2024 Maruti Swift: புதிய ஹேட்ச்பேக் காரில் எவ்வளவு லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதை இங்கே பாருங்கள்

published on மே 21, 2024 05:04 pm by rohit for மாருதி ஸ்விப்ட்

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய ஸ்விஃப்ட்டின் 265 லிட்டர் பூட் ஸ்பேஸ் (பேப்பரில்) பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் கூட நீங்கள் நினைப்பதை விட அதிக பைகளை இந்த காரில் எடுத்துச் செல்ல முடியும்.

2024 Maruti Swift: how much luggage can it carry in the real world?

மாருதி ஸ்விஃப்ட் இந்தியாவில் மிகப் பிரபலமான கார்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அதன் நான்காம் ஜெனரேஷன் கார் வெளியிடப்பட்டது. சமீபத்தில் புதிய ஹேட்ச்பேக் பற்றிய எங்கள் முதல் மதிப்பீட்டின் போது ​​நிஜ உலகில் அதன் பூட் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைக் கண்டறிய எங்களுக்கு சமீபத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கீழே உள்ள எங்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீல்களில் ஒன்றை நீங்கள் பார்க்கலாம்:

CarDekho India (@cardekhoindia) ஆல் ஷேர் செய்யப்பட்ட ஒரு பதிவு

புதிய ஸ்விஃப்ட்டில் 265 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இது ரீலில் காட்டப்பட்டுள்ளபடி குடும்பத்திற்கு வார இறுதிக்கு ஏற்ற சாமான்களுக்கு போதுமானதாக உள்ளது. மூன்று சிறிய அளவிலான டிராலி சூட்கேஸ்கள், ஒரு ஜோடி சாஃப்ட் பைகள் மற்றும் ஒரு மடிக்கணினி பையை வைத்துக் கொள்ள  போதுமானது, ஆனால் நீங்கள் டிராலி சூட்கேஸ்களை செங்குத்தாக அடுக்கி வைக்கும்போது மட்டுமே கொண்டு செல்லலாம்.  Xxi மற்றும் Zxi பிளஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்தால் லக்கேஜ்களுக்கு கூடுதல் இடத்துக்காக பின் சீட்களை 60:40 ரேஷியோ -வில் மடிப்பதற்கான ஆப்ஷனும் உள்ளது.

மேலும் பார்க்க: 2024 மாருதி ஸ்விஃப்ட் வேரியன்ட்கள் விளக்கப்பட்டுள்ளன: நீங்கள் எதை வாங்க வேண்டும்?

2024 மாருதி ஸ்விஃப்ட்: சுருக்கமான பார்வை

2024 Maruti Swift

ஸ்விஃப்ட் ஒரு ஜெனரேஷன் அப்டேட் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட வடிவமைப்பு மூன்றாம் தலைமுறை மாடலின் வடிவமைப்பின் பரிணாம வளர்ச்சியைப் போலவே இருக்கின்றது. இது ஷார்ப்பான, நவீன தோற்றத்தை அளிக்கிறது. இது 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது: LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi பிளஸ்.

2024 Maruti Swift 9-inch touchscreen

2024 ஸ்விஃப்ட்டில் கிடைக்கும் வசதிகளில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி பின்புற வென்ட்கள் ஆகியவை இருக்கின்றன. 6 ஏர்பேக்குகள் (அனைத்து வேரியன்ட்களிலும்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி புதிய ஸ்விஃப்ட்டை புதிய 1.2 லிட்டர், 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் (82 PS/112 Nm) வழங்குகிறது. இது 5-ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களுடன் வருகிறது. தற்போதைக்கு சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை என்றாலும் இது பின்னர் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்ஷோரூம் டெல்லி) உள்ளது. இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் -க்கு நேரடி போட்டியாக இருக்கும்.மேலும் கிராஸ்ஓவர் MPV -யான ரெனால்ட் ட்ரைபர் மற்றும் டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மைக்ரோ எஸ்யூவி -களுக்கு மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience