மாருதி Baleno

` 5.2 - 8.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 
 

சிறப்பம்சங்கள்


  பிப்ரவரி 17, 2016: மாருதி சுசுகி நிறுவனம், பெலினோவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. முன்னதாக, 1,800 பெலினோ அடங்கிய ஒரு தொகுதியை, ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது. 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், இதன் ஸ்போர்ட்டியர் பதிப்பு வெளியிடப்பட்டது. பெலினோ RS என்று பெயரிடப்பட்ட இதன் அறிமுகத்திற்கு பிறகு, வோல்க்ஸ்வேகன் போலோ GT TSi மற்றும் அபார்த் புண்டோ ஆகியவை உடன் போட்டியிட உள்ளது. இந்த காரை இயக்கும் ஒரு 1.0-லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் மூலம் 110bhp ஆற்றலும், 170Nm முடுக்குவிசையும் பெற முடிகிறது. இந்த காரின் முன்பக்க முகப்பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பம்பர் மற்றும் பை-எக்ஸினன் ஹெட்லெம்ப்கள் ஆகியவை உள்ள நிலையில், பெலினோவின் உயர் தர பதிப்பில் இன்டிகிரேட்டேடு DRL-களை கொண்டுள்ளது. பின்புறத்தில் புதிய இரட்டை-டோன் பம்பரில் ஃபாஸ் டிஃப்யூஸர் இடம்பெற்றுள்ளது. இதன் உட்புறத்தில், ஸ்போர்ட்டியர் அப்ஹோல்டரியை கூடுதலாக பெற்று, மீதமுள்ள எல்லா உள்புற அமைப்பியல் அம்சங்களையும் ஆல்ஃபா பதிப்பில் பெறப்பட்டுள்ளது. அவையாவன: ஒரு 7-இன்ச் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் ஆப்பிள் கார்ப்ளே, இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் உடன் கூடிய MID மற்றும் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை ஆகும்.

 

மாருதி பெலினோ – விமர்சனம், மேற்பார்வை


 

அறிமுகம்


  பெலினோ – என்ற பெயருக்கு இத்தாலி மொழியில், “மின்னலின் ஒரு பிரகாசம்” என்று பொருள்படும் நிலையில், இதற்கு ஏற்ப இந்த வாகனத்தின் தன்மைகள் அமைந்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா லிமிடேட் வெளியிடும் இந்த தயாரிப்பின் புதிய சக்திவாய்ந்த தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்கள் மூலம் உலக சந்தையில் நிச்சயம் ஒரு புயலை ஏற்படுத்தி உள்ளது. கார்தேக்கோ-வை சேர்ந்த எங்களுக்கு, தனிப்பட்ட முறையில் இதன் வடிவமைப்பு முறைகளை விரும்புகிறோம். மேலும் இந்த பிராண்டின் கீழ் உள்ள மற்ற மாடல்களின் இடையே, இது உண்மையில் ஒரு வித்தியாசமான தோற்றத்தை கொண்டுள்ளது. பெலினோவின் அறிமுகத்திற்கு முன்பு வரை, இதன் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றான ஹூண்டாய் எலைட் i20, இப்பிரிவை சில காலங்களாக ஆண்டு வந்தது என்றாலும், விற்பனையின் அடிப்படையில் அதை பின்னுக்கு தள்ளியுள்ளது. இப்பிரிவில் உள்ள ஹோண்டா ஜாஸ் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ ஆகியவை உடனும் இது போட்டியிடுகிறது. எனவே இந்த அதிர வைக்கும் ஹேட்ச்பேக் வாகனத்தில் உள்ள சாதக, பாதகங்களை குறித்து ஆராய்வோம்.

 

சாதகங்கள்:


  1. சிறப்பாக காட்சியளிக்கும் ஹேட்ச்பேக். மாருதியின் மற்ற எந்த மாடல்களை போலவும் இல்லாமல், இந்த வாகனம் கூட்டத்தில் தனித்து காட்சியளிக்கிறது.

  2. பாதுகாப்பு அம்சங்களான இரட்டை ஏர்பேக்குகள், ABS மற்றும் EBD ஆகியவை எல்லா வகையிலும் தரமானதாக அளிக்கப்படுகிறது.

  3. பயன்பாட்டிற்கு எளிய கேபின். விஸ்தாரமானது, 5 பேருக்கு எளிதாக அமர்ந்து செல்ல முடியும்.

 

பாதகங்கள்:


  1. தரமான கட்டமைப்பு தேவை. மாருதி நிறுவனம் இப்பிரிவை மேம்படுத்த வேண்டியுள்ளது.

  2. இதன் போட்டியாளர்களிடம் ஏற்கனவே உள்ள பின்புற AC திறப்பிகள், இதில் இல்லை.

  3. நெக்ஸா விற்பனையகத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், குறிப்பிட்ட எல்லையோடு நின்று விடுகிறது.

 

தனித்தன்மை கொண்ட அம்சங்கள்


  1. உங்களிடம் உள்ள ஐபோனை டச்ஸ்கிரீன் மூலம் இயக்கும் வகையில், ஆப்பிள் கார்ப்ளே அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் காணப்படுகிறது.

  2. CVT கியர் பாக்ஸ். இந்த புதிய தலைமுறை சிஸ்டம் மூலம் இசைவான செயல்திறன் கிடைப்பதோடு, சிறந்த கார் ஓட்டும் திறனும் உறுதிப்படுத்தப்படுகிறது.

 

மேற்பார்வை


  முதன் முதலில் காட்சிக்காக வைக்கப்பட்டதில் இருந்து, பலரின் பார்வையையும் ஈர்த்துவிட்ட மாருதி பெலினோவிற்கு, எந்த சந்தேகமும் இல்லாமல் ஸ்விஃப்ட் காரை விட அதிக ரசிகர் கூட்டத்தை திரட்டிவிடும். மற்றவர்கள் இடையே ரே ப்ளூ-வில் இருந்து கிரானைட் க்ரே வரையிலான மாறுப்பட்ட நிறபேதத்தில், இதை இந்த தயாரிப்பாளர் அறிமுகம் செய்துள்ளார். இது சிக்மா, டெல்டா, ஸீடா மற்றும் ஆல்ஃபா ஆகிய 4 ட்ரிம் நிலைகளில் வருகிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் மாருதி பெலினோவின் செயல்திறன் தொடர்புடைய பதிப்பான RS தொழிற்நுட்பம், சமீபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வரும் மாதங்களில் இது அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு புதிய 1.0-லிட்டர்பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை கொண்டு, 112bhp ஆற்றல் உடன் 175Nm முடுக்குவிசையை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இது சந்தைக்கு வரும் பட்சத்தில், அடுத்து வரவுள்ள ஹூண்டாய் i20 N ஸ்போர்ட் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ GTI ஆகியவை உடன் போட்டியிட வாய்ப்புள்ளது. மற்றொருபுறம், தற்போதைய மாடலில் 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3-லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளை கொண்டதாக அமைந்து, ஒரு DOHC மதிப்பு கட்டமைப்பின் அடிப்படையில் உள்ளது.

  மேற்கூறிய இரண்டும், ஒரு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெற்றுள்ள நிலையில், பெட்ரோல் பதிப்பில் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் சேர்த்து அளிக்கப்படுகிறது. பாதுகாப்பிற்கு மாருதி நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்பதால், உங்களை பாதுகாக்கும் வகையிலான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இது தாங்கி வருகிறது. முன்பக்கத்தில் உள்ள 2 ஏர்பேக்குகள், ரிவெர்ஸ் பார்க்கிங் சென்ஸர்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் சுசுகி TECT பாடி உள்ளிட்டவைகளை கொண்டு, உயர்தரமான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியுள்ளது. இது தவிர, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே, டோர்களுக்கான UV கட் கிளாஸ், LED லெம்ப்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் நம்மை கவர்ந்திழுப்பதாக உள்ளன.

 

வெளிப்புற அமைப்பு


  மாருதியின் ‘லிக்விட் ப்ளோ டிசைனை’ அடிப்படையாக கொண்டுள்ள இதன் பாடி, சிறப்பாக வரையறுக்கப்பட்ட வளைவுகள் மற்றும் ஒரு தாழ்வாக நகரும் நிழல் போன்ற கவர்ச்சிகரமான ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த நிலை மற்றும் புதுமையான அம்சங்களின் மூலம் மற்றவைகளின் இடையே தனித்தன்மையுடன் காட்சி அளிக்கிறது.

  வெளிப்புற அமைப்பியலின் அளவுகளை குறித்து பார்க்கும் போது, இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், இது நீளமாகவும், அகலமாகவும் காணப்படுகிறது. உயரத்தை பொறுத்த வரை, ஹோண்டா ஜாஸ் 44mm ஆகவும், பெலினோவை விட - எலைட் i20-க்கு 5mm அதிகமாகவும் உள்ளது. கிரவுண்டு கிளியரன்ஸை பார்த்தால், ஹூண்டாய் உடன் இது ஒத்து காணப்படும் நிலையில், ஹோண்டா மற்றும் வோல்க்ஸ்வேகன் ஆகியவை பின்தங்கியுள்ளன. போலோவின் வீல்பேஸை விட இது 51mm நீளமானதாக உள்ளது. அதே நேரத்தில் இந்த குறிப்பிட்ட பிரிவில் ஜாஸ் மற்றும் எலைட் i20 ஆகியவை பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.

  1     தடித்த முன்பக்க முகப்பில் உள்ள கிரோம் அலங்காரத்துடன் கூடிய துளைத்த ரேடியேட்டர் கிரிலை பெற்று, மற்றவைகளுடனான போட்டியில் தனித்துவம் பெறுகிறது. இந்த தடித்த கிரோம் வரிகள், பக்கவாட்டில் இருந்து நீண்டு சென்று ஹெட்லைட் கிளெஸ்டரை அடைகிறது. இதன்மூலம் இவ்வாகனத்திற்கு ஒரு நேர்த்தியான அமைப்பு கிடைத்துள்ளது.

  முன்னால் உள்ள பாதைக்கு வெளிச்சத்தை பகரும் வகையில், இவ்வாகனத்தில் பிரகாசமான பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் காணப்படுகிறது. இதனுடன் டேன் இன்டிகேட்டர் மற்றும் LED டேடைம் ரன்னிங் லெம்ப்கள் ஆகியவை காலத்திற்கேற்ற ஹெட்லைட் கிளெஸ்டரில் அமையப் பெற்று, ஸ்விஃப்ட் காரின் வடிவமைப்பை ஒத்துப் போகிறது.

பாடி கலரில் அமைந்த பம்பர் எளிமையாக தோற்றம் அளித்தாலும், நேர்த்தியாக காட்சி அளிப்பதோடு, ஒரு விரிவான ஏர் இன்டேக்கை கொண்டு, அதை வட்டமான ஃபேக் லெம்ப்கள் மூலம் இருபுறமும் மூடப்பட்டுள்ளது.

அதன் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள அழகான வளைவுகள் மற்றும் விண்டோ பிரேம்கள் ஆகியவை மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. கிரோம்களால் நேர்த்தியாக பூசப்பட்ட விண்டோ சில் உடன் கருப்பு நிறத்தால் பணித் தீர்க்கப்பட்ட பில்லர்களை கொண்டுள்ளது. டோர்களுக்கு முதல்-தரமான UV கட் கிளாஸை கொண்டு, UV கதிர்களின் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது, மற்றொரு முக்கிய அம்சமாகும். வெளியே உள்ள ரேர் வ்யூ மிரர் கேப்கள், பாடியின் நிறத்திலேயே அமைந்து, அதன் நேர்த்தியை கூட்டுகிறது. இதேபோல சைடு டேன் மிரர்களிலும் இந்த ஒருங்கிணைப்பை காண முடிகிறது.

உயர் தரத்தில் அமைந்த 2 ட்ரிம்களில் காணப்படும் நாகரிகமான அலாய் வீல்களின் ஜோடிகள் மூலம் மிகவும் கவர்ச்சியாக தோற்றத்தை பெறுகின்றன. இந்த ரிம்கள் 16 இன்ச் அளவில் அமைந்து, 195/55 R16 என்ற அளவிலான ட்யூப்லெஸ் ரேடியல் டயர்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் மற்ற வகைகளில், 15 இன்ச் ஸ்டீல் வீல்களை கொண்டுள்ளன.

பின்பகுதியில், விண்டோஸ்கிரீன் மற்றும் பூட் லிட் ஆகியவற்றின் இடையே ஒரு கிரோம் ஸ்ட்ரிப்-பை கொண்டு, ஒரு தனித்தன்மையுள்ள தோற்றத்தை பெறுகிறது. மேலும் ஒரு மேல்நோக்கி செல்லும் வகையில் அமைந்துள்ள ஸ்டாப் லெம்ப் உடன் ஒருங்கிணைந்து காணப்படும் ஸ்பாய்லர் மூலம், பின்புறத்திற்கு ஒரு ஸ்போட்டியான தோற்றம் கிடைக்கிறது.

இதையெல்லாம் தவிர, LED லெம்ப்கள் மற்றும் டேன் இன்டிகேட்டர்கள் ஆகியவை கொண்ட ஒரு காலத்திற்கு ஏற்ற டெயில்லெம்ப் கிளெஸ்டரை பெற்று, அவ்வாகனத்தின் பின்பகுதிக்கு ஒரு முழுமையான தோற்றத்தை அளிக்கிறது.

பூட் அறையை பொறுத்த வரை, இதில் 339-லிட்டர் பொருள் வைப்பு திறன் கொண்டுள்ளது. இது ஜாஸை விட 15 லிட்டர்கள் குறைவானது என்றாலும், மற்ற போட்டியாளர்கள் அளிப்பதை விட சிறந்ததாகும்.

  2    

உள்புற அமைப்பியல்


  பெலினோவின் உள்ளே கவர்ச்சிகரமான கருப்பு நிறத் திட்டத்தை பெற்று, ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் அம்பியன்ட் லைட்டிங் ஆகியவையும் சேர, உங்கள் கண்களுக்கான இனிய விருந்தாக அமைகிறது. மேலும் ஒரு சில கூறுகளில் உள்ள மெட்டாலிக் உள்ளீடுகளின் மூலம் இவ்வாகனத்திற்கு இன்னும் உயர் தர தோற்றத்தை பெறுகிறது.

டேஸ்போர்டை குறித்து சிறப்பாக குறிப்பிட வேண்டியுள்ளது. மேம்பட்ட உபகரணங்களை கொண்டு சம காலத்திற்குரிய தோற்றத்தை பெற்றதாக உள்ளது. அதிலும் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே உடன் கூடிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், காரில் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த அமைப்பில், ஸ்மார்ட்போன், மீடியா மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் கமெண்ட்ஸ் போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன.

டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் சீரமைப்பு அம்சங்களை கொண்ட ஒரு 3-ஸ்போக் பன்முக செயல்பாட்டு ஸ்டீயரிங் வீல் காணப்படுகிறது. ஆடியோ உபயோகம் மற்றும் கால் செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில், இதில் ஸ்விட்ச்கள் அமைந்துள்ளன.

இதிலுள்ள பணிச்சூழலியல் சீட்களின் அமைப்பு, இவ்வாகனத்தை தேர்வு செய்வதற்கான மற்றொரு காரணமாக உள்ளது. டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளதோடு, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் உள்ள ஹெட்ரேஸ்ட்களும் மாற்றி அமைக்க கூடியவை ஆகும். இது தவிர, பின்பக்க பெஞ்சு சீட் மடக்கும் வசதி கொண்டுள்ளதால், அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல வசதியாக உள்ளது.

  இதையெல்லாம் தவிர, ஏர்கண்டீஷனிங் யூனிட், முன்பக்க சென்டர் ஆம்ரெஸ்ட் உடன் ஸ்டோரேஜ், கிளோவ் பாக்ஸ் இலிமினேஷன், மெட்டலால் பணித் தீர்க்கப்பட்ட உள்புற கதவு ஹேண்டில்கள் மற்றும் வெனிட்டி மிரர்கள் உடன் கூடிய சன்விஸர்கள் போன்ற மற்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

 

செயல்திறன்


 

பெட்ரோல்


  ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் சிறிய காரான ரிட்ஸ் ஆகியவற்றில் பணியாற்றிய, 1.2-லிட்டர் VVT பெட்ரோல் மோட்டார் தான், இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாக கூறினால், இந்த என்ஜின் மூலம் 6000rpm-ல் 83.1bhp-யையும், 4000 rpm-ல் 115Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. ஆனால் இப்பிரிவிலேயே முன்னணி வகிக்கும் வாகனமான ஹோண்டா ஜாஸ், i-VTEC-யை கொண்டு இதைவிட சற்று அதிகமாக 89bhp என்ற அளவிலான ஆற்றலை வெளியிடுகிறது.

இந்த பெட்ரோல் பதிப்பு இரு கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது. ஒன்று 5-ஸ்பீடு மேனுவல், மற்றொன்று CVT. இதில் AMT தேர்விற்கு மாருதி அளிக்காமல் இருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனெனில் அப்படி செய்திருந்தால், கியர்பாக்ஸ் முட்டாள்தனமாக அமைந்திருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மென்மையானதாகவும், எதிர்பார்ப்பது போலவே CVT செயல்படவும் செய்கின்றன.

  ARAI எரிபொருள் சிக்கன அளவு, லிட்டருக்கு 21.4 கி.மீ. ஆகும். இது, i20 மற்றும் ஜாஸை விட, ஏறக்குறைய லிட்டருக்கு 3 கி.மீ அதிகமாகும். இதன்மூலம் போட்டியில் உள்ள போலோ, அது அளிக்கும் லிட்டருக்கு 16.5 கி.மீ என்ற அளவோடு, பின்தங்கி காணப்படுகிறது. ஆட்டோமேட்டிக்ஸை பொறுத்த வரை, எலைட் i20-யிலும் ஒரு ஆட்டோமேட்டிக் தேர்வு இல்லாத நிலையில், ஜாஸை விட லிட்டருக்கு 3 கி.மீ. முன்னணியில் பெலினோ உள்ளது.

அதே நேரத்தில், சமீபத்தில் நடைபெற்ற 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட, இதன் செயல்திறன் தொடர்புடைய பதிப்பான மாருதி பெலினோ RS-யில், ஒரு 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை கொண்டு, ஒரு அதிகபட்ச ஆற்றலான 112bhp-யையும், 175Nm முடுக்குவிசையும் அளிக்கிறது. இந்த தொடரில் உள்ள மற்ற என்ஜின்களை போலவே, தனது விதிவிலக்கான செயல்திறனை கொண்டு இந்த புதிய என்ஜினும் நம்மை கவர்ந்திழுக்கும் என்று நம்புவோம்.

  3

டீசல்


  பெலினோவின் 1.3 லிட்டர் டீசல் மில்லை குறித்து மீண்டும் ஒரு அறிமுகம் தேவையில்லை. இதே என்ஜினை பல்வேறு வகையான ட்யூன்களில், மாருதி மற்றும் டாடாவின் கார்கள் பயன்படுத்தி உள்ளன. இது 4000rpm-ல் 74bhp ஆற்றலையும், 2000rpm-ல் 190Nm முடுக்குவிசையும் அளிக்கிறது. இந்த அளவை வைத்து ஒப்பிட்டால், i20-யின் CRDi அளிக்கும் 89bhp மற்றும் ஜாஸின் i-DTEC அளிக்கும் 99bhp ஆகியவை விட, இது மிகவும் குறைவாகும். மேற்கண்ட வித்தியாசம் அதிகமாக இருப்பதால், இவ்வாகனத்தின் எடைக்குறைவான தன்மை கூட பெரிய வேறுப்பாட்டை அளிப்பதாக இருக்காது.

இந்நிலையில் மாருதி தரப்பில் இருந்து, இன்னும் அதிக ஆற்றல் மற்றும் பிரிமியம் தன்மை கொண்ட வாகனத்தை நீங்கள் எதிர்பார்ப்பதாக இருந்தால், அதிக சக்தி வாய்ந்த 1.6 DDiS வகையை அளிக்கும் S-கிராஸை தேர்வு செய்யலாம்.

அடுத்தபடியாக ஓசை நிலைகளை குறித்து கீழே பார்ப்போம். பெலினோவின் குறைந்த எடைக் காரணமாக, ஸ்விஃப்ட் காரில் இருப்பதை விட, இதன் என்ஜின் நிச்சயமாக சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. இதன் தாழ்வான RPM-களில், ஒரு வழக்கமான டீசல் டர்போ-லேக் இருந்தாலும், இயக்கத்தில் நேர்த்தியை காண முடிகிறது. பெட்ரோலுடன் ஒப்பிட்டால், டீசலில் சற்று அதிக இயக்கம் கிடைப்பது தெரிந்தாலும், டீசலில் கடகடவென்ற ஓசை கேபினுக்குள் வராமல் தடுக்கிறது.

  4


ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


  பெலினோவில் உள்ள சஸ்பென்ஸன், நகரத்தில் ஒட்டுவதற்கு ஏற்றதாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதே நேரத்தில் குண்டும் குழியுமாக உள்ள சற்று கடினமான பாதைகளில் கூட இது சிறப்பாக செயல்படுகிறது. உயரமான வீல்பேஸ் மூலம் குறைவான அசைவுகளே உணரப்படுகிறது என்றாலும், நீங்கள் பெரிய கேபின் இடவசதிக்கான விலையை செலுத்தி தான் ஆக வேண்டும். இப்படி கூறும் போதே, இவ்வாகனத்தின் கையாளும் திறன் சிறப்பாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இதில் மற்றொரு காரியம் எங்களை மிகவும் கவர்ந்தது என்னவென்றால், இதன் ஸ்டீயரிங் யூனிட் ஆகும். குறைந்த வேகத்தில் செல்லும் போது மெதுவாகவும், அதிக வேகத்தில் செல்லும் போது கணமாகவும் உள்ளது. ஆனால் i20 மற்றும் ஜாஸ் ஆகியவற்றில் அதிக வேகத்தில் செல்லும் போதும், ஸ்டீயரிங் வீல் லேசாகவே உள்ளதை ஒப்பிடும் போது, இவ்வாகனம் எங்களை மிகவும் கவர்வதாக உள்ளது.

இந்த காரின் முன்புறத்தில் வென்டிலேட்டேட் டிஸ்க்-களும், பின்புறத்தில் டிரம்களும் காணப்படுகின்றன. இந்த பிரிவில் இது ஒரு சிறந்த தரமான காரியம் ஆகும். அதே நேரத்தில் i20-யில் ஒட்டுமொத்தமாக டிஸ்க் அளிக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி செலவை குறைக்கும் வகையில், நவீன எலைட் காரில் இது தவிர்க்கப்பட்டுள்ளது. தரமான ABS மற்றும் EBD (ஆன்டி-லாக் பிரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிபியூஷன்) மூலம் பிரேக்கை அழுத்தும் போது, ஒரு விரிவான பாதுகாப்பை அளிக்கிறது. மாருதியின் மூலம் பெலினோவில் அளிக்கப்பட்டுள்ள சஸ்பென்ஸன் மற்றும் ஸ்டீயரிங் துறைகளுக்கு, ஒரு பெரிய வெற்றிக்கான வாழ்த்துக்கள். பயணம் மற்றும் கையாளுதல் ஆகியவை நகர்பகுதியில் உள்ள சூழ்நிலையில் ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளதோடு, அவ்வப்போது நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்ளவும் வசதியாக உள்ளது.

 

பாதுகாப்பு


  சுசுகியின் TECT (டோட்டல் எஃப்பேக்கிட்டீவ் கன்ட்ரோல் டெக்னாலஜி) பாடி கட்டமைப்பில், இந்த பெலினோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பெரும் உதவியாக உள்ளது. ஆன்டி-லாக் பிரேக்கிங் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஷ் டிஸ்டிபியூஷன் ஆகியவை எல்லா வகைகளிலும் அளிக்கப்பட்டுள்ளது, ஒரு குறிப்பிட்டத்தக்க தன்மை ஆகும். மேலும் வாகனத்தின் பின்புற சீட்டில் எடையுடனோ / எடை எதுவும் இல்லாமலோ உள்ள நிலையில் லெம்ப்களை சரிசெய்து கொள்ள ஹெட்லெம்ப் லெவலிங் உதவுகிறது. முன்புற சீட் பெல்ட் ப்ரீ-டென்ஸர் உடன் கூடிய சீட்பெல்ட் ஃபோர்ஷ் லிமிட்டர் மூலம் ஒரு விபத்து ஏற்படும் பட்சத்தில் ஸ்டீயரிங் மீது மோதல் மற்றும் மற்ற ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது.

  5

வகைகள்


  இந்த ஹேட்ச்சில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 4 வகைகள் அளிக்கப்படுகிறது. பெட்ரோல் CVT ஆட்டோமேட்டிக், டெல்டா டிரிம்மில் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதிலிருந்து இந்த ஆட்டோமேட்டிக் அம்சம் கொண்ட வாகனத்தில், LED DRL-கள், பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், ரிவெர்ஸிங் கேமரா மற்றும் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களை நீங்கள் பெற முடியாது என்பது ஒரு வருந்ததக்க செய்தியாகும்.

துவக்க வகையில் (ஸிக்மா), பின்புற பவர் விண்டோக்கள் மற்றும் பொழுதுபோக்கு சிஸ்டம் ஆகியவை இருக்காது. ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக்கில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் இந்த அம்சங்கள் இல்லாத நிலையில், உங்கள் நிலையை தெளிவுப்படுத்தி கொள்ள நினைவுப்படுத்துகிறோம். அடுத்த வகையில் (டெல்டா), நமக்கு நிறைய காரியங்களை அளிக்கிறது. இதில் ஆடியோ சிஸ்டத்திற்கான ஸ்டீயரிங்கில் ஏறி செல்லும் கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் பவர் விண்டோக்கள் போன்ற மதிப்பு மிகுந்த அம்சங்கள் உள்ளன. இந்த ஒரு வகையில் மட்டுமே CVT கியர்பாக்ஸை காண முடிகிறது. ஒரு ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்ட காரில் இன்னும் கூட ஒருசில சிறப்பான அம்சங்களை அளித்திருக்கலாம் என்று நினைக்கும் போது, ஒரு சிறிய ஏமாற்றம் ஏற்படுகிறது.

அடுத்த வகையில் (ஸீட்டா), LED DRL-கள், அலாய் வீல்கள், ஃபேக் லெம்ப்கள் மற்றும் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் ஆகிய அம்சங்களை காண முடிகிறது. இந்த வகையில் உள்ள அம்சங்களின் மூலம், உண்மையிலேயே ஒரு பிரிமியம் காரின் உணர்வை அளிக்கிறது. பெலினோவின் மீது தங்களின் பார்வையை செலுத்தும் மக்களுக்கு, இது நிச்சயம் ஏற்றதாக அமையும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

உயர் தர வகையில் (ஆல்ஃபா), ஒரு ரிவெர்ஸிங் கேமரா, ஆப்பிளின் ஸ்மார்ட்ப்ளே சிஸ்டம் மற்றும் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் ஆகியவை காணப்படுகின்றன. மாருதியிடம் இருந்து கடல் போல வெளிவரும் பெலினோக்களுக்கு முன்னால், மேற்கூறிய அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நாங்கள் கருதவில்லை.

  6    

தீர்ப்பு


  மாருதியின் ஷோரூமில் உள்ள மற்ற எந்த காருடன் ஒப்பிட்டாலும், பெலினோவில் தான் சிறந்த பொருத்தம் மற்றும் பூரணத்தை காண முடிகிறது. இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் அழகாக இருக்கும் நிலையில், உட்புறமும் அவ்வளவு மோசம் என்று கூறுவதற்கு இல்லை. அதே நேரத்தில் டீசல் வகையில் சற்று ஆற்றல் குறைந்ததாக தெரிந்தாலும், அதன் எடைக்குறைந்த பாடி மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனம் ஆகியவை சேர்ந்து அதை ஈடுசெய்து விடுகின்றன. இப்படி மாருதியிடம் எப்போதும், ஏதாவது ஒன்று சிறப்பாக இருக்கவே செய்யும்.

செயல்திறனை பொறுத்த வரை, இப்பிரிவில் இடைப்பட்டதாக அமைந்து, நகர்புற சூழ்நிலைகளில் ஓட்டுவதற்கு எளிதான ஒரு காராக அமைகிறது. பெலினோவை வாங்குவதில் ஏற்படும் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று என்னவென்றால், விற்பனைக்கு பிறகு கிடைக்கும் ஒப்பிட முடியாத சர்வீஸ் நெட்வர்க் ஆகும். ஸ்விஃப்ட் காரில் கிடைக்கும் அம்சங்களை வைத்து பார்த்தால், இவ்வாகனம் உயர்ந்தது ஆகும். மாருதி சுசுகி தயாரிப்பை கொண்டிருப்பவர் என்ற மன அமைதியை பெறுவதோடு, ஸ்விஃப்ட் காரை விட மற்றொரு சிறந்த வாகனத்தை எதிர்நோக்கும் ஒரு நபருக்கு, இது கச்சிதமான தேர்வாக அமையும்.