மஹிந்திரா தாரின் இந்த வேரியண்ட்டை வாங்குவதற்கு நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும்

published on மார்ச் 06, 2023 04:36 pm by tarun for மஹிந்திரா தார்

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஒரே ஒரு வேரியண்டைத் தவிர, தாரின்- மற்ற கார்கள் ஒரு மாத காத்திருப்பு காலத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன.  

Mahindra Thar RWD

  • தார் டீசல் RWD வேரியண்ட் காருக்கு 1.5 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக இருக்கிறது. 

  • இருப்பினும், 4WD மற்றும் பெட்ரோல் RWD கார்கள் ஒரு மாதத்திற்குள்ளாக ஒப்படைக்கப்படுகின்றன. 

  • டீசல் RWD பிரபலமானதற்கான காரணங்களில் ஒன்று அதன் விலை ரூ.10 இலட்சம் என்பதாகும். 

  • தார் RWD வேரியண்டில் 118PS 1.5-லிட்டர் டீசல் மற்றும் 150PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. 

2020 ஆம் ஆண்டின் இரண்டாம் தலைமுறை ஃபோர்-வீல் டிரைவ் தாரைப் போலவே  மஹிந்திரா, 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் தாரின் பின்புற சக்கர டிரைவ் (RWD) கார்களை அறிமுகப்படுத்தியது , ஆகவே விலை குறைவான RWD மாடலுக்காக காத்திருக்கும் காலம் உச்சத்தைத் தொட்டுவிட்டது.  பெரும்பாலான கார் வகைகள் ஒரு மாதத்திற்குள்ளாக வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வருவது சாத்தியமாகியுள்ளது, ஆனால் ஒரே ஒரு வேரியண்ட்டுக்கான  காத்திருப்பு காலம் மட்டும் 1 வருடத்தைவிட நீண்டுள்ளது.

நீண்ட காத்திருப்பு காலம்


மாடல்


காத்திருப்பு காலம்


ஹார்டு டாப் டீசல் 4WD


3-4 வாரங்கள்


ஹார்டு டாப் பெட்ரோல் 4WD


3-4 வாரங்கள்


கன்வர்ட்டிபிள் சாஃப் டாப் 4WD


3-4 வாரங்கள்


ஹார்டு டாப் டீசல் RWD (ரியர்-வீல் டிரைவ்)


72-74 வாரங்கள்


ஹார்டு டாப் பெட்ரோல் RWD


3-5 வாரங்கள்

ஒரு மாதத்திற்குள் 4WD தார் உங்கள் வாசலுக்கே வந்துவிடும்,  மேலும் பெட்ரோல்-பவர்டு பின்புற சக்கர டிரைவ் கார்களும் அதேபோல கிடைத்துவிடும். இருந்தாலும், கார் மற்றும் வாங்கும் இடத்தைப் பொருத்து டீசல் RWD வெளிவர 1.5 வருடங்கள் வரை ஆகலாம் இப்போது நீங்கள் கார்புக்கிங் செய்தால், 2024 இன் பண்டிகை காலத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.

மேலும் படிக்க: டாடா நானோவுடன் இந்த பரபரப்பான விபத்தில் மஹிந்திரா தார் ஏன் கவிழ்ந்தது என்பதைப் பார்க்கலாம்.

Mahindra Thar rear 

ஏன் டீசல் RWD விரும்பப்படுகிறது?

மஹிந்திரா SUVக்கான மிகவும் பிரபலமான என்ஜின் டீசல் மட்டுமே மற்றும் RWD - ல் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் அது வழங்கப்படுள்ளது. தார் டீசல் RWD AX (O)  கார் ரூ.9.99 இலட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுளது , அதனால் வரிசையில் உள்ள அனைத்து கார்களிலும் அது மிகவும் மலிவானதாக உள்ளது. கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட LX கார் கூடுதலாக ஒரு இலட்சம் ரூபாய் விலையைக் கொண்டுள்ளது, அதேநேரத்தில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் பெட்ரோல் RWD ரூ.3.5 இலட்சம் கூடுதல் விலையாக உள்ளது  முக்கியமாக, தாரின் மலிவான கார்கள் நுழைவு மட்டத்திலுள்ள 4WD கார்களைவிட ரூ.4 இலட்சம் விலை குறைவாக உள்ளன.

4WD பதிப்பின் பேஸ் வகை கார்களை இடைநிறுத்திய பிறகு, பல விலை உயர்வுகளைத் தொடர்ந்து ரியர்-வீல் டிரைவ் கார்கள், தாரின் மலிவுப் பதிப்புகளாக அறிமுகப்படுத்தப்பட்டன. பலர் தார் கார்களை விரும்பினாலும் கூட, 4WD இன் பயன்பாடு மற்றும் முழுத் திறனும் சில வாங்குபவர்களுக்கு மட்டுமேயானது. RWD உடன், வாங்குபவர்கள் இன்னும் தாரையே விரும்புகின்றனர், அது ஆஃப் ரோடிங்கை சமாளிக்கும் அதேநேரத்தில் பணத்தின் ஒரு பகுதியையும் சேமிக்கும். 

மேலும் படிக்க: சாட் GPT இன் படி 4 சிறந்த இந்திய கார்கள் இதோ

டீசல் RWD காரை விலை குறைவானதாக எது மாற்றியது?

ஏற்கனவே  4WD வசதி நீக்கப்பட்டதே தாரின் விலை குறைக்கப்படௌவதற்கு காரணமாகியது. 4WD காரின் 130PS 2.2-லிட்டர் டீசல் எஞ்சினுடன் சிறிய 118PS 1.5-லிட்டர் டீசல் எஞ்சின் மாற்றியமைக்கப்பட்டது, இந்த புதிய கார்கள் மிகவும் மலிவு விலையில் வெளிவந்தன. 

மஹிந்திரா தார் கார்களின்  இப்போதைய விலை ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 16.49 லட்சம் வரை(எக்ஸ் ஷோரூம்) . அது ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் வெளிவர உள்ள  மாருதி சுசுகி ஜிம்னிஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்கவும்: தார் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா தார்

Read Full News

explore மேலும் on மஹிந்திரா தார்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience