வெளியீடு நெருங்குவதால் புதிய Maruti Suzuki Swift கார்கள் டீலர்களை வந்தடைந்ததுள்ளன

published on மே 06, 2024 06:32 pm by rohit for மாருதி ஸ்விப்ட்

  • 72 Views
  • ஒரு கருத்தை எழுதுக

படத்தில் உள்ள மாடலில் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க ஃபாக் லைட்ஸ்கள் இல்லை மேலும் அடிப்படையான கேபின் மட்டுமே இருந்தது. எனவே இது ​​மிட்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தோன்றுகிறது.

2024 Maruti Suzuki Swift snapped at dealer stockyard

நான்காம் தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் நெருங்கி வருகின்றது , இப்போது அதைத் தொடர்ந்து புதிய கார்கள் டீலர்ஷிப் யார்டுக்கு வரத் தொடங்கியுள்ளன. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளன. புதிய மாருதி ஹேட்ச்பேக்கின் முன்பதிவுகள் ஆன்லைனில் மற்றும் மாருதியின் அரீனா டீலர்ஷிப்களில் ரூ.11,000 -க்கு திறக்கப்பட்டுள்ளது.

தெரிய வரும் விவரங்கள் ?

2024 Maruti Suzuki Swift headlight

வீடியோவில் புதிய ஸ்விஃப்டை எந்தவிதமான கவர்களும் இல்லாமல் பார்க்க முடிகின்றது. மேலும் ஹேட்ச்பேக்கின் இரண்டு மிட்-ஸ்பெக் வேரியன்ட்கள் இருப்பது போல் தெரிகிறது. நாங்கள் அப்படி நினைக்க காரணம் இரண்டு வேரியன்ட்களிலும் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க ஃபாக் லேம்ப்ஸ் ஆகியவை இல்லை. மாருதி 2024 ஸ்விஃப்ட்டின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்டை 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் LED ஃபிரன்ட் பனி லைட்ஸ்களுடன் கொடுக்கலாம்.

கேபின் மற்றும் வசதிகள்

2024 Maruti Suzuki Swift cabin

ஸ்னாப் செய்யப்பட்ட மிட்-ஸ்பெக் வேரியன்ட்டின் கேபினில் ஃபேப்ரிக் சீட் மற்றும் டல் கிரே மெட்டீரியல்ஸ் ஆகியவை இருந்தன. அதே நேரத்தில் சில்வர் மற்றும் குரோம் ஹைலைட்ஸ் எதுவும் இல்லை. இது சிறிய 7-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள் மற்றும் 4 பவர் விண்டோக்கள் போன்ற சில அடிப்படை வசதிகளை கொண்டிருந்தது.

ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை இருக்கும். மாருதி புதிய ஸ்விஃப்ட்டின் பாதுகாப்பு வலையை 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), ரிவர்சிங் கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

2024 மாருதி ஸ்விஃப்ட் காரின் இன்ஜின் விவரங்கள்

புதிய ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் (82 PS/112 Nm வரை), 5-ஸ்பீடு MT மற்றும் 5-ஸ்பீடு AMT ஆப்ஷன்களுடன் வரும். மாருதி இதை CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்ய வாய்ப்பில்லை என்றாலும் பிற்காலத்தில் கொண்டு வரப்படலாம்.

மேலும் படிக்க: 2024 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் விவரங்கள்

வெளியீடு மற்றும் விலை

2024 Maruti Suzuki Swift rear

நான்காவது தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் மே 9 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதன் விலை ரூ.6.5 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் -க்கு போட்டியாக இருக்கும். ரெனால்ட் ட்ரைபர், டாடா பன்ச், மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய கார்களுக்கு மாற்றாக இருக்கும்.

படத்துக்கான ஆதாரம்

மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience