ஹூண்டாய் ஐ20

` 5.2 - 9.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


ஜனவரி 30, 2016 : ஹயுண்டாய் நிறுவனம் ஹயுண்டாய் எளிட் i20 கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஒன்றை ரூ. 5.36 லட்சத்திற்கு வெளியிட்டுள்ளது. இப்போது i20 கார்களில், முன்பு ஆஸ்டா (O) மாடல்களில் மட்டுமே இருந்த ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்புகள், கார்நெரிங் லைட்கள் மற்றும் LED DRLகள் ஆகியன அனைத்து மாடல்களிலும் இப்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த தென் கொரிய கார் தயாரிப்பாளர்கள் i20 கார்களுக்கு புத்துயிர் ஊட்டி இருப்பதற்கு காரணம் , கடந்த சில மாதங்களாக மாருதி நிறுவனத்தின் பலேனோ கார்கள் விற்பனையில் சக்கை போடு போட்டு வருவதே ஆகும். 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த 2016 எளிட் i20 கார்கள் உடன் இணைந்து எளிட் i20 N ஹாட் ஹேட்ச் கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஹயுண்டாய் எளிட் i20 விமர்சனம்


கண்ணோட்டம்


அறிமுகம்


இந்தியாவில் உள்ள பல இந்திய கார் தயாரிப்பாளர்கள் மற்றும் பன்னாட்டு கார் தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஓரங்கட்டி தென் கொரிய கார் தயாரிப்பாளர்களான இந்த ஹயுண்டாய் நிறுவனத்தினர் எப்படி இந்திய மக்களின் நம்பிக்கையை இந்த அளவுக்கு பெற்றுள்ளனர் என்பதை யோசித்து பார்க்கையில் உண்மையில் மிகவும் பிரமிப்பாகவே உள்ளது. ஹயுண்டாய் i20 போன்ற கார்களை பார்க்கையில் இந்நிறுவனத்தின் வெற்றிக்கான விடை நமக்கு நன்கு புலப்படுகிறது.. ஸ்டைல் , வசதி மற்றும் மிதமான செயல்திறன் ஆகிய இவை மூன்றும் இந்த கார்களில் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. இந்த காருக்கும் ஒரு சிறிய வரலாறு உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான இந்த கார்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹயுண்டாய் நிறுவனமும் இந்த i20 காரர்களின் பல மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களை தொடர்ந்து வெளியிட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வண்ணம் இருந்தது. அதே சமயம் சில பல குறைகளும் இந்த கார்களில் இல்லாமல் இல்லை. ஆகவே இந்த கார்களின் அனைத்து வேரியன்ட்களையும் ஆழமாக ஆராய்ந்து நல்ல அம்சங்கள் மற்றும் அந்த அளவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாத அம்சங்கள் என்று அனைத்தையும் உங்களுக்கென பட்டியலிட்டு உள்ளோம்.

image 1

ப்ளஸ் பாய்ண்டுகள்1. ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களுக்கு இணையான இன்டீரியர்ஸ் (உட்புற அமைப்பியல்)
2. ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் , டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு என்று ஏராளமான சிற்பம்சங்கள் இந்த கார்களில் இணைக்கப்பட்டுள்ளன..
3. நாடு முழுதும் பரவி இருக்கும் ஹயுண்டாய் நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க்.

மைனஸ் பாய்ண்டுகள்1. மிதமான சக்தி கொண்ட என்ஜின். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை.
2. ஆடோமேடிக் வேரியன்ட் இல்லை. போலோ , பலேனோ மற்றும் ஜாஸ் கார்களில் ஆடோமேடிக் வேரியன்ட் உள்ளது.
3. அதிகமான வேகத்தில் சரியான ஃபீட்பேக் தராத ஸ்டீரிங் அமைப்பு.

தனித்துவமான அம்சங்கள்


டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு பயன்படுத்துவதற்கு மிகவும் மென்மையாக உள்ளது. பலேனோவில் உள்ளதை விட இதில் சிறப்பாக உள்ளது. 16” அல்லாய் சக்கரங்கள் மிகவும் அசத்தலாக காட்சியளிக்கிறது.

கண்ணோட்டம்


சாலைகளில் மிகவும் அதிகமாக கண்ணில் தென்படும் கார் இது என்று எளிதாக சொல்லி விடலாம். இந்த எளிட் i20 - யை மக்களின் கார் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடுத்தர வர்கத்தினரின் கனவுகளை பூர்த்தி செய்துக் கொண்டிருக்கும் கார் இந்த i20 என்று சொன்னால் அது மிகையில்லை. நல்ல தரம் மற்றும் நியாயமான விலை ஆகிய இவை இரண்டின் சரியான கலவை இந்த கார் என்று சொல்லலாம். இந்த காரின் புது வெர்ஷனில் ,முன்புறம் மாற்றி வடிவமைக்கப்பட்டு முன்பை விட சிறப்பான தோற்றத்தை பெற்றுள்ளது. காரின் உட்புறமும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ஏராளமான சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சொகுசான பயண அனுபவத்தை பெறுகின்றனர். இரண்டு என்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அவை 1.2 லிட்டர் பெட்ரோல் ட்ரிம் மற்றும் 1.4 லிட்டர் டீசல் ட்ரிம் ஆகும். இந்த என்ஜினை நல்ல முறையில் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த ப்ரேக் அமைப்பும் சேஸிஸ் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. . பேஸ் வேரியன்டான 'இரா' முதல் அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய 'அஸ்டா (O)' உட்பட மொத்தம் 6 வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எக்ஸ்டீரியர்ஸ் ( வெளிப்புற அமைப்பியல் )


இதன் பிரிவிலேயே மிக அழகான தோற்றம் கொண்ட கார் இந்த i20 தான் என்று சொல்லுவது சற்று அதிகப்படியாக இருக்கும் என்றாலும் உண்மையில் பலரும் இந்த காரின் தோற்றம் படு நேர்த்தியாக உள்ளது என்பதை முழு மனதுடன் ஒப்புக் கொண்டுள்ளனர். அறிமுகமானதில் இருந்து இந்த கார்கள் நிறைய பரிமாண வளர்ச்சியை அடைந்துள்ளது . மொத்தத்தில் , ஒரு ஸ்போர்டியான தோற்றத்தை இந்த கார்கள் கொண்டுள்ளது.

image 2

இந்த காரின் முகத் தோற்றம் நல ஆக்ரோஷமாக உள்ளது. ஷார்ப்பான ஹெட்லேம்புகள் காரின் பக்கவாட்டு பகுதி வரை நீண்டு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் அறுங்கோண வடிவிலான பெரிய க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. . இன்னும் சற்று நெருங்கி பார்த்தால் கருப்பு பேக்ரௌன்ட் உடன் நன்கு பொருந்தி போகும் வகையில் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது..

image 3

அடிப்பகுதியில் ஏயர்டேமிர்க்காக நீண்ட கருப்பு வண்ண பகுதி உள்ளது. காரின் உடல் பகுதி எந்த வண்ணத்தில் உள்ளதோ அதே வண்ணத்தில் பம்பரும் உள்ளது. பெரிய அளவிலான பானெட் பகுதியில் மெல்லிய கோடுகள் இழையோடுகிறது. பம்பரை சுற்றி உள்ள உடல் பகுதியில் காணப்படும் மெலிதான வளைவுகள் எங்கள் கார்தேகோ குழுவினரை பெரிதும் கவர்ந்துள்ளது.

image 4

முன்புற ஸ்கிர்டில் உள்ள ஸ்கின் நீரோட்டம் போல் இழையோடி தடிமனான வீல் ஆர்சஸ் பகுதியை சுற்றி முடிகிறது.

image 5

இந்திய வாடிக்கையாளர்களுக்கு குரோம் பூச்சு மீது உள்ள அதீத விருப்பதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டுள்ள ஹயுண்டாய் நிறுவனம் கதவின் கைப்பிடியிலும் குரோம் பூச்சு கொடுத்துள்ளது. . அதுவும் ஒரு விதத்தில் அழகாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. உடல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணத்திலேயே மிரர்களும் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் டாப் எண்டு வேரியண்டை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்றால் அதில் உள்ள டைமன்ட் கட் அல்லாய்கள் நிச்சயம் உங்களை வசீகரிக்கும்.

image 6

சரிவலான ரூப்லைன் மற்றும் கருப்பு வண்ணம் பூசப்பட்ட C – பில்லர் ஒன்றுக்கொன்று நன்றாக பொருந்தி 'ப்லோடிங் ரூப் எபெக்ட்' - ஐ தருகிறது. C - பில்லர் இப்போது பளபளக்கும் கருப்பு வண்ணம் பூசப்பட்டு முன்பை விட அழகாக மாற்றப்பட்டுள்ளது என்பதே எங்கள் கருத்து.

image 7

பின்புறத்தில் சற்று மெலிதான டெயில்லேம்புகள் டிக்கி வரை நீண்டு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. LED விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால் மேல் தட்டு மக்களையும் கவர்ந்திழுக்கும் என்று தோன்றுகிறது. அதே சமயம் பின்புற கேமெராவானது பின்புற ப்ரோபைல் உடன் இன்னும் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஹயுண்டாய் சின்னத்திற்கு கீழே துருத்திக் கொண்டு இருக்கும் தடிமனான கேமெரா பின்புற அமைபியலுடன் ஒன்றிப் போகவில்லை .

image 8

டெயில் - கேட்டிற்கு மத்தியில் உள்ள ஹயுண்டாய் நிறுவன சின்னம் காண்பவர்களின் மனதில் நிச்சயம் பதியும் .

image 9

1

2

இன்டீரியர்ஸ் (உட்புற அமைப்பில் )


image 10

இந்த எளிட் i20 கார்களில் உள் நுழைந்து அமர்வது மிகவும் எளிதாக உள்ளது. சற்று தாழ்வாக இதன் வடிவமைப்பு உள்ளதால் காரின் உள்ளே உயரம் குறைவான நிலையில் அமர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. . எப்படி இருப்பினும் , பெரிய அகலமான கதவுகளின் அமைப்பால் காரின் உள் நுழைவது மற்றும் வெளியே வருவது மிகவும் எளிதாக உள்ளது.

image 11

இதற்கு முந்தைய வெர்ஷன் i20 கார்களில் இருந்த கருப்பு மற்றும் பேயிஜ் (பழுப்பு) நிறங்களிலான இன்டீரியர் இந்த புதிய வெர்ஷனில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.. டேஷ்போர்டின் கீழ் பாதி கருப்பு நிறத்திலும் மேல் பாதி ஜன்னல் ஸ்க்ரீன் வரை பழுப்பு வண்ணத்திலும் பளிச்சிடுகிறது..

image 12

கியர் நாப், பார்கிங் ப்ரேக் மற்றும் உட்புற கதவு கைப்பிடிகள் ஆகியவற்றில் உள்ள உலோக சேர்க்கைகள் உட்புற கேபின் தோற்றத்தை படு நேர்த்தியாக மாற்றி இருக்கிறது .

image 13

டேஷ்போர்ட் நல்ல வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மூலைகளிலும் தனித்துவமான AC வெண்ட்ஸ் உள்ளது. நடுவில் அதிநவீன மத்திய கன்சோல் உள்ளது. ஒரு டோர் பேடில் இருந்து மற்றொன்று வரை இழையோடும் பழுப்பு வண்ணம் எங்கள் குழுவினரை மிக மிக கவர்ந்துள்ளது.

மத்திய கன்சோல் பகுதியில் ஒரு டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு உள்ளது. அனைத்து வகையான ஆடியோ இன்புட்களையும் சபோர்ட் செய்யும் இந்த 7 அங்குல யூனிட் , விடியோவையும் ப்லே செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன் - பில்ட் நேவிகேஷன் வசதியும் உள்ளது. க்ரேடாவில் உள்ள யூனிட்டை போன்றே இந்த யூனிட்டும் உள்ளது.

image 14

image 15

கீழே மெலிதான திரையுடன் கூடிய கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பு உள்ளது . நீல நிறத்தில் இது ஒளிர்கிறது. கன்சோலின் கீழ் பகுதியில் பயணிப்போர் தங்களது போன் மற்றும் சிறிய அளவிலான பொருட்களை வைப்பதற்கு மிதமான அளவு இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர இரட்டை 12V பவர் சாகெட், ஒரு USB ,ஒரு ஆக்ஸ் - இன் போர்ட் ஆகியவையும் இணைக்கப்பட்டு பயணிகள் எதிர்பார்க்கும் கூடுதல் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

image 16

ஸ்டீரிங் வீல் ஹயுண்டாய் நிறுவனத்தின் தனித்துவத்துடன் சிறப்பாக உள்ளது. ஒரே முறையில் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி உள்ளது . அதிக விலை கொண்ட டாப் ட்ரிம்களில் தோலினால் போர்த்தப்பட்டு , நன்கு பிடிப்பதற்கு தோதாக இந்த ஸ்டீரிங் சக்கரம் இருக்கிறது. இந்த ஸ்டீரிங் சக்கரத்தில் இசை மட்டும் போனை இயக்குவதற்கான கண்ட்ரோல் உள்ளது.

image 17

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் சிறியதாக்கப்பட்டிருக்கிறது. வெள்ளை நிறத்தில் ஒளிர்கிறது. MIDயில் டேகோ மீட்டர் மற்றும் ஸ்பீடோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. .ட்ரிப் மீட்டர்ஸ் மற்றும் சராசரி எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றை இந்த MID காட்டுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் பயணித்தால் எரிபொருள் தீர்ந்து போகும் என்பதைக் காட்டும் வசதி இல்லை என்பது ஒரு சிறு குறையே.


image 18

இந்த வாகனத்தில் உள்ள இருக்கைகைகள் அமைப்பு (சீட்டிங் அரேன்ஜ்மென்ட்) மிகவும் சிறப்பாக உள்ளது. எந்த வித குறையும் சொல்லும் விதத்தில் இல்லை. முன்புற மற்றும் பின்புற இருக்கைகள் இரண்டுமே நல்ல வசதியாக உள்ளது. ஓட்டுனர் இருக்கை , உயரம் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதியுடன் உள்ளது. எனவே ஓட்டுனர் தனக்கு தோதான வகையில் இந்த இருக்கையை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள முடிகிறது. ஹெட்ரெஸ்ட்கள், ஹேன்ட்ரெஸ்ட்கள் மற்றும் கீழ் முதுகு பகுதிக்கான சபோர்ட் மிகவும் சிறப்பாக உள்ளது.

image 19

பின்புற இருக்கைகள் இந்த பிரிவில் உள்ள அனைத்து கார்களுடன் ஒப்பிடுகையில் i20 -யில் தான் மிகுந்த இடவசதியுடன் உள்ளது என்று சொல்லலாம். நிச்சயம் வோல்க்ஸ்வேகன் போலோ கார்களை விட இதில் பின்புற இருக்கையில் இடவசதி சிறப்பாக உள்ளது என்று சொல்லலாம். கால் வைப்பதற்கான இடவசதியும் (லெக்ரூம் ) தோள் பகுதிக்கான இடவசதியும் போதுமான அளவு இருக்கிறது. இருந்தாலும் சரிவான வடிவமைப்புடன் கூடிய கூரை பகுதியினால் பின்புற இருக்கையில் 6 அடி உயரம் உள்ளவர்கள் அமரும் போது சற்று சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பின் இருக்கையில் நடுவில் மூன்றாவது ஒருவர் அமர்வதையும் நாங்கள் சிபாரிசு செய்ய மாட்டோம். எங்களின் உறுதியான கணிப்பு இந்த எளிட் i20 நான்கு பேர் மட்டுமே வசதியாக பயணிக்கக் கூடிய கார் என்பது தான்.

இந்த கார், உட்புறம் (இன்டீரியர்ஸ் ) தேர்ந்த வடிவமைப்பு , நச்சென்ற சிறப்பம்சங்கள் மற்றும் தாராளமான இடவசதி ஆகியவற்றின் சரியான கலவை என்று சொல்லலாம். இதன் பிரிவில் இதை விட சிறந்த இன்டீரியர்ஸ் கொண்ட கார் இல்லை என்று திட்டவட்டமாக சொல்லலாம்.

பெர்ஃபார்மன்ஸ் (செயல்திறன்)


டீசல்


இந்த டீசல் என்ஜின் தான் சரியான தேர்வு ! இந்த 1.4 லிட்டர் என்ஜின் முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் எந்த வித பெரிய அளவிலான மாற்றத்திற்கும் உட்படுத்தப்படவில்லை. டர்போ லேக் இல்லை என்று சொல்வதை விட நல்ல முறையில் மறைக்கப்பட்டுள்ளது. என்று சொல்வதே சரியாக இருக்கும். மாருதி கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.3 லிட்டர் DDiS மோட்டாரில் டர்போ லேக் அப்பட்டமாக உணரப்படுவது போல் இந்த i20 எளிட் கார்களில் இல்லை. போக்குவரத்து நிறைந்த நகர்புற பயன்பாட்டிற்கு மிக மிக வசதியாக இந்த கார் உள்ளது. நெடுஞ்சாலைகளிலும் இந்த டீசல் என்ஜின் மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் எந்த சிரமமும் இன்றி தொடர்ச்சியாக பயணிக்கிறது. வேகம் அதிகரிக்கும் போது என்ஜின் சத்தம் அதிகரிக்கவில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். போலோவின் டீசல் என்ஜினைப் பயன்படுத்தி பழகிய கார் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் இந்த i20 டீசல் என்ஜின் பூர்த்தி செய்யாது. அதிகம் காரை விரட்டாமல் ரிலாக்ஸ்டாக பயணிக்க நினைப்பவருக்கு இந்த கார்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

image 20

3

பெட்ரோல்


2012 -ல் வெளியான பெட்ரோல் i20 கார்களில் பயன்படுத்தப்பட்ட 1197cc சக்தியை வெளியிடும் 1.2 லிட்டர் கப்பா VTVT பெட்ரோல் என்ஜின் தான் இந்த எளிட் i20 கார்களிலும் சிறிய மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வேகமாக வாகனம் செல்லும் போது இந்த என்ஜின் சற்று சிரமப்படுவதாக நமக்கு தோன்றுகிறது. ஓவர்டேக் செய்யும் போது கியரை டவுன்ஷிப்ட் செய்து வேகத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. மொத்தத்தில் ,அதிகமான வேகத்தில் செல்ல வேண்டும் என்ற உந்துதலை கைவிட்டு , இந்த காரின் மிதமான என்ஜின் சக்திக்கு ஏற்ப அதனை லாவகமாக கையாளுவதே சிறந்தது. இந்த என்ஜின் 5 - வேக மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர் மிக கச்சிதமாக கையாளுவதற்கு மிகவும் எளிதாக உள்ளது என்பது ஒரு நல்ல விஷயம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் நீங்கள் சொல்லும் பேச்சை கேட்டு சமர்த்தாக இயங்குகிறது இந்த எளிட் i20 கார்கள் . அதுவே நெடுந்தூர பயணங்களில் இந்த மிதமான சக்தி கொண்ட என்ஜின் சற்று பின்தங்குகிறது.

image 21

4

பயணித்தல் மற்றும் கையாளுதல்


இதற்கு முந்தைய வெர்ஷன்களுடன் ஒப்பிடுகையில் இந்த எளிட் i20 நல்ல உயர்தரமான பயண அனுபவத்தையும் வசதியையும் கொண்டதாக உள்ளது. கரடுமுரடான இந்திய சாலைகளில் எந்த வித சிரமமும் இன்றி இந்த எளிட் பயணிக்கறது. அதிகமான அதிர்வுகள் மற்றும் தூக்கி போடுதல் இல்லை. மற்ற ஹயுண்டாய் தயாரிப்புக்களில் காணப்படும் பள்ளம் மற்றும் மேடுகளில் பயணிக்கும் போது மேலெழும்பும் தன்மை இந்த ஹயுண்டாய் i20 கார்களில் பெரிதும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீரிங் லைட்டாகவும் நல்ல முறையிலும் உள்ளது. நகர்புறத்தில் இந்த காரை ஓட்டும் போது இந்த லைட்டான ஸ்டீரிங்கை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள். அதுவே நீங்கள் 100 கி.மீ.வேகத்திற்கு மேல் காரை செலுத்தும் போது சற்று பதற்றமாக உணர்வீர்கள் . பின்புற டிஸ்க் ப்ரேக்கை மாற்றி ட்ரம் பொருத்தி உள்ளது சற்று ஏமாற்றமாக உள்ளது. அந்த அளவுக்கு அது செயல்திறன் மிக்கதாக இல்லை என்பது எங்கள் கணிப்பு. இருந்தாலும் முன்புற டிஸ்க் ப்ரேக் மற்றும் பின்புற ட்ரம் ப்ரேக் ஆகியவற்றின் இணைந்த செயலாற்றல் திருப்திகரமாக உள்ளது.

image 22

பாதுகாப்பு


சில வியத்தகு பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளதற்காக நாம் ஹயுண்டாய் நிறுவனத்தை பாராட்டியே தீர வேண்டும். அதே சமயம் சில பாதுகாப்பு அம்சங்கள் டாப் எண்டு மாடல்களில் மட்டுமே இணைக்கப்படிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இந்த புதிய வெர்ஷனில் இரட்டை காற்றுப்பைகள் அனைத்து வேரியன்டிலும் இணைக்கப்பட்டிருப்பது ஒரு ப்ளஸ் பாய்ன்ட். . ABS, பின்புற பார்கிங் சென்சார்கள், பின்புற கேமெரா , சென்ட்ரல் லாகிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரோகுரோமிக் ரியர் வியூ டிஸ்ப்ளே ஆகிய அதி நவீன பாதுகாப்பு அம்சங்களை டாப் எண்டு மாடலில் பார்க்க முடிகிறது. .இவைத் தவிர முன்புற பயணிகளுக்கு ப்ரீடென்ஷ்னர் உடன் கூடிய சீட் பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது. . மேலும் கீலெஸ் என்ட்ரி சிஸ்டம் , டைமர் உடன் கூடிய பின்புற டிஃபாகர் , ஹெட்லேம்ப் எஸ்கார்ட் ஃபங்க்ஷன் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இம்மொபிலைசர் திருட்டில் இருந்து வாகனத்தை பாதுகாத்து ஓட்டுனருக்கு நிம்மதி அளிக்கிறது.

image 23

5

வேரியன்ட் (வகைகள்)


மொத்தம் ஆறு ட்ரிம்கள் உள்ளன. அவை: இரா, மேக்னா , ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்(O) , ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) ஆகியன .அடிப்படை லோ -எண்டு ட்ரிம்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும் நிறைய சிறப்பம்சங்கள் இந்த லோ -எண்டு ட்ரிம்களில் கொடுக்கப்படவில்லை. அதே சமயம் ஹை - எண்டு ட்ரிம்களில் ஏராளமான அதிநவீன சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் விலை மிக அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. . அடிப்படை மாடலான இராவில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் , ஸ்மார்ட் பெடல் ,இரட்டை ட்ரிப் மீட்டர் ,டிஜிடல் கிளாக் , லோ - ஃப்யூயல் ரிமைன்டர் டோர் அஜர் வார்னிங் மற்றும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியுடன் கூடிய ஹெட்ரெஸ்ட்கள் ஆகிய அம்சங்கள் உள்ளன. அதே சமயம் இதற்கு அடுத்தபடியான மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்களில் 2 டின் ஆடியோ சிஸ்டம் ,1GB இன்டெர்னல் மெமரி , ப்ளூடூத் வசதி, பின்புற AC வென்ட், குளிரூட்டப்பட்ட கையுறை பெட்டி என்று மேலும் சில சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. . ஹை -எண்டு ட்ரிம்களான ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) வகைகளில் முழுதும் ஆட்டோமேடிக் வசதி கொண்ட குளிர்சாதன அம்சம் , பின்புற வைபர் மற்றும் வாஷர் , லக்கேஜ் விளக்கு , மின்சாரத்தின் உதவியுடன் முழுதும் மடிக்கக் கூடிய வசதி கொண்ட வெளிப்புற கண்ணாடிகள் , பார்கிங் சென்சார் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ அன்லாக் பங்க்ஷன் ஆகியவை உள்ளன. நீங்கள் சிறந்த வசதிகளைக் கொண்ட உயர்ரகமான தயாரிப்பை நாடுபவர் என்றால் ஆஸ்டா அல்லது ஆஸ்டா (O) மாடலை தேர்ந்தெடுத்து வாங்கலாம். அதே சமயம் சில பல சிறப்பம்சங்களை தியாகம் செய்து விலை குறைவான தயாரிப்பை வாங்கினால் போதும் என்ற எண்ணம் கொண்டவர் என்றால் லோ - எண்டு மாடலை தேர்ந்தெடுக்கலாம். அதிகமான விலையும் கொடுக்க மனமில்லாமல் ,அதிகமான சிறப்பம்சங்களையும் தியாகம் செய்ய விரும்பாதவர் என்றால் நீங்கள் நடுத்தர வேரியன்ட்களில் ஒன்றை சொந்தமாக்கி கொள்ளலாம்.

6

தீர்ப்பு


நீங்கள் ஸ்டைலான ,அழகான நிறைய சிறப்பம்சங்களை உள்ளடக்கிய நியாயமான விலையுடன் கூடிய கார்களை அத்தனை எளிதில் பார்த்து விட முடியாது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செயல்திறன் இல்லாத பெட்ரோல் என்ஜின், வேகமான பயணத்தின் போது சரியான பீட்பேக் தராத ஸ்டீரிங் அமைப்பு , மிக குறைந்த சிறப்பம்சங்களே கொண்ட லோ -எண்டு ட்ரிம்கள் என்று சில பல குறைகள் இருந்தாலும் தாங்கள் வாங்கும் கார் சீறிபாய்ந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நிறைய தரமான அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த எளிட் i20 மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதே எங்கள் தீர்ப்பு.