Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்

modified on மார்ச் 28, 2024 06:00 pm by yashein for ஃபோர்ஸ் குர்கா 5 டோர்

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய குர்கா 5-டோர் வேரியன்ட் ஏற்கனவே உள்ள 3-டோர் மாடலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதலாக ஒரு ஜோடி டோர்களுடன் வரும்.

  • குர்கா 5-டோர் வேரியன்ட் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  •  புதிய ஸ்போர்ட்ஸ் ஸ்கொயர்-அவுட் ஹெட்லைட்கள் மற்றும் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் வருகிறது.

  • மூன்றாவது வரிசை பயணிகள் கேப்டன் சீட்களை பெறலாம்.

  • 7-இன்ச் டச் ஸ்கிரீன் மேனுவல் ஏசி மற்றும் டூயல் ஃப்ரன்ட் ஏர்பேக்குகள் இடம்பெறும்.

  • 3-டோர் மாடலில் காணப்படும் அதே 2.6-லிட்டர் டீசல் இன்ஜின் 4WD உடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • விலை ரூ. 16 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.

இரண்டு வருடமாக தயாரிப்பில் இருந்த ஃபோர்ஸ் குர்கா 5-டோர் இப்போது வெளியாக தயாராகியுள்ளது. ஃபோர்ஸ் நிறுவனம் நீளமான எஸ்யூவி -யை அறிமுகப்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இப்போது ஃபோர்ஸ் அதன் முதல் டீஸர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

டிசைன்

எங்கள் ஸ்பை ஷாட்களின்படி எஸ்யூவு -யின் தற்போதைய 3-டோர் வெர்ஷனை விட மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் இரண்டு புதிய எலமென்ட்களுடன் டெஸ்ட் கார்களை காணலாம். LED DRL-களுடன் கூடிய ஸ்கொயர்-அவுட் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் ஏணி அத்துடன் ஸ்நோர்கெல் ஆகியவை 3-டோர் குர்காவிலில் இருப்பதை போலவே இருக்கும்.

கேபின் மற்றும் வசதிகள்

Force Gurkha 5 door

குர்கா 3-டோரின் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

குர்கா 5-டோரின் கேபினின் எந்த பார்வையையும் ஃபோர்ஸ் வழங்கவில்லை என்றாலும் முந்தைய ஸ்பை ஷாட்கள் அடர் சாம்பல் நிற கேபின் தீமை கொண்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. நீளமான வீல்பேஸ் குர்கா 3-வரிசை அமைப்பைக் கொண்டிருக்கும். முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் பெஞ்ச் மற்றும் கேப்டன் சீட்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகளைப் பொறுத்தவரை குர்கா 5-டோர் ஃப்ரன்ட் மற்றும் ரியர் (இரண்டாம் வரிசை) பவர் வின்டோஸ்களுடன் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏர் கண்டிஷனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை டூயல் ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்றவை உள்ளன.

பவர்டிரெயின்

Force Gurkha 5 door

குர்கா 5-டோர் வேரியன்ட் 3-டோர் மாடலில் இருந்து அதே 2.6-லிட்டர் டீசல் இன்ஜினை தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சற்று அதிக ட்யூன் செய்யப்பட்டு வரலாம். இந்த இன்ஜின் 90 PS பவரையும் 250 Nm டார்க்கையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் தொடர்ந்து இணைக்கப்படும் மற்றும் லோ-ரேஞ்ச் டிரான்ஸ்பர் கேஸுடன் 4-வீல்-டிரைவ் (4WD) அம்சத்துடன் இணைக்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

குர்கா 5-டோர் விலை ரூ.16 லட்சத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 3-டோர் மாடலின் விலை ரூ.15.10 லட்சம். 5-டோர் குர்கா மாருதி ஜிம்னிக்கு பெரிய மாற்றாக இருக்கும். அதே நேரத்தில் வரவிருக்கும் தார் 5-டோருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

மேலும் படிக்க: குர்கா டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஃபோர்ஸ் குர்கா 5 Door

Read Full News

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience