2016 ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரவுள்ள தயாரிப்பு வரிசையை ஹூண்டாய் வெளியிட்டது!
published on ஜனவரி 27, 2016 04:32 pm by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
எஸ்போவின் மூலம் இந்திய SUV வட்டத்திற்குள் ஹூண்டாய் டக்ஸன் மறுபிரவேசம் செய்கிறது!
வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள அடுத்துவரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கான தங்களது தயாரிப்பு வரிசையை, இந்த கொரியன் வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். இந்த ஆட்டோ எக்ஸ்போவில் “எக்ஸ்பிரியன்ஸ் ஹூண்டாய்” என்பதே தங்களின் தீம் ஆக இருக்கும் என்று ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த “எக்ஸ்பிரியன்ஸ் ஹூண்டாய்” என்ற தீம்மின் கீழ், ஹூண்டாய் தரப்பில் இருந்து அதன் சர்வதேச மற்றும் உள்ளூர் வரிசையை சேர்ந்த ஆச்சரியப்படுத்தும் மற்றும் புதுமையான 17 தயாரிப்புகளை, 12 மண்டலங்களில் (ஸோன்ஸ்) காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இவற்றில் இந்நிகழ்ச்சியையே அதிர வைப்பதாக அமையப் போவது N2025 விஷன் கிரான் டுரிஸ்மோ தொழிற்நுட்பம் ஆகும்.
இந்த மண்டலங்களை குறித்து பார்க்கும் போது, ஹூண்டாய் தரப்பில் இருந்து எதிர்காலம் (ஃபியூச்சர்), பிரிமியம், ஸ்போர்ட்ஸ், பாதுகாப்பு (சேஃப்டி) மற்றும் என்கேஜ்மெண்ட் ஆகிய மண்டலங்கள் காணப்படும். இந்த 17 தயாரிப்புகளில் உட்படும் அதன் சர்வதேச வரிசையில், ‘N’ செயல்திறன் பிராண்ட் உடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெனிசிஸ் ஆடம்பர துணை-பிராண்ட்டையும், ஹூண்டாய் நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது. விரைவில் சர்வதேச அளவிலான சந்தையில் S-கிளாஸ், A8 மற்றும் 7-சீரிஸ் ஆகியவை உடன் போட்டியிட உள்ள முக்கியத்துவம் வாய்ந்த G90 சேடனை, ஜெனிசிஸ் காட்சிக்கு வைக்க உள்ளது. மற்ற தயாரிப்புகள் அனைத்தும், அந்நிறுவனத்தின் உள்ளூர் வரிசையைச் சேர்ந்தவை.
இதையெல்லாம் தவிர, எக்ஸ்போவின் மூலம் நம் நாட்டில் டக்ஸன் SUV-யை மறுஅறிமுகம் செய்வதே, ஹூண்டாயிடம் இருந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய போகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, இதன் முதல் தலைமுறையை சேர்ந்த SUV-யை, நம் சந்தையில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் கைவிட்டது. தற்போது வரவுள்ள வாகனம், அதன் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தது ஆகும். இந்த அறிமுகத்தின் மூலம் பிரபல கச்சிதமான SUV ஆன க்ரேடா மற்றும் ஹூண்டாயின் முன்னணி தயாரிப்பான சான்டா-பி ஆகியவற்றிற்கு இடையிலான இடைவெளியை இது நிரப்புவதாக அமையும். சான்டா-பி மற்றும் க்ரேடா ஆகியவை போல, இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மாடலிலும் ஹூண்டாயின் ஃப்ளூடிக் டிசைன் 2.0-யை பெற்றிருக்கும். இதில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் காணப்படும் நிலையில், இந்தியாவிற்கு பெரும்பாலும் 1.7 அல்லது 2.0 CRDi டீசல் பெற வாய்ப்புள்ளது. இதன் உள்புறம்-வெளிபுறத்தில் அநேக சிறப்பம்சங்களை பெற்றிருப்பதோடு, 2WD மற்றும் 4WD தேர்வுகளையும் கொண்டிருக்க உள்ளது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful