஒரு கவர்ச்சிகரமான திட்டத்துடன் கிடைக்கப் பெறுகிறது. மேற்கண்ட உத்திரவாதத்தை மேலும் அதிகரிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், சற்று அதிக தொகையை செலவிடுவதன் மூலம் இதை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உரியதாக நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

வெளிப்புற அமைப்பியல்இது ஒரு கோபமான உருவில் அமைந்த அழகியல் தன்மைகளை கொண்ட SUV மாடல் ஆகும். இதன் மூலம் இதற்கு ஒரு பயப்படுத்துகிற தோற்றம் கிடைக்கிறது. இதன் முன்புற முகப்பகுதியில் பாடியின் நிறத்தில் அமைந்த ஒரு பெரிய பம்பரை கொண்டு உள்ளது. அதில் ஒரு ஜோடி வட்ட வடிவில் அமைந்த ஃபேக் லெம்ப்கள் உடன் கூடிய என்ஜினை குளிர வைக்கும் வகையிலான ஒரு விரிவான ஏர் டேம் ஆகியவற்றை பெற்று உள்ளது. அதே நேரத்தில் இதன் துவக்க நிலை வகையான DI மற்றும் பிளஸ் போன்றவற்றில் கருப்பு நிறத்தில் அமைந்த பம்பர்களை பெற்று உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேன்கூடு வலை (ஹனிகோம்ப் மேஷ்) உடன் கூடிய ஒரு பெயர் பலகையை கொண்ட ரேடியேட்டர் கிரில் அமைந்து உள்ளது. இதில் கவனிக்கத்தக்க வகையில் அமைந்த இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் அடையாளம் காணப்படுகிறது.
இதில் கழுகு பார்வையை ஒத்த கூர்மையான உருவில் அமைந்த ஹெட்லெம்ப்கள் கிளெஸ்டர் கண் இமையை பெற்றது போன்றதாக (பிராங்க்டு) அமைந்து, அதனுள் சக்தி வாய்ந்த ஹாலஜன் அடிப்படையிலான லெம்ப்கள் உடன் டேன் இன்டிகேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போனட்டை பொறுத்த வரை, இரு முக்கியத்துவம் வாய்ந்த வரிகள் உடன் ஒரு சமதளமாக உள்ள பண்பின் மூலம் இந்த காரில் உள்ள கவர்ச்சி மிகுந்த தோற்றத்தை மேலும் கூட்டுவதாக அமைகிறது. இந்த காரின் பக்கவாட்டு சுயவிவரத்தை பார்க்கும் போது, ஒரு திடமான தோற்றத்தை கொண்ட சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட வீல் ஆர்ச்சுகளை கொண்டு உள்ளது. இவை திறமையாக கடும் உழைப்பை செலுத்தி, சுமூகமான முறையில் பொருத்தப்பட்ட ஒரு ஜோடி ஸ்டீல் வீல்கள் ஆகும். இதில் அதன் முழு வீல் கேப்களும் உட்படுகின்றன. இந்த காரின் உயர் தர வகைகளில் கூட ஸ்டைலான பாடி டிக்கேல்களை காண முடிகிறது. இவை இந்த வாகனத்தின் நவீன கால வழக்கத்திற்கு ஏற்ற தோற்றத்திற்கு மேலும் பொலிவை ஏற்படுத்துபவையாக உள்ளன.
இந்த வாகனத்தில் உள்ள டோர் ஹேண்டில்கள் மற்றும் விண்டோ பிரேம்கள் ஆகியவை பாடியின் நிறத்தையே பெற்று உள்ள நிலையில், வெளிப்புற விங் மிரர்கள் மட்டும் கருப்பு நிறத்தில் அமைந்து உள்ளன. தற்போது சந்தையில் உள்ள மற்ற வாகனங்களை போல இல்லாமல், இந்த SUV –யில் வெளிப்புறத்தில் டோர் ஹின்கில்களை பெற்று உள்ள தன்மை, ஒரு வழக்கமான தோற்றத்திற்கு மாற்றாக அமைந்து உள்ளது. அதே நேரத்தில் இந்த காரில் ஒரு அலுமினியம் பக்கவாட்டு படி (சைடு ஸ்டெப்) அளிக்கப்பட்டு உள்ளதால், காரின் கேபினிற்குள் நுழைவதற்கு சுமூகமான தன்மையாக அமைகிறது. இந்த காரின் பின்பக்க தகவமைப்பில் ஒரு பாக்ஸ் வடிவில் அமைந்த சுமூகமான அழகியல் தன்மைகளை பெற்று, இதன் திடகாத்திரமான உருவ அமைப்பிற்கு மெருகூட்டுவதாக உள்ளது. இதில் உள்ள டெயில் லைட் கிளெஸ்டர், ஒரு நீள்சதுர வடிவில் அமைந்து உள்ளது. இதனுள் ஹாலஜன் அடிப்படையில் அமைந்த டேன் இன்டிகேட்டர்கள் மற்றும் சக்தி வாய்ந்த பிரேக் லைட்கள் ஆகியவற்றை கொண்டு உள்ளது. இதன் டெயில்கேட்கள் மிகப் பெரியதாக அமைந்து உள்ளதோடு, ஒரு கவர் உடன் கூடிய ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டதாக காணப்படுகிறது. அதேபோல பின்பக்கத்தில் உள்ள விண்டு ஸ்கிரீன் கூட மிகப் பெரியதாக அமைந்து உள்ளது. அதனோடு கூட இணைந்த வடிவில் ஒரு வைப்பர் மற்றும் மேலே ஏறிச் செல்லும் வகையில் மூன்றாவது பிரேக் லைட் அளிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பிற்கு வழி வகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பாடியின் நிறத்திலேயே அமைந்த பம்பர் மிகவும் கவர்ச்சி மிகுந்த ஒன்றாகவும், ஒரு சிறிய அளவில் அமைந்த ஃபுட் ஸ்டெப் பொருத்தப்பட்டதாகவும் உள்ளது.

வெளிப்புற அமைப்பியலின் அளவீடுகள்:


இந்த காரின் ஒவ்வொரு வகைகளுக்கும் ஏற்ப, இந்த SUV –யின் வெளிப்புற அமைப்பியலின் அளவீடுகள் மாறுபடுகின்றன. இதன் ZLX, SLX மற்றும் SLE ஆகிய வகைகளின் மொத்த நீளமாக 4107 mm –மும், அதனுடன் ஒரு நேர்த்தியான அகலமான 1754 mm –மும், இவைகளின் ஒட்டு மொத்த உயரமாக 1880 mm –மும் கொண்டு உள்ளது. இந்த காரின் குறைந்தபட்ச கிரவுண்டு கிளியரன்ஸ் அளவாக 180 mm –மும், அதன் உடன் ஒரு பெரிய வீல்பேஸ் அளவாக 2680 mm –மும் கொண்டு உள்ளது. மற்றொருபுறம், இந்த காரின் EX வகை 4221 mm நீளமும், 1910 mm உயரமும் கொண்டு, ஒரு நீண்ட வீல்பேஸாக 2794 mm –மும் பெற்று உள்ளது. மற்றொருபுறம், இந்த காரின் பிளஸ் வகைகளின் நீளமாக 4494 mm –மும், 1977 mm உயரமும், ஒரு கவர்ச்சி மிகுந்த 195 mm அளவில் அமைந்த கிரவுண்டு கிளியரன்ஸும் கொண்டு, சிறந்த வகையாக திகழ்கிறது.

உட்புற அமைப்பியல்Ed –யின் கருத்து: பெலிரோ காரின் உட்புற அமைப்பியல், சமீபத்தில் தான் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த காரில் தற்போது ஒரு அதிக ஸ்டைலான இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் உடன் டிஜிட்டல் டச்சோமீட்டர் போன்ற அம்சங்களையும் பெற்று உள்ளது. பெலிரோ காரின் பின்பக்க சீட்டிற்கான முட்டி இடவசதி (க்னீ ரூம்) சற்று குறுகின அளவில் அமைந்ததாக உள்ளது.
இந்த SUV வாகனத்தில் உள்ள ஒரு விஸ்தாரமான உட்புற கேபின், கவர்ச்சி மிகுந்த நிறத் திட்டத்துடன் கூடியதாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் உட்புறத்திற்கு ஒரு ஆடம்பரமான தோற்றம் கிடைக்கும் வகையில், கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் சிறந்த தரத்திலான பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காக்பிட்டில் ஒரு திறமை வாய்ந்த வடிவமைப்பு உடன் கூடிய டேஸ்போர்டு பொருத்தப்பட்டு, கிராப் ஹேண்டில்கள் மற்றும் எண்ணற்ற பொருள் வைக்கும் இடவசதிகள் உள்ளிட்ட எண்ணற்ற பயன்பாட்டு அடிப்படையில் அமைந்த அம்சங்களை கொண்டு உள்ளது. இது தவிர, இந்த வாகனத்தில் மெட்டாலிக் உள்ளீடுகள் உடன் கூடிய ஒருங்கிணைந்த முறையில் அமைந்த ஒரு சுமூகமான மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல்லை பெற்று, அதில் கார் தயாரிப்பு நிறுவனத்தின் அடையாளம் பதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வாகனத்தின் சென்ட்ரல் பிஸில், திறமை வாய்ந்த முறையில் மரத்தினால் ஆன உள்ளீடுகள் (இன்லேய்ஸ்) அமைக்கப்பட்டு, இதன் உட்புற அமைப்பியலின் கவர்ச்சி மிகுந்த தன்மைக்கு கூடுதல் மெருகூட்டுவதாக உள்ளது. இந்த வாகனத்தின் உயர் தர வகைகளில் கூட ஒரு முழுமையான டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அளிக்கப்பட்டு, அதில் வாகனத்தின் ஸ்பீடு டச்சோமீட்டர், கடிகாரம், எரிப்பொருள் அளவுகள் (ஃபியூயல் லெவல்ஸ்) மற்றும் வெளிப்புற தட்பவெப்ப அளவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாடுகள் மற்றும் தகவல்களை அளிக்கிறது. மேலும் இதில் டிரைவர் சீட் பெல்ட் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்தும் எச்சரிப்பு அமைப்பு மற்றும் டோரை சரியாக அடைக்காமல் விட்டு இருப்பதை குறிப்பு மூலம் உணர்த்தும் அமைப்பு ஆகியவை அம்சங்கள் காணப்படுகின்றன.
இந்த மாடலின் எல்லா வகைகளிலும், மூன்று வரிசைகளில் உள்ள எல்லா சீட்களும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு, பயணிகளுக்கு இதமான தன்மையை அளிப்பதாக உள்ளன. இந்த காரில் குறிப்பாக ஹெட் மற்றும் ஷோல்டர் ஸ்பேஸ் நன்றாக பெற்று, அதிக அளவிலான இடவசதி காணப்படுவதால், குறைந்தபட்சம் ஏழு பேருக்கு இதமான முறையில் அமர்ந்து செல்ல முடிகிறது. குடிக்கும் பொருட்களுக்கான (டிரிங்) ஹோல்டர்கள், இரண்டவது வரிசைக்கான சென்டர் ஆம்ரெஸ்ட், கேபின் லைட்கள், இரண்டாவது வரிசை சீட் உடன் மடிக்க கூடிய வசதி மற்றும் இர்கோனோமிக் டோர் கிராப் ஹேண்டில்கள் என்று மொத்தம் ஏழு பயன்பாட்டு அம்சங்கள், இந்த கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த காருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

உட்புற அமைப்பியலின் இதமான தன்மை:இந்த மாடல் வகைகள், ஏராளமான தரமான ஒரு குழுவில் (செட்) அடங்கும் இதமளிக்கும் அம்சங்களின் குவியலால் நிரப்பப்பட்டு உள்ளதால், ஒரு களைப்பு இல்லாமல் வாகனம் ஓட்டும் அனுபவத்தை பெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்த வாகனத்தின் துவக்க நிலை வகைகளான DI மற்றும் பிளஸ் ஆகியவற்றில், ஒரு மேம்பட்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஒரு புதுமையான ஸ்டீரிங் வீல், சிறப்பான சீட்டிங் அப்ஹோல்டரி, நவீன காலத்திற்கு ஏற்ப அமைந்து உள்ள AC யூனிட்டிற்கான கன்ட்ரோல் கினாப்கள் மற்றும் பன்முக திசையில் காற்று திறப்பிகளை கொண்ட (மல்டி டையரெக்ஷனல் ஏர் வென்ட்ஸ்) ஃப்ளோ கன்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டதாக உள்ளது.
இது தவிர மேலும், எளிய முறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த பார்க்கிங் பிரேக் லிவர், இடத்தை மிச்சப்படுத்தும் (ஸ்பேஸ் சேவிங்) சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஒரு பெரிய கிளோவ் பாக்ஸ் ஆகிய அம்சங்களை இந்த காரில் காண முடிகிறது. இந்த காருக்கான ஏர் கண்டீஷனிங் சிஸ்டத்தை, எல்லா வகைகளுக்கும் தேர்விற்குரிய ஒரு அம்சமாக, கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது. மற்றொருபுறம் பார்க்கும் போது, இந்த காரின் SLE வகையில், ஒரு திறமை வாய்ந்த AC யூனிட், இரண்டாம் வரிசையில் உள்ள சீட்களுக்கான சென்டர் ஆம்ரெஸ்ட், பவர் அசிஸ்ட்டேடு ஸ்டீரிங் மற்றும் ரிமோட் மூலம் திறக்கும் வசதி கொண்ட ஃப்யூயல் லிட் போன்ற அம்சங்களை பெற்று உள்ளது. மேற்கண்ட அம்சங்களை தவிர, இந்த காரின் SLX வகையில் மேலும், 12V அக்சிஸ்சரி பவர் சாக்கெட், சாவி இல்லாமலேயே உள்ளே நுழையும் அமைப்பு (கீலெஸ் என்ட்ரி ஃபங்ஷன்), முன்பக்க மேப் பாக்கெட்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பயன்பாட்டு பாக்கெட்கள் மற்றும் இதில் உள்ள நான்கு பவர் விண்டோக்கள் போன்ற அம்சங்களை பெற்று உள்ளது. மேற்கண்ட அம்சங்களை தவிர, கூடுதலாக ஒரு ஹீட்டர், மரத்திலான பணி முடிப்பை பெற்ற சென்ட்ரல் கன்சோல், ஒரு CD பிளேயர் உடன் கூடிய MP3 ப்ளேபேக் மற்றும் ஒரு டிஜிட்டல் கிளெஸ்டர் ஆகியவை காணப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் தவிர, இந்த காரின் உயர் தர வகையான ZLX –யில், டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் மற்றும் மைக்ரோ –ஹைபிரிட் சிஸ்டம் போன்ற அம்சங்களை பெற்றதாக உள்ளது.

உட்புற அமைப்பியலின் அளவீடுகள்:


இந்த வாகனத்தின் ஒட்டு மொத்த உயரம் 1910 mm என்ற அளவில் இருப்பதால், இந்த பயன்பாட்டு வாகனத்தின் உள்ளே ஹெட் மற்றும் ஷோல்டர் ஆகியவற்றிற்கான இடவசதியை தவிர, ஒரு மிகப் பெரிய கேபின் இடவசதி காணப்படுகிறது. மேலும் இதில் ஒரு பெரிய வீல்பேஸ் இருப்பதால், அதன் மூலம் உள்ளே விரிவான லெக் ஸ்பேஸை அளிக்க முடிகிறது. மற்றொருபுறம் பார்த்தால், இந்த காரில் ஒரு 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூயல் டேங்க்கை பெற்று உள்ளது, பயணங்களுக்கு போதுமான ஒன்றாக உள்ளது.

அக்ஸிலரேஷன் மற்றும் பிக் –அப்Ed –யின் கருத்து: பெலிரோ காரில் உள்ள என்ஜின், ஒரு தனித்தன்மை உடன் கூடிய அக்ஸிலரேஷனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று அல்ல. எனவே இந்த வாகனத்தை ஓட்டும் தன்மைக்கு ஏற்ப இதன் பண்பு நலன்கள் வெற்றிகரமான ஒன்றாக மாறும் இயல்பு கொண்டது.
இந்த வாகன வரிசையின் எல்லா டீசல் வகைகளும், ஒரு NGT 520 மற்றும் 5 –ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டதாக உள்ளன. இதன் மூலம் இந்த வாகனத்திற்கு ஏறக்குறைய மணிக்கு 125 முதல் 130 கி.மீ. என்ற நிலையிலான ஒரு அதிகபட்ச வேகத்தை எட்டிச் சேர முடிகிறது. அதே நேரத்தில், மணிக்கு 100 கி.மீ. வேகம் என்ற அளவை எட்டிச் சேர, சுமார் 20 முதல் 25 வினாடிகள் வரை எடுத்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

என்ஜின் மற்றும் செயல்திறன்Ed –யின் கருத்து: பெலிரோ வாகனத்தின் வரிசையில் அமைந்த உயர்ந்த வகையில், மைக்ரோ –ஹைபிரிடு தொழிற்நுட்பம் காணப்படுகிறது. இதன் மூலம் இந்த வாகனத்தின் எரிப்பொருள் சிக்கன அளவு மேம்படுத்த முடிகிறது. அதே நேரத்தில் பெலிரோவின் செயல்திறன் கூட சிறப்பாக போதுமான அளவில் உள்ளது.
இந்த மாடலின் வரிசையில், Di மற்றும் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த m2DiCR என்ற இரண்டு வகையான என்ஜின்கள் அளிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மேற்கண்ட இரு என்ஜின்களும் 2.5 –லிட்டர் அளவில் அமைந்து, ஒரு மொத்த வெளியீட்டு அளவாக 2523 cc –யை கொண்டது ஆகும். இதில் நான்கு சிலிண்டர்கள் மற்றும் 8 –வால்வுகளை பெற்று, ஒரு SOHC வால்வு கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு உள்ளது. மேற்கண்ட DI என்ஜினில் சுமூகமான நேரடி உள்ளளிப்பு தொழிற்நுட்பத்துடன் (கன்வென்ஷனல் டையரெக்ட் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி) கூட ஒரு டர்போசார்ஜரையும் பெற்று உள்ளது. இதன் மூலம் 3200 rpm-ல் ஒரு அதிகபட்ச அளவான 63 bhp ஆற்றலும், 1440 -க்கும் 1500 rpm –க்கும் இடைப்பட்ட நிலையில் 180 Nm அளவிலான முடுக்குவிசையையும் அளிக்கிறது.
இந்நிலையில் m2DiCR என்ஜினில் ஒரு மேம்பட்ட ரெயில் டையரெக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை பெற்று, 3200 rpm-ல் ஒரு அதிகபட்ச அளவான 65 bhp ஆற்றலும், அதனுடன் 1400 -க்கும் 2200 rpm –க்கும் இடைப்பட்ட நிலையில் ஒரு அட்டகாசமான 195 Nm முடுக்குவிசை வெளியீட்டையும் அளிக்கிறது. மேற்ண்ட இந்த இரண்டு ஆற்றலகங்களும், ஒரு ஐந்து ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டதாக அமைந்து, மேற்கண்ட அளவிலான முடுக்குவிசை வெளியீட்டை, இந்த வாகனத்தின் முன் பகுதியில் உள்ள வீல்களுக்கு அளிக்கின்றன.

மைலேஜ்Ed –யின் கருத்து: இந்திய மக்கள் அதிகம் விரும்பும் வாகனங்களில் பெலிரோவும் ஒன்றாக உள்ளது. இதன் உறுதியான கட்டமைப்பை பார்த்து மட்டுமின்றி, இந்த வாகனத்தில் உள்ள எரிப்பொருள் சிக்கனம் கொண்ட என்ஜினையும் கருத்தில் கொண்டே விரும்பப்படுகிறது.
இந்த வாகனத்தின் துவக்க நிலை வகைகளில் பொருத்தப்பட்டு உள்ள ஒரு 2.5 –லிட்டர் DI டீசல் என்ஜின், நேரடி எரிப்பொருள் உள்ளளிப்பு தொழிற்நுட்பத்தில் (டையரெக்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி) அமைந்தது ஆகும். இந்த என்ஜின் மூலம் லிட்டருக்கு 8 முதல் 11 கி.மீ. வரையிலான நிலையில் மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இது சற்று மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் இந்த வாகனத்தின் மீதமுள்ள மற்ற அனைத்து வகைகளில் பொருத்தப்பட்டு உள்ள ஒரு மேம்பட்ட m2DiCR என்ற 2523 cc ஆற்றலை வெளியிடும் என்ஜின், பொதுவான ரெயில் நேரடி உள்ளளிப்பு அமைப்பின் (காமன் ரெயில் டையரெக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம்) மூலம் செயல்படுகிறது. இந்த ஆற்றலகத்தை பெற்ற வாகனங்கள், நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் லிட்டருக்கு 10 கி.மீ. என்ற ஒரு குறைந்தபட்ச மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது லிட்டருக்கு 13 கி.மீ. லைலேஜையும் அளிக்க முடிகிறது.

மஹிந்திரா பெலிரோவின் ஆற்றல்Ed –யின் கருத்து: பெலிரோவின் 2.5 –லிட்டர் என்ஜின் மூலம் வெளியிடப்படும் ஆற்றல், காகித புள்ளி விபரங்களில் போதுமான அளவாக அறிய முடிவதில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையின் பயன்பாட்டில் இது போதுமான அளவாக உள்ளது.
இந்த வாகனத்தின் DI மற்றும் பிளஸ் ஆகிய வகைகளில் 4 –சிலிண்டர்கள் உடன் கூடிய ஒரு BSIII –யைக் கொண்ட 2523 cc என்ஜின் பொருத்தப்பட்டதாக உள்ளது. இதில் மேலும் ஒரு டர்போ சார்ஜரும் இணைந்து செயலாற்றுகிறது. இவை இரண்டும் இணைந்து செயலாற்றுவதன் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றல் அளவான 63 bhp –யையும், ஒரு நிலையான முடுக்குவிசை வெளியீடாக 180 Nm –யையும் பெற முடிகிறது. மற்றொருபுறம் பார்த்தால், இந்த வாகனத்தின் இடைப்பட்ட மற்றும் உயர் தர வகைகளில், பாரத் ஸ்டேஜ் IV –யை 2.5 –லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டதாக உள்ளது. இந்த இரண்டாம் தலைமுறையை சேர்ந்த என்ஜின் மூலம் ஒரு உன்னத ஆற்றல் வெளியீடான 65 bhp –யையும், இதனோடு கூட 195 Nm என்ற ஊன்றி செயல்படும் முடுக்குவிசையையும் வெளியிடுவது, ஒரு சிறப்பான செயல்பாடு ஆகும்.

ஸ்டீரியோ மற்றும் உதிரிப் பாகங்கள்Ed –யின் கருத்து: இந்த SUV –யின் உயர் தர வகை, பவர் விண்டோக்கள், மைக்ரோ –ஹைபிரிடு டெக்னாலஜி மற்றும் ஒருங்கிணைந்த மியூஸிக் சிஸ்டம் ஆகியவற்றை பெற்று உள்ளது.
இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் உயர் தர வகைகளான ZLX மற்றும் SLX ஆகியவற்றில், MP3 ப்ளேபேக்கை ஆதரிக்க கூடிய ஒரு திறமை வாய்ந்த CD பிளேயர் அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் நமக்கு தனிப்பட்ட முறையில், USB மற்றும் ஆக்ஸ் –இன் இணைப்பு ஆகியவற்றிற்கான போர்ட்களின் மூலம் ஆதரிக்கக் கூடிய ஒரு 2 –டின் மியூஸிக் சிஸ்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேற்கண்ட இவற்றை தவிர, இதன் மூலம் ஆடியோ இயக்கம் மற்றும் போன் அழைப்புகளுக்கான ப்ளூடூத் பயன்பாடு ஆகியவற்றையும், இதனுடன் ஒருங்கிணைத்து கொள்ள முடியும். சிறந்த தரமான ஸ்பீக்கர்கள் மற்றும் சப் –வூஃப்பர்கள் ஆகியவற்றின் உதவி உடன் ஒலியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். மற்றொரு வகையில் பார்க்கும் போது, நாம் தனிப்பட்ட முறையில் இந்த வாகனத்தில் எண்ணற்ற ஸ்டைலிங் அம்சங்களை புகுத்தி கொள்ள முடியும். அதில் லெதர் சீட் கவர்கள், ஸ்காஃப் பிளேட்கள், மொபைல் போன் ஹோல்டர்கள் மற்றும் தரை விரிப்புகள் போன்றவை மூலம் இந்த வாகனத்தின் உட்புற அமைப்பியலின் தோற்றம் இன்னும் மேம்பட்டதாக காட்சி அளிக்கும். அதே நேரத்தில், இந்த வாகனத்தின் வெளிப்புற அமைப்பியலில் கூட, நவீன காலத்திற்கு ஏற்ற பாடியில் கிராஃப்க்ஸை அமைப்பது, ஒரு ஜோடி ஸ்டைலான அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்பாயிலர்கள் மற்றும் ஏராளமான மற்ற சேர்ப்பிகளின் (ஏடு –ஆன்ஸ்) மூலம் காரை அலங்கரிக்க முடியும்.
மஹிந்திரா பெலிரோவின் உதிரிப் பாகங்களை இப்போது நீங்கள் ஆன்லைனிலேயே வாங்க முடிகிறது. இதற்கு சிறந்த தள்ளுபடி சலுகைகளும் உண்டு.

பிரேக்கிங் மற்றும் கையாளுதல்Ed –யின் கருத்து: பெலிரோ வாகனத்தில் பயணம் மற்றும் கையாளும் திறன் ஆகிய இரண்டும் ஒரு சிறந்த கலவையாக காணப்படுகிறது. வாகனங்களில் முக்கியமாக கவனிக்கப்படும் சிறந்த பயணத்தை அளிக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சமசீரற்ற முறையில் காணப்படும் சாலைகளிலும் வாகனத்தின் சமநிலையை பாதுகாக்கும் வகையில், ஒரு ரோபஸ்ட் சஸ்பென்ஸன் சிஸ்டத்தை இந்த SUV பெற்று உள்ளது. இந்த வாகனத்தின் முன்பகுதி ஆக்ஸில், காயில் ஸ்பிரிங்குகள் மற்றும் ஆன்டி ரோல் பார் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் அமைந்த சுதந்திரமான ஆதரவு அமைப்பை (இன்டிபென்டென்டு ஸ்ட்ரூட் சிஸ்டம்) பெற்று உள்ளது. அதே நேரத்தில் பின்பக்க ஆக்ஸிலில் எலிப்டிக்கல் லீஃப் ஸ்ப்ரிங்குகள் உடன் பொருத்தப்பட்டதாக செயல்படுகின்றன. மற்றொருபுறம், இந்த SUV –யின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் அமையப் பெற்று, ஒரு சுமூகமான பிரேக்கிங் மெக்கானிஷத்தை கொண்டு உள்ளது. இவை எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகின்றன. மற்றொருபுறம் பார்த்தால், இந்த வாகனத்தின் துவக்க நிலை வகைகளில், மேனுவல் ஸ்டீரிங் அமைப்பை காண முடிகிறது. அதே நேரத்தில் இதன் உயர் தர வகைகளில் பவர் அசிஸ்ட்டேடு ஸ்டீரிங்கை பெற்று உள்ளது. இதன் மூலம் ஒரு குறைந்தபட்ச டேனிங் ரேடியஸாக வெறும் 5.8 மீட்டர் மட்டுமே எடுத்து கொண்டு, ஒரு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, ஓட்டுநருக்கு பெரும் ஆதரவை அளிக்கிறது.

பாதுகாப்பு மற்றும் பாதுகாவல்Ed –யின் கருத்து: பெலிரோ காரில் உள்ள ஏர்பேக் மற்றும் ABS ஆகியவை, அதன் பாதுகாப்பு அம்சங்களாக காணப்படுகின்றன. பாதுகாப்பு என்ற விஷயத்தில் இதற்கு மேல் வேறெந்த அதிக அம்சங்களையும் இந்த வாகனம் பெறவில்லை.
இந்த பயன்பாட்டு வாகனத்திற்கு அடிப்படை அளவில் அமைந்த பாதுகாப்பு அம்சங்களின் ஒரு குழு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகனத்திற்கும், வாகனத்தில் உள்ள பயணிகளுக்கும் தேவையான விரிவான பாதுகாப்பை அளிக்கிறது. இந்த வாகனத்தில் உள்ள உறுதியான பாடி கட்டமைப்பு உடன் வளைவு பகுதிகள் மற்றும் விபத்தில் பாதுகாப்பு அளிக்கும் தூண்கள் (இம்பெக்ட் பிரோடேக்ஷன் பீம்ஸ்) ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் காணப்படுவதால், விபத்துகளில் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுகிறது. இந்த SUV –யில் ஒரு தலைசிறந்த என்ஜின் இம்மொபைலஸர் உடன் சங்கேத மொழியை கொண்ட சாவி கண்டறியும் அமைப்பு (இன்கிரைப்டேடு கீ ரெகானேஷன் சிஸ்டம்) காணப்படுவதால், போலியான சாவி மூலம் திறக்கும் முயற்சி அல்லது திருட்டு முயற்சிகள் ஆகியவை தடுக்கப்படுகிறது. மற்றபடி இந்த வாகனத்தில் உள்ள பின்பக்க வைப்பரை உட்படுத்திய வாஷர், குழந்தை பாதுகாப்பு பூட்டுகள் (சைல்டு சேஃப்ட்டி லாக்ஸ்), சக்தி வாய்ந்த ஹாலஜன் ஹெட்லெம்ப்கள் மற்றும் ஹெட் ரெஸ்ட்ரேயின்கள் போன்றவை மற்ற பாதுகாப்பு அம்சங்கள் ஆகும்.

வீல்கள்


இந்த வாகனத்தின் எல்லா வகைகளும், ஒரு ஜோடி சுமூகமான 15 –இன்ச் அளவுக் கொண்ட ஸ்டீல் வீல்களை பெற்று உள்ளன. இந்த ரிம்களை மூடுவதற்கு எல்லா நிலப் பகுதிகளுக்கும் ஏற்றதாக விளங்கும் 215/75 R15 என்ற அளவில் அமைந்த ஒரு ஜோடி ட்யூப்லெஸ் ரேடியல் டயர்களை கொண்டு உள்ளது.

சாதகங்கள்1. இந்த வாகனத்தின் உரிமையாளராக மாறுவதற்கான ஆரம்ப நிலை செலவு மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உள்ளது.
2. இந்த வாகனத்தின் ஹெட் மற்றும் ஷோல்டர் இடவசதி ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளன.
3. வாகனத்தின் உதிரிப் பாகங்கள் மற்றும் சர்வீஸ் ஆகியவை பொருளாதார ரீதியாக குறைவாக இருப்பது, இதன் முக்கிய நன்மை ஆகும்.
4. 12 –மாத முடிவில்லா கிலோமீட்டர் உத்திரவாதம் (அன்லிமிட்டேட் கிலோமீட்டர் வாரண்டி) என்பது ஒரு மிகப் பெரிய காரியம் ஆகும்.
5. எல்லா விதமான சாலை சூழ்நிலைகளிலும் மிக நிலையாகவும், நேர்த்தியாகவும் பயணிக்கிறது.

பாதகங்கள்1. எரிப்பொருள் சிக்கனம் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக உள்ளது.
2. விற்பனைக்கு பிறகு அளிக்கப்படும் சர்வீஸின் தரத்தை, இன்னும் கூட மேம்படுத்தலாம்.
3. காலம் கடந்த வெளிப்புற அமைப்பியல் மற்றும் உட்புற அமைப்பியல் தன்மைகள் ஒரு மிகப் பெரிய பின்னடைவை உண்டாக்குகிறது.
4. வாகனத்தின் இதம் அளிக்கும் அம்சங்கள், போட்டியிடுவதற்கு ஏற்ற அளவில் இல்லை.
5. அலாய் வீல்கள் மற்றும் ABS ஆகியவை இல்லாததால், மற்ற வாகனங்களுக்கு முன்னால், ஒரு குறைவுப்பட்ட போட்டியாளராக நிற்கும் நிலை ஏற்படுகிறது.