புதிதாக லீடர் எடிஷனை பெறும் Toyota Fortuner, காருக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன

published on ஏப்ரல் 22, 2024 09:07 pm by ansh for டொயோட்டா ஃபார்ச்சூனர்

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஸ்பெஷல் எடிஷனின் விலை இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இது ஸ்டாண்டர்டான வேரியன்ட்டை விட விலை சுமார் ரூ.50,000 கூடுதலாக வரும்.

Toyota Fortuner Leader Edition Bookings Open

  • 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. ஆனால் ரியர்-வீல் டிரைவ் உடன் மட்டுமே கொடுக்கப்படும்.

  • டூயல்-டோன் எக்ஸ்ட்டீரியர் ஷேடுகள், பிளாக் அலாய் வீல்கள் மற்றும் முன் மற்றும் பின்புற பம்பர் ஸ்பாய்லர்கள் ஆகியவற்றை வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்களாக பார்க்க முடிகின்றது.

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

  • ஃபார்ச்சூனரின் டீசல் ரியர்-வீல் டிரைவ் வேரியன்ட்களின் விலை ரூ.35.93 லட்சம் முதல் ரூ.38.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் இப்போது வெளிப்புறத்தில் இரண்டு மாற்றங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் வரும் சிறப்பு லீடர் பதிப்பை இப்போது பெற்றுள்ளது. கார் தயாரிப்பாளர் இதன் விலையை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், லீடர் பதிப்பிற்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த காரில் ஆர்வமாக இருந்தால் இதில் என்ன வசதிகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கவும்.

என்ன மாற்றங்கள் இருக்கின்றன

Toyota Fortuner Leader Edition

இந்த ஸ்பெஷல் எடிஷன் புதிய டூயல்-டோன் எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது: சூப்பர் ஒயிட், பிளாட்டினம் பேர்ல் மற்றும் சில்வர் மெட்டாலிக், இவை அனைத்தும் பிளாக் ரூஃப் உடன் கிடைக்கின்றன. இது 17-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் முன் மற்றும் பின்புற பம்பர்களுக்கு கிளாஸி பிளாக் ஸ்பாய்லர்களையும் பெறுகிறது. இந்த பாகங்கள் டீலர்ஷிப்களால் பொருத்தப்படும்.

மேலும் படிக்க: தென்னாப்பிரிக்காவில் அறிமுகமானது Toyota Fortuner மைல்ட்-ஹைப்ரிட் வேரியன்ட்

இந்த லீடர் எடிஷன் ஒரு புதிய வசதியை மட்டுமே பெறுகிறது. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) இது ஃபார்ச்சூனர் லெஜெண்டரிடமிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

Toyota Fortuner Gear Lever

ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் ஸ்டாண்டர்டான ஃபார்ச்சூனரின் அதே 2.8-லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. மேலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுகிறது. மேனுவல் வேரியன்ட்கள் 204 PS மற்றும் 420 Nm மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் 204 PS மற்றும் 500 Nm அவுட்புட்டை கொடுக்கின்றன. லீடர் எடிஷன் ஃபார்ச்சூனரின் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட்களுடன் மட்டுமே கிடைக்கிறது.

வசதிகள்

Toyota Fortuner Interior

TPMS தவிர லீடர் எடிஷனில் உள்ள மற்ற அம்சங்கள் ஸ்டாண்டர்டான ஃபார்ச்சூனரை போலவே உள்ளன, இது 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டூயல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவற்றைப் பெறுகிறது.

மேலும் படிக்க: MG Hector Blackstorm மற்றும் Tata Harrier Dark Edition: வடிவமைப்பு ஒப்பீடு

பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 7 ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC), டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஃபார்ச்சூனரின் டீசல் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட்களின் விலை ரூ. 35.93 லட்சம் முதல் ரூ. 38.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), மற்றும் ஒப்பனை மாற்றங்களை பொறுத்தவரை லீடர் எடிஷன் விலை ரூ.50,000 கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் MG குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம், ஜீப் மெரிடியன் ஓவர் லேண்ட், மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது

மேலும் படிக்க: ஃபார்ச்சூனர் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டொயோட்டா ஃபார்ச்சூனர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience